முன்பு அடுத்து Page:

கோவா, மணிப்பூரில் ஆளுநரிடம் காங்கிரசு மனு: ஆட்சி அமைக்க உரிமை கோரியது

கோவா, மணிப்பூரில் ஆளுநரிடம் காங்கிரசு மனு: ஆட்சி அமைக்க உரிமை கோரியது

பனாஜி, மே 20 கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டப் பேரவைகளில் தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அந்தந்த மாநில ஆளுநரிடம் காங்கிரசு கட்சி கடிதம் அளித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கருநாடக சட்டப்பேரவைத் தேர்த லில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு அந்த மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையே, முன்மாதிரியாகக் கொண்டு மணிப்பூரிலும், கோவா விலும் காங்கிரசு கட்சி....... மேலும்

20 மே 2018 16:49:04

எடியூரப்பா பதவி விலகல் பாரதீய ஜனதாவுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி

எடியூரப்பா பதவி விலகல்  பாரதீய ஜனதாவுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி

பெங்களூரு, மே20 கருநாடக சட்டமன்றத்தில் நேற்று (19.5.2018) மாலை 4 மணிக்கு  நம்பிக்கை வாக் கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், சரியாக 4 மணிக்கு தனது பதவியை விட்டு விலகி சபையில் இருந்து வெளியேறினார் எடியூரப்பா. இது பாரதீய ஜனதா கட்சிக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 11 மணி வரை 100 சதவிகிதம் வெற்றி பெறுவேன் என்று மீண்டும் மீண்டும்  கூறிவந்த  எடியூரப்பா பதவி....... மேலும்

20 மே 2018 16:14:04

கருநாடகா காவிமயமாகாது

கருநாடகா காவிமயமாகாது

- பிரகாஷ் ராஜ் பெங்களூரு, மே 20 கருநாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்ததை கிண்டல் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மேட்ச் தொடங் கும் முன்பே முடிந்துவிட்டது என்று தெரிவித் துள்ளார். கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகத் தீவிரமாக சுற்றுப் பயணம் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் செய்தார். பாஜக ஆட்சியைப் பறிகொடுத்தது குறித்தும், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்தும் அவர் ட்விட்டரில்  கருத்து....... மேலும்

20 மே 2018 16:14:04

எடியூரப்பாவின் பதவி விலகல் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : சித்தராமையா பேட்டி

எடியூரப்பாவின் பதவி விலகல் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : சித்தராமையா பேட்டி

பெங்களூரு, மே 20 முதல்வர்  பதவியை எடியூரப்பா பதவி விலகல் செய்த பிறகு சித்த ராமையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:- கருநாடக அரசியலில் இது வரலாற்று நிகழ்வு. சட்டசபை யில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் எடியூரப்பா முதல்-வர் பதவியை விலகல் செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. அரசியல் சாசனத்திற்கு கிடைத்த வெற்றி. பெரும்பான்மை இல்லை என்று தெரிந்த போதும் ஆளுநர் வஜூபாய் வாலா, பாரதீய ஜனதா....... மேலும்

20 மே 2018 16:14:04

இந்திய பிரதமர்களும் அவர்களின் கல்வித் தகுதியும்

1.  ஜவகர்லால் நேரு முதுகலை பொருளாதாரம் மற்றும் சட்டம் - கேம்பிரிட்ஸ் லண்டன் 2. லால்பகதூர் சாஸ்திரி இளங்கலை சமஸ்கிருதம் பொருளா தாரம் - பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 3. இந்திரா காந்தி வரலாறு மற்றும் அரசியலில் முதுகலை - ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 4. மொரார்ஜி தேசாய் இளங்கலை பொருளாதாரம் புள்ளி யியல் - மும்பை பல்கலைக்கழகம் 5. சவுத்ரி சரண்சிங் முதுகலை சட்டம் - ஆக்ரா பல்கலைக் கழகம் 6. ராஜீவ்காந்தி இளங்கலை பொருளாதாரம், விமான தொழில் நுட்பம் மற்றும் பைலட் பட்டயப்படிப்பு 7........ மேலும்

19 மே 2018 17:37:05

நீட் -ஏன் அபத்தம்?

நீட்  -ஏன் அபத்தம்?

இந்த ஆண்டு நீட் தமிழ் வழி வினாத்தாளில் ஒரு கேள்வி cheetah என்பதற்கு இணையான தமிழ் சொல்லாக சீத்தா என்று கொடுக்கப் பட்டுள்ளது. Heart of cheetah - சீத்தாவின் இதயம் Brain of cheetah - சீத்தாவின் மூளை இப்படி 50 க்கும் மேற்பட்ட இடங்களில் தவறுகள் இருப்பது குறிப்பிடத் தக்கது. மிகக் கேவலமான முறையில் கேள்வித்தாளை தயார்செய்து, அதில் தேர்வானவர்கள் தான் தகுதியானவர்கள் என பொய்களுக்கு மேல் பொய்களை சொல்லி ஏமாற்றி....... மேலும்

19 மே 2018 17:37:05

இவர்தான் கருநாடக முதல் அமைச்சர் எடியூரப்பா!

இவர்தான் கருநாடக முதல் அமைச்சர் எடியூரப்பா!

எடியூரப்பா யார்? மகன் -  மருமகன்களுக்கு கோடிக்கணக் கான அரசு நிலங்களை ஒதுக்கியது, மத்திய அரசு கையிலெடுத்து நடத்த வேண்டிய மாபெரும் கனிமவள சுரங்கங்களை தனியார் சட்டவிரோதமாக எடுக்க ஆதரவு கொடுத்தது, அதன் மூலம் ரொக்கம் மற்றும் நிலம், நகைகள், பங்குப் பத்திரம், என ரூ.25ஆயிரம் கோடிகளுக்கு மேல் பெற்றது, இவை அனைத்தும் லோக் ஆயுக்தா விசாரணையில் சான்றுகளோடு ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலில் உள்ளது. இதனால் ஆட்சியை இழந்து....... மேலும்

19 மே 2018 17:16:05

பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிவசேனை விமர்சனம்

கருநாடகத்தில் ஆட்சி  அமைப்பு : அரசமைப்புச் சட்ட விதிகளின்படி நடைபெறவில்லை அரசியல் விதிகளின்படி நடைபெற்றுள்ளது மும்பை, மே 19 கருநா டகத்தில் ஆட்சி அமைக்க எடி யூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தது, அரசமைப்புச் சட்ட விதிகளின்படி நடைபெற வில்லை. அரசியல் விதிகளின் படி நடைபெற்றுள்ளது. மத்தியிலும் மகாராஷ்டிரத் திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை, அண்மைக் காலமாக பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக சாடி....... மேலும்

19 மே 2018 15:50:03

கேரளாவில் புதிய தொழிலாளர் கொள்கை இனி குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600

கேரளாவில் புதிய தொழிலாளர் கொள்கை  இனி குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600

திருவனந்தபுரம், மே 18 சமீபத்தில் கேரள அரசு தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகை யில், தொழிலாளர் நலத் திட்டங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. அதற்கு கேரள அமைச்சரவை நேற்று (17.5.2018) ஒப்புதல் அளித்துள்ளது. அந்த புதிய திட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, தனிநபரின் ஒரு நாள் குறைந்தபட்ச வருவாயை ரூ.600 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கூலித்தொழிலாளிகள் உள்பட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் என....... மேலும்

18 மே 2018 16:30:04

மத்திய பாஜக அரசின் 15ஆவது நிதி ஆணையத்தின் புதிய பரிந்துரை அரசமைப்புக்கு எதிராகவும், மாநில சுயாட்சி…

 மத்திய பாஜக அரசின் 15ஆவது நிதி ஆணையத்தின் புதிய பரிந்துரை  அரசமைப்புக்கு எதிராகவும், மாநில சுயாட்சியை பாதிக்கச் செய்வதுமாக உள்ளதாக குற்றச்சாட்டு

பாஜக அல்லாத மாநிலங்களின் சார்பில் குடியரசுத் தலைவரிடம் கடிதம் புதுடில்லி, மே 18 புதுச்சேரி, டில்லி, மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநி லங்களில் பாஜக அல்லாத எதிர்க்கட்சி களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, டில்லி துணை முதல்வர் மற்றும் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களின்  நிதியமைச்சர்கள் இணைந்து  குடியரசுத் தலைவருக்கு மனு கொடுத் துள்ளனர். 15ஆவது நிதிக்குழு அளித்த புதிய பரிந்துரைகளின்படி....... மேலும்

18 மே 2018 16:30:04

புனித நதி கங்கையின் யோக்கியதை இதுதான்! கங்கையில் பிணத்தை போடுவதால் மாசு கேடுகள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, மே 17 இந்து மத வழக்கத்தின்படி, இறந்த பிறகு இறந்தவர்களின் உடலை கங்கையில் போட்டுவிட்டால் அப்படியே சொர்க்கத்துக்கு சென்றுவிடுவார்கள் என்று கூறிக்கொண்டு, பிணங்களை கங்கையாற்றில் விட்டுவிட்டு செல் கின்ற மூடத்தனமான பழக்கம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அதனால், ஏராளமான பிணங்கள் கங்கை யாற்றில் மிதந்துகொண்டு செல்கின்றன. கங்கையாற்றில் படகு சவாரி செய் யும் சிறுவர்கள், இளைஞர்கள் கங் கையாற்றில் விடப்பட்டு மிதந்து கொண்டிருக்கும் பிணங்களை தங்களின் படகு துடுப்புகளால் ஒதுக்கிவிட்டு செல்வார்கள். அப்படி மிதந்து செல்லும் பிணங்களை நாய்கள், பிணத்தை தின்னும் கழுகுகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் கடித்து குதறிவிடுகின்ற நிலையும் ஏற்பட்டு, பிணங்களின் உடல்கள் சிதைந்து, பிண வாடையுடன் மாசு கேடுகள் பெருமளவில் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிணங்களை வீசுவ தால் ஏற்படுகின்ற மாசு கேட்டிலிருந்து கங்கையை பாதுகாத்திட, ஜல சமாதி யிலிருந்து, பூமி சமாதிக்காக (இடுகாடு) பிணங்களை அடக்கம் செய்ய நிலம் ஒதுக்க வேண்டும் எனும் கோரிக்கையை அகில பாரதிய அகாரா பரிஷத் விடுத் துள்ளது.

2019ஆம் ஆண்டில் நடைபெற உள்ள அர்த் கும்ப மேளாவில் சாமியார்கள் ஏராளமான எண்ணிக்கையில் அரித்துவார் பகுதியில் உள்ள கங்கையாற்றுக்கு வருகை தருகிறார்கள். அப்போது ஏராளமான பிணங்களை Ôஜல சமாதிÕ என்கிற பெயரில் கங்கையாற்றில் போட்டுவிடுவார்கள்.

இதுபோன்றபழைமையானபழக் கத்தை மாற்றி, கங்கையை பாதுகாப் பதற்கான நடவடிக்கையை அகில பாரதிய அகாரா பரிஷத் எடுத்து வருகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு கும்ப மேளாவுக்கு முன்பும், அதேபோல் 2009-2010 ஆம் ஆண்டு கும்ப மேளாவுக்கு முன்பாகவும் அகாரா பரிஷத் அமைப்பின் சார்பில் அப்போதைய முதல்வர் அகி லேஷிடம் கங்கையில் பிணங்களை போடாமல் தடுத்திடும்வண்ணம், பிணங்களைப் புதைப்பதற்கான இடு காடு அமைக்கக் கோரப்பட்டது. ஆனால், பலனேதும் ஏற்படவில்லை.

அண்மையில் 1.5.2017 அன்று கூடிய அகாரா பரிஷத் அமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இடு காடு அமைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிணங்களை பூ சமாதி (இடுகாட்டில் புதைப்பது) அல்லது ஜல சமாதி (பிணத்தை கங்கையாற்றின் தண்ணீரில் விட்டுவிடுவது) என்கிற நீண்ட காலமாக சாமியார்களின் சடங்காக இருந்து வருகிறது. கங்கையாற்றில் தண்ணீர் அளவு வெகுவாக குறைந்து வருகின்ற நிலையில், பிணங்களை அதில் வீசாமல், சாமியார்கள் பிணங்களை புதைப்பதற்காக இடுகாடு அமைக்க உத்தரப்பிரதேச மாநில அரசு நிலத்தை ஒதுக்கித் தரவேண்டும் என்றும், அதன் மூலமாகவே கங்கையாற்றில் தண்ணீர் மாசுகேடுகளின்றிதூய்மையுடன்இருப் பதை உறுதி செய்ய முடியும் என் றும், நாடுமுழுவதும உள்ள மக்கள் கங்கையாற்றை தூய்மையுடன் பரா மரிக்கும் பணியில் ஒத்துழைப்பை அளிக்கவேண்டும்என்றும்அகாலி பரிஷத் அமைப்பின் சார்பில் ஆலோ சனைக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக அகாரா பரிஷத அமைப்பின் தலைவர் நரேந்திர கிரி கூறினார்.

அகாரா பரிஷத் கூட்டிய கூட்டத்தில் கோட்ட ஆணையர் ஆசீஷ் கோயல், அலகாபாத் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சலப் மாத்தூர் மற்றும் அகில பாரதிய அகாரா பரிஷத் அமைப்பினர் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நரேந்திரகிரி மேலும் கூறும்போது,

நாகா சாமியார்கள் அர்த் கும்ப மேளாவில் ஊர்வலமாக செல்லக்கூடிய பேஷ்வாய் வழித்தடங்களில் ஆக்கிர மிப்புகள் இல்லாமல் இருக்கவேண்டும். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக போக்குவரத்துக்காக தற்காலிக பேருந்து மற்றும் வாடகைக் கார் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட வேண்டும். விழா நடக்கின்ற பகுதிக்கு தொலைவிலேயே வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அகில பாரதிய அகாரா பரிஷத் அமைப்பின் செயலாளர் அரிகிரி, மகா நிர்வானி அகாரா செயலாளர் ரவீந்திர பூரி உள்பட பலரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner