முன்பு அடுத்து Page:

இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப…

கொழும்பு, மார்ச் 23  இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, இலங்கையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் இரு ஆண்டுகள் காலக்கெடு அளித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. இலங்கையில் கடந்த....... மேலும்

23 மார்ச் 2019 16:40:04

பாஜகவின் 5 ஆண்டு ஆட்சி தோல்வி: அசோக் கெலாட்

புதுடில்லி, மார்ச் 23  பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணியின் 5 ஆண்டுகால ஆட்சி தோல்வி அடைந் துள்ளது என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: இன்றைக்கு வெளிவரும் புள்ளி விவரங்கள் அனைத்தும் அரசுக்கு எதிராக இருப்பது அதிருப்தியை தருகிறது. கருப்புப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மீட்டுக் கொண்டு வரப்படவில்லை. இது இந்த அரசின்....... மேலும்

23 மார்ச் 2019 15:40:03

விவசாயப் புரட்சி நடந்தால் மட்டுமே 10 சதவிகித வளர்ச்சி சாத்தியம்!

நிதி ஆயோக் சிஇஓ கருத்து! புதுடில்லி, மார்ச் 23 வேளாண் துறையில் மிகப்பெரிய மாற் றம் நிகழாமல், நாடு10 சத விகித வளர்ச்சியை அடைய முடியாது என நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டக்குழு வாகச்செயல்படும் நிதிஆயோக் அமைப்பின்தலைமை செயல திகாரி அமிதாப் கந்த், வேளாண் கருத்தரங்கம்ஒன்றில்பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதில் தான் இவ்வாறு அவர் கூறியுள் ளார். நாட்டின் 50....... மேலும்

23 மார்ச் 2019 15:09:03

மக்களவைத் தேர்தல்: மோடிக்கும் - மக்களுக்கும் இடையே நடக்கும் போட்டி

ராஜ்தாக்கரே மும்பை, மார்ச் 23 மக்களவைத் தேர்தல், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கும் போட்டி என்று மகாராட்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) தலைவர் ராஜ்தாக்கரே கூறினார். ராஜ் தாக்கரே கட்சி கூட்டம் ஒன்றில் பேசியதாவது: மத்திய அரசு பணத்துக்காக ரிசர்வ் வங்கியிடம் பிச்சை எடுத்து வரும் நிலையில், பாகிஸ்தானுடன் போரிடும் நிலையில் இந்தியா இருக்கிறதா?  நாட்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசிடம் இருந்து பதில் இல்லை. எனவேதான்....... மேலும்

23 மார்ச் 2019 15:09:03

இது மட்டும் ஊழல் இல்லையா?

இது மட்டும் ஊழல் இல்லையா?

பிஜேபியின் விளம்பரத்துக்கு மக்கள் பணமா? திட்ட நிதியில் பெரும் பகுதியை மோடி தனது விளம்பரத்திற்கே பயன்படுத்தி இருப்பது வெட்கக்கேடான விஷயமாகும். மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். பல திட்டங்கள் செயல்பாட்டிற்கு வராமல் வெற்று அறிவிப்போடு நின்று தோல்வியை சந்தித்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்தத்திட்டமும் தற்போது இணைந்திருக் கிறது. ஆனால் எல்லா திட்டமும் வெற்றி பெற்றது போலவே தனது விளம்பரத்தின் மூலம் நிறுவ முயன்று வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி....... மேலும்

23 மார்ச் 2019 13:24:01

உ.பி.யில் 2 ஆண்டுகளில் கலவரங்களே நிகழவில்லை என பா.ஜ.க. கூறுவது கேலியாக உள்ளது: மாயாவதி

சென்னை, மார்ச் 22  உத்தரப் பிரதேசத்தில், கடந்த 2 ஆண்டுகளில் கலவரங்களே நிகழவில்லை என்று பாஜக கூறி வருவது கேலியாக உள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆனதை யொட்டி, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் செய்தியா ளர்களைச் சந்தித்தார். அப்போது, பாஜக ஆட்சியின்கீழ், கடந்த 2 ஆண்டுகளில் ஒரு கலவரம்கூட நிகழ வில்லை. மாநிலத்தில்....... மேலும்

22 மார்ச் 2019 15:48:03

மோடி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 4.7 கோடி பேர் வேலையிழப்பு!

மோடி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 4.7 கோடி பேர் வேலையிழப்பு!

புதுடில்லி, மார்ச் 22 -இந்தியாவில், கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மோடி ஆட்சியில் 4 கோடியே 70 லட்சம் ஆண் - பெண் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக, கடந்த 2017-- 2018 இல், ஆண்கள் மட்டும் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ.), 1993- - 1994 ஆம் ஆண்டு கணக் கெடுப்பு நடத்தியபோது 21.9....... மேலும்

22 மார்ச் 2019 14:08:02

சம்யெவுதா குண்டுவெடிப்பு: வழக்கில் யாருமே குற்றவாளி இல்லையெனில் 68 பேரின் உயிரிழப்புக்கு காரணம் யா…

சம்யெவுதா குண்டுவெடிப்பு: வழக்கில் யாருமே குற்றவாளி  இல்லையெனில்  68 பேரின் உயிரிழப்புக்கு காரணம் யார்?  கபில் சிபல் கேள்வி

புதுடில்லி, மார்ச் 22  சம்யெவுதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் யாருமே குற்றவாளி இல்லையென்றால், 68 பேர் உயிரிழந்ததற்கு காரணம் யார்? என்று முன்னாள் மத்திய அமைச் சரும், வழக்குரைஞருமான கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். சம்யெவுதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற் றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 4 பேரை  சிறப்பு நீதிமன்றம் புதன் கிழமை விடுவித்தது. அதைக் குறிப்பிட்டு கபில் சிபல் இவ்வாறு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர்....... மேலும்

22 மார்ச் 2019 13:52:01

2018இல் 1 கோடி வேலைவாய்ப்பை பிரதமர் மோடி அழித்துவிட்டார் : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

2018இல் 1 கோடி வேலைவாய்ப்பை பிரதமர் மோடி அழித்துவிட்டார் : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

இம்பால், மார்ச் 21, நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டில் ஒரு கோடி வேலை வாய்ப்பை பிரதமர் மோடி அழித்து விட்டார்” என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் மக்க ளவை தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் மாலை மணிப்பூர் வந்தடைந்தார். தலைநகர் இம்பாலில், மாநில திரைப்பட மேம்பாட்டு சங்கத் தில் மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். தொடர்ந்து நேற்று காலை நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி....... மேலும்

21 மார்ச் 2019 15:48:03

நள்ளிரவில் கோவாவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிவசேனை கண்டனம்

புதுடில்லி, மார்ச் 21- பதவி மோகம் காரணமாக, கோவாவில் புதிய பாஜக அமைச்சரவை அவசரமாக நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டதாக சிவசேனை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தக் கட்சியின் அதி காரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் புதன்கிழமை வெளியான தலையங்கக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதா வது: கோவா முதல்வர் மனோகர் பாரிக்க ரின் மறைவுக்குப் பிறகு, ஆட்சி அதி காரத்தைக் கைப்பற்றுவதற்கான பேரம் தீவிரமாக நடைபெற்றது. இறுதியில், பிரமோத் சாவந்த் மற் றும் 2 துணை முதல்வர்களின்....... மேலும்

21 மார்ச் 2019 15:36:03

பள்ளிக்கல்வி மாநில அரசிடமும், உயர் கல்வியில் சில அதிகாரங்கள் மத்திய அரசிடமும் இருக்க வேண்டும் : ராகுல் காந்தி பேட்டி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 15, பள்ளிக் கல்வி மாநில அரசிடமும், உயர் கல்வியில் சில அதிகாரங்கள் மத்திய அரசிடமும் இருக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள் ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் (13.3.2019) நடைபெற்றது.   பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதற்கு முன்னதாக, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி உரையாடினார். இதனைத் தொடர்ந்து பிற்பகலில் சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் நடந்த பத்திரி கையாளர் சந்திப்பில் பங்கேற்றார்.

அப்போது ராகுல் காந்தி பேசிய தாவது:

''பிரதமர் மோடி பத்திரிகையாளர் களை எதிர்கொள்ளத் தயங்குகிறார். இங்குள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கின்றன. ஆனால் மோடி சந்திக்க மறுக்கிறார்.

மோடி ஏன்  மறைந்து இருக்கிறார்....

என்னைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் நிலை அதன் பொருளாதார வளர்ச்சியுடன் நேரடியாகத் தொடர்பு டையது. ஆனால் இந்த அடிப்படையை  பாஜகவும், மோடியும் புரிந்து கொள்ள வில்லை. நீங்கள் மாநிலங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அதில் இருந்து திடமான பொருளாதார வளர்ச் சியை எதிர்பார்க்க முடியாது.

எனவே, முதலில் காங்கிரஸ் கட்சி செய்ய இருப்பது இந்த நாட்டின் இயல் புத் தன்மையை மீண்டும் கொண்டு வருவது, இந்த  நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இந்த நாட்டின் அங்கத்தினரே என்று உணர வைக்க வேண்டும்.

மக்கள் தங்களை தனிமைப்படுத்துவ தாகவும், துன்புறுத்துவதாகவும், அவர் களின் கலாச்சாரம் தாக்கப்படுவதாகவும் கருதக் கூடாது.

இந்தியா அனைவருக்குமானது.

இரண்டாவது நமக்கு ஜிஎஸ்டியில் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம். நாங்கள் ஜிஎஸ்டியை மறுசீரமைப்பு செய்ய இருக்கிறோம். எளிமையான ஜிஎஸ்டியை உருவாக்குவோம். இதில் குறைந்த அளவிலான வரியும் சாத்திய மாகும்.

சிறு, நடுத்தர வணிகங்களில் வேலை வாய்ப்பை உருவாக்குவது நிகழப் போகிறது. இந்த நிறுவனங்களுக்காக நாங்கள் வங்கிகளைத் திறக்க இருக் கிறோம். சமீப ஆண்டுகளில் வேலை வாய்ப்பை உருவாக்குபவர்கள் மோடி யின் அரசால் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் பாதிக்கப்பட் டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களது வாழ்வை எளிமையாக்க இருக்கிறோம். இது தொடர்பான பல யோசனைகளை  நாங்கள் வைத்திருக்கிறோம்.

2019ஆ-ம் ஆண்டுக்குப் பிறகு குறைந்தபட்ச ஊதியத்துக்கு கீழ் யாரும் இருக்க மாட்டர்கள். சீனாவின்  உற்பத் தித் திறனுக்கு போட்டியிடும் திறன் தமிழ் நாட்டுக்கு உள்ளது. 2019இ-ல் எங் களுக்கு அதிகாரம் இருந்தால் வேலை வாய்ப்பின் மய்ய மாக தமிழகத்தை உருவாக்குவோம்.

புல்வாமா தாக்குதல்

45 ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். பாகிஸ்தானியர்கள் தங்களுக்கு எப்போதெல்லாம்  வாய்ப்பு கிடைக்கிறதோ அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம்.

ஆனால் இதில் கேள்வி என்ன வென்றால், அந்த 45 ராணுவ வீரர்களைப் பாதுகாக்க அரசு என செய்தது. புல்வாமா குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் இருக்கும் மசூர் அசாத்தை விடுதலை செய்தது பாஜகதான். இதனை பாஜக விளக்க வேண்டும்.

வேலை வாய்ப்பின்மை

நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை என்பதை அனைவரும் உணர்கிறார்கள். மோடி இதில் தோல்வி அடைந்திருக் கிறார். ஆனால் அவர் பொய்யான தக வல்களை கூறிக் கொண்டு இருக்கிறார். உண்மை என்னவென்றால் 45 ஆண்டுக ளுக்குப் பின்னர் இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் உரிமை உண்டு

அனைத்து மாநிலங்களுக்கும் உரிமை உண்டு. அனைவருக்கு குரல் கொடுக்க உரிமை உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மத்திய அரசால் இயக்கப் படுகிறது. இது தமிழக மக்களுக்கான அவமானம்.  நான் தமிழக மக்களின் உணர்வைப் புரிந்து வைத்திருக்கிறேன். அவர்கள் பல ஆண்டுகளுக்குப் பின் டில்லியிலிருந்து இயக்கப்படுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள்தான் அவர்கள் மாநிலத்தை ஆள வேண்டும். மோடி ஆட்சியில் உச்ச நீதிமன்றம், சிபிஅய், ஆர்பிஅய் என தன்னாட்சி அமைப்புகள் சிதைக்கப் பட்டு விட்டன.

விவசாயிகளுக்கான கடன்

நாங்கள் ஆட்சி அமைக்கும்போது,  விவசாயிகளுக்கான தெளிவான கொள் கையை வைத்துள்ளோம். விவசாயம், விவசாயிகள் இல்லாமல் இந்தியா உறுதி பெறாது என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம். ஆனால், பாஜகவுக்கு இதில் நம்பிக்கை இல்லை. இதுதான் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடை யேயான வேறுபாடு.  நாங்கள் அனைத்து வகையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம். ஜந்தர் மந்தரில் போராட் டம் நடத்திய தமிழக விவசாயிகளிடம் மோடி அரசு எவ்வாறு நடந்து கொண்டது என்பதை நான் மறக்கவில்லை.

பிரதமரை மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்

காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருப் பது குறித்த கேள்விக்கு,

மொத்த எதிர்க் கட்சிகளும்  பாஜக, மோடி, ஆர்எஸ்எஸ்ஸூக்கு எதிராக சண்டையிட ஒற்றுமையாக உள்ளன. நாங்கள் பாஜகவை தோற்கடிக்க இருக்கிறோம். பிரதமரை மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எங்களது பணி மோடியை தோற்கடிப்பது.

தமிழக மீனவர் பிரச்சினை

இது தொடர்பாக நாங்கள் தெளிவான  தேர்தல் அறிக்கையைக் கொண்டுள் ளோம். மீனவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அர்ப்பணிப்புள்ள மீன்வ ளத் துறை அமைச்சகத்தை உருவாக்க இருக்கிறோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான எழுவர் விடு தலையில் நாங்கள் யார் மீதும் வெறுப்பு கொண்டிருக்கவில்லை. இது சட்ட ரீதியான பிரச்சினை. சட்டப்படியாக எந்த முடிவு  வந்தாலும் நாங்கள் ஏற்கத் தயாராக இருகிறோம். இதனை நீதி மன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்''.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது குறித்த கேள்விக்கு ப.சிதம்பரத்திடம் ஆலோசனை செய்த பிறகு பதிலளித்த ராகுல் காந்தி, ''பள்ளிக் கல்வி மாநில அரசிடமும், உயர் கல்வி யில் சில அதிகாரங்கள் மத்திய அர சிடமும் இருக்க  வேண்டும்'' என்றார்.

திருத்தம்

'விடுதலை' 5.3.2019 நாளிதழ் 2ஆம் பக்கத்தில், முனைவர் ந.க. மங்கள முருகேசன் எழுதியுள்ள கட்டுரையில், 5ஆவது பாராவில், கருநாடக மாநில அரசின் பட்டு வளர்ச்சித் துறையின் மேனாள் உதவி இயக்குநர் கஜபதி என்பதை, 'தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையின் மேனாள் துணைப்  பதிவாளர் பு.ர. கஜபதி' என்று  திருத்திப் படிக்கக் கோருகிறோம்.

(ஆ-ர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner