முன்பு அடுத்து Page:

ஜோசப்பை உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்க வேண்டும்! நீதிபதி செலமேஸ்வர் மீண்டும் வலியுறுத்தல்

ஜோசப்பை உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்க வேண்டும்!  நீதிபதி செலமேஸ்வர் மீண்டும் வலியுறுத்தல்

புதுடில்லி, ஜூன் 24 -உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்பை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஜே. செலமேஸ்வர் வலி யுறுத்தியுள்ளார். மத்திய பாஜக அரசு நீதித் துறை நடவடிக்கைகளில் தலை யிட்டு அதிகாரம் செலுத்துவதாக வும், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மத்திய அரசுக்கு அடிபணிந்து நடந்து கொள்வதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் செலமேஸ்வர். உச்ச....... மேலும்

24 ஜூன் 2018 15:53:03

குற்றவியல் விசாரணை ஆதார் பயோமெட்ரிக் பயன்படுத்தப்படாது ஆதார் ஆணையம் தகவல்

குற்றவியல் விசாரணை  ஆதார் பயோமெட்ரிக் பயன்படுத்தப்படாது  ஆதார் ஆணையம் தகவல்

    புதுடில்லி, ஜூன் 24 ஆதார் அடையாள அட்டைக்காக மக்க ளிடம் அவர்களுடைய பயோ மெட்ரிக் தகவல்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஅய்டிஏஅய்) சேகரித்தது. அந்த தகவல்கள் குற்றவியல் விசார ணைக்காக பயன்படுத்தப்படுவ தாக தகவல்கள் வெளியானது. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் இயக்குநர் ஈஷ் குமார் குறிப்பிட்ட ஆதார் தக வல்கள் காவல்துறைக்கு விசார ணைக்காக கொடுக்கவேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இதற்கு பதில ளிக்கும் வகையில்....... மேலும்

24 ஜூன் 2018 15:53:03

பிரதமர் மோடியை சந்திக்க கேரள முதல்வர் பினராய்க்கு 4ஆம் முறையாக அனுமதி மறுப்பு

பிரதமர் மோடியை சந்திக்க  கேரள முதல்வர் பினராய்க்கு  4ஆம் முறையாக அனுமதி மறுப்பு

திருவனந்தபுரம், ஜூன் 24- பிர தமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பிய கேரள முதல்வர் பினராய் விஜ யனுக்கு 4ஆவது முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பிரனாய் விஜயன் தலைமையில் இடது முன்னணி அரசின் ஆட்சி உள்ளது. கடந்த பல வருடங் களாகவே கேரளாவில் கம்யூ னிஸ்ட் கட்சிகளுக்கும், பாஜக வுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இதன் கார ணமாக இரு கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கொல்....... மேலும்

24 ஜூன் 2018 15:34:03

சூரியனைப் போன்று நட்சத்திரத்தை சுற்றி வரும் புதிய கோள்: ஆமதாபாத் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சூரியனைப் போன்று நட்சத்திரத்தை  சுற்றி வரும் புதிய கோள்:  ஆமதாபாத் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆமதாபாத், ஜூன் 24- பால்வெளி மண்டலத்தில் சூரியனைப் போன்று நட்சத்திரத்தைச் சுற்றி வரும், புதிய கோள் ஒன்றை ஆமதாபாத் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் (இஸ்ரோ) வெளியிட்ட செய்தி: ஆமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சிக் கூடத் தைச் (பிஆர்எல்) சேர்ந்த பேராசிரியர் அபிஜித் சக்கரவர்த்தி தலை மையிலான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவினர் புதிய கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். சனிக் கிரக பாதைக்கு கீழும், நெப்டியூன் கிரகப் பாதைக்கு....... மேலும்

24 ஜூன் 2018 15:34:03

அமித்ஷாவுக்கு ராகுலின் 'சல்யூட்'

அமித்ஷாவுக்கு ராகுலின் 'சல்யூட்'

டில்லி ஜூன் 24 அமித்ஷா இயக்குநராக உள்ள கூட்டுறவு வங்கியில் 745.59 கோடிக்கு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5 நாட்களில் டிபாசிட் செய்யப்பட்டது இது தொடர்பான செய்திகள் தற்போது வெளியாகிவரும் நிலையில் காங்கிரசு தலைவர் ராகுல் இதுகுறித்த செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'வாழ்த்துகள்! அமித்ஷா ஜி.' நீங்கள் இயக்குநராக இருக்கும் ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கிதான், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அதிகளவு பணத்தை அதாவது ரூ.745.59 கோடி....... மேலும்

24 ஜூன் 2018 15:34:03

மோடி முன்னிலையில் உயிரைக் குடித்த யோகா!

   மோடி முன்னிலையில் உயிரைக் குடித்த யோகா!

  டேராடூன், ஜூன் 24 உத்தரகண்ட் மாநிலம் டேராடூ னில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். டேராடூனில் வன ஆய்வு நிறுவனத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, யோகாவில் உள்ள பல ஆசனங்களை மக் களோடு ஒன்றாக இணைந்து செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 55 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே நேரத்தில் யோகா செய்தனர்.  அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்த 73 வயது பெண்....... மேலும்

24 ஜூன் 2018 15:34:03

பா.ஜ.க.வின் சாதனைகளோ சாதனைகள்!

பா.ஜ.க.வின் சாதனைகளோ சாதனைகள்!

எஸ்.சி.,எஸ்.டி. மக்கள் மீதான காவல்துறை அத்துமீறல் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் மீதான காவல்துறை அத்துமீறல்களில், பாஜக ஆளும் மாநிலங்களே முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையின் செயல்திறனை அறியும் விதமாக, தேசிய குற்றவியல் ஆணையம், நாடு முழுவதும் 22 மாநிலங்களில் கணக் கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. 15 ஆயிரம் பேர் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்று, காவல்நிலையத்தில் காவல் துறையினர் நடந்து கொள்ளும் விதம், காவல்துறையினரால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த....... மேலும்

23 ஜூன் 2018 16:11:04

அட கழிப்பறையே! உத்தரப்பிரதேச சாமியார் ஆட்சியில் கழிப்பறைக்கும் காவிநிறம்

அட கழிப்பறையே! உத்தரப்பிரதேச சாமியார் ஆட்சியில் கழிப்பறைக்கும் காவிநிறம்

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் சாமியார் ஆதித்யநாத்  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அர்தோய் பகுதிக்கு வரவிருப்பதையடுத்து நிகழ்ச்சி அரங்கம் ஒன்றின் கழிப்பறை, காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச முதலமைச்சராக பாஜக வின் சாமியார் ஆதித்யநாத் பதவியேற்றது முதல் அம்மாநிலம் முழுவதும் காவி மயமாகி வருகிறது.  அரசு அலுவலகங்கள், பள்ளிகள், காவல் நிலையங்கள் என அனைத்திற்கும்  மாநில அரசு காவி வண் ணத்தை பூசி வருகிறது. சாலையைப் ....... மேலும்

23 ஜூன் 2018 15:50:03

சரிவோ சரிவு!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-2018ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. மோடி பிரதமராக பதவி ஏற்ற 4 ஆண்டுகளில் மிகவும் குறைவான வளர்ச்சி இதுவாகும். 2016-17ஆம் நிதியாண்டில் விவசாய உற்பத்தி 4.5 விழுக்காடாக இருந்தது, அதே போல் கட்டுமானம்  9.1 விழுக்காடும் இதர துறைகளில் 11.5 விழுக்காடு என்ற ரீதியில் வளர்ச்சி இருந்தது. மேலும் இந்த அரசு ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து....... மேலும்

23 ஜூன் 2018 15:47:03

தந்தைக்கு மகளின் சான்றிதழ்

தந்தைக்கு மகளின் சான்றிதழ்

ஆர்எஸ்எஸ்-சின் அழுக்கு தந்திரத்தில் என் தந்தை சிக்கி விட்டார்: பிரணாப் முகர்ஜி மகள் ஆர்எஸ்எஸ் அழுக்கு தந்திரத்தைப் பயன்படுத்தி, அவர்கள் நடத்தும் விழாவில் எனது தந்தையைப் பங்கேற்கச் செய்திருக் கிறார்கள் என்று பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்தா முகர்ஜி விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ் தனது தொண்டர்களுக்கு அளிக்கும் பயிற்சியின் நிறைவு விழாவை, சங்க சிக்ஷா வர்கா என்ற பெயரில் நடத்துகிறது. அந்த வகையில், இந்தாண்டு நடை பெற்ற விழாவில், காங்கிரசு மூத்த தலை வரும்,....... மேலும்

23 ஜூன் 2018 15:47:03

ஒடிசாவில் தேர்தல் நடத்தை விதிகள்மீறல் நாளிதழ்களில் பிரதமரின் விளம்பரங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புவனேசுவரம், ஜன. 11 -ஒடிசாவில் உள் ளாட்சி தேர்தல் நடத்தை விதிகளை மீறி நாளிதழ்களில் பிரதமரின் விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் பிஜு ஜனதா தளம் முறையிட்டுள்ளது.

இது தொடர்பாக கட்சியின்  துணைத் தலைவர் எஸ்.என்.பத்ரோ தலைமையி லான குழு, அப்புகார் மனுவை ஆணை யத்திடம் திங்கள்கிழமை அளித்தது.

மனு விவரம் வருமாறு:-

கடந்த டிசம்பர் 27- ஆம் தேதி முதல் உள்ளாட்சித் தேர்தல்  நடத்தை விதிகள் மாநிலம் முழுதும் அமலில் இருக்கின்றன.விவசாயிகள், சுய உதவிக் குழுக்களுக்குச் சலுகைகளை அறிவித்தும் புதியதிட்டம்தொடங்குவதுகுறித்தும், பிரதமரின்படத்துடன்ஒடியாமொழி நாளிதழ்களில் மத்திய அரசு விளம்பரங் களை தருகிறது. இது நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும்.இந்த விவகாரத்தில் தலையிட்டு இதுபோன்ற விளம்பரங்கள் வடிவிலான தேர்தல் பிரச் சாரத்தைத் தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். விதி மீறல்களுக்கு கடும்  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனினும், மேற்கண்ட புகாரை பாஜக மறுத்துள்ளது. பிரதமர் அறிவித்திருக்கும் சலுகைகளும், புதிய திட்டங்களும் ஒடிசாவுக்கு மட்டுமல்ல. நாடு முழுவதுக்கும்தான். எனவே, நாளி தழ்களில் விளம்பரத்தை பிரசுரிப்பது என்பது விதிமுறைகளை மீறிய செயல் எனக் கூற முடியாது என்று மாநில பாஜக தலைவர் கே.வி.சிங்தேவ் கூறினார்.

இந்த நிலையில் மாநிலத்தில் ஊராட்சித் தேர்தல் நடைபெறவிருப் பதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் சலுகைகள், திட்டங்கள் குறித்த விளம்பரங்களை ஒடிசா நாளிதழ்கள், உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேலும் மாநில அரசின் திட்டங்கள், சாதனைகளை சுட்டிக்காட்டும் துண்டுப் பிரசுரங்கள், விளக்கக் குறிப்புப் புத்தகங் களையும் நியாயவிலை அட்டைக் கடை களில் விநியோகம் செய்வதை தடை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. அதோடு குழந்தைகள் நல மேம்பாட்டு அலுவலர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாளுக்கு முன்பாக முன்தேதியிட்டு எந்த வளர்ச்சிப் பணிக்கும் உத்தரவு தரக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner