முன்பு அடுத்து Page:

அய்தராபாத்தில் நடைபெற்ற சமூக நீதி கருத்தரங்கம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 52 சதவீத இடஒதுக்கீடு …

அய்தராபாத்தில் நடைபெற்ற சமூக நீதி கருத்தரங்கம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 52 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

அய்தராபாத், டிச.11 தெலங் கானா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் சங்கம் சார்பில் 9.12.2017 அன்று முற் பகல் 11 மணியளவில் அய்த ராபாத் தில்சுக் நகரில் பிருந் தாவன் பிரைட் விடுதி அரங் கில் சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கம் மத்திய பட்டியலில் பிற் படுத்தப்பட்டவர்களை வகைப் படுத்துதல், கிரீமிலேயர் முறையை அகற்றவேண்டும், மண்டல் குழு பரிந்துரையின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 52 விழுக்காட் டளவில் இட ஒதுக்கீடு....... மேலும்

11 டிசம்பர் 2017 16:55:04

நாடு தழுவிய பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் பீகார் முதல் அமைச்சர் வலியுறுத்தல்

 நாடு தழுவிய பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் பீகார் முதல் அமைச்சர் வலியுறுத்தல்

புதுடில்லி, டிச. 11 புது டில்லியில் நேற்று நடைபெற்ற அய்க்கிய ஜனதாதளம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிதிஷ்குமார், இந்து, இசுலாம், புத்தம், சமணம் மற்றும் சீக்கிய மதங்கள் உள்ளிட்ட அனைத்து மதங்களும் மதுப் பயன்பாட்டுக்கு எதிராக உள்ளன. எனவே, நாடு முழுவதும் மதுவிலக்கை அமல் படுத்துவது சமூக ஒருமைப் பாட்டை உணர்த்தும், அனைத்து மதங்களையும் மதிக்கும் அடையாளமாகப் பார்க்கப்படும் என வலியுறுத்தினார். பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் சாலை....... மேலும்

11 டிசம்பர் 2017 16:16:04

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி 16-ஆம் தேதி பதவி ஏற்கிறார்

 காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி 16-ஆம் தேதி பதவி ஏற்கிறார்

புதுடில்லி, டிச.11 காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி 16-ஆம் தேதி பதவி ஏற்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற் கான தேர்தல் வருகிற 16-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அக்கட்சி யின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை....... மேலும்

11 டிசம்பர் 2017 16:16:04

தாழ்த்தப்பட்ட இன மக்களை அவமதிக்கும் செயலை நிறுத்தாவிட்டால் கோடிக்கணக்கான தொண்டர்களுடன் புத்த மதத்த…

  தாழ்த்தப்பட்ட இன மக்களை அவமதிக்கும் செயலை நிறுத்தாவிட்டால் கோடிக்கணக்கான தொண்டர்களுடன் புத்த மதத்தை தழுவுவோம் மாயாவதி எச்சரிக்கை

நாக்பூர், டிச. 11 மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் மாயாவதி பேசினார். அவர் கூறியதாவது:- டாக்டர் அம்பேத்கர் 1935ஆ-ம் ஆண்டு இந்து மதத் தலைவர் களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார். இந்து மதத் தலைவர்கள் தலித் துகள் மீதான ஆதிக்கத்தை நிறுத்த வேண்டும். இல்லையெனில் நான் இந்துவாக சாகமாட்டேன் என்று கூறி இருந்தார். இந்த சீர்திருத்தத்துக்காக அவர் 21....... மேலும்

11 டிசம்பர் 2017 16:16:04

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு மத்திய அரசுமீது பிரகாஷ்காரத் குற்றச்சா…

 பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு மத்திய அரசுமீது பிரகாஷ்காரத் குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச.11 நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், அவற்றைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டு ரையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள விவரம் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கடந்த....... மேலும்

11 டிசம்பர் 2017 16:16:04

கப்பலில் சென்றவர்களின் தகவல்படி உடனே தேடியிருந்தால் 40 பேரை மீட்டிருக்கலாம்: மீனவர்கள் ஆதங்கம்

கப்பலில் சென்றவர்களின் தகவல்படி உடனே தேடியிருந்தால் 40 பேரை மீட்டிருக்கலாம்: மீனவர்கள் ஆதங்கம்

மார்த்தாண்டம், டிச. 11- -காணா மல் போன மீனவர்களை மீட் கச் சென்ற நீரோடி பகுதி மீன வர்கள் கடலில் மிதக்கும் பிணங் களைப் பார்த்து கதிகலங்கி கரைதிரும்பியுள்ளனர். ஒரு பிணத்துடன் இருந்த பையுடன் 8 செல்போன்களையும், அடை யாள அட்டைகளையும் மீட்டு வந்து அதிகாரிகளிடம் ஒப் படைத்தனர். பழுதடைந்த ஒரு விசைப்படகில் 40 மீனவர்கள் தவிப்பதாக அந்த வழியாகச் சென்ற கப்பல் ஊழியர்கள் தகவல் தெரிவித்திருந்தனர். இதை தூத்தூரில் முகாமிட்....... மேலும்

11 டிசம்பர் 2017 15:40:03

ஜி.எஸ்.டி. வரியால் மாதம் ரூ.40 கோடி வருவாய் இழப்பு புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

ஜி.எஸ்.டி. வரியால் மாதம் ரூ.40 கோடி வருவாய் இழப்பு  புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி, டிச. 10 புதுவை தொழில்-வர்த்தக சங்கங்களின் பேரமைப்பு ஆண்டு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- புதுவையில் வாட்வரி இருந்த போது மாதந்தோறும் ரூ.165 கோடி வருவாய் இருந்தது. ஆனால் ஜி.எஸ்.டி. வரியால் புதுவையில் மாதம் ரூ. 40 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வரிவருவாய் குறைந்ததால் மாநில வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கும். எனவே ஜி.எஸ்.டி. வரியால் பாதிப்பு ஏற்பட்டால் 5 ஆண்டுக்கான....... மேலும்

10 டிசம்பர் 2017 15:08:03

பகத்சிங் பயங்கரவாதியல்ல - தியாகிதான்!

பகத்சிங் பயங்கரவாதியல்ல - தியாகிதான்!

புதுடில்லி, டிச.8 ஆங்கிலேயர் களுக்கு எதிராக போராடிய பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் இன்றுவரை தேசத்தின் தியாகி கள்தான் என்பது தகவல் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இந்திய விடுதலைக்காக போராடிய பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் ஆங்கி லேய அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய் யப்பட்டனர். 1931 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி தூக்கி லிடப்பட்டனர். இந்நிலையில் ஜம்முவைச் சேர்ந்த ரோஹித் சவுத்ரி, இந்திய....... மேலும்

08 டிசம்பர் 2017 16:32:04

காந்தியார் படத்தை தவறாக சித்தரிப்பதா? மத்தியப்பிரதேச மாநில காங்கிரசு கட்சி சைபர் குற்றப்பிரிவில் ப…

  காந்தியார் படத்தை தவறாக சித்தரிப்பதா? மத்தியப்பிரதேச மாநில காங்கிரசு கட்சி சைபர் குற்றப்பிரிவில் புகார்

போபால், டிச.7 காந்தியாரின் படத்தை தவறாக சித்தரித்ததுகுறித்து காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவில்  மத்தியப்பிரதேச மாநில காங்கிரசு கட்சி சார்பில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. பங்கஜ் சதுர்வேதி மத்தியப்பிரதேச மாநில காங்கிரசு கட்சி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி கூறியதாவது: ராகுல் காந்தி காங்கிரசு கட்சியின் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய் யும் படத்தை வெளியிடும்போது அப் படத்தின் பின்னணியில் சித்தரிக்கப் பட்ட படத்தை இணைத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். சிலர் காந்தி படத்தை முகலாயப் பேரரசர்போல்....... மேலும்

07 டிசம்பர் 2017 16:20:04

மதத்தை முன்னிறுத்தி எந்தக் கட்சியும் ஆட்சி நடத்த முடியாது : பாஜகமீது மம்தா தாக்கு!

மதத்தை முன்னிறுத்தி எந்தக் கட்சியும் ஆட்சி நடத்த முடியாது : பாஜகமீது மம்தா தாக்கு!

கொல்கத்தா, டிச. 7 வளர்ச்சியை முன்னிறுத்துவ தற்கு பதிலாக மதத்தை முன் னிறுத்தி எந்தக் கட்சியும் ஆட்சி நடத்த முடியாது என்று பாஜகவை மேற்கு வங்க முதல்வர் மம்தா  சாடியுள்ளார். மக்கள் எந்த வகையான உணவை உண்ண வேண்டும்? என ஆணையிடும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நிலையில், அந்தச் சம்பவத்தை நினைவு கூரும் வகையிலான நிகழ்ச்சி மேற்கு வங்கத்....... மேலும்

07 டிசம்பர் 2017 15:40:03

2016ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சிக்குன் குனியாவால் 57 ஆயிரம் பேர் பாதிப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2016ஆம் ஆண்டில் நாடு முழுவதும்
சிக்குன் குனியாவால் 57 ஆயிரம் பேர் பாதிப்பு

புதுடில்லி, ஜன.9 நாடுமுழுவதும் கடந்த 2016-ஆம் ஆண்டில் சிக்குன் குனியாவால் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2006 ஆ-ம் ஆண்டு சிக்குன்குனியா காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட் டது. தமிழகம், ஆந்திரா, கேர ளாவில் தொடங்கிய சிக்குன் குனியா அடுத்தடுத்த ஆண்டு களில் நாடுமுழுவதும் பரவத் தொடங்கியது. தற்போது டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் கொசுக்கள் மூலம் பர வும் சிக்குன்குனியாவால் பாதிக் கப்பட்டவர்கள் அதிகப் படி யான காய்ச்சல், கை, கால் களின் மூட்டுக்களில் ஏற்படும் வலியால் அவதிப்பட்டனர்.

நோயின் தீவிரத்தால் ஏராள மானோர் உயிரிழந்தனர். இதை யடுத்து சுகாதாரத்துறை எடுத்த தடுப்பு மற்றும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகம், ஒடிசா, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங் களில் பாதிப்பு குறையத் தொடங்கியது. ஆனால் டில்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா அரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சிக்குன்குனியா வால் பாதிக்கப்படுபவர்களின் எண் ணிக்கை அதிகரித்தது.

டில்லியில் கடந்த சில மாதங் களில் மட்டும் சிக்குன்குனியா வால் ஆயிரக்கணக் கானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந் துள்ளனர். டில்லி உட்பட நாடுமுழுவதும் சிக்குன்குனியா பாதிப்பை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உட னடியாக சிகிச்சை அளிப்பதற் கான நடவடிக் கைகளையும் சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

கருநாடகா முதலிடம்

இந்நிலையில் கடந்த ஆண்டு (2016) ஜனவரி ஒன் றாம் தேதி முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரையிலான சிக்குன்குனியா பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில், 2016ஆ-ம் ஆண்டில் நாடு முழுவதும் 57 ஆயிரத்து 694 பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டி லேயே அதிகபட்சமாக கருநாட காவில் 13 ஆயிரத்து 239 பேரும், டில்லியில் 12 ஆயிரத்து 221 பேரும், மகாராஷ்டிராவில் 7 ஆயிரத்து 354 பேரும், அரியா னாவில் 5 ஆயிரத்து 336 பேரும், பஞ்சாப்பில் 4 ஆயிரத்து 299 பேரும் சிக்குன்குனியாவால் பாதிக்கப் பட்டனர்.

தமிழகத்தில் 72 பேரும், ஆந்திராவில் 924 பேரும், கேர ளாவில் 123 பேரும் பாதிக்கப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவ ரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிடவில்லை. கடந்த சில ஆண்டுகளைவிட 2016-ஆம் ஆண்டில் அதிகபட்ச மாக நாடுமுழுவதும் சிக்குன் குனி யாவால் 57 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பாதிக்கப்பட்டுள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner