முன்பு அடுத்து Page:

எதிர்க்கட்சியினர் எழுப்பவுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை சோனியா …

 எதிர்க்கட்சியினர் எழுப்பவுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை சோனியா குற்றச்சாட்டு

புதுடில்லி, நவ.21 நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை உரிய நேரத்தில் தொடங்காம லும், எதிர்க்கட்சியினர் எழுப்ப வுள்ள பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அர சுக்கு துணிச்சல் இல்லை என்று காங்கிரசு தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியினர் எழுப்பவுள்ள பிரச் சினைகளை எதிர்கொள்வதற்கு பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை; எனவே, அற்ப கார ணங்களுக்காக, கூட்டத் தொடரை மத்திய அரசு....... மேலும்

21 நவம்பர் 2017 16:54:04

பெங்களூருவில் ஒரே பைக்கில் 58 ராணுவ வீரர்கள் பயணம் செய்து கின்னஸ் சாதனை

 பெங்களூருவில் ஒரே பைக்கில் 58 ராணுவ வீரர்கள் பயணம் செய்து கின்னஸ் சாதனை

பெங்களூரு, நவ.21  இந்திய ராணுவ வீரர்கள்  58 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில்  1.2 கிமீ தூரத்தை 2.14 நிமிடத்தில் கடந்து கின்னஸ் சாதனை நிகழ்த்தினர். பெங்களூருவில் உள்ள எலகங்கா விமானப்படை தளத்தில் மோட்டார் சைக்கிளில் ஒரே நேரத்தில் அதிக பேர் பயணம் செய்யும் சாதனை நேற்று நிகழ்த்தப்பட்டது. ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் இந்த உலக சாதனையை 2.14 நிமிடத்தில் நடத்தி கின்னஸ் உலக சாதனை படைத்தனர். கின்னஸ், லிம்கா அதிகாரிகள் முன்னிலையில்....... மேலும்

21 நவம்பர் 2017 16:44:04

தீபிகா தலைக்கு ரூ.10 கோடியாம்: ‘பத்மாவதி’ பட வெளியீடு தள்ளிவைப்பு

   தீபிகா தலைக்கு ரூ.10 கோடியாம்: ‘பத்மாவதி’ பட வெளியீடு தள்ளிவைப்பு

மும்பை, நவ.21 'ராஜபுத்ர சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ள, பத்மாவதி படத்தில் நடித்த தீபிகா படுகோனே, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைகளுக்கு, 10 கோடி ரூபாய் தரப்படும்' என, அரியானா மாநில, பா.ஜ.க., தலை வர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையே, படத்தின் ரிலீஸ் தேதி, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலியின், பத்மாவதி திரைப்படத்தில், வரலாற்று நிகழ்வுகள், தவறாக காட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி,....... மேலும்

21 நவம்பர் 2017 16:26:04

புளூ வேல் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

புளூ வேல் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

புதுடில்லி, நவ.21  புளூ வேல் என்ற இணையதள விளை யாட்டு குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலத் தலைமைச் செயலா ளர்களுக்கும் அறிவுறுத்தல் தாக்கீது அனுப்பப்படவுள்ளது. புளூ வேல் விளையாட்டால் மாணவர்களும், இளைஞர்களும் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்ததை அடுத்து, இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர்....... மேலும்

21 நவம்பர் 2017 15:42:03

எக்காரணம் கொண்டும் மதவாத கட்சியான பா.ஜ.க. கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது : முதல்வர் சி…

எக்காரணம் கொண்டும் மதவாத கட்சியான பா.ஜ.க.  கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது  :  முதல்வர் சித்தராமையா

பெங்களூரு, நவ.20  கரு நாடக காங்கிரசு சார்பில் முன் னாள் பிரதமர் இந்திரா காந்தி யின் பிறந்த நாள் விழா பெங் களூரு குயின்ஸ் சாலையிலுள்ள காங்கிரசு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் சித்தராமையா, மாநில காங் கிரசு தலைவர் பரமேசுவர் மற்றும் கட்சியின் தலைவர்கள், இந்திரா காந்தியின் உருவப் படத்திற்கு மலர்கள் தூவி மரி யாதை செலுத்தினர். இதை யடுத்து முதல்வர் சித்தராமையா பேசியதாவது: முன்னாள்....... மேலும்

20 நவம்பர் 2017 15:48:03

மோடி தலைமையிலான மூன்றாண்டு கால ஆட்சி அனைத்து விவகாரங்களிலும் தோல்வியே கண்டுள்ளது : லாலுபிரசாத்

மோடி தலைமையிலான மூன்றாண்டு கால ஆட்சி  அனைத்து விவகாரங்களிலும் தோல்வியே கண்டுள்ளது : லாலுபிரசாத்

பாட்னா, நவ.20  மூன்றாண்டு கால மோடி தலைமையிலான ஆட்சி அனைத்து விவகாரங்களிலும்  படுதோல்வியே கண்டுள்ளது என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் மற்றும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில், பத்திரிகையாளர்களை சந்தித்த லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது, 2014 ஆண் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மோடி, தான் அளித்த  வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட இதுவரை நிறைவேற்ற வில்லை. இவ்விவகாரத்தில் மக்களுக்கு ஏமாற்றமே....... மேலும்

20 நவம்பர் 2017 15:45:03

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பண பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது மன்மோகன் சிங் திட்டவட்…

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப்  பண பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது  மன்மோகன் சிங் திட்டவட்டம்

கொச்சி, நவ.19 பண மதிப் பிழப்பு நடவடிக்கையால், கருப்புப் பண பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று முன்னாள் பிரதமரும், காங் கிரஸ் கட்சியின் மூத்த தலை வருமான மன்மோகன் சிங் திட் டவட்டமாகத் தெரிவித்தார். கேரள மாநிலம், எர்ணா குளத்திலுள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாட லில் இதுகுறித்து அவர் பேசிய தாவது: பணமதிப்பிழப்பின் மூலம் கருப்புப் பண பிரச் சினைக்கு தீர்வு காண முடி யாது........ மேலும்

19 நவம்பர் 2017 15:48:03

பாஜக அரசின் `கருப்புச் சட்ட'த்துக்கு ராஜஸ்தானில் ஏடுகள் கடும் எதிர்ப்பு வெற்றிடமாக விடப்பட்ட தலையங்…

பாஜக அரசின் `கருப்புச் சட்ட'த்துக்கு ராஜஸ்தானில் ஏடுகள் கடும் எதிர்ப்பு  வெற்றிடமாக விடப்பட்ட தலையங்கப் பகுதி

ஜெய்ப்பூர், நவ.18 பணியில் உள்ள மற்றும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழி யர்கள், நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் குறித்த முறைகேடு புகார்கள் குறித்து உரிய அலுவலர்களின் ஒப்புதலின்றி செய்தி ஊடகங்கள் வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக அரசின் புதிய சட்டம் கூறுகிறது.ராஜஸ்தான் மாநில பாஜக அரசின் ஊடக சுதந்திரத்தை பறிக்கின்ற கொடுஞ்சட்டத்தைக் கண்டித்து நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.இதனிடையே,....... மேலும்

18 நவம்பர் 2017 16:50:04

பா.ஜ.க. ஆளும் மகாராஷ்டிராவில் இந்தாண்டில் 814 விவசாயிகள் தற்கொலை

பா.ஜ.க. ஆளும் மகாராஷ்டிராவில் இந்தாண்டில் 814 விவசாயிகள் தற்கொலை

மராத்வாடா, நவ.18 மராத்வாடா பகுதியில் இந்த ஆண்டு மட்டும் தற் கொலை செய்துக் கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 800அய் தாண்டியது. கடன் தொல்லை தாங்காமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது மகாராஷ்டிராவில் அதிகமாகி உள்ளது.   மராத்வாடா பகுதி என அழைக்கப்படும் அவுரங்காபாத் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தற்கொலை செய்து கொண் டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை அதிக மாக உள்ளது.   இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த திங்கட்கிழமை வரை....... மேலும்

18 நவம்பர் 2017 15:39:03

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க, சோனியா காந்தி பெருந்தன்மையுடன் கருணை காட…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க, சோனியா காந்தி பெருந்தன்மையுடன் கருணை காட்ட வேண்டும்  நீதிபதி கே.டி.தாமஸ் சோனியாவுக்கு கடிதம்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க குடியரசுத் தலைவருக்கு சோனியாகாந்தி கடிதம் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டு, நீதிபதி கே.டி.தாமஸ் சோனியா காந்திக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அதுகுறித்த விவரம் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டில் நேற்று (16.11.2017) வெளியானது. அதன் விவரம் வருமாறு: ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு தாராள மனதுடன் கருணை காட்ட வேண்டும் என்று சோனியா காந்தியிடம் அவ்வழக்கில் தண்டனை அளித்த பணியிலிருந்து ஓய்வு பெற்ற....... மேலும்

17 நவம்பர் 2017 16:35:04

கிருஷ்ணா நதியில் பக்தர்கள் 18 பேர் பரிதாபச் சாவு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருமலை, நவ.13  ஆந்திரா வில் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து 18 சுற்றுலா பயணிகள் பக்தர்கள் இறந்தனர். 7 பேரை காணவில்லை.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோலை சேர்ந்த 38 பேர், வாக்கர் கிளப் சார்பில் கிருஷ்ணா மாவட்டம், இப்ராகிம்பட்டணத்தில் உள்ள கிருஷ்ணா நதியில் ஆரத்தி எடுப்பதை காண நேற்று சென்றனர். அப்போது, ஆந்திர மாநில சுற்றுலாத்துறையை சேர்ந்த அனைத்து படகுகளும் நிரம்பியதால், தனியார் படகில் ஏறி சென்றனர். மாலை 6 மணி யளவில் இப்ராகிம்பட்டணம் நோக்கி படகு சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்ற நிலையில் படகு திடீ ரென தலைகீழாக கவிழ்ந்தது.

அப்போது, படகில் இருந்த 38 பேரும் ஆற்றில் விழுந்தனர். தங்களை காப்பாற்றும்படி அலறினர். பயணிகளின் சத்தம் கேட்டு, கரையோரம் இருந்த பொதுமக்கள் செய்வது அறி யாது திகைத்து கூச்சலிட்டனர். அப்போது, அங்கு ஏற்கனவே தயாராக இருந்த நீச்சல் வீரர் களும், பொதுமக்களும் அவர் களை காப்பாற்ற முயன்றனர். கிருஷ்ணா மாவட்ட காவல் துறையினர் தீயணைப்பு படை வீரர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மாலை 6.30 மணியளவில் 13 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். 18 பேர் சடலங்களாக மீட்கப்பட் டனர். 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. இந் நிலையில், தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 30 பேர் கொண்ட 2 குழுவும், மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 45 பேரும், தீயணைப்பு படை வீரர்கள் 60 பேர் கொண்ட குழுவினர் 12 படகுகள் மூலம் காணாமல் போன 7 பேரை தேடி வருகின்றனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner