
இந்திய கிரிக்கெட் வாரியத்தை மத்திய அரசு ஏற்று நடத்த உத்தரவிடவேண்டும்உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு மதுரை, மே 23- மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வழக்குரைஞர் சாந்த குமரேசன், உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்ப தாவது: இந்திய கிரிக்கெட் வாரியம் பல்வேறு போட் டிகளை நடத்தி வரு கிறது. தர்ம ஸ்தாபனம் என பதிவு செய்யப்பட் டுள்ள இந்த வாரியம், மத்திய அரசிடம் வரி....... மேலும்
23 மே 2013 16:24:04

பனாஜி, மே 23- அய்என்எஸ் தர்காஷ் போர் கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை நேற்று வெற்றி கரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ரஷ்யாவுடன் இணைந்து நவீன வசதிகள் கொண்ட அய்என்எஸ் தர்காஷ் என்ற போர்க்கப்பலை இந்தியா தயாரித்துள்ளது. இந்த கப்பல் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி கடற்படையில் சேர்க்கப்பட் டது. இந்நிலையில், கோவா கடற்கரை பகுதியில் அய்என்எஸ் தர்காஷ் கப்ப லில் இருந்து பிரமோஸ் ஏவுகணை நேற்று காலை 11 மணிக்கு....... மேலும்
23 மே 2013 16:01:04

புதுடில்லி , மே 23- இணையதள தொலைத் தொடர்பு சேவையை, பயங்கர வாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க, 128 ஆண்டு பழமை வாய்ந்த, இந்திய டெலிகிராப்' சட்டத்தில், திருத்தம் செய்ய மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், இணையதள தொலைத் தொடர்பு சேவை, முக்கிய இடத்தை பெறுகிறது. இந்தச் சேவையை, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள், சர்வ சாதாரணமாக பயன்படுத்தி, சதி வேலைகளில் ஈடுபடு கின்றனர் ........ மேலும்
23 மே 2013 15:12:03

லக்னோ, மே 21- உத் தரப்பிரதேசத்தில் தலித் தலைவர்கள் நினைவி டங்கள் அமைத்ததில், முன்னாள் முதல்வர் மாயாவதியின் அமைச் சர்கள், அரசு அதிகாரி கள் உட்பட 199 பேர் 1,400 கோடி ஊழல் செய் தனர் என லோக்அயுக்தா தாக்கல் செய்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள் ளது. உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்சி காலத் தில் லக்னோ மற்றும் நொய்டாவில் 14 இடங் களில் தலித் தலைவர் களின் நினைவிடங்கள்....... மேலும்
21 மே 2013 15:11:03

புதுடில்லி, மே 20- சீனப் பிரதமராக லீ கேகியாங் கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்றார். அவர் தற்போது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். முதல் அரசு முறைப் பயணமாக அவர் நேற்று மாலை இந்தியா வந்தார். அவருடன் சீன அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் வந்துள்ளனர். டில்லி விமான நிலையத்துக்கு சிறப்பு விமானத்தில் வந்த சீனப் பிரதமரை, வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ. அகமது மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். லீ கேகியாங் 27 ஆண்டுகளுக்கு....... மேலும்
20 மே 2013 16:11:04

புதுடில்லி, மே 15- கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டோ ருக்கு இழப்பீடு வழங்க நீதிமன் றங்கள் உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாக்குர், கியான் சுதா மிஸ்ரா ஆகி யோர் கொண்ட அமர்வு பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்பதா வது: கிரிமினல் வழக்குகளில் பாதிக் கப்பட்டவர்களுக்கு அவர்களது இழப்புகள் மற்றும் சேதத்துக்காக இழப்பீடு வழங்கப்படாதது கவலைக்குரிய விஷயம். இழப்பீடு அளிக்க உத்தரவிடு....... மேலும்
15 மே 2013 15:49:03

சில்சர் (அசாம்), மே 15-உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்திருக்கிறார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அசாம் பல்கலைக்கழகத்தின் 13 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டது: பண்டைய இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன. நாலந்தா, தட்சசீலம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில உலகின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் இங்கு....... மேலும்
15 மே 2013 15:32:03

முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவேன்! கருநாடக முதல்வர் சித்தராமையா பேட்டி பெங்களூரு, மே 15-கருநாடக முன் னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் நலனுக்காகப் பாடுபடு வேன். அதேவேளையில் அனைத்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் தேவை யான உதவிகளை செய்வேன் என்று நேற்று முன்தினம் (13.5.2013) கருநாடக முதல்வராகப் பதவியேற்ற சித்த ராமையா கூறினார். பெங்களூருவில் நேற்று (14.5.2013) அவர் அளித்த பேட்டி விவரம்....... மேலும்
15 மே 2013 14:54:02

புதுடில்லி, மே 14- கிராமப்புறங் களில் சுகாதார சேவையை மேம் படுத்த செவிலியர்களை பயன்படுத் திக் கொள்ளலாம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆலோ சனை கூறியுள்ளார். சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 35 செவிலியர்களுக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை பிரணாப் முகர்ஜி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: பொது சுகாதார சேவைகளைப் பெறுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை....... மேலும்
14 மே 2013 18:41:06

புதுடில்லி, மே 14- மத்திய அமைச்சர்கள் கபில் சிபல் மற்றும் சி.பி. ஜோஷி ஆகியோர் சட் டம் மற்றும் ரயில்வே துறை கூடுதல் பொறுப்பை நேற்று ஏற்றனர். நிலக்கரி சுரங்க ஒதுக் கீடு முறைகேடு தொடர் பான சிபிஅய் அறிக் கையை சட்ட அமைச் சராக இருந்த அஸ்வனி குமார் திருத்தியது சர்ச் சையை ஏற்படுத்தியது. அதேபோல் ரயில்வே வாரிய உறுப்பினர் ஒரு வருக்கு உயர் பதவி வாங் கிக் கொடுக்க,....... மேலும்
14 மே 2013 18:28:06

புதுடெல்லி, ஜூன் 28- குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜியின் வெற்றி உறுதி என்று காங்கிரஸ் நிருவாகிகள் கூறியுள்ளனர்.
இதுபற்றிய செய்தி வருமாறு:
காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு, நாளை மறுநாள் (சனிக்கிழமை) கடைசி நாள் என்பதால் தேர்தல் நடைமுறை பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களான பிரணாப் முகர்ஜி, சங்மா ஆகிய இருவருமே இன்று (வியாழக்கிழமை) தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள்.
பிரணாப் முகர்ஜி, இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
பிரணாப் முகர்ஜி 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மனுக்களில், காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அய்க்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் மற்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் போன்ற கூட்டணி கட்சி தலைவர்கள் பிரணாப் முகர்ஜியை முன்மொழிந்து கையெழுத்து போட்டிருக்கிறார்கள்.
பிரணாப் முகர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தவுடன், அவருடைய அதிகாரபூர்வ பிரதிநிதியாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் செயல்படுவார். வேட்பு மனுக்களில், வாக்களிக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 50 பேர் முன்மொழியவும், 50 பேர் வழிமொழியவும் வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்யும் 4 வேட்பு மனுக்களிலும் தலா 60 பேர் முன்மொழிந்து, 60 பேர் வழிமொழிவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
வெற்றி உறுதி
காங்கிரஸ் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான 77 வயது பிரணாப் முகர்ஜி, நாளை மறுநாள் சனிக்கிழமை தனது பிரச்சாரத்தை சென்னையில் இருந்து தொடங்குகிறார். காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 12 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவினர் தேர்தல் பிரச்சார ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் உள்ள 10 லட்சத்து 98 ஆயிரம் வாக்குகளில், 7 லட்சம் வாக்குகள் பெற்று பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி பெற்று நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதி என்று, காங்கிரஸ் கூட்டணி தேர்தல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
| < முன்பு | அடுத்து > |
|---|