முன்பு அடுத்து Page:

வடமணப்பாக்கம் நல்லாசிரியர் பி.கே.விஜயராகவன் அவர்களின் படத்திறப்பு

வடமணப்பாக்கம் நல்லாசிரியர் பி.கே.விஜயராகவன் அவர்களின் படத்திறப்பு

வடமணபாக்கம், அக். 17- திரு வண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வட மணப்பாக்கம், பெரியார் பற் றாளர் பி.கே.விஜயராகவன் அவர் களின் படத்திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தில் 15.10.2017 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.செய்யாறு தொகுதி முன் னாள் திமுக சட்டமன்ற உறுப் பினர் வ.அன்பழகன் தலைமை தாங்க, நாளந்தா பள்ளியின் நிறுவனர் ஆர்.வேல்முருகன் முன்னிலை வகித்தார். படத்தை மதிமுக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியதேவன் திறந்து வைத்து வைத்து....... மேலும்

17 அக்டோபர் 2017 15:18:03

கொள்ளுப்பேரனுடன் கலைஞர்

 கொள்ளுப்பேரனுடன் கலைஞர்

சென்னை, அக்.16  தி.மு.க., தலைவர் கலைஞர், தன் கொள்ளுப் பேரனிடம், குழந்தையாக மாறி, சிரித்து விளையாடினார்; இந்த வீடியோ, தி.மு.க.,வினரை நெகிழ வைத்துள்ளது. தி.மு.க., தலைவர் கலைஞர், 2016, டிசம்பரில், உடல் நலக் குறைவால், சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, செயற்கை மூச்சு அளிக்க, தொண்டையில் துளையிட்டு, ‘டிராக்கியோஸ்டமி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. வீட்டிலிருந்தபடியே, அவருக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர் கள்,....... மேலும்

16 அக்டோபர் 2017 15:11:03

தடை செய்யப்படுமா? பக்தி மூடத்தனத்துக்குப் பலி

தடை செய்யப்படுமா? பக்தி மூடத்தனத்துக்குப் பலி

தா.பேட்டை, அக். 16- திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த நீலியாம்பட்டி கிராமத் தில் தலைமலை அமைந்துள் ளது. இந்த மலையின் உச்சி யில், தரையில் இருந்து ஆயிரக் கணக்கான அடி உயரத்தில் நல் லேந்திரபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். இந்நிலையில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்றுமுன்தினம் காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அப்போது மலை உச்சிக்கு சென்று பெருமாளை வழிபட்ட பக்தர் ஒருவர், இரண்டு முறை....... மேலும்

16 அக்டோபர் 2017 14:58:02

தமிழர் உரிமை பாதுகாப்புத் தமிழ் ஊர்தி பயணக் குழுவினருக்கு வரவேற்பு

தமிழர் உரிமை பாதுகாப்புத் தமிழ் ஊர்தி பயணக் குழுவினருக்கு வரவேற்பு

அனைத்து தமிழியக்கங்களின் கூட்டமைப்பு, பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் இணைந்து கன்னியாகுமரி - டில்லி வரை தமிழர் உரிமைப் பாதுகாப்புத் தமிழ் ஊர்தி பயணக்குழு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் 13.10.2017 அன்று மாலை 4.30 மணிக்கு ஓசூருக்கு வருகை தந்தது. அக்குழுவினரை திராவிடர் கழகம் சார்பில் கிருட்டிணகிரி மாவட்ட இணை செயலாளர் சு.வனவேந்தன், மாவட்ட துணை செயலாளர் அ.செ.செல்வம், கவிஞர் எல்லோரா மணி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்று வழியனுப்பி வைத்தனர்........ மேலும்

16 அக்டோபர் 2017 14:58:02

திருப்பூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின பேரணி

திருப்பூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின பேரணி

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி  தீ விபத்து தடுப்பு,  வெள்ள அபாய எச்சரிக்கை, பேரிடர் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களை சேமித்தல் ஆகியவை குறித்த விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில்  திருப்பூர் புஷ்பா திரையரங்கம் அருகே துவங்கி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வரை  நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி அவர்கள்  துவக்கி வைத்தார்.திருப்பூர்....... மேலும்

16 அக்டோபர் 2017 14:58:02

பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

 பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

வேலூர், அக்.15 பாலாற்றை யொட்டி உள்ள தமிழகம், கர்நாடகம், ஆந்திர எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களாக பருவ மழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்து வருகிறது. இதனால் பாலாற்றையொட்டி உள்ள ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநில எல்லைப் பகுதி களிலும் கன மழை பெய்ததால் அங்குள்ள நீர்நிலைகள், ஏரிகள்....... மேலும்

15 அக்டோபர் 2017 17:56:05

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சுகாதாரத் துறை பதில் மனுவில் தகவல்

  மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சுகாதாரத் துறை பதில் மனுவில் தகவல்

சென்னை, அக்.15 முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு காய்ச்சல் சேர்க்கப்பட்டுவிட்டதாக சுகா தாரத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. இதுதொடர்பாக, சென்னை யைச் சேர்ந்த வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம், உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத் தின்கீழ் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறவும், அதற்கான தொகையை அரசிடமிருந்து பெற்றுக் கொள் ளவும் உத்தரவிட வேண்டும்‘ எனக்....... மேலும்

15 அக்டோபர் 2017 17:50:05

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கணினி தொழில்நுட்பக் கருத்தரங்கம்

  பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கணினி தொழில்நுட்பக் கருத்தரங்கம்

வல்லம், அக்.15 பெரியார் மணியம்மை பல்கலைக்கழத்தில் கணினி பயன் பாட்டியல் துறை மாணவர்கள் பேரவை நடத்தும் ஒரு நாள் கருத்தரங்கு பெக்சாம் 2ரி17 என்னும் தலைப்பில் நடை பெற்றது. இந்நிகழ்வின் துவக்க விழாவில்  வரவேற்புரை கணினி பயன்பாட்டியல் துறை முதுநிலை இறுதியாண்டு மாண வர் கே.கவியரசன் வழங்கினார். பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சொ.ஆ.தனராஜ்  வாழ்த்துரை வழங்கினார்கள். பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் சா.சுந்தர் மனோகரன் தலைமையுரை வழங் கினார். இந்நிகழ்வின் சிறப்புரையை பி.சண் முகம் (வள மேலாளர்,....... மேலும்

15 அக்டோபர் 2017 17:50:05

டிசி4 விண்கல்லில் இருந்து நூலிழையில் தப்பிய பூமி

 டிசி4 விண்கல்லில் இருந்து நூலிழையில் தப்பிய பூமி

நாசா, அக்.15 விண்வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் ‘டிசி4’ என்ற விண்கல், பூமி மீது மோதாமல் நூலிழையில் கடந்து சென்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 38,500 கி.மீ. தொலைவில் டிசி4 விண் கல் கடந்து சென்றதால், பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட வில்லை. ஆனால், இதே விண்கல், தனது சுற்றுவட்டப் பாதையில், 2079ஆம் ஆண்டு நிச்சயம் பூமியைத் தாக்கும் என்றும் கணித்துள்ளனர்.முன்னதாக இந்த விண்கல், அடுத்து 2050ஆம் ஆண்டில் பூமியை....... மேலும்

15 அக்டோபர் 2017 17:41:05

இரா.ஜெயலட்சுமி அம்மாள் மறைவு கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

 இரா.ஜெயலட்சுமி அம்மாள் மறைவு கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

செம்பியம், அக். 15- கழக வழக் குரைஞரணியைச் சேர்ந்த வழக் குரைஞர் இரா.இரத்தினகுமார் தாயார் இரா.ஜெயலட்சுமி (வயது 75) அவர்கள் 11.10.2017 அன்று பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை செம்பியம் கென்னடி சதுக்கத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் காலமானார். கழகத்தின் சார்பில் மரியாதை மாலை 5.30 மணியளவில் கழகத் துணைத்தலைவர் கவி ஞர் கலி.பூங்குன்றன் அம்மை யாரது உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பெரியார்திடல் மேலாளர் ப.சீதாராமன் மற்றும் கழகத்....... மேலும்

15 அக்டோபர் 2017 17:24:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சேலம், மே 18- சேலம் உருக் காலையை பாதுகாக்க வலி யுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று (மே 17) உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பினர் மற்றும் ஊழியர் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் உருக்காலை 4000 ஏக்கர் பரப்பளவில் 15000 கோடி மதிப்புடைய பொதுத் துறை நிறுவனமாகும். தற் போது ஆலையை விரிவாக்கம் செய்யாமல் நஷ்டத்தில் செயல் படுவதாக கூறி தனியாருக்கு விற்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து ஆலையை பொதுத் துறை நிறுவனமாக பாதுகாக் கக்கோரியும் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

மேலும் அனைத்து அரசி யல் கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் நலப் பிரதிநிதிகளை சந்தித்து உருக்காலையை பாது காக்க ஆதரவு திரட்டி வருகின் றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவையில் பேசும் போது சேலம் உருக்காலையை விற்க தமிழக அரசு அனு மதிக்காது என்று கூறினார். இந்நிலையில் மத்திய அரசு சேலம் உருக்காலையை விற்க புதிய ஒப்பந்த புள்ளி கோரி யுள்ளது. இந்த ஒப்பந்த புள்ளிகள் புதனன்று மாலை திறக்கப்படவுள்ளது. சேலம் உருக்காலையை தனியார்மய மாக்கினால் தற்போதுள்ள 1300 நிரந்தர பணியாளர்களும், 800 தற்காலிக தொழிலாளர்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் வேலையை இழப்பர். 2000க் கும் மேற்பட்ட மறைமுக வேலைவாய்ப்பும் பறிபோகும்.

இதனால் தொழிலாளர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் கூறினர். புதனன்று நடைபெற்ற போராட்டத்தின் போது கோரிக் கைகளை விளக்கி சேலம் உருக்காலை பாதுகாப்பு ஒருங் கிணைப்பு குழுவின் தலைவர் கே.பி.சுரேஷ்குமார், அய்என் டியுசி தியாகராஜன், சிஅய்டியு மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார், மாநிலக் குழு உறுப்பினர்

எஸ்.கே.தியாக ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

எவரெஸ்ட்டில் 4ஆவது முறையாக ஏறிய இந்திய பெண் அன்சு ஜாம்சென்பா

இட்டாநகர், மே 18 அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த மலை ஏறும் வீராங்கணை அன்சுஜாம் சென்பா. கடந்த 6 ஆண்டுகளில் 4ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

அருணாச்சாலப் பிரதேசம் பொம்டிலா நகரைச் சேர்ந்த பெண் அன்சுஜாம்சென்பா. (வயது 32). இவருக்கு  2 மகள்கள் உள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு மே.12ஆம் தேதி, இவர் முதல் முறையாக உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் ஏறினார். 10 நாள் இடைவெளியில் இவர் மீண்டும் எவரெஸ்ட் உச்சிக்கு சென்றார். அதன்பின் கடந்த 2013ஆம் ஆண்டு மே.18ஆம்தேதி 3ஆம் முறையாக எவரெஸ்ட் உச்சிக்கு சென்றார்.  தற்போது அவர் 4ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனையை அருணாச் சலப் பிரதேச முதல்வர் பீமா வாழ்த்து தெரிவித்துள்ளார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner