முன்பு அடுத்து Page:

பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை

பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை

குடியரசுத் தலைவர் ஒப்புதல் புதுடில்லி, ஆக.15 -12 வயதுக் குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனை களை விதிப்ப தற்கான குற்றவியல் சட்டம் (திருத்தம்) 2018 -க்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். கத்துவா சிறுமி மற்றும் உன்னாவ் இளம்பெண் ஆகியோர் பாலியல் வன் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை யடுத்து கடந்த ஏப்ரல் 21 ஆம்....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 15:23:03

ராஜஸ்தான் மாநில முதல்வரின் கவுரவ யாத்திரை பெயரால் பொதுமக்கள் வரிப் பணத்தை வீணாக்குவதா?

பாஜகவுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கண்டனம் ஜெய்ப்பூர், ஆக.15 ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. முதல்வர் வசுந்தரா ராஜே, அவர் கட்சியின் நலனுக்காகமாநிலத்தில்பய ணம் செய்கிறார். அந்தப் பய ணத்தில் அரசுத் துறைகளின் வாயிலாக மக்களின் வரிப் பணத்தை செலவழிக்கிறார் என்பது குறித்த பொது நல வழக்கில் ராஜஸ்தான் மாநில பாஜக அரசுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் பயணச் செலவுகுறித்து அறிக்கையை 16.8.2018 தேதிக்குள் அளிக்கும்படி ராஜஸ்தான் மாநில....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 14:56:02

தெரிந்துகொள்வீர்! இதுதான் இந்துத்துவா அமைப்பு

புதுடில்லி, ஆக.15 அரக்ஷன் விரோதிகட்சி என்கிற பெயரிலுள்ள இந்துத்துவா அமைப்பு ஒன்று டில்லி ஜந்தர் மந்தரில் நாடாளுமன்ற தெருவில் கடந்த9.8.2018 அன்றுபோராட் டத்தை நடத்தியது. அப் போது காவல்துறையினர் முன் னிலையிலேயே அரசமைப்புச் சட்ட சிற்பி டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்குஎதிராகமுழக் கங்களைஎழுப்பி, அரசமைப்புச் சட்டத்தின் நகலைக் கொளுத் தினர். அகில பாரதீய பீம் சேனா அமைப்பின் தலைவர் அனில் தன்வார் அளித்த புகாரின்பேரில் டில்லி   காவல்துறையினர் 10.8.2018 அன்று வழக்குப் பதிவு....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 14:55:02

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்

புதுடில்லி, ஆக. 15- இந்தியா, பூடான், சீனா ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் இடத்தில் டோக் லாம் பகுதி அமைந்துள்ளது. இதற்கு 3 நாடுகளும் உரிமை கோரி வருவதால் பிரச்சினைக் குரிய பகுதியாக இருந்து வரு கிறது. சீனா கடந்த ஆண்டு இந்தப் பகுதியை நோக்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட் டது. அப்போது இந்திய ராணு வம் அதை தடுத்து நிறுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே 2 மாதமாக....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 14:39:02

காற்று மாசு பிரச்சினை: 66 கோடி இந்தியர்களுக்கு பாதிப்பு

     காற்று மாசு பிரச்சினை: 66 கோடி இந்தியர்களுக்கு பாதிப்பு

    புதுடில்லி, ஆக.15 இந்திய மக்கள் தொகையில் சுமார் 66 கோடி பேர் காற்று மாசு பிரச்சினைக்கு ஆளாகியிருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சி மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. சிகாகோ பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்டு கென்னடி பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இந்தி யாவின் காற்றுத் தரம் மற்றும் காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் இறுதியில் இந்தியாவின் காற்றை சுத்தப்படுத்துவதற்கான திட் டம்‘ என்ற பெயரில் பரிந்துரைகளை வெளியிட்டனர். நாட்டில் உள்ள....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 14:39:02

அய்தராபாத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு

அய்தராபாத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு

அய்தராபாத், ஆக. 13- அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங் கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் 12.8.2018 அன்று அய்தராபாத் சுந்தரய்யா விஞ்ஞான கேந்திர அரங்கில் நடைபெற்றது. கூட்டமைப்பின் செயல்தலைவர் ஜே.பார்த்தசாரதி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி ஆண்டு அறிக்கையை அளித்தார். 2017--18 ஆண்டுக்கான வரவு செலவு கணக்கினை பொருளாளர் எம்.இளங்கோவன் சமர்ப் பித்தார். தலைவராக மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர் வி.அனுமந்தராவ், செயல் தலைவராக ஜே.பார்த்தசாரதி, பொதுச்....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 15:30:03

'தொழுநோயை காரணம்காட்டி விவாகரத்து கோர முடியாது'

சட்டத் திருத்த மசோதா அறிமுகம் புதுடில்லி, ஆக.13 விவாகரத்து கோருவதற்கான சட்டபூர்வ காரணங்களிலிருந்து தொழுநோயை நீக்குவதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் வெள் ளிக்கிழமை அறிமுகப்படுத் தப்பட்டது. தொழுநோயால் பாதிக்கப் பட்டிருக்கும் வாழ்க்கை துணையுடன், திருமண உறவை தொடர விரும்பா விட்டால், அதற்குரிய மருத் துவ சான்றிதழ்களுடன் விவா கரத்து கோரி விண்ணப்பிப் பதற்கு தற்போதுள்ள சட்டப் பிரிவுகளில் இடமுள்ளன. அதனை மாற்றுவதற்கு வகை செய்யும் தனிநபர் சட்டத்....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 15:05:03

தீர்ப்பாய மசோதா நிறைவேற்றம்!

புதுடில்லி, ஆக. 13- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகங்களில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் தீர்ப்பாயமாக, இந்தியா செயல்படும் வகையி லான சட்டத் திருத்த மசோதா, மக்களவையில்  நிறைவேறியது. விவாதத்தின் போது பேசிய, பா.ஜ.க.,வை சேர்ந்த, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிர சாத், ''இந்த மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது,'' என்றார். மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட, திவால் சட்டத் திருத்த மசோதா மாநி லங்களவையில் நேற்று குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறை....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 15:05:03

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் முதல்வருடன் மத்திய அமைச்சர்கள் நேரில் ஆய்வு

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் முதல்வருடன் மத்திய அமைச்சர்கள் நேரில் ஆய்வு

கொச்சி, ஆக. 13- கேரள மாநி லத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளச் சேதங்களை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அல்போன்ஸ் கன்னந்தா னம் ஆகியோர் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனு டன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டனர். கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச் சர் ராஜ்நாத்சிங் ஞாயிறன்று மதியம் கேரளா வந்தார். விமான நிலையத்திலிருந்து மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கன்னந்தானம், கேரள முதல்வர்....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 15:05:03

மதச்சார்பற்ற அணிகள் ஒன்று சேரும் காலகட்டத்தில் உள்ளோம்: புதுவை முதல்வர்

மதச்சார்பற்ற அணிகள் ஒன்று சேரும் காலகட்டத்தில் உள்ளோம்: புதுவை முதல்வர்

புதுச்சேரி, ஆக. 13- கலைஞரின் உருவப்பட திறப்பு மற்றும் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி புதுவை சற்குரு ஓட்ட லில் நேற்று நடந்தது. நிகழ்ச் சிக்கு வடக்கு மாநில அமைப் பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலைஞரின் உருவப்படத்தை முதல்அமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்து மலர்தூவி மரி யாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது: உலக தமிழர்களின் பாதுகா வலராக திகழ்ந்தவர் கலைஞர். அவரது வாழ்வு பல போராட் டங்கள்....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 15:05:03

நீட் தேர்வு: டில்லி ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறை ஆயுதம் -பேராசிரியர்.மு.நாகநாதன்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அதிகாரக்குவிப்பு, ஆணவம், குழப்பங்கள் ஒரு சேர இருப்பதுதான் இன்றைய பாஜக ஒன்றிய அரசு.

500,1000, உயர்மதிப்பு ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, ஏழை எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வில் பட்ட துயர்களை எளிதாக மறந்து விட முடியுமா?

எந்த நாட்டிலாவது வங்கிகளின் வாயில்களில், சாலைகளில் நீண்ட வரிசையில் மக்கள் நின்று 100 கணக்கில் மக்கள் மடிந்த கொடுமையைக் கண்டதுண்டா?

சரக்கு சேவை வரி அறிமுகப்படுத்தப் பட்டபோது உரிய கலந்துரையாடல் களை,மாநில முதல்வர்களிடம், வணிகர் களிடம், வரி வல்லுநர்களிடம் நடத்திய துண்டா? இதன் காரணமாக பொருளாதாரமே நொறுங்கி வருவதை அறிந்த பிறகும் பிரதமரும் ஒன்றிய அரசும்  கவலைப்பட்டு நல்ல தீர்வுகளை எட்டாமல் இருப்பது எவ்வளவு கொடுமை!

நீட் தேர்வு மாநிலங்களின் உரிமையை பறித்து, சமூகநீதியை புறந்தள்ளும் போக்கினை எந்த கூட்டாட்சி நாட்டிலாவது காணமுடியுமா? புதுடில்லியின்" உண்மையான, நிரந்தர அதிகாரிகள்"- காங்கிரசு ஆட்சியின் போதும், இன்றைய பாஜக ஆட்சியின் போதும்,  ஒரே கொள்கையைதான் கடை பிடித்தார்கள்.

யார் அந்த உண்மையான ஆட்சியா ளர்கள் என்பதை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனின் வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தாலே அறிந்து கொள்ளமுடியும். ஏழைக் குடும்பத்தில் பல உடன்பிறப்பு களோடு பிறந்தவர்.பள்ளி செல்வதற்குப் பல கிலோ மீட்டர்கள் நடந்து சென்றவர்.

இத்தகைய பின்னணியோடு படித்து, இறுதி பள்ளித்தேர்வில் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றார்.

திருவாங்கூர் சமஸ்தானம் நடத்திய கல்லூரியில் அரசியல் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.

மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் பெற்று தங்க மெடல் பெற்றார். சமஸ்தானம் நடத்திய கல்லூரியில் ஒரு விதியிருந்தது.

அவ்விதியின்படி, கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று தங்க மெடல் பெறும் மாணவர்க்கு அக்கல்லூரியிலேயே ஆசி ரியர் பதவி வழங்கப்படும்.

அப்போது சமஸ்தானத்தின் ஆலோச கராக சர்.சி.பி.ராமசாமி அய்யர் பணியாற்றி வந்தார்.

திரு.கே.ஆர்.நாராயணன் தனது தகுதியைக் காட்டி கல்லூரியில் விரிவுரை யாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தார். நேரில் கே.ஆர்.நாரயணனை அழைத்த சர்.சி.பி. ராமசாமி அய்யர், நீ தலித் என்பதால் ஆசிரியர் பதவி வழங்க முடியாது என்று அவமதித்தார். எழுத்தர் பதவியில் சேர்ந்து விடு என்றார்.

மனம் தளராத கே.ஆர்.நாராயணன் அன்றைய இந்து நாளிதழில் ஆக்ஸ் போர்டு பல் கலைக்கழகமும், டாட்டா கல்வி அறக் கட்டளை நிறுவனமும் இணைந்து கொடுத்த விளம்பரத்தைப் பார்த்தார். ஊர்ப்புறத்திலிருந்து நாள்தோறும் 7கிலோமீட்டர் நடந்துதான் கல்லூரி படிப்பையும் தொடர்ந்தார்.அப்போது எதிர் வீட்டுக்காரர் ஆங்கில நாளிதழான இந்து ஏட்டினை வாங்கிவரச் சொல்வார்.

நகரில் மட்டும் இந்து நாளிதழ் விற்கப் படும்.  கல்லூரியிலிருந்து திரும்பி வரும் போது இந்து ஏட்டினைப் படித்து தனது அறிவையும், ஆங்கில மொழிப் புலமை யையும் வளர்த்துக் கொண்டார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்கான மனுவை தன் கையால் எழுதினார்.

அஞ்சல் செலவிற்கு மட்டுமே பணம் வைத்திருந்தார்.மனுசெய்வதற்கு அஞ்சல் அலுவலகத்தில் கசக்கி தூக்கி எறிந்த ஒரு தாளை எடுத்துதான் பயன்படுத்தினார்.

மும்பாயில் நடைபெற்ற நேர்முக தேர்வில், டாட்டா.

"சிறந்த கல்வித் தகுதியையும், திறமை யையும் பெற்ற நீங்கள் கசங்கிய தாளில் மனு செய்யலாமா?என்று கேட்டார்.புதிய தாள் வாங்குவதற்குக் கூட என்னிடம் பணம் இல்லை என்றார் கே.ஆர்.என்.

தேர்ந்தெடுக்கப்பட்டால்,கடும் குளிரை தாங்கக் கூடிய ஆடைகள் இல்லை என்றும் கூறினார். டாட்டா முழுப் பொறுப்பையும் ஏற்றார். இங்கிலாந்தில் புகழ்பெற்ற பேராசிரியர் ஹெரால்டு லாஸ்கியிடம் அரசியல் பாடங் களைக் கற்றார் கே.ஆர்.என்.லாஸ்கி யால் சிறந்த மாணவர் என்று பாராட்டப்பட்டார்.

நேரு இங்கிலாந்தில் மாணவராகயிருக் கும் போது பல முறை லாஸ்கியை சந்திப்பதில் பேரார்வம் காட்டியவர்.

மேற்படிப்பை முடித்து இங்கிலாந்தி லிருந்து இந்தியா திரும்பிய நேரத்தில் கே.ஆர்.நாரா யணனை நேரடியாக இந்திய ஆட்சிப் பணியில் அமர்த்துமாறு பேராசிரியர் ஹெரால்டு லாஸ்கி பிரதமர் நேருவிற்கு கைப்பட பரிந்துரை மடல் எழுதினார்.

இம்மடலுடன் பிரதமர் அலுவலகத் திற்கு சென்று கே.ஆர்.நாராயணனை அங்கிருந்த "நந்திகள்" நேருவைப் பார்க்க அனுமதிக்க வில்லை.

லாஸ்கியின் மடலை சிறிது நேரத்திற்கு பிறகு பார்த்த பிரதமர் நேரு பதறிப் போனார்.

கே.ஆர்.நாரயணனை தேடிச்சென்று பின்பு நேருவிடம் உயர் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். ஆட்சிப் பணி பதவியில் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் குடியரசுத்தலைவராக உயர்ந்தார்.

கே.ஆர்.என்.ஒன்றிய அரசில் சிறிது காலம் திட்ட அமைச்சராக பணியாற்றிய போது அவர் பெற்ற பட்டறிவை சுமித் சக்கரவர்த்தி என்ற  ஏட்டாளரிடம் பதிவு செய்ததை  ளிறீஷீஷீளீ 2005- ழிஷீஸ்மீனீதீமீக்ஷீ 21-ஏடு வெளியிட்டது.

"சாதாரண மக்கள் அனைவருக்கும் கல்வி அளித்துவிட்டால், அவர்கள் அரசிடம் எவ்வாறு நடந்து கொள்ளவார்கள் என்ற ஒரு அச்சம் இருப்பதாக தன்னிடம் திட்டத்தை உருவாக்குபவர்கள் ஒரு சந்தேகத்தை தெரிவித் தார்கள்". என்று கேட்டார்.ஆர்.என்.

இப்போது புரிகிறதா டில்லி ஏகாதி பத்திய உயர் ஜாதியினர் நீதித்துறையில் இருந்தாலும், நிர்வாகத்துறையில் இருந்தாலும் அனிதாக் களை மருத்துவ துறையில் அனுமதிப்பார்களா?

புதுடில்லியில் அதிகாரங்கள் குவிக் கப்பட்டால் ஏழை எளியோர் அடிமை களாகத்தான் இருப்பார்கள்.  கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று! மாநிலங்களுக்கு முழுசுயாட்சியை வழங்கு!! இவை வெற்று முழக்கங்களாக அமை யாமல் இருப்பதற்கு அரசியல் களத்தில் தளத்தில் தொடர் மக்கள் போராட்டங்கள் நடத்துவதே  நிரந்தர தீர்வாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner