முன்பு அடுத்து Page:

பாதுகாவல் - கண்காணிப்பு சிறப்பு வர்த்தக கண்காட்சி

பாதுகாவல் - கண்காணிப்பு சிறப்பு வர்த்தக கண்காட்சி

சென்னை, ஜூன் 28 பாதுகாவல் மற்றும் கண் காணிப்பிற்கான பிரத்தி யேக கண் காட்சி யாகத் திகழும்  மிதிஷிணிசி இந்தியா ஏற்பாட்டாளர்களான  யுபிஎம் இந்தியா, செக்யூ ரிட்டி அண்டு ‘பயர் எக்ஸ்போ (ஷிகிதிணி) - தென்னிந்தி யா-வின் மூன் றாவது பதிப்பினை நடத்தவுள்ளதை அறிவித்துள்ளது. சென்னை வர்த்தக மையத்தில் ஜூன் 29 முதல் ஜூலை 1 ஆம் தேதி களில் நடத்தப்படவுள்ள இக்கண் காட்சியில் கண்காணிப்பு நுழைவு மற்றும் வீட்டு தானி....... மேலும்

28 ஜூன் 2017 15:53:03

தொழில் முனைவோர்களுக்கான இணைய பயன்பாட்டுப் பணிகள்

தொழில் முனைவோர்களுக்கான இணைய பயன்பாட்டுப் பணிகள்

சென்னை, ஜூன் 28 இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் டிஜிட்டலுக்கான அதிகாரத்தைப் பெற வேண்டும் என்ற கூகுள் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு அங்கமாக அவர்கள் இணையம் மற்றும் தொழில்நுட்பங்களை வெற்றிகர மாகக் கையாள வேண்டும் என்பதற்கான பல்வேறு திட்டப் பணிகளைச் செயல்படுத்துகிறது.சென்னையில்  நடந்த நிகழ்ச் சியின் போது சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் களிடையே நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற வர்களின் விவரங்கள்....... மேலும்

28 ஜூன் 2017 15:49:03

மத்திய அரசின் நிதியுதவி இல்லாததால் உலக வங்கிகளிடம் கடன் வாங்கி ஏரிகளை புனரமைக்க பொதுப்பணித்துறை திட…

 மத்திய அரசின் நிதியுதவி இல்லாததால் உலக வங்கிகளிடம் கடன் வாங்கி ஏரிகளை புனரமைக்க பொதுப்பணித்துறை திட்டம்

சென்னை, ஜூன் 28- தமிழகம் முழுவதும் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 14 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. மற்ற ஏரிகள் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பராமரிக்கப்படுகிறது. குறிப்பாக பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள ஏரிகள் துர்வாருதல் மற்றும் சீரமைப் பில் கோட்டைவிட்டதால் மழைநீரை சேமிக்க முடியாமல் ஆண்டுக்கு 250 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனால் விவசாயம், குடி நீருக்கு தண்ணீர் தட்டுப்பாடு எழுந்து, அண்டை மாநிலங்க ளிடம்....... மேலும்

28 ஜூன் 2017 15:08:03

அரசு பள்ளி ஆசிரியர்கள்

 அரசு பள்ளி ஆசிரியர்கள்

தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியிலே சேர்ப்பதை கட்டாயமாக்காதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி சென்னை, ஜூன் 28- தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு பிறப் பித்த உத்தரவைஎதிர்த்து அப் பள்ளி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப் புகளை தொடங்க 2012இல் தமி ழக அரசு....... மேலும்

28 ஜூன் 2017 15:08:03

குட்கா ஊழல்

குட்கா ஊழல்

காவல்துறை அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னை, ஜூன் 28- தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:- இன்று ஆங்கில பத்திரிகை யில் முதல் பக்கத்தில் வெளி வந்துள்ள குட்கா ஊழல் பற் றிய விவரங்கள் அதிர்ச்சியளிக் கிறது. சென்னை மாநகர காவல் துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப் பட்ட லஞ்சம் குறித்தும் வெளி....... மேலும்

28 ஜூன் 2017 14:53:02

மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த மாணவருக்கு கல்விக் கடன் வழங்க வங்கிக்கு உத்தரவு

 மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த மாணவருக்கு கல்விக் கடன் வழங்க வங்கிக்கு உத்தரவு

சென்னை, ஜூன் 27 விவசாய நிலத்தைப் பிணையாக ஏற்று மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த மாணவருக்கு கல்விக் கடனை உடனே வழங்க வேண்டும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் முகையூரைச் சேர்ந்த மாணவர் எஸ்.சம்பத்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்: நான் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.75 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளேன். மும்பையில் உள்ள தெர்னா மருத்துவக் கல்லூரியில்....... மேலும்

27 ஜூன் 2017 15:28:03

பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் கடைசியில் தொடங்க வாய்ப்பு!

 பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் கடைசியில் தொடங்க வாய்ப்பு!

சென்னை, ஜூன் 27 மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தள்ளிப் போன காரணத்தால், ஆகஸ்ட் முதல் நாள் தொடங் கப்பட வேண்டிய பி.இ. முதலா மாண்டு வகுப்புகள், ஆகஸ்ட் நான்காவது வாரத்தில்தான் தொடங்க வாய்ப்புள்ளதாக அண் ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூலை 20 அல்லது 21 ஆம் தேதியில் தொடங்கவும் அதிகாரிகள் திட் டமிட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பி.இ. முதலாமாண்டு வகுப்புகள்....... மேலும்

27 ஜூன் 2017 15:24:03

ஜவுளிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை நீக்கக் கோரி வேலைநிறுத்தம்

 ஜவுளிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை நீக்கக் கோரி வேலைநிறுத்தம்

சேலம், ஜூன் 27  ஜவுளிக்கு விதிக்கப்பட்டுள்ள 5% ஜிஎஸ்டி வரியை நீக்க வலி யுறுத்தி விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்படும். ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டியில் 5% வரி விதிக் கப்பட்டுள்ளது. மத்திய அரசா னது தற்போது 5% வரியை திடீரென விதித்துள்ளது. விசைத்தறி உரிமையாளர்கள் 5% வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் 3 நாட்களுக்கு....... மேலும்

27 ஜூன் 2017 15:15:03

நோக்கியா கைபேசி விற்க அனுமதித்தது ஏன்? மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்

 நோக்கியா கைபேசி விற்க அனுமதித்தது ஏன்? மத்திய, மாநில அரசுகளுக்கு  கண்டனம்

  சென்னை, ஜூன் 27 தமிழக தொழி லாளர்களை ஏமாற்றிய நோக்கியா நிறு வனத்தின் கைபேசியை விற்க அனுமதி அளித்த மத்திய மாநில அரசுகளுக்கு கண் டனம் தெரிவிப்பதாக தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் கூறினார். அவர் வெளியிட்ட அறிக்கை: திருப் பெரும்புதூரில் நோக்கியா நிறுவனம் துவங் கப்பட்டு, பல கோடி ரூபாய்க்கு கைப்பேசி களை  விற்பனை செய்து வந்தது. அந்த நிறு வனத்தில் 10000 பேர் பணியாற்றி வந்தார்கள். இந்நிலையில் 2014 ஆம்....... மேலும்

27 ஜூன் 2017 15:01:03

தமிழகத்தின் உற்பத்தி துறை வீழ்ச்சியின் விளிம்புக்கு சென்று விட்டது: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

 தமிழகத்தின் உற்பத்தி துறை வீழ்ச்சியின் விளிம்புக்கு சென்று விட்டது: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, ஜூன் 27 ஊழலில் திளைக்கும் குதிரை பேர பினாமி ஆட்சியால் தமிழகத்தின் உற்பத்தித்துறை வீழ்ச்சியின் விளிம்புக்கு சென்று விட்டது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவ ருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக உற்பத்தித்துறை 201620-17ஆம் ஆண்டில் மிகப்பெரிய பின்ன டைவைச் சந்தித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டி ருக்கும் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிமுக ஆட் சியில் தொழில்....... மேலும்

27 ஜூன் 2017 15:01:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 9- தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:-

தமிழகம் இதுவரை கண் டிராத அளவிற்கு வறட்சியின் கொடுமையால் கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளாக ஏறத் தாழ 125 விவசாயிகள் தற் கொலையாலும் அதிர்ச்சியா லும் உயிர்ப் பலியாகியுள்ளனர். இது குறித்து உடனடியாக ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல் வத்தை நேரில் சந்தித்து வலி யுறுத்தினேன்.

அதுவரை தூங்கி வழிந்த அ.தி.மு.க. அரசு அதன்பிறகே ஆய்வுக்குழுவை அறிவித்தது. அதன் மூலமாக விவசாயிக ளின் உயிர்ப்பலிகள் தடுக்கப் படும் என்ற நம்பிக்கை ஏற்பட் டது. அந்த நம்பிக்கையைத் தகர்த்துத் தவிடு பொடியாக்கி யுள்ளனர் தமிழக அமைச்சர்கள்.

ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் வெறும் கண்துடைப்பு நாடகம் நடத்துகிறார்கள் என விவசாயிகள் குமுறுகிறார்கள். அவர்களின் வேதனையைத் துடைக்க வேண்டிய அமைச் சர்களோ, வேளாண்குடிகளையே ஒட்டுமொத்தமாக இழிவு செய் யும் வகையில் பேசியுள்ளனர்.

அமைச்சர் ஒருவர் ‘‘தமிழ கத்தில் விவசாயிகள் யாரும் வறட்சியால் உயிர் இழக்க வில்லை. வயது முதிர்வாலும், உடல் உபாதையினாலுமே உயிர் இழந்துள்ளனர். அவர்கள் வறட்சியால் இறந்து போனார் கள் என எதிர்க் கட்சிகள் பொய்ப்பிரச்சாரம் செய்து எங்களின் ஆட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர்'' என ஆண வத்துடன் பேசியிருக்கிறார். மற்றொரு அமைச்சரும் இதே போல கருத்து தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் 100-க்கும் அதி கமான விவசாயிகள் இறந்து போன அதிர்ச்சி செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்து, தேசிய மனித உரிமை ஆணை யம், தாமாக முன் வந்து ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது. விவசாயிகள் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து 6 வாரத்துக்குள் விரி வான அறிக்கை தாக்கல் செய் யவேண்டும் என தமிழக அர சின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது.

அதுபோலவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷென் கவுல், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு பிறப் பித்த உத்தரவில், “விவசாயி களைப் பாதுகாக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த பதில் மனுவை 4 வாரத் திற்குள் தாக்கல் செய்ய வேண் டும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உயர்நீதிமன்றமும் தேசிய மனித உரிமை ஆணையமும் இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் இதற்குப் புறம்பாகப் பேசி விவசாயிக ளின் கடும் கோபத்திற்கு ஆளா கியிருப்பது சட்ட மீறல் மட்டு மின்றி, நீதி மன்ற அவமதிப்புச் செயலுமாகும். 2011ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் விவ சாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, சாகுபடி என்பது சாகும் படி யாகி வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 விவசாயிகள் இந்த பாதிப்பினால் மரண மடைந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த உண்மைகளைத் தொடர்ந்து மறைத்து, மழுப்பி வரும் அ.தி.மு.க. அரசு தான் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறது.

விவசாயிகளின் தற்கொலை களையும், அதிர்ச்சி மரணங்க ளையும், முதுமையினால் ஏற் பட்ட மரணங்கள் என்றும், சொந்தப் பிரச்சினையால் ஏற் பட்டவை என்றும், கள்ளக்கா தல் விவகாரத்தில் தற்கொலை என்றும் இழிவுபடுத்தும் போக்கை இந்த அரசு தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது.

காவிரி நீர்த் தேவை குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய அரசின் குழுவிடம் மாநில அரசு சார்பில் சமர்ப்பித்த அறிக் கையில்கூட, விவசாயிகளின் தற்கொலைகளையும் அதிர்ச்சி மரணங்களையும் மறைத்து, அவர்களின் குடும்பத்திற்குக் கிடைக்க வேண்டிய இழப்பீடு களுக்கு வாய்ப்பின்றிச் செய்து வசவுகளுக்கு ஆளாயினர்.

கடந்த ஒரு மாதத்தில் மர ணமடைந்தவர்களில், நாகை மாவட்டம், கீழ்வேளூர் கடம் பன்குடியைச் சேர்ந்த விவசாயி வீரமணி, கடந்த 30.12.2016இல் தற்கொலை செய்து கொண்ட இவருக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார் கள்.

அதுபோலவே, செம்பனார் கோவில் சேமங்கலம் கிராமத் தைச் சேர்ந்த விவசாயி ராஜ்குமார் அதிர்ச்சி மரணமடைந் திருக்கிறார். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்தைச் சேர்ந்த ராம மூர்த்தி என்பவரின் மனைவி கீர்த்திகா 22.12.2016 அன்று அதிர்ச்சி மரணமடைந் தார். இவையெல்லாம் வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற் பட்ட மரணங்களா? இவர்க ளைப்போல பல உதாரணங்க ளைக் காட்ட முடியும்.

மறைந்த முதல்-அமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்தார்கள் என 400க்கும் மேற்பட்டவர்களைப் பட்டியலிட்டுள்ளார்களே, அவர்களில் வயது முதிர்ச்சி யானவர்களே கிடையாதா? அவர்களுக்கு உடல் உபாதை களே ஏற்படவில்லையா?

மரணமடைந்தவர்களை யெல்லாம் மொத்தமாக அம் மையார் ஜெயலலிதாவுக்காக இறந்தவர்கள் எனப் பட்டிய லிட்டு அவர்களின் குடும்பத்தா ருக்கு நிதி உதவி அறிவித்துள்ள ஆளுங் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விவசாயிகளின் தற்கொலைகளையும் அதிர்ச்சி மரணங்களையும் கொச்சைப் படுத்துவது, தமிழக விவசாயப் பெரு மக்களையே மொத்தமாக வஞ்சிக்கும் செயலாகும்.

இதயத்தில் ஈரம் சிறிது மின்றி அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் உதிர்க்கும் சருகு போலக் காய்ந்த வார்த்தை களைக் கட்டுப்படுத்த வேண் டிய கடமையும், பொறுப்பும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இருக்கிறது.

எனினும், அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்பு என்பதும் அமைச்சரவை ஒற்றுமை என்பதும் குறைந்து குலைந்து போயிருக்கும் நிலையில், அவர் தான் என்ன செய்வார்,

பாவம்! தமிழகத்தில் தொடர்ந்து பெருகி வரும் விவசாயிகளின் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் குறித்த உண்மை விவரத்தை முழுமையாக வெளியிடுவது டன், இனியும் மரணங்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும், நிவா ரண ஏற்பாடுகளையும் போர்க் கால அடிப்படையில் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

-இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner