முன்பு அடுத்து Page:

வெடி விபத்தால் கோவில் இடிந்து தரைமட்டம்: ஒருவர் பலி

வெடி விபத்தால் கோவில் இடிந்து தரைமட்டம்: ஒருவர் பலி

போச்சம்பள்ளி, ஜூலை 24- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள எ.மோட்டூர் கிராமத்தில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாது (வயது 55) திடீரென மரணம் அடைந்தார். இவர் இறந்த 15 நாட்களுக்கு பிறகு மேகநாதன் என்பவரும் திடீ ரென உயிரிழந்தார்.இவ்வாறு அடுத்தடுத்து 2 பேரும் உயிரிழந்ததால் அந்த பகுதியில் பேய்கள் நடமாட் டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கருதினர். எனவே, பேய்களை....... மேலும்

24 ஜூலை 2017 14:38:02

மாணவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க நடவடிக்கை

 மாணவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க நடவடிக்கை

தாம்பரம், ஜூலை 23 பொறியியல் கல்வி பயிலும் மாண வர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கும் ஆர்வத்தை ஊக்கு விக்க உரிய நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது என்று இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத் தலைவர் அனில் தத்தாத் ரேய சகஸ்ரபுத்தே கூறினார். மேற்கு தாம்பரம் சிறீசாய்ராம் பொறியியல் கல்லூரியின் 18 ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது: இந்திய பொறியியல் தொழில் நுட்பக் கல்வியின் தரம், மாண வர்களின் அறிவாற்றல், திறன்....... மேலும்

24 ஜூலை 2017 10:34:10

தற்கொலையோ! கோவில் குளத்தில் கடவுளர் சிலைகள் கண்டெடுப்பு

 தற்கொலையோ! கோவில் குளத்தில் கடவுளர் சிலைகள் கண்டெடுப்பு

மயிலாடுதுறை, ஜூலை 23 திருவிடைக்கழியில், கோவில் குளத்தை தூர் வாரும் போது, கருங்கல் கடவுளர் சிலைகள் கண்டெடுக்கப் பட்டன. நாகை மாவட்டம், தரங்கம் பாடி தாலுகா, திருவிடைக் கழியில், சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலின் தீர்த்தக் குளமான, சரவணப் பொய்கையை துர் வாரும் பணி, கடந்த வியா ழனன்று துவங்கியது. பொக்லைன் இயந்திரம் மூலமாக, நேற்று முன்தினம் தூர் வாரிக் கொண்டிருந்தபோது, 6 அடி உயரமுள்ள முருகர் சிலை, ஒன்றரை....... மேலும்

24 ஜூலை 2017 10:18:10

அரியலூர் புத்தகத் திருவிழாவில் பெரியார் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

அரியலூர் புத்தகத் திருவிழாவில் பெரியார் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

அரியலூர், ஜூலை 23  அரியலூர் மாவட்டத்தில் நடைபெறுகிற முன்றாவது புத்தக திருவிழா வானது 14.07.217 அன்று தொடங் கப்பட்டது. இதன் 7ஆவது நாளில் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஜெயங்கொண்டம் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், துணை முதல்வருடன் புத்தகத் திருவிழாவினை சிறப்பிக்க சென் றனர். அங்கு புலவர் சி.இளங்கோ (துணைத் தலைவர் தமிழ் பண் பாட்டு பேரமைப்பு), எங்களோடு அறிமுகமாகி புத்தகங்கள் பற்றி யும் அவற்றின் பயண்கள் பற்றியும் கூற தொடங்கினார்........ மேலும்

23 ஜூலை 2017 11:22:11

‘மங்கள்யான் 2’ ஏவ பணிகள் நடந்து வருகின்றன மயில்சாமி அண்ணாதுரை தகவல்

‘மங்கள்யான் 2’ ஏவ பணிகள் நடந்து வருகின்றன மயில்சாமி அண்ணாதுரை தகவல்

ராமேசுவரம், ஜூலை 23 இஸ்ரோ செயற்கைகோள் மய்ய இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணா துரை, நேற்று காலை ராமேசுவரம் சென்றார் குடியரசுத் தலைவர் மணி மண்டபம் சென்ற  அவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலாமின் அண்ணன் மகன் ஜெயினு லாப்தீன், சமூக ஆர்வலர் கராத்தே பழனிச்சாமி, பேரன்கள் சேக்தாவூத், சேக் சலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மயில்சாமி அண் ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மறைந்த....... மேலும்

23 ஜூலை 2017 11:17:11

புதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்படும்: அமைச்சர் தகவல்

புதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்படும்: அமைச்சர் தகவல்

சென்னை, ஜூலை 23 தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் புதிய பாடத்திட்டம் வடிவ மைப்பதற்கான கருத்தரங்கம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கருத்த ரங்கை பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன்  தொடங்கி வைத் தார். பள்ளிக் கல்வி துறை செயலாளர் த.உதயச் சந்திரன் வரவேற்புரையாற்றினார்.இதில் கலை திட்ட வடிவ மைப்புக்குழு தலைவர் பேராசி ரியர் எம்.ஆனந்த கிருஷ்ணன், ஜெர்மனி....... மேலும்

23 ஜூலை 2017 10:59:10

இந்தித் திணிப்பை தமிழகம் ஒரு போதும் ஏற்காது இல.கணேசனுக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. பதில்

இந்தித் திணிப்பை தமிழகம் ஒரு போதும் ஏற்காது இல.கணேசனுக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. பதில்

சென்னை, ஜூலை 23- இந்தித் திணிப்பை தமிழகம் ஒரு போதும் ஏற்காது என இல.கணேசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநி லங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பதிலளித்துள்ளார்.நாடாளுமன்ற மாநிலங்கள வையில் பாஜக உறுப்பினர் இல.கணேசன் வெள்ளியன்று பேசும்போது தென்னக மாநி லங்களில் ஆந்திரா, தெலுங் கானா, கருநாடகம், கேரளா போன்ற மாநில மக்கள் இந்தி மொழியை ஏற்றுக்கொள்கின் றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் அதற்கு எதிர்ப்பு உள்ளது என்று பேசினார்.இந்தியை அனைவரும் கற்றுக்கொள்வதில்....... மேலும்

23 ஜூலை 2017 10:23:10

நீட் தேர்விலிருந்து விலக்கு தி.மு.க. போராட்டத்தில்...

நீட் தேர்விலிருந்து விலக்கு தி.மு.க. போராட்டத்தில்...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள்   கட்சிகள் பங்கேற்கும்சென்னை, ஜூலை 22 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவு தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று தி.மு.க. சார்பில் வருகிற 27 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் நலனுக்காக நடக்கும் இந்தப் போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள்  கட்சிகள் பங்கேற்கும் என்று....... மேலும்

22 ஜூலை 2017 16:30:04

சென்னையில் போக்குவரத்து நெரிசல் பற்றி டுவிட்டரில் தகவல் தெரிவிக்க வசதி

சென்னையில் போக்குவரத்து நெரிசல் பற்றி டுவிட்டரில் தகவல் தெரிவிக்க வசதி

சென்னை, ஜூலை 22- சென்னை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி டுவிட்டரில் தக வல் தெரிவிக்கலாம் என்றும், அந்த தகவல் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் தென்சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-தென்சென்னை பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறோம். தென்சென்னையில், குறிப்பாக அடையார், கோர்ட்டூர்புரம் பகுதியில் அதிகமான வாகனங்....... மேலும்

22 ஜூலை 2017 16:00:04

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன், நிழற்படத்தை வழங்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன், நிழற்படத்தை வழங்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஜூலை 22- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-சென்னை மாவட்டத்தில் பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணியில் சில குடும்ப அட்டை தாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் பெறப்படவில்லை என அறியப்படுகிறது. அவ்வாறு இதுவரை மின் னணு குடும்ப அட்டைகள் கிடைக்கப்பெறாத குடும்ப அட்டை தாரர்கள் www.tnpds.gov.in இணைய முகவரியில் பயனாளர் நுழைவு பகுதியில் குடும்ப அட்டைக்கு....... மேலும்

22 ஜூலை 2017 15:56:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநில அரசுகளின் ஆலோசனையின்றி மத்திய அரசு கல்விக் கொள்கையை வகுக்கக்கூடாது
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கருத்தரங்கில் முக்கிய தீர்மானங்கள்

சென்னை, சன. 8- மாநில அரசுகளின் கருத்தை அறியாமல் கல்விக் கொள்கைகயை மத்திய அரசு தீர்மானிக்கக் கூடாது என்ற தீர்மானம் உட்பட பல முக்கிய தீர்மானங் கள், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை யின் சார்பில் சென்னையில் (2.1.2017) நடத்தப்பட்ட கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1.

மருத்துவப் படிப்பிற்கான தனித் தேர்வைத் (NEET)  மாணவர் மீது
திணிக்கக் கூடாது

இந்திய அரசின் மாநில உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையான மருத்துவ படிப்பிற்கான தகுதித் தேர்வு (NEET), மருத்துவப் படிப்பு முடித்தபின் மருத்துவராக பணியாற்ற உரிமம் பெற EXIT எனப்படும் National Licentiate Examination தேர்வு இரண்டையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. இத்தேர்வுகள், இந்தியாவை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவர நடைபெறும் சதி. “நீட்”  ழிணிணிஜி எவரையும் தகுதிப்படுத்தாது. மாறாக தகுதி யான திறமையான மாணவர்களை வடிகட்டி வெளியேற் றவே பயன்படும்

மாநில அரசின் பாடத்திட்டத்தின் மீது மக்களை நம்பிக்கை இழக்கச்செய்து மத்திய அரசே இனி அனைத் தையும் பார்த்துக் கொள்ளும் என்ற கருத்துருவாக்கத்திற்கான வழி. இத்தகைய நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற் கும் மக்களாட்சி மாண்பிற்கும் எதிரான செயலாகும். கல்வியைப் பரவலாக்கி அனைவருக்கும் கல்வி வழங்கு வதற்குப் பதிலாக பெரும்பகுதி மக்களை வடிகட்டி வெளியேற்றும் தந்திரமே இத்தகைய தகுதித் தேர்வுகள். மாநில அரசின் உரிமையை, மாநில மக்களின் நலனைக் காத்திட, தமிழ் நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத் தைக் கூட்டி இத் தேர்வுகளுக்கெதிரான மாநில மக்களின் ஒருங்கிணைந்த கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றவேண்டும். மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டப் பிரிவு 10B  க்கு உரிய திருத்தத்தைக் கொண்டுவந்து “for the academic year “ 2016_-17” என்னும் தொடரை நீக்க செய்யவேண்டும். இதற்குத் தமிழகத்திலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட மாநிலங்களவை, மக்களவை உறுப்பி னர்கள் அனைவரையும் இணைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டு மாணவர் நல னுக்கு எதிராகச் செயல்படும் கட்சிகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் முன் அம்பலப்படுத்தவேண்டும் என வேண்டிக்கொண்டு, தமிழ் நாடு அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் தமிழ்நாடு அரசு சேர்க்கைக்கான இடங்களில் மாணவர் சேர்க்கை நடைமுறையை தமிழ் நாடு அரசே தீர்மானிக்க வேண்டும் என்றும் தமிழ் நாடு ஒன்றிய பிரதேசம் (Union territory) அல்ல. தமிழ் நாடு ஒரு மாநிலம். மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையில் கூட மத்திய அரசு தலையிடுவதை ஏற்க இயலாது என்றும் இக்கருத்தரங்கம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 2

இந்திய அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கையை வகுத்திடின் மாநிலங்களையும் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் கல்வியாளர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண் டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாநில பட்டிய லுக்கு தொடக்கக்கல்வி, இடைநிலைக் கல்வி உயர் கல்வி என அனைத்தையும் மாற்றவேண்டும். கல்வி, மொழி கொள்கைகளை மாநில அரசே முடி வெடுக்க வேண்டும். மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடக் கூடாது. அரசுப் பொறுப்பில் அருகமைப்பள்ளி அமைப் பில் பொதுப் பள்ளி முறைமையை உருவாக்கி பள்ளிக் கல்வி முடியும்வரை அனைவருக்கும் கல்வி உரிமை வழங்கிட வேண்டும். சந்தையிடம் உயர்க்கல் வியை ஒப்படைக்கக் கூடாது. அரசுக் கல்லூரிகளை வலுப்படுத் தவும் அரசு உயர் கல்வி நிறுவனங்களைத் தொடங்கவும் அரசு நிதி ஒதுக்க வேண்டும். மாநில அரசு ஏற்காத கொள்கைகளை மத்திய இடை நிலை கல்வி வாரியம் மூலம் முடிவெடுத்து மாநிலத்தில் குழப்பத்தை உரு வாக்கக் கூடாது. குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய தொடர் தேர்ச்சி, தலைமை ஆசிரியர் பதவிக்கு தேர்வு ஆகிய கொள்கை முடிவுகளை மத்திய அரசு கைவிடவேண்டு மெனக் கோருவதற்கு இக்கருத்தரங்கம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3

தமிழ் நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வு அதன் அடிப் படையிலான தொடக்கப்பள்ளி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் குழப்பம் நீடித்துக் கொண் டுள்ளது. தமிழ் நாடு அரசு கல்வித்துறையின் மக்களாட்சி மாண்பிற்கு எதிரான போக்கினால் நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்துவருகிறது. நீதிமன்றங்கள், அரசு உரிய நடைமுறையை வகுத்துக்கொள்ளப் பலமுறை இசைவளித்தும் அரசின் பிடிவாதப்போக்கு சிக்கலைப் பெரிதாக்கி வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குச் சமூக ஒடுக்குமுறைக்கு ஏற்றவகையில் தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வுரிமை வழங்கிட வேண்டும். இதற்கு எந்த நீதிமன்றமும், சட்டமும் தடையாக இல்லை. ஆசிரியர் தகுதித்தேர்வு அடிப்படையிலான தொடக்கப்பள்ளி, பட்டதாரி ஆசிரி யர் பணி நியமனத்தில் தமிழ் நாடு அரசு கடைப்பிடித்து வரும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் (ஷ்மீவீtணீரீமீ) முறை சமூகநீதிக்கு எதிரானது. இத்தகைய வெயிட்டேஜ் முறை முதல்தலைமுறை ஆசிரியர்கள் என்றைக்குமே ஆசிரியர் ஆகும் வாய்ப்பு கிடைக்காமல் செய்கிறது. இம்முறையை மாற்றிக் கொள்வதற்கு நீதிமன்றங்கள் தடையாக நிற்க வில்லை. எனவே தற்போது கடை பிடிக்கப்படும் வெயிட்டேஜ் முறை கைவிடப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கான வெயிட்டேஜ், தேர்ச்சிக் குப்பின் பதிவு மூப்பின் அடிப்படையில் பணியமர்வு என்னும் அடிப்படையில் அரசாணை வெளியிட வேண் டும். அரசு அதிகாரிகளுக்கு மேலும் குழப்பம் நீடிக்கு மாயின் கல்வியாளர்களைக் கொண்ட குழு அமைத்து இச்சிக்கலைத் தீர்க்க வேண்டுமென அரசினை கோருவ தற்கு இக்கருத்தரங்கம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 4

பள்ளி ஆசிரியர் தொடங்கி பல்கலைக்கழக துணை வேந்தர் வரை காலிப் பணி இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் மிகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பாத தால் மாணவர் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் எடுத்துக் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என அரசை வலியுறுத்துவதோடு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ள காலிப் பணி இடங்களை உடனடியாக வெளிப்படைத் தன்மை யோடு நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு மெனக் கேட்டுக்கொள்ளவதோடு, காலிப்பணியிடம் இல்லாக் கல்வி ஆண்டாக 2017--18அய் அறிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் இக்கருத்தரங்கம் தீர்மானிக் கிறது.

தீர்மானம் 5

தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டணத்தை ஒழுங் குப்படுத்தவும், 9, 11 வகுப்புகளில் முறையாக அந்த வகுப்பிற்கு உண்டான பாடம் நடத்தப்படுவதை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடக்க வகுப்பு முதல், இடைநிலை, மேல்நிலை வகுப்புவரை அனைத்து வகுப்புகளுக்கும் கணினி ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர், இசை, ஓவிய ஆசிரியர் பணியிடம் உருவாக்கி நிரப்பப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணி தவிர வேறு பணி வழங்கக்கூடாது என்றும். பள்ளிக்கூடங்களில்- குறிப்பாக தொடக்கப் பள்ளிக் கூடங்களில் அலுவலக ஊழியர்கள், காவலர், துப்புரவுப் பணியாளர்கள் பணி யிடம் உருவாக்கப்பட்டு பணி நியமனம் மேற்கொள்ளப் படவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசினை கேட்டுக் கொள்ள இக்கருத்தரங்கம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 6

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் தாய் மொழி வழிக் கல்வியை உறுதி செய்யவேண்டும். தமிழ், ஆங்கிலம் கற்றுத்தர மொழி ஆசிரியர் பணியிடம் தொடக்கப்பள்ளி முதல் உருவாக்கப்படவேண்டும். தமிழ் மொழி கற்றல் சட்டப்படி மொழிப்பாடங்கள் நடத்த உரிய ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். சிறுபான்மை மொழியினர் தேவை அறிந்து அதற்குரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமே தமிழ் மொழி கற்றல் சட்டம் முழுமையான நடைமுறைக்கு வரும். ஒவ்வோர் ஆண்டும் நீதிமன்றம் சென்று சட்டத் தில் இருந்து விலக்கு வாங்கி மாணவர் தேர்வு எழுதுவது சட்டத்தையே நீர்த்துப்போக செய்யும் செயலாகும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற தேவையான கொள்கை முடிவுகள் ஆளுநர் உரையில் இடம்பெறுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்வதென இக்கருத்தரங்கம் தீர்மானிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தியும் கல்வி யில் வகுப்புவாதம் - வணிகமயம் கூடாது எனும் முழக் கத்துடன் அருகமைப்பள்ளி அமைப்பில் பொதுப் பள்ளி முறைமையை உருவாக்கி கல்வி உரிமை வாழங்கிடுக என்று கோரி 2017 ஜனவரி 25 கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை சாவித்ரிபாய் சுடர் உறுதிப் பயணம் மேற்கொள்வது எனவும் இக்கருத்தரங்கம் தீர்மானிக்கிறது.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்னும் அமைப்பின் சார்பில் “கல்வியில் வகுப்புவாதம் - வணிக மயம் எதிர்ப்பு நாள்” கருத்தரங்கம் 2.1.2017 முற்பகல் சென்னையில் திருவாவடுதுறை டி.என்.இராஜரத்தினம் கலையரங்கில் முனைவர் பி.இரத்தினசபாபதி தலை மையில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற மேனாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் தொடக்கவுரை யாற்றினார்.

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், மருத்துவர் எஸ்.காசி, ஜி.ஆர்.இரவீந்திரநாத், பிரின்ஸ் கஜேந்திரபாபு முதலியோர் கருத்துரையாற்றினர்.
.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner

-- >