
இந்திய கிரிக்கெட் வாரியத்தை மத்திய அரசு ஏற்று நடத்த உத்தரவிடவேண்டும்உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு மதுரை, மே 23- மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வழக்குரைஞர் சாந்த குமரேசன், உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்ப தாவது: இந்திய கிரிக்கெட் வாரியம் பல்வேறு போட் டிகளை நடத்தி வரு கிறது. தர்ம ஸ்தாபனம் என பதிவு செய்யப்பட் டுள்ள இந்த வாரியம், மத்திய அரசிடம் வரி....... மேலும்
23 மே 2013 16:24:04

பனாஜி, மே 23- அய்என்எஸ் தர்காஷ் போர் கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை நேற்று வெற்றி கரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ரஷ்யாவுடன் இணைந்து நவீன வசதிகள் கொண்ட அய்என்எஸ் தர்காஷ் என்ற போர்க்கப்பலை இந்தியா தயாரித்துள்ளது. இந்த கப்பல் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி கடற்படையில் சேர்க்கப்பட் டது. இந்நிலையில், கோவா கடற்கரை பகுதியில் அய்என்எஸ் தர்காஷ் கப்ப லில் இருந்து பிரமோஸ் ஏவுகணை நேற்று காலை 11 மணிக்கு....... மேலும்
23 மே 2013 16:01:04

புதுடில்லி , மே 23- இணையதள தொலைத் தொடர்பு சேவையை, பயங்கர வாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க, 128 ஆண்டு பழமை வாய்ந்த, இந்திய டெலிகிராப்' சட்டத்தில், திருத்தம் செய்ய மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், இணையதள தொலைத் தொடர்பு சேவை, முக்கிய இடத்தை பெறுகிறது. இந்தச் சேவையை, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள், சர்வ சாதாரணமாக பயன்படுத்தி, சதி வேலைகளில் ஈடுபடு கின்றனர் ........ மேலும்
23 மே 2013 15:12:03

லக்னோ, மே 21- உத் தரப்பிரதேசத்தில் தலித் தலைவர்கள் நினைவி டங்கள் அமைத்ததில், முன்னாள் முதல்வர் மாயாவதியின் அமைச் சர்கள், அரசு அதிகாரி கள் உட்பட 199 பேர் 1,400 கோடி ஊழல் செய் தனர் என லோக்அயுக்தா தாக்கல் செய்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள் ளது. உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்சி காலத் தில் லக்னோ மற்றும் நொய்டாவில் 14 இடங் களில் தலித் தலைவர் களின் நினைவிடங்கள்....... மேலும்
21 மே 2013 15:11:03

புதுடில்லி, மே 20- சீனப் பிரதமராக லீ கேகியாங் கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்றார். அவர் தற்போது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். முதல் அரசு முறைப் பயணமாக அவர் நேற்று மாலை இந்தியா வந்தார். அவருடன் சீன அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் வந்துள்ளனர். டில்லி விமான நிலையத்துக்கு சிறப்பு விமானத்தில் வந்த சீனப் பிரதமரை, வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ. அகமது மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். லீ கேகியாங் 27 ஆண்டுகளுக்கு....... மேலும்
20 மே 2013 16:11:04

புதுடில்லி, மே 15- கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டோ ருக்கு இழப்பீடு வழங்க நீதிமன் றங்கள் உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாக்குர், கியான் சுதா மிஸ்ரா ஆகி யோர் கொண்ட அமர்வு பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்பதா வது: கிரிமினல் வழக்குகளில் பாதிக் கப்பட்டவர்களுக்கு அவர்களது இழப்புகள் மற்றும் சேதத்துக்காக இழப்பீடு வழங்கப்படாதது கவலைக்குரிய விஷயம். இழப்பீடு அளிக்க உத்தரவிடு....... மேலும்
15 மே 2013 15:49:03

சில்சர் (அசாம்), மே 15-உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்திருக்கிறார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அசாம் பல்கலைக்கழகத்தின் 13 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டது: பண்டைய இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன. நாலந்தா, தட்சசீலம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில உலகின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் இங்கு....... மேலும்
15 மே 2013 15:32:03

முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவேன்! கருநாடக முதல்வர் சித்தராமையா பேட்டி பெங்களூரு, மே 15-கருநாடக முன் னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் நலனுக்காகப் பாடுபடு வேன். அதேவேளையில் அனைத்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் தேவை யான உதவிகளை செய்வேன் என்று நேற்று முன்தினம் (13.5.2013) கருநாடக முதல்வராகப் பதவியேற்ற சித்த ராமையா கூறினார். பெங்களூருவில் நேற்று (14.5.2013) அவர் அளித்த பேட்டி விவரம்....... மேலும்
15 மே 2013 14:54:02

புதுடில்லி, மே 14- கிராமப்புறங் களில் சுகாதார சேவையை மேம் படுத்த செவிலியர்களை பயன்படுத் திக் கொள்ளலாம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆலோ சனை கூறியுள்ளார். சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 35 செவிலியர்களுக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை பிரணாப் முகர்ஜி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: பொது சுகாதார சேவைகளைப் பெறுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை....... மேலும்
14 மே 2013 18:41:06

புதுடில்லி, மே 14- மத்திய அமைச்சர்கள் கபில் சிபல் மற்றும் சி.பி. ஜோஷி ஆகியோர் சட் டம் மற்றும் ரயில்வே துறை கூடுதல் பொறுப்பை நேற்று ஏற்றனர். நிலக்கரி சுரங்க ஒதுக் கீடு முறைகேடு தொடர் பான சிபிஅய் அறிக் கையை சட்ட அமைச் சராக இருந்த அஸ்வனி குமார் திருத்தியது சர்ச் சையை ஏற்படுத்தியது. அதேபோல் ரயில்வே வாரிய உறுப்பினர் ஒரு வருக்கு உயர் பதவி வாங் கிக் கொடுக்க,....... மேலும்
14 மே 2013 18:28:06

புதுடெல்லி, ஆக.19-தொலைபேசி, செல் போன்கள் மூலம் பல் வேறு வர்த்தக விளம் பரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. ரியல் எஸ்டேட், பங்கு வர்த்த கம் உள்பட பல தொழில் களுக்கு மார்க்கெட்டிங் செய்யப்படுகின்றன. டெலிமார்க்கெட்டிங் எனப்படும் இந்த சேவையை மேற்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம்(டிராய்) பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். இப்படி பதிவு செய்யாமல் டெலிமார்க்கெட்டிங் மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது பற்றி, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் மிலின்ட் தியோரா, மாநிலங்களவையில் கூறிய தாவது: தொலைபேசி, செல்போன்கள் மூலம் டெலிமார்க்கெட்டிங் செய்வதற்கு டிராயிடம் பதிவு செய்திருக்க வேண்டுமென தொலைத்தொடர்பு வணிகம், வாடிக்கையாளர் முன்னுரிமை விதிகளில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பதிவு செய்யாமல் பலர் டெலிமார்க்கெட்டிங் செய்வதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் விதியை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜூலை 30ஆம் தேதி வரை, 51,181 சந்தாதாரர்கள் விதிகளை மீறியதாக அவர்களின் தொலைபேசி இணைப்புகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. மேலும், 88,307 வாடிக்கையாளர் களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. இவ்வாறு தியோரா தெரிவித்தார்.
| < முன்பு | அடுத்து > |
|---|