Banner
முன்பு அடுத்து Page:

தெலங்கானா: தனி மாநிலம் அமைக்க தெலங்கானா பகுதி காங்கிரசார் தீவிர முயற்சி

தெலங்கானா: தனி மாநிலம் அமைக்க தெலங்கானா பகுதி காங்கிரசார் தீவிர முயற்சி

அய்தராபாத், ஜூன் 19-தெலங்கானா தனி மாநி லம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை நிர்ப்பந்திக்க ஐதராபாத்தில் வரும் 30ஆம் தேதி பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்த காங்கி ரசார் முடிவு செய்து உள்ளனர். தெலங்கானா பகு தியை சேர்ந்த காங்கிர சார் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கின்றனர். அக் கட்சியை சேர்ந்த பல எம்.பி., எம்.எல்.ஏகள் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அடுத்த ஆண்டு....... மேலும்

19 ஜூன் 2013 17:02:05

சிங்கள இலங்கை அரசுமீது பிரதமர் மன்மோகன்சிங் அதிருப்தி!

சிங்கள இலங்கை அரசுமீது பிரதமர் மன்மோகன்சிங் அதிருப்தி!

புதுடில்லி, ஜூன்.19- பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை தமிழ் எம்.பி.கள் குழு சந்தித் தது. அப்போது சிங்கள அரசு மீது மன்மோகன் சிங் அதிருப்தி தெரி வித்தார். இலங்கை தமிழ் தேசிய கூட்டணி பிரதி நிதிகள் குழு, கடந்த 16-ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தது. ஆர்.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான அக்குழுவில் எம்.பி.கள் மாவை சேனாதிராஜா, கே.சுரேஷ் பிரேமச்சந் திரன், பி.செல்வராஜா, செல்வம் அடைக்கல நாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம் பெற்....... மேலும்

19 ஜூன் 2013 16:39:04

எதிரி ஏவுகணையை நடுவானில் தடுத்து அழிக்கும் புதிய ஏவுகணை விரைவில் சோதனை

எதிரி ஏவுகணையை நடுவானில் தடுத்து அழிக்கும் புதிய ஏவுகணை விரைவில் சோதனை

புதுடில்லி, ஜூன் 18-5 ஆயிரம் கி.மீ தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணையை, நடுவானில் தடுத்து அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை விரைவில் மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என ராணுவ ஆராய்ச்சி மேம் பாட்டு மய்ய (டி.ஆர்.டி.ஓ) தலை வர் அவினாஸ் சந்தர் கூறியுள்ளார். ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மய்யத்தின் புதிய தலைவராக கடந்த மாதம் பதவி ஏற்ற அவி னாஸ் சந்தர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிரி நாட்டு....... மேலும்

18 ஜூன் 2013 16:26:04

மோடியால் முண்டா தட்டும் சர்ச்சைகள்! நிதீஷ் குமார் சாடல்!

மோடியால் முண்டா தட்டும் சர்ச்சைகள்!  நிதீஷ் குமார் சாடல்!

பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு மதிப்பு இல்லை; அவர்கள் ஓரம் கட்டப்படுகின்றனர் என்று அய்க்கிய ஜனதா தளம் மூத்த தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் கூறி யுள்ளார். பாஜகவில் புதிதாகத் தலையெடுப் பவர்களுடன் (நரேந்திர மோடி) ஒத் துப்போக முடியாததே கூட்டணியில் இருந்து விலகக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். பிகார் மாநில பாஜகவினர் தங்கள் மீது சாட்டியுள்ள நம்பிக்கைத் துரோ கக் குற்றச்சாட்டையும் நிதீஷ் குமார் நிராகரித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்....... மேலும்

18 ஜூன் 2013 15:14:03

மத்திய அமைச்சரவையில் மாற்றம் எட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

மத்திய அமைச்சரவையில் மாற்றம் எட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

மத்திய அமைச்சரவையில் மாற்றம் எட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு சுதர்சன நாச்சியப்பனுக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை புதுடில்லி, ஜூன் 18-மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் இணை அமைச்சரானார். முறைகேடு புகார் காரணமாக ரயில்வே அமைச்சராக இருந்த பி.கே.பன்சாலும், சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனி குமாரும் கடந்த மாதம் பதவி விலகினர். மேலும், திரிணாமுல் காங்கிரஸ், திமுக கட்சிகள் அரசுக்கு ஆதரவைத்....... மேலும்

18 ஜூன் 2013 15:02:03

மோடி என்னும் சுனாமியால் நொறுங்கியது பிஜேபி

மோடி என்னும் சுனாமியால் நொறுங்கியது பிஜேபி

மோடி என்னும் சுனாமியால் நொறுங்கியதுபிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி!அய்க்கிய ஜனதா தள முடிவுக்கு அத்வானி ஆதரவு? பாட்னா, ஜூன் 17- நரேந்திரமோடி பிஜேபியின் பிரச்சாரக் குழுத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டதால், அக்கூட்டணியில் இருந்த அய்க்கிய ஜனதா தளம் விலகியது. அய்க் கிய ஜனதா தளத்தின் இந்த முடிவை அத் வானியும் நியாயப்படுத் தியுள்ளார். பிகாரில், முதல்வர் நிதீஷ் குமாருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையிலான 17 ஆண்டு கால உறவு முறிந்தது. தேசிய....... மேலும்

17 ஜூன் 2013 16:24:04

பத்மநாபசுவாமி கோயில் செல்வங்கள் கணக்கெடுக்கும் பணி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்

பத்மநாபசுவாமி கோயில் செல்வங்கள் கணக்கெடுக்கும் பணி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம், ஜூன் 17-திருவனந்தபுரம் பத்ம நாபசுவாமி கோயில் ஏ ரகசிய அறையில் உள்ள செல் வங்களைக் கணக்கெடுக்கும் பணி இறுதி நிலையை அடைந்துள்ளதாக மதிப்பீட்டுக்குழு உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட் டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் ஏ முதல் எப் வரை 6 ரகசிய அறைகள் உள்ளன. இந்த அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால செல்வங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை கணக்கெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு....... மேலும்

17 ஜூன் 2013 16:00:04

பயணிகள் ரயில்மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்

பயணிகள் ரயில்மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்

பாட்னா, ஜூன் 14- பீகாரில் பயணிகள் ரயில் மீது 150 மாவோயிஸ்டு கள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 2 காவல்துறையினர் உள் பட 3 பேர் பலியாயினர். துப்பாக்கிகளையும் மாவோயிஸ்டுகள் கொள் ளையடித்துச் சென்றனர். ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து பீகார் தலைநகர் பாட் னாவுக்கு நேற்று (13.6.2013) காலை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப் பட்டது. பீகாரில் ஜாமுய் மாவட்டத்தில் மதியம் 1.20 மணிக்கு ரயில் சென்று கொண்டி....... மேலும்

14 ஜூன் 2013 18:24:06

சி.ஆர்.பி.எஃப்.-ல் முதன்முதலாக பெண்கள் கமாண்டோ பிரிவு தொடக்கம்

சி.ஆர்.பி.எஃப்.-ல் முதன்முதலாக பெண்கள் கமாண்டோ பிரிவு தொடக்கம்

புதுடில்லி , ஜூன் 13-  தீவிரவாத ஒழிப்பு நட வடிக்கையில் உதவுவதற் காக மத்திய ரிசர்வ் போலீஸ் பட்டாலியனில் (சி.ஆர். பி.எஃப்) முதன்முதலாக பெண்கள் கமாண்டோ பிரிவு உருவாக்கப்பட்டுள் ளது. தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், கருநாடகம், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முப்பது பெண்கள் இப்பிரிவில் இடம் பெற்றுள் ளனர். குர்கானுக்கு அருகே கதர்பூரில் உள்ள சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மய்யத்தில் இந்தப் படையினரின் சாகச நிகழ்ச்சிகள் செவ் வாய்க் கிழமை....... மேலும்

13 ஜூன் 2013 16:04:04

சூழ்நிலையால் பாலியல் தொழிலுக்குட்படுத்தப்பட்ட பெண் தொழிலாளியின் மகள் அமெரிக்காவில் உயர்படிப்பு

சூழ்நிலையால் பாலியல் தொழிலுக்குட்படுத்தப்பட்ட பெண் தொழிலாளியின் மகள் அமெரிக்காவில் உயர்படிப்பு

மும்பை, ஜூன் 13-மும்பையை சேர்ந்த பாலியல் தொழிலாளியின் மகள் அமெரிக்காவில் உயர் கல்விக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். மும்பையின் சிவப்புவிளக்கு பகுதியான காமாட்டிபுராவைச் சேர்ந்த இவரின் பெயர் ஸ்வேதா.  18 வயது நிரம்பிய இவரின் தாத்தா பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தார். ஆனால் இதில் விரும்பமின்றி ஸ்வேதாவின் தாய் அங்கிருந்து தப்பித்து சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்தார். ஆனாலும் சூழ்நிலையின் காரணமாக அவரும் பாலியல் தொழிலுக்கு தள்ளப் பட்டார். இந்நிலையில் ஸ்வேதாவின்....... மேலும்

13 ஜூன் 2013 15:43:03

முல்லை பெரியாறு பிரச்சினை:

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கேரள அரசின் பிரதிநிதி நீதிபதி தாமஸ் மீது அமைச்சரின் குற்றச்சாட்டும்- பதிலடியும்

கோட்டயம், மே 7-முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆராய, உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்மட்டக்குழு தாக் கல் செய்துள்ள அறிக் கையில், கேரளாவுக்கு நியாயம் கிடைக்க வில்லை' என, அம் மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜெ. ஜோசப் தெரிவித்தி ருந்தார். இதற்கு உயர் மட்டக்குழுவில் கேரளா தரப்பு பிரதிநிதியாக இடம் பெற்ற நீதிபதி கே.டி.தாமஸ், அமைச் சர் சொன்னபடி நடப் பதற்காக, உயர்மட்டக் குழுவில் என்னை நிய மிக்கவில்லை' என பதி லடி கொடுத்துள்ளார்.

தமிழக - கேரள எல் லையை ஒட்டி, 119 ஆண்டு பழமையான முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த அணைபலவீன மடைந்து விட்டதாக வும், அதனால், புதிய அணை கட்டவேண்டும் எனவும், கேரளா வலி யுறுத்தி வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரி வித்ததோடு, உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அணை பிரச் சினை குறித்து ஆராய்ந்து அறிக்கை தர, உச்ச நீதிமன்றத்தில் பணி யாற்றி ஓய்வு பெற்ற நீதி பதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் உயர் மட்டக்குழுவை நிய மித்தது. இக்குழுவில் தமிழக பிரதிநிதியாக நீதிபதி ஏ.ஆர். லட்சு மணன், கேரளா பிரதிநிதி யாக நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் இடம் பெற்ற னர். ஆனந்த் தலைமை யிலான உயர்மட்டக் குழு, கடந்த மாதம் 25ஆம்தேதி அறிக்கை தாக்கல் செய்தது.

கேரளா அதிருப்தி: அந்த அறிக்கையின் நகல் கள், இரு மாநில அரசு களுக்கும் வழங்கப்பட் டன. அதில், முல்லைப் பெரியாறு அணை உறு தியுடன் இருப்பதாகவும், புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும் உயர்மட்டக்குழு தெரி வித்துள்ளது. இதில், கேரளா கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இதுகுறித்து கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜெ.ஜோசப் கூறுகையில், முல்லை பெரியாறு விவகாரத்தில், புதிய அணை கட்டுவது ஒன்றே தமிழகத்துட னான, பல ஆண்டு பிரச்சினைக்குத் தீர்வு. இவ்விஷயத்தில் நீதிபதி தாமஸ், கேரளாவுக்கு ஆதரவாகச் செயல்பட வில்லை. இது சம்பந்த மாக கேரளாவின் அதிருப்தியை மத்திய அரசிடம் தெரிவிப் போம்' என்றார்.

நீதிபதி வீட்டுக்கு பேரணி:கோட்டயத்தில் குஞ்ஞிகுழியில் உள்ள நீதிபதி தாமஸ் வீட் டுக்கு நேற்று முன்தினம் முல்லைப் பெரியாறு போராட்ட சமிதியினர், எம்.எல்.ஏ., பிஜிமோள் தலைமையில் ஊர்வல மாகச் சென்றனர். வீட் டுக்கு சற்று முன்பாக ஊர்வலத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், காவல்துறையினருக்கும், ஊர்வலம் சென்றவர்க ளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட் டது. பின்னர் அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

நீதிபதி கண்டனம்: அமைச்சர் பி.ஜெ. ஜோசப் தன்னைப்பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு, நீதிபதி தாமஸ் பதில் அளித்துள் ளார்.
அவர், கூறியதா வது:உச்ச நீதி மன்றத் தில் சமர்ப்பிக்கப்பட்ட உயர்மட்டக்குழு அறிக் கையை முழுவதுமாகப் படிக்காமல், அமைச்சர் ஜோசப் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தவறான தகவல்களை பகிரங்கமாக தெரிவித்து, பொது மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப் பேன். முல்லைப் பெரி யாறு அணை பிரச்சி னையில், நான் நேர் மையாக நடந்துள்ளேன். அணை குறித்து உண் மைகளை உயர்மட்டக் குழுவிடம் தெரிவிக்கவே என்னை நியமித்தனர். அமைச்சர் சொன்னபடி கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய என்னை நியமிக்க வில்லை. நான் சொல்வ தும், செய்வதும் உண் மையாக இருக்கவேண் டும் என்ற கட்டாயம் எனக்குண்டு. என்னை கேரளாவைச் சேர்ந்தவன் என்றோ, தமிழகத்தைச் சேர்ந்தவன் என்றோ சொல்வதில்அர்த்த மில்லை. இரு மாநிலத்தி னருக்கும் நியாயமா னதைச் செய்யவே அறிக்கை அளித்துள்ளேன். இவ் வாறு தாமஸ் கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்