Banner
முன்பு அடுத்து Page:

மாமனிதர் அப்துல் கலாம் மறைவு: இராணுவ மரியாதையுடன் நாளை இராமேசுவரத்தில் அடக்கம்!

மாமனிதர் அப்துல் கலாம் மறைவு: இராணுவ மரியாதையுடன் நாளை இராமேசுவரத்தில் அடக்கம்!

புதுடில்லி, ஜூலை 29_ அப்துல் கலாம் உடல் அடக்கம் நாளை ராமே சுவரத்தில் நடக்கிறது. இறுதி நிகழ் வில் பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். மக்கள் குடியரசுத் தலைவர், இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றெல்லாம் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் திடீர் மறைவு, நாட்டை பெரும் அதிர்ச் சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. மேகாலயா மாநிலத்தின் தலைநக ரான ஷில்லாங்கில் அய்.அய்.எம். என்னும் இந்திய மேலாண்மை கல்வி....... மேலும்

29 ஜூலை 2015 15:56:03

அப்துல் கலாம் மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல்

அப்துல் கலாம் மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல்

புதுடில்லி, ஜூலை 29_ மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியா-அமெரிக்கா இடையேயான வானியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பிற்கு கலாம் பெரும் பங்காற்றியவர். இந்தியர்களின் உத்வேகம் கலாம் என்று புகழ்ந்துள்ளார். தெற்காசிய இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்தவர் கலாம் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி வெளி....... மேலும்

29 ஜூலை 2015 15:55:03

பெரியார் புரா - சுற்றுச்சூழல் பாதுகாப்பு

பெரியார் புரா - சுற்றுச்சூழல் பாதுகாப்பு

பெரியார் புரா - சுற்றுச்சூழல் பாதுகாப்பு - ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பாராட்டு - பெரியார் புரா திட்டம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் வல்லத் தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தினால் செயல் படுத்தப்படுகிறது. பல்கலைக் கழகத்தின் வளாகத்திற் குள்ளேயே பெரும் பரப்பில் ஜெட்ரோபா (காட்டாமணக்கு) மரங்கள் நடப்பட்டுள்ளன. இயற்கையாக தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் டீசல் மற்றும் இதர பசுமைத் திட்டங்கள் பற்றிய செய்தியையும், விழிப்புணர்வையும் புரா திட்டம் நடைமுறைப்டுத்தப்படும் பகுதிகளில் பரப்பும் பணியை....... மேலும்

28 ஜூலை 2015 16:53:04

கடந்த மூன்றரை வருடத்திற்குள் 16 கருணை மனுக்கள் மீது தீர்வு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 10- நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளின் சார்பில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் மீதான நிலவரம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:-

`கடந்த மூன்றை வருடத்திற்குள், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் 16 கருணை மனுக்கள் மீதான விவகாரத்தை தீர்த்து வைத்தார். இதற்குமுன் இதுபோன்று அதிக அளவு கருணை மனுக்கள் மீதான விவகாரங்கள் தீர்த்து வைக்கப்பட்டதில்லை.

இந்தியாவைப் பொருத்தமட்டில், மிகவும் அரிதிலும் அரிதாகவே மரண தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

மரண தண்டனை வழங்குவது குறித்து அரசு மறு ஆய்வு செய்யும் எண்ணம் தற்போது இல்லை. எனினும், இது குறித்து தக்க சமயத்தில் மத்திய அரசு மறு ஆய்வு செய்யும்.

மரணதண்டனை பெற்றவர் எவராக இருந்தாலும், 14 வருட தண்டனை காலத்தை முடித்து, பின்னர்தான் அவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரும் மனுவை தாக்கல் செய்ய தகுதியுள்ளவர்களாகக் கருத வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது.'

இவ்வாறு அவர் தெரிவித்தார்..
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்