முன்பு அடுத்து Page:

பெண்கள் தற்கொலை இந்தியாவில் அதிகரிப்பு மத்திய அரசின் சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

புதுடில்லி, செப். 16- -இந்தியாவில் பெண் தற்கொலைகள் அதிகரித் துக் கொண்டே வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் நடக்கும் தற் கொலைகள் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பப்ளிக் ஹெல்த் பவுண்டேசன் மற்றும் மத்திய அரசின் சுகா தாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன. இந்த ஆய்வில்தான், இந்தியா வில்....... மேலும்

16 செப்டம்பர் 2018 16:38:04

கவிஞர் காசி முத்துமாணிக்கம் இல்ல மண விழா

கவிஞர் காசி முத்துமாணிக்கம் இல்ல மண விழா

14.9.2018 அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் திமுக வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் மகள் சசிகலா - ஆர்.முத்துவீரப்பன் ஆகியோரது மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மணமக்களை வாழ்த்தினார். உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், கவிப்பேரசு வைரமுத்து, திமு கழக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., முன்ள் அமைச்சர்....... மேலும்

16 செப்டம்பர் 2018 16:38:04

ராஜீவ் கொலை வழக்கு 7 பேரை விடுவிக்கும் விவகாரம் ஆளுநர் மாளிகை அறிவிப்பு

சென்னை, செப்.16 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய  தமிழக அமைச்சரவை  தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது. மேலும் 7 பேர் தொடர்பான கோப்புகளையும் ஆளுநருக்கு அனுப்பியது. தமிழக அரசின் இந்த பரிந்துரை குறித்து கருத்து கேட்டு, மத்திய....... மேலும்

16 செப்டம்பர் 2018 16:15:04

தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் நியமனம்

புதுடில்லி, செப். 15-- உச்சநீதிமன் றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோ கோய்யை குடியரசுத் தலை வர் ராம்நாத்கோவிந்த் வியா ழக்கிழமை யன்று நியமித் தார். உச்சநீதிமன்றத்தின் தற் போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் அக்டோபர் 2-ஆம்தேதி யுடன் முடிவடைகிறது. உச்சநீதி மன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பெயரைதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.இதற்கு ஒப்புதல் அளித்த மத்திய....... மேலும்

15 செப்டம்பர் 2018 16:12:04

துவங்கப்படாத அம்பானியின் ஜியோ பல்கலை.க்கு இலவச நிலம், வரிச்சலுகை!

பாஜக மகாராட்டிர அரசு சலுகை அறிவிப்பு மும்பை, செப். 15-- முகேஷ் அம்பானியின்  இன்னும் துவங்கப்படாத பல்கலைக்கழ கத் திற்கு நிலம் மற்றும் வரிச்சலுகை வழங்கப்படும் என்று மகாராட்டிர மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. நாட்டின் முதலாவது பணக்காரரான முகேஷ் அம்பானி, அவரது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜியோபல் கலைக்கழகம் என்ற புதிய பல்கலைக் கழகம் ஒன்றைத் துவங்க முடிவு செய்துள்ளார். ஆனால், பல்கலைக்கழகம் துவங்குவதற்கு முன்பாகவே, அவரது பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த....... மேலும்

15 செப்டம்பர் 2018 16:12:04

இந்தியாவில் 328 வகை கலவை மருந்துகளுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை

இந்தியாவில் 328 வகை கலவை மருந்துகளுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை

புதுடில்லி, செப்.15 இந்தி யாவில் 328 வகை கலவை மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாத்திரைகள், டானிக் உள்ளிட்டவைகளில் பயன் படுத்தப்படும் மருந்துகளின் தாக்கத்தை கணக்கில் கொண்டு, கடந்த 2016ஆம் ஆண்டு 350 வகை கலவை மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வழக்குகள் தொடுத்தன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்நடவடிக்கையை மறுபரி சீலனை செய்யும்படி மத்திய....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:56:03

எய்ட்ஸ் நோயாளிகளிடம் பாகுபாடு காட்டுவோருக்கு 2 ஆண்டு சிறை!

எய்ட்ஸ் நோயாளிகளிடம் பாகுபாடு காட்டுவோருக்கு 2 ஆண்டு சிறை!

புதுடில்லி, செப்.15 எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் களிடம் பாகுபாடு காட்டுவோ ருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எய்ட்ஸ் போன்ற பால் வினை நோய்களால் பாதிக்கப் பட்டோருக்கு சிகிச்சை தர மறுப்பதும், பாதிக்கப்பட் டோரை நிறுவனங்களில் பணியில் இருந்து நீக்குவதும் குற்றம் என்று கடந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 2014-ஆம் ஆண்டு உருவாக் கப்பட்ட இந்தச் சட்டம், கடந்த ஆண்டு....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:55:03

தொழுநோயாளிகளுக்கு இடஒதுக்கீடு

அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, செப். 15- தொழுநோயா ளிகளை மாற்றுத்திறனாளிக ளைப் போல கருதி இடஒதுக் கீடு, சமூக நலத் திட்டங்களின் பலன்களை அவர்களும் பெறு வதை உறுதிப்படுத்துவதற்கு தனியாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு வெள்ளிக்கிழமை கூறியதாவது: அரசு....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:33:03

வரதட்சணை புகார்கள் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, செப்.15 வரதட்சணை புகார்களில், காவல்துறையினர் உடனடியாக கைது நட வடிக்கை மேற்கொள்ளலாம்' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது. முன்னதாக, வரதட்சணை புகார்களை குடும்ப நல குழுக் கள் விசாரித்த பிறகே, காவல் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதனை 3 நீதிபதிகள் அமர்வு தற்போது மாற்றியுள்ளது. வரதட்சணை புகாருக்கு ஆளாகும் கணவர், அவரது குடும்பத்தினரை, காவல்துறையினர்....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:32:03

மோடி அரசின் நூதனக் கொள்ளை

வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் இல்லையென்று ஏழைகளிடமிருந்து ரூ.12 ஆயிரம் கோடி பறிப்பு புதுடில்லி, செப். 14 -வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்புகூட வைக்க முடியாத ஏழை- எளிய மக்களிடமிருந்து, ரூ. 11 ஆயிரத்து 528 கோடியை அபராதமாக வசூலித்து, மோடி அரசு வஞ்சித்துள்ளது. மோடி அரசின் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பாதிப்புகள் காரணமாகவே இந்தியாவில் தொழில்கள் நசிந்து, கோடிக்கணக்கானோர் வேலையிழப் புக்கு உள்ளானார்கள். வருவாயை இழந்து வறுமையில் தள்ளப்பட்டார்கள். ஆனால்,....... மேலும்

14 செப்டம்பர் 2018 18:08:06

பேராசிரியர் தாக்கப்பட்ட கொடுமை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்கலையில் உயர்ஜாதி ஆணவம்!

லக்னோ,ஜூலை12உத்தரப்பிரதேசமாநி லத்தில் சாமியார் ஆதித்யநாத் தலைமையி லான பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது.மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவின் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ அரசு களால் இந்துத்துவ வன்முறை வெறி யாட்டங்கள்அதிகரித்துவருகின்றன.இந் துத்துவ வன்முறை, ஜாதி, வகுப்புவாத வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறுவது டன், இந்துத்துவ வன்முறையாளர்களுக்கு பக்கபலமாகவும் ஆட்சியாளர்கள் இருந்து வருகின்ற அவலம் தொடர்ந்து கொண் டிருக்கிறது.

மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதல் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், மத சிறுபான்மை மக்கள், பெண்கள்மீதான அடக்குமுறைகள், வன்முறைகள் கட்டுக் கடங்காமல் நடந்துவருகின்றன. பசுவதை என்கிற பெயரால் தாக்குதல்கள், கொலைகள் நடக்கின்றன.

பெண்கள்மீதான பாலியல் வன்முறை கள், கொலைகளில் ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகளாக இருந்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸின் வன்முறை வெறியாட்டம்

ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பின் பெயரால்பல்கலைக்கழகங்கள்,கல்லூரி களில் இந்துத்துவ வன்முறை வெறியாட் டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின் றன.

இந்நிலையில் தற்பொழுது அம்பேத்கர் பல்கலைக்கழகத்ல் பணியாற்றிவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பேராசி ரியரை மாணவரே தாக்கிய அவலம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் அமைந்துள்ள பாபா சாகெப் டாக்டர் பீமா ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றிவருபவர் பேராசிரியர் எல்.சி. மல்லய்யா. இவர் தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்தவர்.

அவரிடம் ஆய்வு மாணவர்களில் ஒரு வராக சஞ்சய் உபாத்யாயா என்பவர் பயின்று வந்தார். சஞ்சய் உபாத்யாயா தன்னுடைய ஆய்வு அறிக்கையை பேராசிரியர் மல்லய் யாவிடம் அளித்திருந்தார். ஆனால், அதை பேராசிரியர் ஏற்காமல், அவரை பின்னர் வருமாறு கூறினார்.

தாழ்த்தப்பட்ட சமூக பேராசிரியர்மீது தாக்குதல்

அப்போது ஆத்திரமடைந்த மாணவர் சஞ்சய் உபாத்யாயா பேராசிரியர் மல்லய் யாவைநோக்கி ஜாதி இழிபடுத்தி திட்டிய வாறு கையை ஓங்கி குத்து விட்டார். சரமாரியாகத் தாக்கப்பட்ட பேராசிரியர் காப்பாற்றுமாறு சத்தமாக கதறினார். சத்தம் கேட்டு மற்ற பேராசிரியர்கள் அவரை அம்மாணவரிடமிருந்து காப்பாற்றினார்கள். மாணவர் தாக்கியது குறித்து பேராசிரியர் எல்.சி.மல்லய்யா பல்கலைக்கழக நிர்வாகத் திடம் புகாரளித்தார். அதனையடுத்து காவல்துறையில் நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து,  லக்னோ காவல்துறை கண்காணிப்பாளர் கனிநிதி நைத்தானி  மற்றும் ஆஷியானா காவல் துறையினர் பல்கலைக்கழகத்துக்கு சென்று மாணவர் சஞ்சய் உபாத்யாயாமீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதனிடையே மாணவர், ஆசிரியர்களிடையே பிளவு, ஜாதிவாரியான பிளவுகள் வெளிப்பட்டன. காவல்துறையினர் பல் கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

சஞ்சய்உபாத்யாயாவின்ஆய்வறிக் கையை பல்கலைக்கழக குழு அங்கீகரிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், ஜாதி ஆணவத்துடன் பேராசிரியர் எல்.சி.மல்லய்யாவை அம்மாணவர் திட்ட மிட்டு தாக்கியுள்ளார்.

பாஜக அரசின் அணுகுமுறைகளால், தாழ்த்ப்பட்டவர்களுக்கு எதிரான ஜாதி வெறி ஆணவங்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள்மீதும் பாய்ந்துள்ள அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner