முன்பு அடுத்து Page:

உலக புத்தக நாள் விழா - புத்தகர் விருது'களை வழங்கி கவிஞர் வைரமுத்து பாராட்டு

உலக புத்தக நாள் விழா - புத்தகர் விருது'களை  வழங்கி கவிஞர் வைரமுத்து பாராட்டு

சென்னை புத்தகச் சங்கமத்தின் உலகப் புத்தக நாள் விழாவில்,  2018 ஆம் ஆண்டுக்கான புத்தகர் விருது' வழங்கும் விழாவில் வேலூர் பா.லிங்கம், பேராசிரியர் வீ.அரசு, பூம்புகார் பதிப்பகம் பிரதாப் சிங் சார்பாக ரெஜினால்ட் ராஜ்  ஆகியோருக்கு  கவிப்பேரரசு வைரமுத்து பயனாடை அணிவித்து புத்தகர் விருது'களையும், பாராட்டுகளையும் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், சுபகுணராஜன் ஆகியோர் உள்ளனர் (சென்னை....... மேலும்

24 ஏப்ரல் 2018 14:50:02

மங்காத தமிழென்று சங்கே முழங்கு - கவியரங்கம்

 மங்காத தமிழென்று சங்கே முழங்கு - கவியரங்கம்

புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவையின் 78ஆம் நிகழ்வு ஜோதி கண் மய்யத்தில் நடைபெற்றது. மன்றத் தலைவர் கோ.செல்வம் வரவேற்றார். தமிழ்மாமணி பட்டாபிராமன் தலைமையுரையாற்றினார். புரவலர் வனஜா வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் கிருங்கை சேதுபதி "புவியை நடத்து பொதுவில் நடத்து" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். படைப்பாளி பைரவி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற "மங்காத தமிழென்று சங்கே முழங்கு" கவியரங்கில் 20 கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பாவலர் உமாபதி நன்றி....... மேலும்

24 ஏப்ரல் 2018 14:21:02

விபத்தில் மூளைச்சாவு பாலிடெக்னிக் மாணவரின் உடல் உறுப்புகளை கொடை செய்த தந்தை

 விபத்தில் மூளைச்சாவு பாலிடெக்னிக் மாணவரின் உடல் உறுப்புகளை கொடை செய்த தந்தை

திருச்சி, ஏப். 24- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பசுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி, விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த மகன் ராஜேஸ் கண்ணா (வயது 19) அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். மற்றொரு மகன் பள்ளியில் படித்து வருகிறார். ராஜேஸ் கண்ணா தினமும் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம். சம்பவத் தன்று....... மேலும்

24 ஏப்ரல் 2018 14:21:02

மனை விற்பனை விளம்பரங்களில் அரசு விதிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்

 மனை விற்பனை விளம்பரங்களில் அரசு விதிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்

சென்னை,  ஏப்.23 கட்டடம், மனை விற்பனைக்கு விளம்பரம் செய்வோர் அரசு விதிகளின்படி, தமிழ்நாடு கட்டடம், மனை விற்பனை ஒழுங்குமுறை குழு மத்தின் இணையதள முகவரி, குழுமத்தில் பெறப்பட்ட பதிவு எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கட்டடம், மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் சனிக் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் கட்டட மனை விற்பனை முறைப்படுத் தல், மேம்படுத்தல் சட்டம் 2016 -இன்படி, தமிழக....... மேலும்

23 ஏப்ரல் 2018 16:30:04

ஆறாம் ஆண்டில் சென்னை புத்தக சங்கமத்தின் தொடரும் சாதனை

  ஆறாம் ஆண்டில் சென்னை புத்தக சங்கமத்தின் தொடரும் சாதனை

சென்னை, ஏப்.23 சென்னை புத்தகச் சங்கமத்தின் ஆறாவது ஆண்டு புத்தகக் காட்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தரைத்தளம் மற்றும் கீழ்த்தளத்தை ஒருங்கே இணைக் கின்ற வகையில் 44 அரங்குகளைக் கொண்டு 20.4.2018 முதல் 25.4.2018 முடிய ஆறு நாள்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் நாள் (20.4.2018) மாலை புரட்சி இயக்குநர் பாரதிராஜா தொடக்கிவைத்தார். புத்தகச் சங்கமத்தில் சிறப்பு நிகழ்வுகளாக மாலை ஆறு மணிக்கு சிறப்பு அழைப்பாளர்களைக்....... மேலும்

23 ஏப்ரல் 2018 16:30:04

நீட் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசலாமா? மோடிக்கு கவிப்பேரரசு வைரமுத்து கேள்வி

நீட் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசலாமா?  மோடிக்கு கவிப்பேரரசு வைரமுத்து கேள்வி

  சென்னை, ஏப். 23- உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க, தமிழ் நாடு -புதுச்சேரி அனைத்து மருத்துவ கல்லூரி மாண வர்கள் கூட்டமைப்பு, தமிழர்கள் உரி மைக்கான மாணவர்கள் இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நீட் தேர்வு எதிர்ப்பு மாநாடு சென்னையில் 19.04.2018 அன்று  நடத்தப்பட்டது  இம்மாநாட்டில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குதர வேண்டும், கல் வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் பலத்த கரவொலிகளுக்கிடையே நிறை....... மேலும்

23 ஏப்ரல் 2018 16:27:04

தேசிய இளையோர் தடகளம்: அரியானா வாகையர் பட்டம்

 தேசிய இளையோர் தடகளம்: அரியானா வாகையர் பட்டம்

கோவை, ஏப். 23- கோவையில் நடைபெற்ற தேசிய இளை யோர் தடகளப் போட்டியில் அரியானா அணி ஒட்டு மொத்த வாகையர் பட்டத்தை தட்டிச் சென்றது. தமிழக அணி 2-ஆம் இடம் பிடித்தது. தமிழ்நாடு தடகளச் சங்கம், கோவை மாவட்ட தடகளச் சங்கம், சிறீகிருஷ்ணா கல்வி நிறுவனம் இணைந்து தேசிய அளவிலான 16-ஆவது ஃபெட ரேஷன் கோப்பைக்கான இளை யோர் தடகளப் போட்டிகளை நடத்தின. கோவை, நேரு விளையாட்டு மைதானத்தில் கடந்த 20....... மேலும்

23 ஏப்ரல் 2018 16:06:04

தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றுவோம் : மு.க.ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றுவோம் : மு.க.ஸ்டாலின்

சென்னை, ஏப்.23 தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும், அப்போது 90 சதவீத அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள் என்றும் திருமண விழா வில் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை பெரம்பூரில் நேற்று (22.4.2018) நடந்த திருமண விழா ஒன்றில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்தினார். விழாவில், அவர் பேசியதாவது:- 6 வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க....... மேலும்

23 ஏப்ரல் 2018 15:52:03

தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

 தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

கோவை, ஏப்.23 தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண் டும் என்று தொல். திருமா வளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமா வளவன் நேற்று (22.4.2018) சென்னையில் இருந்து விமா னம் மூலம் கோவை சென்றார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறிய தாவது:- தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேண்டுகோள் விடுத்து....... மேலும்

23 ஏப்ரல் 2018 15:52:03

விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் வாசகர்களின் சங்கமமாக மாறிய சென்னை புத்தக சங்கமம்!

விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் வாசகர்களின் சங்கமமாக மாறிய சென்னை புத்தக சங்கமம்!

சென்னை, ஏப். 22- உலகப்புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 20 முதல் 25 வரையிலான 6 நாள்கள் புத்தகத் திருவிழா சென்னை பெரியார் திடலில் நடை பெற்று வருகிறது. எளிய மக்களுக்கான புத்தக திரு விழாவாக மாறியிருக்கும் சென்னை புத் தக சங்கமம், கரும்பு தின்ன கூலி தரு வது போல, கோடையில் நடைபெறும் குளிர்பதன வசதி கொண்ட புத்தகக் காட்சி, 50% தள்ளுபடியில் கிடைக்கும் அறிவுப்புதையல். நுழைவுக் கட்டணம் இல்லாத....... மேலும்

22 ஏப்ரல் 2018 15:38:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 10- சென்னையில் 6ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி முடிய சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி மைதா னத்தில் புத்தக் காட்சி நடைபெறுகிறது.

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவாக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ்மண் பதிப்ப கத்தார் சார்பில் மறைமலையடிகள் பேச்சு, எழுத்துகளின் தொகுப்பு நூல்க ளாக (11472 பக்கங்கள்) மறைமலையம் 34 தொகுதிகள் வெளியீட்டு விழா 9.1.2017 அன்று மாலை நடைபெற்றது.

விழாவுக்குத் தலைமையேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் பயனாடை அணிவித்து சிறப்பு செய் தார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில்  செயலாளர் கே.எஸ்.புகழேந்தி, காந்தி கண்ணதாசன், கோ.ஒளிவண்ணன் உள்ளிட்டவர்கள் தமிழர் தலைவர் ஆசிரி யர் மற்றும் புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் ஆகியோருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

தமிழ்மண் பதிப்பகம்  இளவழகன் விழாக்குழுவினர் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அகர முதலி உள்ளிட்ட நூல்களை வழங்கி பயனாடை அணிவித்து  சிறப்பு செய் தார். புதிய பார்வை ஆசிரியர் ம.நட ராசன், உணர்ச்சிக்கவிஞர் காசி.ஆனந் தன் ஆகியோருக்கும் நூல்களை வழங்கி பயனாடை அணிவித்து சிறப்பு செய் தார்.

தமிழ்மண் பதிப்பகம் இளவழகன், சைவ சித்தாந்த பதிப்பகம் முத்துகுமார சாமி ஆகியோரும் பாராட்டப்பெற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மறைமலையம் தொகுப்பு  நூல்களை புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன் வெளியிட்டார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உள்பட பலரும் நூல்களைப் பெற்றுக்கொண்டார்கள்.

மறைமலையடிகள் பெயரன் மறை.தாயுமானவன், ஈரோடு தட்சிணாமூர்த்தி, உரத்தநாடு சேகர், பெருஞ்சித்திரனார் மகள் இறைபொற்கொடி, பெருஞ்சித்தி ரனார் மகன் பூங்குன்றன், பல்லடம் மாணிக்கம், மலேசியா எழில், சிடிநாய கம் பேத்தியும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவருமான செந்தா மரை பிரபாகரன், பேராசிரியர் வீரபாண் டியன், பேராசிரியர் பாரி, சூலூர் பாவேந்தன் ஆகியோரும் புத்தகங்களை பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக வி.விடுதலைவேந்தன் வரவேற்றார். அ.மதிவாணன் தொகுப் புரை வழங்கினார்.

பாவலர் செந்தலை கவுதமன் தொடக்க உரையாற்றினார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், ஓவியர் வீர.சந் தானம், முனைவர் க.இராமசாமி, முனை வர் திருமாறன், கி.த.பச்சையப்பன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

விழா முடிவில் தமிழ்மண் பதிப் பகம் இளவழகன் நன்றி கூறினார்.

விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரி யார், அச்சக மேலாளர் க.சரவணன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத் தய்யன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்செல்வன், மதுரவாயல் பாலமுரளி, கு.சோமசுந்தரம், சுமதி கணேசன், செந்துறை இராசேந்திரன், தளபதிபாண்டியன், மோகன்ராஜ், புலவர் பா.வீரமணி, திண்டிவனம் மாவட்டச் செயலாளர் நவா.ஏழுமலை, அன்புக்கரசன், இரமேஷ், செஞ்சி ந.கதிரவன், பெரியார் திடல் சுரேஷ், கலைமணி, பெரியார் மாணாக்கன், பெரியார் புத்தக விற்பனை நிலைய பொறுப்பாளர்கள் பூமிநாதன், விமல், ஓட்டுநர் செந்தில், ஆனந்த், மகேஷ், சக்திவேல், சாந்தக்குமார், விவேக், அர்ஜூன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner