முன்பு அடுத்து Page:

வெடி விபத்தால் கோவில் இடிந்து தரைமட்டம்: ஒருவர் பலி

வெடி விபத்தால் கோவில் இடிந்து தரைமட்டம்: ஒருவர் பலி

போச்சம்பள்ளி, ஜூலை 24- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள எ.மோட்டூர் கிராமத்தில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாது (வயது 55) திடீரென மரணம் அடைந்தார். இவர் இறந்த 15 நாட்களுக்கு பிறகு மேகநாதன் என்பவரும் திடீ ரென உயிரிழந்தார்.இவ்வாறு அடுத்தடுத்து 2 பேரும் உயிரிழந்ததால் அந்த பகுதியில் பேய்கள் நடமாட் டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கருதினர். எனவே, பேய்களை....... மேலும்

24 ஜூலை 2017 14:38:02

மாணவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க நடவடிக்கை

 மாணவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க நடவடிக்கை

தாம்பரம், ஜூலை 23 பொறியியல் கல்வி பயிலும் மாண வர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கும் ஆர்வத்தை ஊக்கு விக்க உரிய நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது என்று இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத் தலைவர் அனில் தத்தாத் ரேய சகஸ்ரபுத்தே கூறினார். மேற்கு தாம்பரம் சிறீசாய்ராம் பொறியியல் கல்லூரியின் 18 ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது: இந்திய பொறியியல் தொழில் நுட்பக் கல்வியின் தரம், மாண வர்களின் அறிவாற்றல், திறன்....... மேலும்

24 ஜூலை 2017 10:34:10

தற்கொலையோ! கோவில் குளத்தில் கடவுளர் சிலைகள் கண்டெடுப்பு

 தற்கொலையோ! கோவில் குளத்தில் கடவுளர் சிலைகள் கண்டெடுப்பு

மயிலாடுதுறை, ஜூலை 23 திருவிடைக்கழியில், கோவில் குளத்தை தூர் வாரும் போது, கருங்கல் கடவுளர் சிலைகள் கண்டெடுக்கப் பட்டன. நாகை மாவட்டம், தரங்கம் பாடி தாலுகா, திருவிடைக் கழியில், சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலின் தீர்த்தக் குளமான, சரவணப் பொய்கையை துர் வாரும் பணி, கடந்த வியா ழனன்று துவங்கியது. பொக்லைன் இயந்திரம் மூலமாக, நேற்று முன்தினம் தூர் வாரிக் கொண்டிருந்தபோது, 6 அடி உயரமுள்ள முருகர் சிலை, ஒன்றரை....... மேலும்

24 ஜூலை 2017 10:18:10

அரியலூர் புத்தகத் திருவிழாவில் பெரியார் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

அரியலூர் புத்தகத் திருவிழாவில் பெரியார் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

அரியலூர், ஜூலை 23  அரியலூர் மாவட்டத்தில் நடைபெறுகிற முன்றாவது புத்தக திருவிழா வானது 14.07.217 அன்று தொடங் கப்பட்டது. இதன் 7ஆவது நாளில் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஜெயங்கொண்டம் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், துணை முதல்வருடன் புத்தகத் திருவிழாவினை சிறப்பிக்க சென் றனர். அங்கு புலவர் சி.இளங்கோ (துணைத் தலைவர் தமிழ் பண் பாட்டு பேரமைப்பு), எங்களோடு அறிமுகமாகி புத்தகங்கள் பற்றி யும் அவற்றின் பயண்கள் பற்றியும் கூற தொடங்கினார்........ மேலும்

23 ஜூலை 2017 11:22:11

‘மங்கள்யான் 2’ ஏவ பணிகள் நடந்து வருகின்றன மயில்சாமி அண்ணாதுரை தகவல்

‘மங்கள்யான் 2’ ஏவ பணிகள் நடந்து வருகின்றன மயில்சாமி அண்ணாதுரை தகவல்

ராமேசுவரம், ஜூலை 23 இஸ்ரோ செயற்கைகோள் மய்ய இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணா துரை, நேற்று காலை ராமேசுவரம் சென்றார் குடியரசுத் தலைவர் மணி மண்டபம் சென்ற  அவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலாமின் அண்ணன் மகன் ஜெயினு லாப்தீன், சமூக ஆர்வலர் கராத்தே பழனிச்சாமி, பேரன்கள் சேக்தாவூத், சேக் சலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மயில்சாமி அண் ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மறைந்த....... மேலும்

23 ஜூலை 2017 11:17:11

புதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்படும்: அமைச்சர் தகவல்

புதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்படும்: அமைச்சர் தகவல்

சென்னை, ஜூலை 23 தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் புதிய பாடத்திட்டம் வடிவ மைப்பதற்கான கருத்தரங்கம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கருத்த ரங்கை பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன்  தொடங்கி வைத் தார். பள்ளிக் கல்வி துறை செயலாளர் த.உதயச் சந்திரன் வரவேற்புரையாற்றினார்.இதில் கலை திட்ட வடிவ மைப்புக்குழு தலைவர் பேராசி ரியர் எம்.ஆனந்த கிருஷ்ணன், ஜெர்மனி....... மேலும்

23 ஜூலை 2017 10:59:10

இந்தித் திணிப்பை தமிழகம் ஒரு போதும் ஏற்காது இல.கணேசனுக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. பதில்

இந்தித் திணிப்பை தமிழகம் ஒரு போதும் ஏற்காது இல.கணேசனுக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. பதில்

சென்னை, ஜூலை 23- இந்தித் திணிப்பை தமிழகம் ஒரு போதும் ஏற்காது என இல.கணேசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநி லங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பதிலளித்துள்ளார்.நாடாளுமன்ற மாநிலங்கள வையில் பாஜக உறுப்பினர் இல.கணேசன் வெள்ளியன்று பேசும்போது தென்னக மாநி லங்களில் ஆந்திரா, தெலுங் கானா, கருநாடகம், கேரளா போன்ற மாநில மக்கள் இந்தி மொழியை ஏற்றுக்கொள்கின் றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் அதற்கு எதிர்ப்பு உள்ளது என்று பேசினார்.இந்தியை அனைவரும் கற்றுக்கொள்வதில்....... மேலும்

23 ஜூலை 2017 10:23:10

நீட் தேர்விலிருந்து விலக்கு தி.மு.க. போராட்டத்தில்...

நீட் தேர்விலிருந்து விலக்கு தி.மு.க. போராட்டத்தில்...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள்   கட்சிகள் பங்கேற்கும்சென்னை, ஜூலை 22 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவு தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று தி.மு.க. சார்பில் வருகிற 27 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் நலனுக்காக நடக்கும் இந்தப் போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள்  கட்சிகள் பங்கேற்கும் என்று....... மேலும்

22 ஜூலை 2017 16:30:04

சென்னையில் போக்குவரத்து நெரிசல் பற்றி டுவிட்டரில் தகவல் தெரிவிக்க வசதி

சென்னையில் போக்குவரத்து நெரிசல் பற்றி டுவிட்டரில் தகவல் தெரிவிக்க வசதி

சென்னை, ஜூலை 22- சென்னை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி டுவிட்டரில் தக வல் தெரிவிக்கலாம் என்றும், அந்த தகவல் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் தென்சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-தென்சென்னை பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறோம். தென்சென்னையில், குறிப்பாக அடையார், கோர்ட்டூர்புரம் பகுதியில் அதிகமான வாகனங்....... மேலும்

22 ஜூலை 2017 16:00:04

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன், நிழற்படத்தை வழங்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன், நிழற்படத்தை வழங்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஜூலை 22- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-சென்னை மாவட்டத்தில் பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணியில் சில குடும்ப அட்டை தாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் பெறப்படவில்லை என அறியப்படுகிறது. அவ்வாறு இதுவரை மின் னணு குடும்ப அட்டைகள் கிடைக்கப்பெறாத குடும்ப அட்டை தாரர்கள் www.tnpds.gov.in இணைய முகவரியில் பயனாளர் நுழைவு பகுதியில் குடும்ப அட்டைக்கு....... மேலும்

22 ஜூலை 2017 15:56:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முதியோர் உதவித்தொகைக்கு
10 ரூபாய் நாணயங்கள்  

சென்னை, ஜன.8 முதியோர் உதவித்தொகையை 10 ரூபாய் நாணயங்களாக வழங்க அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

உயர் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட பிறகு ரிசர்வ் வங்கி, பொதுத் துறை மற்றும் தனியார் வங்கி களுக்கு புதிய ரூபாய் நோட்டு களை வழங்கியது. ஆனால், அஞ்சலகங்களின் தேவைக்கேற்ப போதிய அளவில் ரூபாய் நோட் டுகள் வழங்கவில்லை.

இதனால், தமிழகத்தில் உள்ள 97 அஞ்சலக ஏடிஎம்களிலும், போதிய அளவுக்கு உரிய நேரத் தில் புதிய நோட்டுகள் வழங்க முடிய வில்லை. இருப்பினும், கடந்த 50 நாள்களாக இருப்பில் உள்ள பணத்தை வைத்து வாடிக் கையாளர்களை அஞ்சலகங்கள் சமாளித்துள்ளன.

நகர்ப்புற அஞ்சலகங்கள், அருகே உள்ள வங்கிகளில் ஓரளவுக்கு தேவையான பணத் தை பெற்று தங்களின் வாடிக்கை யாளர்களை சமாளித்து வந்தன. ஆனால், கிராமப்புறங்களில் வங்கிகளிடமிருந்து தேவையான பணம் கிடைக்கவில்லை.

அதேபோல், புதிய 2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கிடைக்காமலும் வாடிக்கை யாளர்கள் அவதிக்குள்ளாகினர். அத்துடன், 90 சதவீத அஞ்சலகங்களுக்கு புதிய ரூ.500 நோட்டுகள் வழங்கப்பட இல் லை. இதனால், மாற்று ரூபாய் நோட்டுகள் வழங்குவதிலும் அஞ்சலக நிர்வாகங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ கூறியதாவது:

வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை வழங்க வங்கிகளை சார்ந்திருக்கும் சூழ்நிலை இருந்தது. அதுபோல், முதியோர் உதவித்தொகை வழங்க இந்திய ரிசர்வ் வங்கியிடம் கோரி இருந்தோம்.

இந்நிலையில், இந்த மாதம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க இந்திய ரிசர்வ் வங்கியிடம், போதிய அளவுக்கு மாற்று ரூபாய் நோட்டுகளை தந்து உதவுமாறு கோரியிருந்தோம்.

10 ரூபாய் நாணயங்கள்: அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், முதியோர்களுக்கு ரூ.1,000 அளவிலான 10 ரூபாய் நாணயங்கள் மூலம் இந்த மாதம் உதவித்தொகை வழங்க உள்ளோம் என்றார் அவர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner

-- >