Banner
முன்பு அடுத்து Page:

ஏழைகள், தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து மோடிக்கு கவலை இல்லை ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஏழைகள், தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து  மோடிக்கு கவலை இல்லை  ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாட்னா, அக்.8 பீகார் சட்ட சபைக்கு வரும் 12ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை 5 கட்டங் களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 243 இடங்களை கொண்ட பீகார் சட்ட சபை தேர்தலில், ஆட்சியை கைப்பற்ற துடித்துக்கொண்டிருக்கும் பாரதீய ஜனதா அணியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் அய்க்கிய ஜனதா தளம் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் மதச்சார் பற்ற கூட்டணி அமைத்துள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள்....... மேலும்

08 அக்டோபர் 2015 16:09:04

தகவல் அறியும் உரிமைச்சட்ட நடைமுறை புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

புதுடில்லி,  அக்.7_ தக வல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஅய்) கீழ், பல்வேறு அரசுத் துறைகள் பொது மக்களுக்கு தகவல்கள் அளிக்கும் நடைமுறையில், ஒரே சீரான தன்மையைக் கொண்டுவரும் வகையில், புதிய வழிகாட்டி நெறி முறைகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளி யிட்டது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலன், பயிற்சித் துறை வெளி யிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரர் களுக்கு பதிலளிக்கும் போது, பல்வேறு அமைச்....... மேலும்

07 அக்டோபர் 2015 16:30:04

ம.பி.யில் தொடர் கதையாகி வரும் விவசாயிகள் தற்கொலை பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு

ம.பி.யில் தொடர் கதையாகி வரும் விவசாயிகள் தற்கொலை பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு

லக்னோ, அக். 6 மத்தியப் பிரதேசம் மாநி லத்தில் வறட்சியின் கார ணமாக மேலும் 2 விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து நிலவி வரும் வறட்சி மற்றும் காலம் தவறி பெய்யும் மழையின் காரண மாக விவசாயம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள் ளது. இதனால் விவ சாயிகள் தாங்கள் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தற் கொலை செய்து கொள் ளும்....... மேலும்

06 அக்டோபர் 2015 16:39:04

திருப்பதி லட்டு விற்பனையில் மோசடி: 2 ஊழியர்கள் கைது

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருமலை, ஏப்.26- திருமலையில் பிர சாத லட்டுகளில் கொஞ்சம் கொஞ்ச மாக கிள்ளி எடுத்து, புதிய லட்டுகள் தயாரித்து விற்று மோசடி செய்ததாக 2 ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவி லில் பக்தர்களுக்கு, சிறிய லட்டு இல வசமாக வழங்கப்படும். மேலும் தரிசன டிக்கெட்டுக்கு ஏற்பவும் லட்டு பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. இந்த லட்டுகள் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளின் கவுண்ட்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட வங்கியின் கவுண்ட்டரில் தரப்படும் லட்டுகள் மட்டும் எடை குறைவாக இருப்பதாக புகார்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி விசுவநாதம் அந்த குறிப் பிட்ட கவுண்ட்டரில் திடீர் சோதனை நடத்தினார். அவர்களுக்கு தரப்பட்ட லட்டுகள் மற்றும் விற்பனை செய்யப் பட்ட லட்டுகளின் கணக்குகளை சரிபார்த்தார். அப்போது அங்கு கூடுதலாக 25 லட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அங்கு பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர்களான ஏ.சேகர், சந்திரசேகர் ஆகியோரிடம் விசாரித்தபோது, அவர்கள் நூதன முறையில் செய்த தில்லுமுல்லு தெரியவந்தது.

தேவஸ்தானத்தில் இருந்து பெறப் படும் லட்டுகள் ஒவ்வொன்றையும் சிறிது சிறிதாக கிள்ளி எடுத்துள்ளனர். அவ்வாறு சேகரிக்கப்படும் உதிரி லட்டுகளை உருண்டையாக பிடித்து புது லட்டுகளாக செய்து, அவற்றை விற்பனை செய்துள்ளனர். அந்த கவுண்ட்டரில் வழங்கப்படும் லட்டு கள் மட்டும் எடை குறைவாக இருந் ததற்கு அதுவே காரணம் என்பது தெரியவந்தது.

180 கிராம் எடை இருக்க வேண் டிய லட்டில் இருந்து 10 முதல் 25 கிராம் வரை கிள்ளி எடுத்துள்ளனர். இதன்மூலம் சுமார் 15 லட்டுகளை கிள்ளி எடுத்து, ஒரு புதிய லட்டு செய்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து அந்த கவுண்ட் டரில் கூடுதலாக இருந்த 25 லட்டுகள் மற்றும் சேகர், சந்திரசேகர் ஆகி யோரிடம் இருந்த ரொக்கப்பணம் ரூ.1,185 ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டன. பின்னர் அவர்கள் இருவரும் திருமலை நகர காவல்துறையில் ஒப் படைக்கப்பட்டனர்.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சேகர், சந்திரசேகர் ஆகிய 2 ஊழியர்களையும் கைது செய்தனர்.

கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர்.

மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்