முன்பு அடுத்து Page:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, டிச.18 ரூ.1,264 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்ற மத்திய அமைச் சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இந்த மருத்துவமனையை 45 மாதங்களில் நிர்மாணிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங் களை மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் திங்கள் கிழமை இரவு....... மேலும்

18 டிசம்பர் 2018 16:40:04

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு

ஜெய்ப்பூர், டிச. 18- ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி யும், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணியும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தன. சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய 3 மாநி லங்களில், பாரதீய ஜனதாவி டம் இருந்து காங்கிரஸ் ஆட் சியை கைப்பற்றியது. சத்தீஷ்காரில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட் சியை....... மேலும்

18 டிசம்பர் 2018 16:40:04

தெலங்கானாவில் இடஒதுக்கீட்டுக்கு உச்சவரம்பு

அய்தராபாத், டிச. 17- தெலங்கா னாவில் உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடியினத்தவர் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்யும் அவசர சட்டத்தை அந்த மாநில அரசு பிறப்பித்து உள்ளது. தெலங்கானா உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பை 67 சதவீதமாக உயர்த்த அந்த மாநில சட்டப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் சட்டமியற் றப்பட்டது. இதர பிற்படுத்தப் பட்டோருக்கான....... மேலும்

17 டிசம்பர் 2018 15:55:03

கோவில் பிரசாதம்: பலி எண்ணிக்கை உயர்வு

பெங்களூரு, டிச. 17- கருநாடக வின் சாம்ராஜ்நகர் மாவட்டத் துக்கு உட்பட்ட சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா கோவில் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கலச பூஜை நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங் கப்பட்டன. அந்த பிரசாதத்தை சாப் பிட்ட சிறிது நேரத்தில் 12 பக் தர்கள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார் கள். வாந்தி, மயக்கம்....... மேலும்

17 டிசம்பர் 2018 15:55:03

இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் கட்டமைப்பை மறு ஆய்வு செய்ய ஆலோசனை புதிய ஆளுநர் தலைமையில் நடந்த கூ…

மும்பை, டிச.17 இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஅய்) நிர்வாகக் கட்டமைப்பை மறுஆய்வு செய்வது குறித்து பரிசீலிக்க ஆர்பிஅய் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்பிஅய்-யின் புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலை மையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டது. அவரது தலைமையில் நடை பெற்ற முதல் ஆர்பிஅய் ....... மேலும்

17 டிசம்பர் 2018 15:32:03

மிசோரம் மாநில முதல்வராக பொறுப்பேற்றார் ஜோரம்தங்கா

அய்சால், டிச.17 மிசோரம் மாநில புதிய முதல் வராக எம்என்எப் கட்சித் தலைவர் ஜோரம் தங்கா (84) நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மிசோரம் சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடை பெற்ற தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) அமோக வெற்றி பெற்றது. அங்கு மொத்தம் உள்ள 40 இடங்களில் எம்என்எப் கட்சிக்கு 26 இடங்கள் கிடைத்தன........ மேலும்

17 டிசம்பர் 2018 15:32:03

ரபேல் ஊழல் & உச்சநீதிமன்றம் - இன்றைய தீர்ப்புபற்றி புரியாமல் பதிவிடும் கிறுக்குப்பசங்களுக்கு!!

இது ஒன்றும் நீதிமன்றம் விசாரித்து மோடி குற்றமற்றவர் என்று சொல்லவில்லை.. மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகள்.. 1. எதற்காக அதிக விலை கொடுத்து விமானங்கள் வாங்கப் பட்டுள்ளது? 126க்கு பதில் எதற்கு 36 வாங்கப்பட்டுள்ளது? விலையை அரசு வெளியிடவேண்டும். உச்சநீதிமன்றம்: இதைப்பற்றி விசாரிக்கும் உரிமை எங்களுக்கு இல்லை.. ஆனால் ரபேல் தரமான விமானம்.. அதில் சந்தேகம் வேண்டாம்... (இன்று வரை இந்த கேள்விக்கு பதில் இல்லை) 2. எதற்கு HALக்கு கொடுக்கப்பட்ட ஆர்டர் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ்'க்கு கொடுக்கப்பட்டது? உச்சநீதிமன்றம்:....... மேலும்

17 டிசம்பர் 2018 15:09:03

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் நிர்பயாவுக்கு செய்யும் மரியாதை

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் நிர்பயாவுக்கு செய்யும் மரியாதை

முதல்வர் கேஜரிவால் புதுடில்லி, டிச.17 பெண் களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதுதான் நிர்பயாவுக்கு நாம் செய்யும் சிறப்பான மரி யாதை என்று டில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு, டிசம்பர் 16-ஆம் தேதி நள்ளிரவில் தில்லி முனிர்கா பகுதியில் ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயா அய்ந்து இளைஞர்கள் மற்றும் சிறுவனால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இச்சம்பவத்திற்குப்....... மேலும்

17 டிசம்பர் 2018 15:01:03

விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும்

விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும்

மயில்சாமி அண்ணாதுரை வேண்டுகோள் புதுச்சேரி, டிச.17 விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசின் வேளாண் அறிவியல் துறை சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் ஊக்குவிப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, புதுச்சேரி தவளக் குப்பத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் கல்லூரி சுற்றுச்சூழல் - வேளாண் மேம் பாட்டு மய்யத்துடன் இணைந்து இந்த முகாம் ஞாயிற்றுக்....... மேலும்

17 டிசம்பர் 2018 15:01:03

ரபேல் போர் விமான ஒப்பந்த வழக்கு

ரபேல் போர் விமான ஒப்பந்த வழக்கு

உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழி நடத்தியது வழக்கின் தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல் புதுடில்லி, டிச.17 ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறை கேடும் நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த 14-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், “ரபேல் போர் விமான விலை நிர்ணய விவரங்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்க வில்லை. ஆனால் தலைமை கணக்கு தணிக்கையரிடம் தெரிவிக்கப்பட்டது என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள....... மேலும்

17 டிசம்பர் 2018 14:57:02

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்கள் விளம்பரமாக வெளியிடுவது கட்டாயம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி, அக். 11- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்றப் பின்னணி குறித்த விவரங்களை தொலைக் காட்சிகள், பத்திரிகைகளில் குறைந்தது 3 முறையாவது கட்டாயம் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் புதன் கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணை யம் புதன்கிழமை வெளியிட் டுள்ள உத்தரவில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் தங்களது குற்றப் பின்னணி குறித்த தகவல்களை தொலைக்காட்சிகள், பத்திரி கைகளில் குறைந்தது 3 முறை யாக விளம்பரங்களாக கட்டா யம் வெளியிட வேண்டும். இதேபோல், அரசியல் கட்சிகளும் தாங்கள் நிறுத்தும் வேட் பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை விளம்ப ரங்களாக வெளியிட வேண்டும்.

இதே தகவலை திருத்தப் பட்ட வேட்பாளர் படிவத்திலும் (26) வேட்பாளர்கள் நிரப்ப வேண்டும். தாங்கள் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் குற்றப் பின்னணி குறித்ததக வல்களையும், எவ்வளவு கிரி மினல் வழக்குகளில் தண் டனை வழங்கப்பட்டுள்ளது, எத்தனை வழக்குகள் நிலுவை யில் இருக்கின்றன என்பதை வேட்பாளர்கள் தெரியப்படுத்த வேண்டும். இந்த விவரங்களை அரசியல் கட்சிகள் தங்களது இணையதளங்களில் பதிவேற் றம் செய்ய வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை அரசியல் கட்சிகள் செயல்படுத்தவில்லை எனில், அந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அல்லது கட்சிகள் முடக்கப்படும்.

வேட்பாளர்கள் தாங்கள் பத்திரிகைகளில் கொடுத்த விளம்பரங்களின் நகல்கள், தொலைக்காட்சிகளில் கொடுத்த விளம்பர காட்சிகள் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். இதேபோல் அரசியல் கட்சிகளும் முழு விவரங்களை தேர் தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப் பித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் முன்பு பிறப்பித்த தீர்ப்பில், வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தபிறகு, தங்களது குற்றப்பின்னணி குறித்து பத்திரி கைகள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுக்க வேண் டும்; இவ்வாறு விளம்பரம் கொடுப்பது, தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு ஆகும் செலவுத் தொகையை, வேட்பாளர்கள் தங்களது சொந்த பணத்தில் இருந்து அளிக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி பதிலளிக்கையில், இது தேர்தல் தொடர்பான செயல்தான். ஆத லால் அந்த செலவுக்கு வேட்பா ளர்தான் பொறுப்பு என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner