முன்பு அடுத்து Page:

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் ராணுவ நடவடிக்கை

புதுடில்லி, ஜூன் 21- ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில், ராணுவ நடவடிக்கைகளுக்கு, தற்காலிக மாக விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்ட தாக, ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத் தெரிவித்தார். இந்திய ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத், செய்தி யாளர்களிடம் நேற்று கூறிய தாவது: ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி யால், ராணுவத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரமலான் மாதத்தில், சண்டை இல்லாமல் அமைதி நிலவ....... மேலும்

21 ஜூன் 2018 15:04:03

இந்தியாவில் தற்கொலைகள் 23 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி, ஜூன் 21- இந்தியாவில் 2000 முதல் 2015ஆம் ஆண்டு வரை தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்கொலை செய்து கொள்பவர் களில் அதிகமானவர்கள் 30 முதல் 45 வயதிற்கு உட்பட்ட வர்கள். இவர்களைத் தொடர்ந்து 18 வயது முதல் 30 வயதிற்குட் பட்டவர்களே அதிகம் தற் கொலை செய்து கொள்கிறார்கள் என தேசிய சுகாதாரம் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டில் 1,08,593 ஆக....... மேலும்

21 ஜூன் 2018 15:04:03

மோடி அரசின் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் எந்த முன்னேற்றமும் இல்லை

ரொக்கப் பரிவர்த்தனையில் எந்த மாற்றமும் இல்லை ஆய்வில் தகவல் புதுடில்லி, ஜூன் 21- பிரதமர் நரேந்திர மோடியின் நான்காண்டு கால ஆட்சி யில், நாட்டில் வேலைவாய்ப்பு, உற் பத்தி, ஏற்றுமதிஆகியவற்றில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. பொருளாதாரத்தை மேம்படுத்தும் நட வடிக்கைகள் என்று மோடி அரசால் கொண்டுவரப்பட்ட பண மதிப்புநீக்கம், ஜிஎஸ்டி எதுவும் பயனளிக்கவில்லை. நாட்டில் எந்த முன்னேற்றத்தையும் அது கொண்டுவரவில்லை என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பண மதிப்பு....... மேலும்

21 ஜூன் 2018 14:45:02

காவிமயமாக்கப்படும் ரயில் பெட்டிகள்

காவிமயமாக்கப்படும் ரயில் பெட்டிகள்

புதுடில்லி, ஜூன் 21 இந்தியன் ரயில்வே துறையில் ரயில் பெட்டிகளின் நிறத்திலும் காவியைப் புகுத்துவதென மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. ரயில் பெட்டிகளின் உள்பகுதிகளில் கூடுதலான வசதிகள் செய்யப்படும். அனைத்து பெட்டிகளிலும் பையோ கழிப்பறைகள், செல்பேசி சார்ஜ் செய்யும் வசதி மற்றும் படுக்கை, இருக்கை அமைப்புகளுடன் இருக்கும். தற்பொழுது அடர் நீல நிறத்தில் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளும் அடர் மற்றும் வெளிர் காவி நிறத்தில் மாற்றப்பட உள்ளன. 16 பெட்டிகள்....... மேலும்

21 ஜூன் 2018 13:52:01

ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் கைது செய்யப்படுவார்

கருநாடக முதல்வர் உறுதி டில்லி, ஜூன் 21 கவுரி லங்கேஷ் கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சிறீராம் சேனாவின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கருநாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையாளிக்கும், இந்து அமைப்பான சிறீராம் சேனாவுக்கும் தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளியாயின. இதை ஒட்டி சிறீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் ஒரு கூட்டத்தில், "கவுரி லங்கேஷ் கொலைக்கும்" சிறீராம் சேனாவுக்கும் எந்த....... மேலும்

21 ஜூன் 2018 13:52:01

பிற்படுத்தப்பட்ட மாணவர்களக்கு எதிராக கட்-ஆப்பை உயர்த்தி டில்லிப் பல்கலை. சூழ்ச்சி!

பிற்படுத்தப்பட்ட மாணவர்களக்கு எதிராக கட்-ஆப்பை உயர்த்தி டில்லிப் பல்கலை. சூழ்ச்சி!

புதுடில்லி, ஜூன் 21- அரசுப் பள்ளிகளிலிருந்தும், உழைக் கும் வர்க்கக் குடும்பங்களிலி ருந்தும் வரும் மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்கக்கூடாது என்பதற்காக, டில்லி பல் கலைக்கழகமானது, கட்-ஆப் மதிப்பெண்களை உயர்த்தியுள் ளது. இதற்கு எதிராக டில்லியில் இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து போராட்டத்தை துவக்கியுள்ளன. டில்லிப் பல்கலைக் கழகத் தின் மொத்த பட்டதாரி மாண வர்களுக்கான எண்ணிக்கை 56 ஆயிரம் ஆகும். இந்த இடங் களுக்கு....... மேலும்

21 ஜூன் 2018 13:52:01

விஜயபாரதமே, கயவர்கள் யார்?

விஜயபாரதமே, கயவர்கள் யார்?

'நீட்' தேர்வைப்பற்றி ஆர்.எஸ்.எஸின் வார இதழான 'விஜயபாரதம்' (22.6.2018) 'நீட்' பற்றி என்ன எழதுகிறது? "மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடி அரசியல் செய்யும் இந்தக் கயவர்களைத் தமிழக மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்" என்று தடித்த வார்த்தைகளைக் கையாண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ். இதழ். 'நீட்' தேர்வின் காரணமாக ஒரே ஒரு பழங்குடி வகுப்பு மாணவன்கூட மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய முடியாது என்று அவாள் ஆத்து 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' கூறியிருக்கிறதே - இதனை மறைப்பவர்கள் கயவர்களா?....... மேலும்

21 ஜூன் 2018 13:52:01

‘காக்கா’ பிடிக்கிறதா பா.ஜ.க? பிரபலங்களிடம் ஆதரவு திரட்டும் நடவடிக்கை மாயாவதி விமர்சனம்

   ‘காக்கா’ பிடிக்கிறதா பா.ஜ.க?  பிரபலங்களிடம் ஆதரவு திரட்டும் நடவடிக்கை  மாயாவதி விமர்சனம்

லக்னோ, ஜூன் 20 எதிர்வரும் மக்களவைத் தேர்தலை ஒட்டி பல்வேறு முக்கியப் பிரமுகர் களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வரும் பாஜகவின் நடவடிக் கையை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். இத்தகைய சந்திப்புகள் வெறும் நிழற்படம் எடுத்துக் கொள்வ தற்கான வாய்ப்புகளை வேண்டு மானால் உருவாக்குமே தவிர வேறு எந்த பலனையும் அளிக் காது என்றும் அவர் கூறியுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப்....... மேலும்

20 ஜூன் 2018 16:10:04

குஜராத்தில் அரங்கேறிய தீண்டாமைக் கொடுமை குதிரையில் வந்த தாழ்த்தப்பட்ட மணமகனை கீழே இறக்கிவிட்ட ஜாதி…

குஜராத்தில் அரங்கேறிய தீண்டாமைக் கொடுமை  குதிரையில் வந்த தாழ்த்தப்பட்ட மணமகனை  கீழே இறக்கிவிட்ட ஜாதி வெறியர்கள்!

  அகமதாபாத், ஜூன் 20 திருமணத்தன்று மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது, குதிரை யில் பவனி வந்த தாழ்த்தப்பட்ட மணமகனை, சாதி வெறியர்கள் கீழே இறக்கி விட்டு அவமானப் படுத்திய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பர்சா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் சோலங்கி (27). இவர் அங்குள்ள பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வர்ஷா என்பவருக்கும் திரு மணம் நிச்சயிக்கப்பட்டது. சுமார் 2 லட்சம்....... மேலும்

20 ஜூன் 2018 16:10:04

டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைத்தால் லாரி போராட்டம் திரும்பப் பெற வாய்ப்பு

சென்னை, ஜூன் 20- தமிழகம் உள்பட நாடு முழுவதும் செவ் வாய்க்கிழமை 2-ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இந்நிலையில், டீசலுக்கு மாநில அரசுகள் விதித்து வரும் வரியை குறைத் தால் போராட்டத்தை திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் கள் சம்மேளனம் தெரிவித்தது. நாடு முழுவதும் லாரி உரி மையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தை திங்கள்கிழமை தொடங் கினர். டீசல் விலை உயர்வைக்....... மேலும்

20 ஜூன் 2018 14:49:02

காவல்துறையில் புகார்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ

ரூ. 43 லட்சம் லஞ்சம் பெற்று மோசடி

மீரட், ஜூன் 12 -உத்தரப்பிரதே சத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம், தன்னிடம் ரூ. 43 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சஞ்சய் பிரதான் என்ற தொழிலபதிபர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள் ளார்.

உத்தரப்பிரதேசத்தின் மீரட் அருகிலுள்ள காடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் பிரதான். பொதுப் பணித்துறை உட்பட பல அரசுத் துறைகளில் காண்ட்ராக்டராக இருக்கிறார். அந்த வகையில், மீரட் அருகே தாத்ரிஎனும் இடத்தில் அரசுக் கல்லூரி கட்டுமானப் பணியை காண்ட்ராக்ட் எடுக்க முயற்சித்த அவர், அதிகாரிகளிடம் சிபாரிசு செய்யுமாறு பாஜக எம்எல்ஏ-வான சங்கீத் சோமை அணுகியுள்ளார்.

அப்போது, பிரதானுக்கே காண்ட் ராக்ட்டை பெற்றுத் தருவதாக கூறி எம்எல்ஏ சங்கீத் சோம், ரூ. 43 லட்சத்தைலஞ்சமாக பெற்றுள்ளார். ஆனால், கூறியபடி காண்ட்ராக்ட் சஞ்சய் பிரதானுக்கு கிடைக்கவில்லை. இதுபற்றி சங்கீத் சோமை அணுகி கேட்ட போது, அவர் மழுப்பியுள்ளார். காண்ட்ராக்ட்டை பெற்றுத்தர முடியவில்லை எனும்போது, என்னிடம் லஞ்சமாக பெற்ற ரூ. 43 லட்சம் பணத்தையாவது திரும்பித் தந்து விடுங்கள் என்றுகூறியதற்கும் பதிலில்லை. மாறாக,அலைக்கழிப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.

பொறுத்துப் பார்த்த காண்ட் ராக்ட்டர் சஞ்சய் பிரதான், தன் னிடம் ரூ. 43 லட்சத்தை சங்கீத் சோம் லஞ்சமாக பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக காவல்துறையில் தற்போது புகார்அளித்துள்ளார். லஞ்சப் பணம் மூன்று தவணைகளாக எப்போது, எங்கு வைத்து, யாரிடம் கொடுக்கப் பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை சஞ்சய்பிரதான் தனது புகாரில் தெரிவித்துள் ளார். இது உத்தரப்பிரதேசத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

முதல்வர் ஆதித்யநாத்தின் முதன்மைச் செயலாளர் கோயல், தன்னிடம்ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டதாக, அபிஷேக் குப்தா என்ற ஒரு தொழிலதிபர் சில நாட்களுக்கு முன்புதான் பரபரப்பு கிளப்பியிருந்தார். பின்னர் ஒருவழியாக அவரை ஆதித்யநாத் அரசு மிரட்டிப்பணிய வைத்தது. இப்போது, சஞ்சய் பிரதான் லஞ்சப் புகார் கூறி யுள்ளார்.தேசிய காவல்துறை அருங்காட்சியகம்

புதுடில்லி, ஜூன் 12 இந்தியாவில் முதல் முறையாக தேசிய காவல் துறை அருங்காட்சியகம் டில்லி யில் விரைவில் தொடங்கப்பட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் முதல் தேசிய காவல்துறை அருங்காட்சி யகம் டில்லியின் அமைக்க மத் திய அரசு திட்டம் தீட்டி உள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டில்லி யின் லுடைன்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது.

தேசிய காவல்துறை நினைவு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் காவல்துறையின் வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் அவர்கள் பயன்படுத்திய சீருடை, ஆயுதங்கள், கலைப்பொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் மத்திய, மாநில பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் வைக்கப்படும்.

இந்த அருங்காட்சியகத்தை வருகின்ற அக்டோபர் மாதம் காவல்துறை நினைவு தினமான 1-ம் தேதி பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner