முன்பு அடுத்து Page:

அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பிப்.26இல் விசாரணை

அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பிப்.26இல் விசாரணை

புதுடில்லி, பிப்.22 உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த நிலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ள வழக்கின் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வு பிப்ரவரி26 ஆம் தேதி முதல் நடத்துகிறது.அயோத்தியில் பாபர் மசூதி இருந்த நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றத் தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் அர சியல் சாசன அமர்வு அமைக்கப் பட்டது. ஆனால் அரசியல் சாசன அமர்வில்....... மேலும்

22 பிப்ரவரி 2019 16:53:04

ரூ. 550 கோடி மோசடி: அனில் அம்பானி குற்றவாளி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, பிப்.22 -நிலுவைத் தொகையை செலுத்தாத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த சோனி எரிக்சன் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத் தின் தலைவர் அனில் அம்பானி தனக்குச் செலுத்தவேண்டிய ரூ.550 கோடியை திருப்பிச் செலுத்தவில்லை என்று கடந்த ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.  அந்த வழக்கில், சோனி எரிக்சன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தும் வரை இந்தியாவை விட்டு அனில்....... மேலும்

22 பிப்ரவரி 2019 16:46:04

சிந்து நதி நீர் பங்கீடு: பாகிஸ்தானுக்கான உபரி நதிநீர் நிறுத்தப்படும்

மத்திய அரசு அறிவிப்பு சென்னை, பிப்.22  சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவுக்கான பங்கிலிருந்து பாகிஸ்தானுக்கு கிடைத்து வரும் உபரி நீரை நிறுத்துவதென முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங் கரவாத அமைப்பு, சமீபத்தில் புல்வாமாவில் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 40 விசேட அதிரடிப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டுவரும் பதிலடி நடவடிக் கைகளில் ஒன்றாக....... மேலும்

22 பிப்ரவரி 2019 16:45:04

நாட்டிற்குத் தேவை புல்லட் ரயில் அல்ல; புல்லட் துளைக்காத ஆடைதான்...!

மோடி அரசுமீது அகிலேஷ் தாக்கு லக்னோ, பிப். 22- இந்திய நாட்டிற்கு புல்லட் ரயிலைக்காட்டிலும், எல்லை யில் காவல் காக்கும்பணியில் இருக் கும் ராணுவ வீரர் களுக்கு புல்லட் துளைக்காத ஆடைகள்தான் முக்கியம் என்று, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலை வருமான அகிலேஷ் கூறியுள்ளார். லக்னோவில் திங்களன்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியி லேயே இவ்வாறு அவர் கூறியுள்ளார். புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, பாதுகாப்பு அமைப்புகள் தோல்வி அடைந்ததே....... மேலும்

22 பிப்ரவரி 2019 15:56:03

டில்லிக்கு முழு மாநில தகுதி தர வேண்டும்: முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள்

புதுடில்லி, பிப்.22  டில்லிக்கு முழு மாநிலத் தகுதி தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் கெஜ்ரிவால் டிவிட்டரில் பல்வேறு பதிவிட் டுள்ளார் அதில், டில்லிக்கு முழு மாநிலத் தகுதி வழங்கும் விவகாரத்தில் எப்படி மோடி அரசு அநீதி இழைத்துள்ளது என்பதை வீடு வீடாக சென்று ஆம் ஆத்மியினர் கூறுவார்கள். பிரதமர் மோடி ஏற்கெனவே உறுதி அளித்தப்படி,....... மேலும்

22 பிப்ரவரி 2019 15:53:03

புல்வாமா தாக்குதலுக்கு பாக். இளம் பெண்கள் கண்டனம்

புதுடில்லி, பிப்.22- காஷ்மீர் புல்வாமா பகுதியில், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதியன்று நடந்த பயங்கரவாதத் தாக்கு தலில் 40 இந்திய துணை ராணு வப்படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குத லுக்கு பாகிஸ்தானைக் குற்றம் சாட்டியிருக்கும் மத்திய அரசு, என்ன செய்வதென்று தெரி யாமல், அந்நாட்டின் சாதாரண மக்களைப் பாதிக்கும் விதமாக பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டவர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்; பாகிஸ்தானியர் களுக்கு....... மேலும்

22 பிப்ரவரி 2019 15:17:03

அரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு

அரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு

புதுடில்லி, பிப்.22 ''அரசியல் லாபத்துக்காக, ராணுவத்தை பயன்படுத்துவது, தேசிய பாது காப்புக்கு ஆபத்தை விளை விக்கும். இதுபோன்ற செயல் களை அனுமதிக்க முடியாது,'' என, ஆந்திர முதல்வர், சந்திர பாபு நாயுடு கூறியுள்ளார். ஜம்மு - காஷ்மீரில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்கு தலில், 40 வீரர்கள் கொல்லப் பட்டனர். இதற்கு, நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு கிளம் பியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக,....... மேலும்

22 பிப்ரவரி 2019 15:17:03

இந்து வெறியர்களால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே 4ஆம் ஆண்டு நினைவு நாளில்

இந்து வெறியர்களால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே 4ஆம் ஆண்டு நினைவு நாளில்

மும்பை நோக்கி விவசாயிகள் போராட்டப் பயணம் 50ஆயிரம் பேருக்கும் மேல் பங்கேற்கிறார்கள் மும்பை, பிப். 21- மராட்டிய மாநிலம் மும்பை நகரில் இந்துத்துவவாதி களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட கோவிந்த் பன்சாரே நான்காம் ஆண்டு நினைவு நாளில் (பிப்ரவரி 20) விவசாயிகளின் போராட்ட பயணம் நாசிக் கிலிருந்து தொடங்கியது. மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக போராடிவந்துள்ளனர். தற்பொழுது அம்மாநிலத்தில்  விவசாயிகள் ஒன்றி ணைந்து மும்பை நகரை நோக்கி....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:07:03

இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரிப்பு

புதுடில்லி,பிப்.21 இந்தியா வின் பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரண மாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், உயிரிழப்பும் ஏற் பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு இந்த ஆண்டில் பலியானோர் எண் ணிக்கை 377 ஆக அதிகரித் துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய சுகாதார துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச் சலுக்கு....... மேலும்

21 பிப்ரவரி 2019 14:56:02

2 வயது குழந்தைக்கு எச்அய்வி பாதிப்பு அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை உத்தரவு

கோவை, பிப்.21 திருச்சி மணப்பாறையை சேர்ந்த தம்பதியினர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது 2 வயது மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு ரத்தம் ஏற்றி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் குழந்தையை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் குழந்தைக்கு எச்.அய்.வி. பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தவறுதலாக ஏற்றப்பட்ட ரத்தத்தால் தான் குழந்தைக்கு எச்அய்.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்த....... மேலும்

21 பிப்ரவரி 2019 14:48:02

டில்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பிரிவுக்கு 'மூடு விழா!'

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.9  டில்லி பல் கலைக்கழகத்தில் நான்கு பேராசிரியர் களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படா மல் அதன் தமிழ்ப் பிரிவு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் இரண்டு பிரபல மகளிர் கல்லூரிகளில் இருந்த பேராசிரியருக்கான பணியிடங்கள் வேறு துறைகளுக்கு மாற்றப் பட்டதால், அதன் தமிழ் துறைகள் ஏற்கெனவே மூடப்பட்டு விட்டன.

லட்சக்கணக்கான தமிழர்கள் வாழும் டில்லியில் தமிழுக்காக ஏழு பள்ளிகள் உள்ளன. இதில் படித்து முடித்தவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வருபவர்களின் மேற்கல்விக்காக டில்லியில் உள்ள கல்வி நிலையங்களில் பல வருடங்களாக தமிழ் மொழியில் சான்றிதழ், டிப்ளமோ, இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வுக்கல்வி போதிக்கப்பட்டு வருகின்றன இவற்றில் டில்லி பல்கலைக்கழகத்தில் சுமார் எட்டு வருடங்களாக ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனிடையே, டில்லி பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் பிரபல லேடி சிறீராம் மகளிர் கல்லூரியில் பணி யாற்றிய பேராசிரியர் 15 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றிருந்தார். மற்றொரு மகளிர் கல்லூரியான மிராண்டா ஹவுஸில் எட்டு வருடங்களுக்கு முன் தமிழ் பேராசிரியர் ஒருவர் ஓய்வு பெற்றார். இந்த இரண்டு பணியிடங் களும் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு விட்டதால் அதன் தமிழ் பிரிவுகள் மூடப்பட்டு விட்டன. இது, நாடு முழு வதிலும் உள்ள கல்வி நிலையங்களை நிர்வகித்து வரும் மத்திய அரசின் மத் திய பல்கலைக்கழக மானியக்குழு விதி களுக்கு எதிரானது எனத் தெரியவந் துள்ளது.

எனினும், இதை தமிழர்களும், அம் மாநிலத்தின் அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தமிழ் கல்விக்கு இந்த அவல நிலை ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால், டில்லி வாழ் தமிழர்கள் அவற் றில் சேர்ந்து தமிழ்க் கல்வி பெறும் வாய்ப்புகளையும் இழந்துள்ளனர். குறிப்பாக டில்லியின் பிரபலமான 2 மகளிர் கல்லூரிகளிலும் தமிழ்க் கல்வி பெறும் வாய்ப்பை பெண்களும் இழந் துள்ளனர். தமிழுக்கு, இந்தி உட்பட மற்ற மொழியாளர்களின் எதிர்ப்பும், காழ்ப்புணர்வும் இதற்கு முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.

டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பிரிவை உயர்த்த, தமிழக அரசு சார்பில் வருடந்தோறும் ஒரு சொற்பொழிவை துவக்க திட்டமிடப்பட்டது. இங்கு பயிலும் ஆய்வு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவித்தொகை அளிக்க எடுக்கப்பட்ட முயற்சியும் ஈடேறவில்லை எனினும், கடந்த 2007 இ-ல், தமிழக அரசால் அளிக்கப்பட்ட ரூபாய் அய்ம்பது லட்சத்தின் உதவியால் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கானப் பிரிவு துவக்கப்பட்டது. இருபதிற்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் உள்ள இங்கு டில்லி மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் வந்து பயில மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், இங்கு கூடுதலாகப் பேரா சிரியர்களை அமர்த்தாமல் இருப்பதால் மாணவர்களை சேர்க்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், டில்லி பல் கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வெங்கடேஸ்வரா கல்லூரி மற்றும் தயாள் சிங் கல்லூரியிலும் தமிழுக்கானப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. அடுத்து அய்ந்து முதல் பத்து வருடங் களில் இங்குள்ள பேராசிரியர்கள் ஓய்வு பெற்றால் அவையும் வேறு துறை களுக்கு மாற்றும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner