முன்பு அடுத்து Page:

‘காக்கா’ பிடிக்கிறதா பா.ஜ.க? பிரபலங்களிடம் ஆதரவு திரட்டும் நடவடிக்கை மாயாவதி விமர்சனம்

   ‘காக்கா’ பிடிக்கிறதா பா.ஜ.க?  பிரபலங்களிடம் ஆதரவு திரட்டும் நடவடிக்கை  மாயாவதி விமர்சனம்

லக்னோ, ஜூன் 20 எதிர்வரும் மக்களவைத் தேர்தலை ஒட்டி பல்வேறு முக்கியப் பிரமுகர் களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வரும் பாஜகவின் நடவடிக் கையை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். இத்தகைய சந்திப்புகள் வெறும் நிழற்படம் எடுத்துக் கொள்வ தற்கான வாய்ப்புகளை வேண்டு மானால் உருவாக்குமே தவிர வேறு எந்த பலனையும் அளிக் காது என்றும் அவர் கூறியுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப்....... மேலும்

20 ஜூன் 2018 16:10:04

குஜராத்தில் அரங்கேறிய தீண்டாமைக் கொடுமை குதிரையில் வந்த தாழ்த்தப்பட்ட மணமகனை கீழே இறக்கிவிட்ட ஜாதி…

குஜராத்தில் அரங்கேறிய தீண்டாமைக் கொடுமை  குதிரையில் வந்த தாழ்த்தப்பட்ட மணமகனை  கீழே இறக்கிவிட்ட ஜாதி வெறியர்கள்!

  அகமதாபாத், ஜூன் 20 திருமணத்தன்று மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது, குதிரை யில் பவனி வந்த தாழ்த்தப்பட்ட மணமகனை, சாதி வெறியர்கள் கீழே இறக்கி விட்டு அவமானப் படுத்திய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பர்சா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் சோலங்கி (27). இவர் அங்குள்ள பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வர்ஷா என்பவருக்கும் திரு மணம் நிச்சயிக்கப்பட்டது. சுமார் 2 லட்சம்....... மேலும்

20 ஜூன் 2018 16:10:04

டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைத்தால் லாரி போராட்டம் திரும்பப் பெற வாய்ப்பு

சென்னை, ஜூன் 20- தமிழகம் உள்பட நாடு முழுவதும் செவ் வாய்க்கிழமை 2-ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இந்நிலையில், டீசலுக்கு மாநில அரசுகள் விதித்து வரும் வரியை குறைத் தால் போராட்டத்தை திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் கள் சம்மேளனம் தெரிவித்தது. நாடு முழுவதும் லாரி உரி மையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தை திங்கள்கிழமை தொடங் கினர். டீசல் விலை உயர்வைக்....... மேலும்

20 ஜூன் 2018 14:49:02

சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை ஆளுநர்களைக் கொண்டு பலவீனப்படுத்தும் மோடி அரசு புதுடில்லி, ஜூன் 19- அரசமைப்புச் சட்டத்தின் முது கெலும்பாக இருக்கும் கூட்டாட்சித் தத்துவத்தை, மத்திய  மாநில அரசுகளின் உறவுகளை மத்திய அரசு அழித்தொழித்திட மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். தலைநகர் புதுடில்லியில் மக்களால் ஜனநாயகப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டில்லி ஆம் ஆத்மி கட்சியின் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் துணை ஆளுநரைக்....... மேலும்

19 ஜூன் 2018 15:52:03

விலை குறைப்பால் மதிப்புக் குறைகிறதாம் அய்போன்களுக்கு இனி தள்ளுபடி கிடையாது

   விலை குறைப்பால் மதிப்புக் குறைகிறதாம்  அய்போன்களுக்கு இனி தள்ளுபடி கிடையாது

புதுடில்லி, ஜூன் 19- இந்தியா வில், அய்போன் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் தள்ளுபடியில் விற்கப்படுவதை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அய்போன்களுக்கு இந்தியச் சந்தையில் மவுசு அதிகம். பல நாடுகளில் அய்போன் விற்பனை சரிந்தபோதும், இந்தியாவில் விற்பனை பாதிக்கவில்லை.  இதனால் இந்தியச் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தத் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் இந்தி யாவுக்கான தலைவராக மைக் கேல்  கோலாம்ப் நியமிக்கப்பட் டார். இதன்பிறகு, இந்தியாவில் தனது தயாரிப்புகளை விற்ப....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

மத்திய பா.ஜ.க. அரசு கூட்டாட்சி அமைப்பை பலவீனமடையச் செய்கிறது

நிதி ஆயோக் கூட்டத்தில்  எதிர்க்கட்சி முதல்வர்கள் பேச்சு டில்லி, ஜூன் 19 மத்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சியைப் பின்பற்ற வேண்டும், மாநில விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது என்று நிதி ஆயோக் கூட்டத்தில் மத்திய அரசு பாஜக ஆளாத மாநிலங்களின் முதல்வர்கள் கடுமையாக விமர்சித்தனர். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், மத்திய திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு அதற்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பு நிறு வப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும்....... மேலும்

19 ஜூன் 2018 15:32:03

ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வு விண்ணப்ப தேதி ரத்து

டில்லி, ஜூன் 19 மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 16.6.2018 அன்று இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் தவிர மற்ற அனைத்து மாநில மொழிகளில் தேர்வு எழுதமுடியாது என்று உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கடுமையான கண்டன அறிக்கை வெளியிட்டார். அதே போல் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழியும் சமூகவலைதளத்தில் தனது கண்டனத்தைப் பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து சிபிஎஸ்இ வெளியிட்ட....... மேலும்

19 ஜூன் 2018 15:19:03

கோமாதாவுக்கு கதை சொல்ல 211 பார்ப்பனர்கள் நியமனமாம்!

கோமாதாவுக்கு கதை சொல்ல 211 பார்ப்பனர்கள் நியமனமாம்!

ராஜஸ்தான் அரசின் பார்ப்பனத்தனம் ஜெய்ப்பூர், ஜூன் 19 ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. வசுந்தரா முதல்வராக உள்ளார். இவ்வாண்டின் இறுதியில் ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. "கோமாதாவை போற்றுவோம்" என்ற முழக்கத்தை பா.ஜ.க. எழுப்பி வருகிறது. இந்நிலையில் பசுவின் அருமைகளையும், பெருமைகளையும் தீவிரமாக பரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாம்; முதல் கட்டமாக சிகார் மாவட்டத்தில் "கோமாதா"வுக்கு கதை சொல்ல 211 அந்தணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனராம். அவர்களுக்கு ஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களது பணி,....... மேலும்

19 ஜூன் 2018 15:18:03

தமிழ்நாட்டு தலைவர்களின் எதிர்ப்பின் எதிரொலி

உத்தரவினைப் பின் வாங்கியது மத்திய அரசின் கல்வித் துறை டில்லி, ஜூன் 19 தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் ரத்து உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டாராம். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழில் எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத மொழிகளில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்றும் வெளியான தகவல்களைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் கேந்திரிய....... மேலும்

19 ஜூன் 2018 14:53:02

புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் தர வேண்டுமானால் மருத்துவ வசதியை செய்து தாருங்கள்: பால்கர் கிராம மக…

புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் தர வேண்டுமானால் மருத்துவ வசதியை செய்து தாருங்கள்: பால்கர் கிராம மக்கள் கோரிக்கை

புதுடில்லி, ஜூன் 18- புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் வழங்க வேண்டுமென்றால் தங்களுக்கு மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ், சோலார் தெரு விளக்குகள்  அமைத்து தர வேண்டும் என்று பால்கர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மும்பை--அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவையை வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண் டும் என்று அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டம்  நிறை வேற்றப்பட்டால் மும்பையில் இருந்து அகமதாபாத் செல்வதற் கான பயண நேரமானது....... மேலும்

18 ஜூன் 2018 15:44:03

178 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கவுஹாத்தி, நவ. 11 சலவை சோப்பு, ஷேவிங் கிரீம்  உட்பட 178 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து18 சதவீதமாக குறைக்கப்பட்டுள் ளது.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத் தப்பட்டது. இதன் மூலம் ஏற்கெனவே நடை முறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படை யில் விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி 5, 12, 18, 28என நான்கு விகிதங்களில் வசூலிக் கப்படுகிறது; சில சொகுசுப் பொருட்களுக்கு கூடுதல் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பால் உற்பத்தி யாளர்கள், தொழில் முனை வோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள் ளனர்.

தீவிரமாக நடந்து வரும் எதிர்ப்புப் போராட்டங்கள் மற் றும் குஜராத் தேர்தல் உள்ளிட்ட வற்றின் பின்னணியில் இதைத் தொடர்ந்து சிறு தொழில்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகி தம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரவைக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத் தது.இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-ஆவது கூட்டம் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் வெள்ளியன்று நடைபெற்றது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங் கேற்றனர்.

கூட்டத்திற்குப் பின், பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறியதாவது: பல்வேறு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்ற அமைச்சரவை குழுவின் பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக் கொண்டது.

227 பொருட்கள் தற்போது 28 சதவிகித வரி விதிப்பின் கீழ் வருகின்றன. இதில் 62 பொருட் கள் மட்டுமே இருக்க வேண்டும் என அமைச்சரவைக் குழுபரிந் துரைத்தது. ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில்இந்த எண்ணிக்கையை மேலும் குறைத்துள்ளது.

தற்போது, 28 சதவீத வரை யறைக்குள் 50 பொருட்கள் மட்டுமே வருகின்றன.

ஷேவிங் கிரீம், ஷேவிங் லோஷன், பற்பசை, ஷாம்பூ, அழகுசாதனப் பொருட்கள், முக அழகு கிரீம்,சுவிங்கம், சாக்லெட் உள்ளிட்ட பொருட்களுக்கு தற் போது விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

டிராக்டர் மற்றும் அதன் உதிரி பாகங்கள், திரைப்படம் தயாரிப்பு சாதனங்கள் உள்ளிட்ட வற்றிக்கும் வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

விளைபொருட்களை சேமித்து வைக்கும் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளுக்கான வரி 12 சதவீதமாக குறைக்கப்படு கிறது.

எனினும் வாஷிங்மெ ஷின், ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்டவற்றிற்கு தற்போ துள்ள 28 சதவீத வரியே தொட ரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner