முன்பு அடுத்து Page:

சட்டமன்ற செய்திகள்

 சட்டமன்ற செய்திகள்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமையும்? : மு.க. ஸ்டாலின் கேள்வி சென்னை, ஜூன் 24 சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும் என்றும், அது மதுரை, தஞ்சாவூரில் அமைய வேண்டிய நிலை உருவாகி சர்ச்சை உருவாகும் நிலை ஏற்பட்டது. இந்த அவையில் முதல்வர் இதற்கு விளக்கம் அளித்த போது, மத்திய அரசு உறுதி செய்து....... மேலும்

24 ஜூன் 2017 14:35:02

புளியகண்டி பழங்குடியின மக்கள் போராட்டம் வெற்றி கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதி

 புளியகண்டி பழங்குடியின மக்கள் போராட்டம் வெற்றி கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதி

பொள்ளாச்சி, ஜூன் 24 புளியகண்டி பழங்குடியின மக்கள் கடந்த இரு நாட்களாக மேற்கொண்ட உறுதிமிக்க போராட்டத்தை தொடர்ந்து அனைத்து சாலை, நிலப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். பொள்ளாச்சி ஆனைமலை யடுத்த ஆழியாறு வனப்பகுதி யிலுள்ள ஆற்றுப்படுகையில் வண்டல் மண் எடுப்பது என்ற போர்வையில் செங்கல்சூளை அதிபர்கள், கட்டிட ஒப்பந்த தாரர்கள் கடந்த இருவாரங் களாக நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் மணல், செம்மண், சரளை மண்ணை எடுத்துச் சென்று வந்தனர்........ மேலும்

24 ஜூன் 2017 14:33:02

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கவேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

கீழடியில்  அருங்காட்சியகம் அமைக்கவேண்டும்:  உயர்நீதிமன்றம்  உத்தரவு

  மதுரை, ஜூன் 24- சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறையின் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து அகழாய்வு நடைபெற்று வரு கிறது. கீழடி அகழாய்வு குறித்து பல்வேறு பொதுநல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டுள்ளநிலை யில்,சென்னையைச்சேர்ந்த வழக்குரைஞர்கனிமொழி மதி என்பவரும், கீழடியில் அருங்காட்சியகம்அமைக்கக்....... மேலும்

24 ஜூன் 2017 14:25:02

பயப்படத் தேவையில்லை

பயப்படத் தேவையில்லை

கேள்வி: தமிழ்நாட்டிலும் மதப்பிரி வினை போன்ற சிக்கல்கள் எதிர்காலத்தில் ஏற் படும் எனச் சொல்கிறார்களே? பதில்: இங்கே அந்தப் பருப்பு வேகாது. அதற் கான விதையை பெரியார் ஆழமா ஊன்றி விட்டுப் போய்விட்டார். எத்தனை ஜாதி மத வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர் என்ற அடையாளத்துக்காக மக்கள் ஒன்று கூடிய தைக் கண்ணால் பார்த்த பிறகு பயப்படத் தேவையில்லை. - நடிகர் ராஜ்கிரண் (‘ஆனந்த விகடன்’, 14,4,2017) மேலும்

24 ஜூன் 2017 14:12:02

கோவை- ஈஷா மய்யத்திற்கு அதிமுக அரசின் சட்ட விரோத அனுமதிகள்

திடுக்கிடும் தகவல்! கோவை- ஈஷா மய்யத்திற்கு அதிமுக அரசின் சட்ட விரோத அனுமதிகள் கோவையில் உள்ள ஈஷா யோகா மய்யத்தின் சட்டவிரோத கட்டடங்களுக்கு சிறப்பு அனுமதி அளித்திருப்பதாக தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டி ருக்கிறது. இது தமிழக மக்களிடமும், நேர்மையான அரசு அதிகாரிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி இக்கரைபூலுவம்பட்டி வனச்சரகம் உள்ளது. மலைதளப்பாதுகாப்புக்குட்பட்ட இப்பகுதி பல்லுயிர் பெருக்கத்திற்கானது. இதனை பாதுகாக்கப்பட வேண்டிய காடு....... மேலும்

24 ஜூன் 2017 14:11:02

பி.இ. சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

 பி.இ. சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சென்னை, ஜூன் 23 பி.இ. சேர்க் கைக்கு விண்ணப்பித்தவர்களுக் கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை மாலை வெளியிட்டது. இதில் 59 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் பெற்றுள்ளனர். பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதற்கு 1,41,077 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,36,988 மாணவ, மாணவிகள் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கான சமவாய்ப்பு எண் பல்கலைக்கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் களுக்கான தரவரிசைப்....... மேலும்

23 ஜூன் 2017 15:32:03

சட்டமன்ற செய்திகள் கீழடி தொல்பொருள்கள் தமிழகத்திலேயே ஆய்வு

 சட்டமன்ற செய்திகள் கீழடி தொல்பொருள்கள் தமிழகத்திலேயே ஆய்வு

சென்னை, ஜூன் 23 கீழடியில் கிடைத்த தொல்பொருள்களை தமிழகத் திலேயே பாதுகாத்து ஆய்வு மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக் கிழமை கூறினார். சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: தமிழர்களின் பண்பாட்டு அடையா ளங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பதை நிரூபிக்கும் வகையில் கீழடி அகழ்வாய்வுக்கு மத்திய அரசின் ஒத் துழைப்பு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு....... மேலும்

23 ஜூன் 2017 15:16:03

பல் கூச்சத்தை தடுக்கும் பற்பசை

பல் கூச்சத்தை தடுக்கும் பற்பசை

சென்னை, ஜூன் 22 பல் கூச்சத்திலிருந்து நிவாரணம் மேம்பட்ட சுத்தம் மற்றும் நீடித்த புத்துணர்ச்சி இவற்றிற்காக ஜி.எஸ்.கே கன்ஸ்யுமர் ஹெல்த்கேர் சென் ஸோடைன் டீப் கிளீன் எனும் புதிய பற்பசையை அறிமுகம் செய்துள்ளது. இது நுரை தரும் தொழில் நுட்பம் மற்றும் இரட்டை சுத்த சிலிக்கா அமைப்பு பற்களில் இருந்து பிளேக் மற்றும் கறை களை நீக்கி மேம்பட்ட சுத்தத்தை வழங்குவதோடு அதன் இரு மடங்கு குளிர்ச்சியான  பெப்பர் மின்ட்....... மேலும்

22 ஜூன் 2017 15:44:03

மகளிரே பாடையைத் தூக்கிச் சென்ற புரட்சி!

மகளிரே பாடையைத் தூக்கிச் சென்ற புரட்சி!

நாகை, ஜூன் 22 நாகை மாவட்டம் கீவளூர் ஒன்றியம் குருக்கத்தி  பாவா.நவனீதகிருஷ்ணன் அவர்களின் சகோதரர் துணைவியார் மாவட்ட துணைச் செயலாளர் பாவா.ஜெயக்குமார்  மோகன் குமார் ஆகியோரின் தாயார் கவுசல்யாதேவி வயது (88) 20.6.2017 மறைவுற்றார். 21.6.2017 அன்று இறுதி ஊர்வலம் நடைபெற்றது. கழக மகளிரணி  தோழர்கள்  (பெண்கள்) பாடை யை தூக்கி மூட நம்பிக்கையை முறியடித்தார்கள்   கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்,   நாகை மாவட்டத்தலைவர் நெப்போலியன்,   மாவட் டச் செயலாளர் புபேஸ்குப்தா, ....... மேலும்

22 ஜூன் 2017 15:42:03

தமிழகத்தில் நிகழாண்டில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடல்

   தமிழகத்தில் நிகழாண்டில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடல்

சென்னை, ஜூன் 22 தமிழகத்தில் இந்த ஆண்டில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதால் அவற்றில் மாணவர் சேர்க்கை இம்முறை இருக்காது என உயர் கல்வித் துறைச் செயலாளர் சுனில் பாலிவால் கூறினார். அண்ணா பல்கலைக்கழகத் தில் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற பி.இ. சேர்க்கை விண்ணப் பதாரர்களுக்கான சமவாய்ப்பு எண் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின் அவர் அளித்த பேட்டி: பொறியியல் பட்டதாரி களுக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பது சற்று பாதிக்கப்பட்டி ருப்பதால், பி.இ. படிப்புகளில் சேர்க்கை குறைந்து வருகிறது....... மேலும்

22 ஜூன் 2017 15:28:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவரிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை

சென்னை, ஜன. 10- 2011ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் சமையல் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட் டது. ஆனால் தற்போது தமிழக அரசு அதற்கு செயல் வடிவம் கொடுக்காமல் இருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாடு சமையற் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் எம்.ஜி-.ராஜாமணி, பொதுச் செயலாளர் மு.இனியவன், மற்றும் நிர்வாகிகள் இரா.ஆனந்தன், டி.அரவிந்தன், முரளி, ஜி.ரமேஷ் மற்றும் வட சென்னை கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர்

சு. குமாரதேவன் ஆகியோர் நேற்று (9.1.2017) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்களை சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.

தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான சமையற் கலைத் தொழிலாளர்களுக்கு, அவர்களின் வாழ்வில் வளம் பெறவும் அவர்கள் குடும்பம் நிம்மதி பெறவும் சமையல் தொழிலாளர்களின் குழந்தைக ளுக்கு நல்ல கல்வி கிடைக் கவும் தொடர்ந்து தொண்டாற்றி வரும் தமிழ்நாடு சமையற் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உங்கள் உதவியும் நல் ஆதரவும் வேண்டுகிறது.

கடந்த (தி.மு.க. ஆட்சியில்) 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி சமையல் தொழி லாளர்களுக்கு தனி நல வாரி யம் அமைக்கப்படும் என அப்போதைய தமிழக முதல் வர் மரியாதைக்குரிய கலைஞர் அறிவித்தார். அதன்படி சமை யல் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்பட் டது. அதற்கான அலுவலர் களை நியமிக்கும் முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சமையல் தொழிலாளர்கள் தனி நல வாரியமும் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து பல முறை நாங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை நலவாரியம் செயல்வடிவம் பெறாமலும் நலவாரியத்திற் கான அலுவலர்களை நியமிக் காமலும் தற்போதைய அரசு காலம் தாழ்த்துகிறது.

சமையல் தொழிலாளர் தனி நல வாரியம் செயல் வடிவம் பெற்றால், நலிந்த எங்கள் சமையல் தொழிலாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே பதவிகளை நோக்கிச் செல்லாமல் சமூக அக்கறை யுடன் செயல்பட்டுக் கொண்டி ருக்கும் உங்களை போன்றோர் களின் குரலுக்கு வலிமையை யும் வீரியமும் அதிகம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். எனவே, எங்கள் சமையல் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என பணி வன்போடு வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner