முன்பு அடுத்து Page:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் சட்டவிரோத காவலில் 95 பேர் சித்ரவதை - அனைவரும் ஜாமீனில் விடு…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்  சட்டவிரோத காவலில் 95 பேர் சித்ரவதை - அனைவரும் ஜாமீனில் விடுவிப்பு

தூத்துக்குடி, மே 26- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, 126 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், பலர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. இதுதொடர்பாக சந்திரசேகர் என்ற வழக்குரைஞர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாளிடம் ஒரு மனு கொடுத்தார். சட்டவிரோத காவல் பற்றி விசாரணை நடத்தி, அவர் களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, வல்லநாடு துப்பாக்கி பயிற்சி சரகத்தில், சட்டவிரோத காவ லில்....... மேலும்

26 மே 2018 16:02:04

செயலி மூலம் பயணச்சீட்டு ரீசார்ஜ் செய்வோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை தெற்கு ரயில்வே அறிவிப்பு

செயலி மூலம் பயணச்சீட்டு ரீசார்ஜ் செய்வோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, மே 26 செல்லிடப் பேசி செயலி மூலம் பயணச்  சீட்டை ரீசார்ஜ் செய்யும் பயணி களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித் துள்ளது.செல்லிடப்பேசி செயலி மூலம் காகிதமில்லா யுடிஎஸ் பயணச் சீட்டுகள் பெறும் வசதி ஏப்ரல் 14 -ஆம் தேதி தொடங்கப் பட்டது. இந்த வசதி தெற்கு ரயில்வேயின் எல்லா ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத் தப்பட்டுள்ளது. முன்பதிவில்லா பயணச் சீட்டு பெறுவோரில்....... மேலும்

26 மே 2018 15:53:03

நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி

நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி

பெங்களூரு, மே 26 சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரசு மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன. இதற்கிடையே, விதான் சவு தாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல்  அமைச்சராக பதவி யேற்றார். அவருடன் துணை முதல் அமைச்சராக தேர்வு செய் யப்பட்ட கருநாடக மாநில காங்கிரசு தலைவர் பரமேஸ்வ ராவும்....... மேலும்

26 மே 2018 15:39:03

ஸ்டெர்லைட் மூடல் அரசின் ஏமாற்று வேலை: வைகோ

ஸ்டெர்லைட் மூடல்  அரசின் ஏமாற்று வேலை: வைகோ

நெல்லை, மே 26 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்பது தமிழக அரசின் ஏமாற்று வேலையாகும் என நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கி சூட்டை கண்டித்தும், அதற்கு உறு துணையாக இருந்த தமிழக அரசை கண்டித்தும் நெல்லையில் நேற்று மதிமுக  சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடியில் பலியானவர்களின் குடும்பத்தை பார்க்க ஒவ்வொரு வீடாகச்....... மேலும்

26 மே 2018 15:27:03

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி ஒரு அனுதாபமாவது தெரிவித…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி ஒரு அனுதாபமாவது தெரிவித்தாரா?  தளபதி மு.க.ஸ்டாலின்  பேட்டி

சென்னை, மே 26 திராவிட முன்னேற் றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரு மான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (25.05.2018) தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக பதவி விலக செய்ய வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட, அச்சரபாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவர்....... மேலும்

26 மே 2018 15:23:03

மக்களுக்கு தொல்லையின்றி பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்கலாம் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டின…

மக்களுக்கு தொல்லையின்றி பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்கலாம்  ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டின் புள்ளிவிவரம்

மக்களுக்கு பெரிதும் சுமையின்றி பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்து வழங்க முடியும் என்பது குறித்து ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடு விளக்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வது என்பது நாள்தோறும் நிகழ்ந்து வருகிறது. 2013ஆம் ஆண்டிலிருந்ததைவிட மிக அதிக விலையை பெட்ரோல், டீசல் எட்டியுள்ளது. எப்போதுமில்லாத அளவுக்கு டில்லியில் ரூ.76.57, மும்பையில் ரூ.84.40 விலையேற்ற மடைந்துள்ளது. பன்னாட்டளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது ஏன்? அமெரிக்கா அணு விவகாரத்தில்....... மேலும்

26 மே 2018 13:15:01

பிர்மாவுக்கும் (அப்பனுக்கும்) சரஸ்வதிக்கும் (மகளுக்கும்) கல்யாணமாம்.... டும்! டும்!! டும்!!!

பிர்மாவுக்கும் (அப்பனுக்கும்) சரஸ்வதிக்கும் (மகளுக்கும்)  கல்யாணமாம்.... டும்! டும்!! டும்!!!

  துடையூர் விஷமங்களேஸ்வரர் ஆலயத்தில் வருகிற 28.05.2018 திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் (அப்பனான)  சிறீபிரம்மதேவருக்கும்  (அவர் படைத்த மகளான) சிறீயோக ஞான சரஸ் வதிக்கும் திருக்கல்யாணமாம், திருச்சி மாவட்டம், துடையூரில் தான் இந்த மிகவும் அசிங்கமான நிகழ்வு நடைபெற உள்ளது, இது குறித்து கோவில் நிர்வாகம் அடித்த பத்திரிகையில்  உத்தியோகம் கிடைக்காதவர்கள் திருவோண நட்சத்திரத்தன்று இந்த கோயிலின் வாசலில் உள்ள பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தால்....... மேலும்

26 மே 2018 12:43:12

தூத்துக்குடி உள்பட 3 மாவட்டங்களில் வரும் 27 வரை இணைய சேவை ரத்து

தூத்துக்குடி உள்பட 3 மாவட்டங்களில் வரும் 27 வரை இணைய சேவை ரத்து

தூத்துக்குடி, மே 25 தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களில் வரும் 27 -ஆம் தேதி வரை இணைய சேவைகளை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்களை அனைத்து இணையதள சேவை வழங்குநர்களுக்கும் மாநில அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து இணையதள சேவை வழங்குநர்களுக்கு உள் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் நிரஞ்சன் மார்டி புதன் கிழமை அனுப்பியுள்ள சுற்ற றிக்கை விவரம்:- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செவ்வாய்க்....... மேலும்

25 மே 2018 16:21:04

தென்மேற்குப் பருவ மழை: 27 மாவட்டங்களில் சராசரி அளவிலேயே இருக்கும்

தென்மேற்குப் பருவ மழை:  27 மாவட்டங்களில் சராசரி அளவிலேயே இருக்கும்

சென்னை, மே 25 தமிழகத்தில் இந்த ஆண்டு 27 மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை சராசரி அளவிலேயே இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காலநிலை ஆராய்ச்சி மய்யம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டில் ஜூன் முதல் செப் டம்பர் மாதம் வரையில் மழைக் கான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கட லில்....... மேலும்

25 மே 2018 16:16:04

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

தமிழக அரசை கண்டித்து கன்னட அமைப்பினர் முழக்கம் பெங்களூர், மே 25 தூத் துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, பெங்களூருவில் மனித உரிமை செயற்பாட்டா ளர்கள் வேதாந்தா நிறுவனத் தின் அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் இயங்கி வருகிறது. இதனை விரி வாக்கம் செய்வதை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக் கிச் சூட்டில் 10-க்கும்....... மேலும்

25 மே 2018 16:07:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 18 சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோயம்பேடு- ஆலந் தூர், அதன்பின்னர் சின்னமலை- விமான நிலையம் அதனை தொடர்ந்து பரங்கிமலை வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ சேவை நடைபெற்று வருகிறது. சுரங்கப்பாதையில் முதல் முத லாக திருமங்கலம்- நேரு பூங்கா இடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை சேவை தொடங்கியது.

முதல் வாரத்திற்கு 40 சதவீத கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமையுடன் இந்த சலுகை நிறை வடைகிறது. தற்போது விடுமுறை காலம் என்பதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் சுரங்க ரயில் பயணத்தை மேற்கொள்ள  ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையில் உள்ள 7 மெட்ரோ சுரங்க ரயில் நிலை யங்களின் நுழைவு வாயில், உள்பகுதி ஆகியவற்றை காணும்போது வெளிநாடுகளில் உள்ள பிரமிப்பை ஏற்படுத்து கிறது. சுரங்கத்தில் முதல் தளம், 2ஆ-ம் தளம் என அமைக்கப்பட் டுள்ளது. முதல் தளத்தில் டிக் கெட் எடுக்கவும், 2-ஆவது தளத்தில் சுரங்க ரயிலில் பய ணம் செய்யவும் அனுமதிக்கப் படுகிறார்கள். பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே நிலையத் திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு  ரயில் நிலை யமும் கண்ணாடிகளாலும், பளிங்கு கற்களாலும் பளபளக் கின்றன. மாற்றுத் திறனாளி களுக்கு சிறப்பு வசதி, இருக் கைகள் வசதி செய்யப்பட் டுள்ளன. நடந்து செல்ல படிக் கட்டுகள் இருந்தாலும் லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் போன்ற வசதிகளும் பயணிகளை வெகு வாக கவர்ந்துள்ளன. உயர்மட்ட பாதையில் செல்லக்கூடிய மெட்ரோ ரயில்களுக்கு டோக் கன் டிக்கெட் முறை நடை முறையில் உள்ளது.

எந்த பகுதிக்கு செல்ல வேண்டுமோ அதற்கான பணத்தை கொடுத்து விட்டு டோக்கன் பெற்று பயணத்தை நிறைவு செய்யும் போது அங் குள்ள பெட்டியில் போட்டு விட்டு வெளியே வரவேண்டும். ஆனால் சுரங்கப் பாதையில் ஸ்மார்ட்கார்டு திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. ரூ.100 மதிப்புள்ள இந்த கார்டை கவுண்டரில் பெற்றுக் கொண்டு தான் பயணம் செய்ய முடியும். பயணம் செய்யும் ஒவ்வொரு வருக்கும் தனித்தனி ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. இந்த கார்டை ஒரு ஆண்டிற்கு பயன்படுத்தலாம். கார்டுக்கு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப் படுகிறது. மீதமுள்ள 90 ரூபா யில் நாம் பயணம் செய்யும் பகுதிக்கான கட்டணம் எவ்வ ளவோ அவை குறைக்கப்படும்.

திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்காவிற்கு  ரூ.24 கட் டணம் நிர்ணயிக்கப்பட்டுள் ளது. ஸ்மார்ட் கார்டில் உள்ள 90 ரூபாயில் ரூ.24 கட்டணம் போக மீதி தொகை இருக்கும். எப்பொழுது பயணம் செய் தாலும் இந்த கார்டை பயன் படுத்தலாம். அதில் கட்டண தொகை கழிந்து கொண்டே செல்லும். பணம் குறையும் போது மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாடிக்கை யாளர் சேவை மய்யத்தின் மூல மாகவும்,  ஆன்லைன் மூல மாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ள வசதி உள்ளது. சுரங் கப்பாதை தொடக்க விழாவை யொட்டி டோக்கன்  முறையில் டிக்கெட் வழங்கப்பட்டது.  அந்த திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு மட்டுமே சுரங்க ரயில் பயணத்திற்கு பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்  கார்டில் பயணம் செய்யும்போது 10 சத வீத கட்டண சலுகை வழங்கப் படுகிறது.

டோக்கன் முறைக்கு இந்த சலுகை கிடையாது.  விரைவில் உயர்மட்ட  பாதையில் செல் லக்கூடிய மெட்ரோ ரயில் களுக்கும் ஸ்மார்ட் கார்டு திட்டம் விரிவாக்கம் செய்யப் படுகிறது. ஸ்மார்ட் கார்டை ட்ரிப் கார்டு உள்ளிட்ட பல் வேறு வகையான கார்டுகளாக வும் மாற்றிக் கொள்ளலாம். ட்ரிப் கார்டுக்கு 20 சதவீத சலுகை அளிக்கப்படுகிறது. எதிர் வரும் காலங்களில் ஸ்மார்ட் கார்டு மட்டுமே எல்லா பயணத்திற் கும் ஏற்ற வகையில் பயன்படுத் தப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner