முன்பு அடுத்து Page:

கூடைப்பந்து: அய்ஓபி, கஸ்டம்ஸ் அணிகள் வெற்றி

கூடைப்பந்து: அய்ஓபி, கஸ்டம்ஸ் அணிகள் வெற்றி

கரூர், மே 24 கரூரில் நடைபெறும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது ஆட்டங்களில் சென்னை அய்ஓபி, கஸ்டம்ஸ் அணிகள் வென்றன. கரூரில் எல்ஆர்ஜி நாயுடு கோப்பைக்கான தேசியளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த 21-ஆம் தேதி முதல் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் சென்னை அய்ஓபி, புதுடில்லி சிஆர்பிஎப், இந்தியன் நேவி, சென்னை அய்சிஎப் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் கபூர்தாலா ரயில்வே கோச்....... மேலும்

24 மே 2017 16:17:04

சிறுவர்களுக்கான காலணிகள்

சிறுவர்களுக்கான காலணிகள்

  சென்னை, மே 24 குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப் பட்ட காலணிகள் கிராக்ஸ் கொண்டு வரு கிறது. ஒரு வண்ணமயமான வீச்சு கொண்ட இந்த காலணிகளின் சேகரிப்பு அவர்களது அடியில் ஒரு வசந்தத் தினை சேகரிக்கும். ஒவ்வொரு ஜோடியும் அவர்களது சோர்வு நாட்களுக்கு  ஒரு சரியான தோழ ராக இருக்கும். அது கடற்கரையையில் சுற்றி திரிவதாக இருந்தாலும் அல்லது அந்த நீண்ட மலைப்பாங்கான பகுதியில் செல்வதாக இருந் தாலும் அல்லது இந்த கோடை....... மேலும்

24 மே 2017 16:01:04

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் வீட்டு வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர்

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் வீட்டு வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர்

சென்னை, மே 24 தமிழகத்தின் சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர் கிராம மக்களுக்கு உதவிடும் வகையில் பல புதிய திட்டங்களை ஏபிஎம் டெர்மினல்ஸ் இன் லாண்ட் சர்வீஸ் தெற்காசியா நிறுவனம் முன்னெடுத்துள்ளது. அனுப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பழங்குடியின குடும்பங் களுக்கு புதிய குடியிருப்புகள், சுகாதார வசதிகள், சூரிய மின் சக்தியால் இயங்கும் தெரு விளக்குகள் ஆகிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே ஏபிஎம் நிறுவனத்தின் முயற்சியாகும். உள்ளூர் கிராம....... மேலும்

24 மே 2017 16:00:04

அடுத்த 3 கல்வியாண்டுகளில் பிளஸ் 2 வரை பாடத் திட்டங்கள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

அடுத்த 3 கல்வியாண்டுகளில்   பிளஸ் 2 வரை பாடத் திட்டங்கள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை, மே 24 அடுத்த கல்வியாண்டில் (2018-19) இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஒன் றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக் கான பாடத் திட்டங்கள் மாற்றி யமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த. உதயச் சந்திரன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவு வருமாறு: தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் மாற்றம்....... மேலும்

24 மே 2017 16:00:04

மாணவர்கள் சமூக சேவையையும் இலக்காக கொள்ள வேண்டும்: குடியரசுத் தலைவர் அறிவுரை

 மாணவர்கள் சமூக சேவையையும் இலக்காக கொள்ள வேண்டும்: குடியரசுத் தலைவர் அறிவுரை

ஊட்டி, மே 24- ''மாணவர்கள், பொருளாதார மேம்பாட்டை மட்டும் கருத்தில் கொள்ளாமல், சமூக சேவையையும் இலக்காக கொள்ள வேண்டும்'' என, ஊட் டியில் நடந்த பள்ளி விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தினார். மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை கட்டுப்பாட்டில், ஊட்டி லவ்டேல் பகுதியில், லாரன்ஸ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன், 159ஆவது நிறுவனர் தின விழா, நேற்று பள்ளி மைதானத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசுத் தலைவர்....... மேலும்

24 மே 2017 15:36:03

பா.ஜனதா அரசு தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைக்கிறது: கனிமொழி எம்.பி.

 பா.ஜனதா அரசு தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைக்கிறது: கனிமொழி எம்.பி.

புதுக்கோட்டை, மே 24- புதுக் கோட்டை ஜெ.ஜெ. கல்லூரி யில் இந்தி மொழி திணிப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற் றது. இதில் சிறப்பு விருந்தி னராக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழர்களுக்கு என தனி அடையாளம் இருக்கிறது. பா.ஜ.க. அரசு தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைக்கிறது. தி.மு.க. இந்தி திணிப்பை மட்டும் எதிர்க்க வில்லை. கலாசாரம், கல்வி,....... மேலும்

24 மே 2017 15:36:03

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர், மே 24- காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில், நீடிக்கும் கோடை மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, வினா டிக்கு, 1,380 கன அடியாக அதி கரித்துள்ளது. தமிழக - கர்நாடக எல்லை யில் உள்ள காவிரி மற்றும் அதன் துணையாறுகளின் நீர்ப் பிடிப்பு பகுதியில், அவ்வப் போது கோடை மழை பெய்கி றது. இதனால், 21ம் தேதி, 153 கன அடியாக இருந்த மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, நேற்று முன்தினம்,....... மேலும்

24 மே 2017 15:36:03

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜாதி தடையாக உள்ளது பெங்களூரு கருத்தரங்கில் தலாய்லாமா கருத்து

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜாதி தடையாக உள்ளது  பெங்களூரு கருத்தரங்கில் தலாய்லாமா கருத்து

பெங்களூரு, மே 24- ஜாதி அமைப்பை ஒழிக்காமல் இந்தியா முழு மையாக முன்னேற முடியாது. இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜாதி பெரும் தடைக்கல்லாக இருக்கிறது என நோபல் பரிசு பெற்ற திபெத்பவுத்த மதத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் சமூக நலத்துறை சார்பாக பெங்களூ ருவில் நேற்று புரட்சியாளர் அம்பேத்கரும், சமூக நீதியும் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கிவைத்த இந்தக் கருத்தரங்கில் உலக அமைதிக்கான....... மேலும்

24 மே 2017 15:12:03

‘விடுதலை’ தலையங்கத்தின் எதிரொலி குடியரசுத் தலைவரின் காஞ்சி பயணம் ரத்து

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து காஞ்சிக் கோவில்கள் தரிசனம், சங்கராச்சாரியார் சந்திப்பு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மதச்சார்பற்ற நாட்டின் குடியரசுத் தலைவர் இத்தகு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சட்டப்படி தவறு என்று ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியது (11.5.2017). அதன் எதிரொலியாக உதகை வரை  வந்த குடியரசுத் தலைவர் காஞ்சிப் பயணத்தை ரத்து செய்தார். மேலும்

24 மே 2017 14:59:02

பெரியார் கல்விக் குழுமங்களில் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பில் நூறு விழுக்காடு மதிப்பெண் எடுக்க பய…

  பெரியார் கல்விக் குழுமங்களில் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பில் நூறு விழுக்காடு மதிப்பெண் எடுக்க பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

திருச்சி, மே 23 திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு கல்வி வளாகத்தில் 22.5.2017 அன்று  10.15 மணிக்கு  நடந்து முடிந்த 10, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், மாணவர்களை கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்களில் நூற் றுக்கு நூறு மதிப்பெண்கள் மற்றும் கணக்குப் பதிவியல், வணிகவியல், கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும் பாடங்களில் 200க்கு 200 மதிப் பெண்களும் பெற பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு  பாராட்டு விழா நடந்தது. பெரியார் மணியம்மை பல்கலைக் கழக....... மேலும்

23 மே 2017 16:20:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெங்களூரு, மே 18- கர்நாடக மாநிலத்தில் மூட நம்பிக்கை தடை சட்டத்தை கொண்டு வருவோம். இதில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப்போ தில்லை என முதல்வர் சித்தராமையா உறுதி அளித்தார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் பதவியேற் றது. அன்று முதல் மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் அமல் படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த குளிர்கால கூட்டத் தொடரின் போது முதல்வர் சித்தராமையா மூடநம்பிக்கை தடை சட்டத்தை கொண்டு வருவோம் என்று அறிவித்தார்.

முதல்வர் சித்தராமையா பேரவையில் இவ்வாறு அறிவித்து இரண்டு வருடம் கடந்துவிட் டதால் மூடநம்பிக்கை தடை சட்டம் அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நிடுமாமிடி மடாபதி  வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தலைமையில் சுமார் 50க் கும் மேற்பட்ட சுவாமிகள், முதல்வர் சித்தராமையாவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது மூடநம்பிக்கை தடை சட்டத்தை விரைவில் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முதல் வரிடம் அளிக்கப்பட்டன.

இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:

மூட நம்பிக்கை தடை சட்டம் கொண்டு வரவேண்டும் என்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். இது தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சரவை துணை குழு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்பதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதே தவிர வேறு காரணம் எதுவும் கிடையாது. அமைச்சரவை துணை குழுவின் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

மூடநம்பிக்கை தடைச்சட்டம் குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.

எவ்வளவு விரைவில் மூட நம்பிக்கை தடை சட்டம் கொண்டு வரமுடியுமோ அவ்வளவு விரைவாக சட்டத்தை அமல்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து நிடுமாமிடி மடாதிபதி  வீரபத்ர சென்ன மல்ல சுவாமிகள் கூறுகையில், “முதல்வர் சித்தராமையாவுக்கு மூட நம்பிக்கை தடை சட் டத்தை கொண்டு வருவதில் விருப்பம் உள்ளது.

அமைச்சரவை துணை கமிட்டிக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எல்லா மதத்திலும் மூடநம்பிக்கையை ஒழிக்கவேண்டும் என்றே போதிக்கப்படுகின்றன.

எனவே மழைக்கால கூட்டத் தொடரில் மூடநம்பிக்கை தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்’’ என்றார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner