முன்பு அடுத்து Page:

தூத்துக்குடி உள்பட 3 மாவட்டங்களில் வரும் 27 வரை இணைய சேவை ரத்து

தூத்துக்குடி உள்பட 3 மாவட்டங்களில் வரும் 27 வரை இணைய சேவை ரத்து

தூத்துக்குடி, மே 25 தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களில் வரும் 27 -ஆம் தேதி வரை இணைய சேவைகளை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்களை அனைத்து இணையதள சேவை வழங்குநர்களுக்கும் மாநில அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து இணையதள சேவை வழங்குநர்களுக்கு உள் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் நிரஞ்சன் மார்டி புதன் கிழமை அனுப்பியுள்ள சுற்ற றிக்கை விவரம்:- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செவ்வாய்க்....... மேலும்

25 மே 2018 16:21:04

தென்மேற்குப் பருவ மழை: 27 மாவட்டங்களில் சராசரி அளவிலேயே இருக்கும்

தென்மேற்குப் பருவ மழை:  27 மாவட்டங்களில் சராசரி அளவிலேயே இருக்கும்

சென்னை, மே 25 தமிழகத்தில் இந்த ஆண்டு 27 மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை சராசரி அளவிலேயே இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காலநிலை ஆராய்ச்சி மய்யம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டில் ஜூன் முதல் செப் டம்பர் மாதம் வரையில் மழைக் கான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கட லில்....... மேலும்

25 மே 2018 16:16:04

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

தமிழக அரசை கண்டித்து கன்னட அமைப்பினர் முழக்கம் பெங்களூர், மே 25 தூத் துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, பெங்களூருவில் மனித உரிமை செயற்பாட்டா ளர்கள் வேதாந்தா நிறுவனத் தின் அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் இயங்கி வருகிறது. இதனை விரி வாக்கம் செய்வதை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக் கிச் சூட்டில் 10-க்கும்....... மேலும்

25 மே 2018 16:07:04

பேரவைத் தலைவர் அறிவிப்பு

பேரவைத் தலைவர் அறிவிப்பு

மானிய கோரிக்கை மீதான விவாதம்  சட்டப்பேரவை கூட்டம் 23 நாட்கள் நடக்கிறது சென்னை, மே 25 மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 29ஆம் தேதி தொடங்கி ஜூலை 9ம் வரை நடக்கிறது. இந்த நாட்களில் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று பேரவத் தலைவர் ப.தனபால் அறிவித்துள்ளார். தமிழக அரசின் 2018-2019ஆம் ஆண்டுக்கான பட் ஜெட் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி சட்டப்பேரவையில்....... மேலும்

25 மே 2018 16:07:04

அனைத்துக் கட்சிப் போராட்டங்களின் எதிரொலி

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு தூத்துக்குடி, மே 25 ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராடியதன் விளைவாக ஆலை மூடப்படும் செய்தியை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு முடிவு செய்துள்ளது. அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று தெரிவித்தார். மின் இணைப்பு துண்டிப்பு தூத்துக்குடியில் 3- ஆவது நாளாக நேற்றும் பதற்றம்....... மேலும்

25 மே 2018 15:33:03

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? - காங்கிரசு கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு:  பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? - காங்கிரசு கேள்வி

புதுடில்லி, மே 25 தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர் பாக டில்லியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளார் அபிஷேக் மனு சிங்வி செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடியாக ட்விட்டரில் கருத்து பதிவிடும் மோடி, தூத்துக்குடியில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியான விவகாரத்தில் மவுனம் சாதித்து வருவதற்கான காரணத்தை மக்களிடம் விளக்கி கூற வேண்டும். 13....... மேலும்

25 மே 2018 15:12:03

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலைகளைக் கண்டித்து தமிழகமெங்கும் முழு அடைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலைகளைக் கண்டித்து தமிழகமெங்கும் முழு அடைப்பு

மணவிழாவை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின், புதுமணத் தம்பதியர் உள்பட பலரும் மறியலில் கைது சென்னை, மே25 தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் தூத்துக்குடி படு கொலையை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் சென்னையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக 100 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அறவழிப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 22.5.2018....... மேலும்

25 மே 2018 14:58:02

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்

சென்னை, மே 24 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் எனவும், இதில் 60,000 வழக்குரைஞர்கள் பங்கேற்கின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்புத் தலைவர் எஸ்.கே. வேல், செயலர் செல்ல.ராசாமணி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி மாவட்ட மக்கள் நடத்திய போ ராட்டத்தில் காவல்துறையினர் காட்டுமிராண்டித் தனமாக துப்பாக்கி....... மேலும்

24 மே 2018 16:14:04

வழக்கு என்ன பெரிய வழக்கு என் மீது துப்பாக்கி சூடு கூட நடத்துங்கள் : மு.க.ஸ்டாலின் ஆவேசம்

வழக்கு என்ன பெரிய வழக்கு  என் மீது துப்பாக்கி சூடு கூட நடத்துங்கள் : மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை, மே 24- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத் தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் அலு வல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்து உள்ளன. பின்னர் தலைமைசெயலக வளாகத் தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சிய ரையும், காவல்துறை கண்காணிப்பாள ரையும் பணியிட மாற்றம் செய்துள்ள னர். பலர் உயிரிழந்ததற்கு பொறுப் பேற்று முதல்வர் பதவியிலிருந்து பழனிசாமி விலக வேண்டும் என....... மேலும்

24 மே 2018 15:15:03

தூத்துக்குடியில் தொடர் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து - மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக தமிழக…

தூத்துக்குடியில் தொடர் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து - மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக  தமிழகத்தில் நாளை முழு அடைப்பு!

அனைத்துக் கட்சித் தலைவர்கள் அறிவிப்பு! சென்னை, மே 24- தூத்துக்குடியில் தொடர் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பாக நாளை (25.5.2018) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து திமுக கழகச் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரசு தலைவர் க.திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச்....... மேலும்

24 மே 2018 15:15:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழகத்தில் பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

சென்னை, ஜன. 8- தமிழகத்தில் உள்ள 15 முக்கிய நீர்தேக்கங்களில் ஒட்டு மொத்த மாக 13 சதவீத நீர் இருப்பு மட்டுமே மிச்சம் உள்ளது.  இதனால் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மாநிலத்தின் பெரும்பாலான பகுதி களில் குடிநீர்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனது. தமிழகத்தில் 62 சதவீத மழைப்பொழிவு பற்றாக்குறை ஏற்பட்டது. மாநிலத்தின் பல முக்கிய நீர் தேக்கங்களில் நீர் இருப்பு வெகுவாகக் குறைந்து விட் டது.

இதனால் அடுத்த ஒரு மாதத்தில் குடிநீர் தட்டுப் பாடுஅபாயம் ஏற்படவாய்ப்புள்ளது. தற்போதுள்ள சூழலில் தமிழகத்தில் அதிகபட்சமாக 10 முதல் 100 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பஞ் சாயத்துக்கு உட்பட்ட 46,438 நீர்நிலைகளில் குடிநீர் சப்ளை 83 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது.

அடுத்த சில வாரங்களில் குடிநீர் வழங்கும் அளவு மேலும் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. வைகை, பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு நீர்நிலைகள் தான் பருவமழைக் குறைவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நீர்தேக்கங்கள் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்குகின்றன. தற்போது இங்கு 4 சதவீத நீர் இருப்பு மட்டுமே மிச்சமுள்ளது.

இதைக் கொண்டு அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். தாமிரபரணி ஆற்றை நம்பியுள்ள இரு நீர் தேக்கங்கள் மூலம் அடுத்த 40 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும். சிறு வாணி மூலம் கோவைக்கு ஒரு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது. சாத்தனூர் அணை மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அடுத்த  இரு வாரங்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும்.

வட கிழக்கு பருவமழை பற்றாக்குறை யால்திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங் கள் (63 சத வீத பற்றாக்குறை) வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் மேட்டுர் அணையில் 11 சதவீதமே நீர்இருப்பு மூலம் தினமும் 10 கோடியே 50 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ. 172 கோடி செலவில் மாற்று ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருவதாக குடிநீர் வடிகால்வாரியம் கூறி யுள்ளது. 528 பஞ்சாயத்து டவுன் பகுதிகளில் பிப்ரவரி மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. எனினும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் கன்னியாகுமரியை ஒட்டியுள்ள 350 பஞ்சாயத்து டவுன் பகுதி களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப் புள்ளது.

மேலும் பொதுமக்கள் குடிநீர் மற்றும் நிலத்தடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner