முன்பு அடுத்து Page:

ரிசர்வ் வங்கியை மிரட்டிப் பறித்த மோடி அரசு இடைக்கால ஈவுத் தொகையாக ரூ.28 ஆயிரம் கோடி தரும் ரிசர்…

புதுடில்லி, பிப்.20 -பாஜக ஆட்சி யில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற தவறுகளால், நாட்டில் நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை கடுமை யாக அதிகரித்துள்ளது. கடந்த 2018 -- 2019 பட்ஜெட்டில் கணித்திருந்த 3.3 சதவிகித நிதிப் பற்றாக் குறை யைக் காட்டிலும், 0.1 சதவிகிதம் பற்றாக்குறை அதிகரித்தது. இந்நிலையில், நிதிப் பற்றாக் குறையை 3.4 சதவிகிதத்திற்கும் அதிகமானால், தாங்கள் அம்பலப்பட்டுப் போவோம் என்பதால், ரிசர்வ்....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:20:05

குடிபோதையில் காரை ஓட்டி 2 பேரை கொன்ற கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர்

குடிபோதையில்  காரை ஓட்டி 2 பேரை கொன்ற கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர்

பெங்களூரு, பிப்.20 கருநாடக மாநிலம் சிக்மகளூர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சி.டி. ரவி எனப்படும் சிக்கமகரவல்லி திம்மே கவுடா ரவி, அம்மாநில பாஜக பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். இவர், தனது 4 நண்பர்களுடன் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றுவிட்டு, காரில் திரும்பி வந்துள்ளார்.அப்போது, குன்னிகல் நகரின் ஹசன் சாலையில், கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் அந்த 2....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:06:05

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதுடில்லி, பிப்.20 மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதிய தாரர் களுக்கும் 3 சதவீதம் அக விலைப்படி உயர்த்தப்பட்டுள் ளது. இதன்மூலம், 1.1 கோடி பேர் பயன்பெறுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்ச ரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக் கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 9 சதவீத அகவிலைப்படி வழங் கப்படுகிறது. கூடுதலாக 3 சதவீதம்....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:04:05

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை

சிறீநகர், பிப்.19  ஜம்மு காஷ் மீரில் பாதுகாப்பு படையினர் நடத் திய தேடுதல் வேட்டையில் புல் வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல் பட்ட தீவிரவாதி கம்ரான் உட்பட மூன்று பேர் சுட்டுக் கொல் லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரு ராணுவ அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ் மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்கு தலில் 40 சிஆர்பிஎப்....... மேலும்

19 பிப்ரவரி 2019 16:16:04

அரசியல் பேச்சுகளால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது பிரதமர் மோடி செயலில் காட்ட வே…

மும்பை, பிப்.19 அரசியல் பேச்சுகளால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடாது; புல்வாமா தாக்குதலுக்கு பழிதீர்ப்போம் என்ற உறுதியை, பிரதமர் மோடி செயலில் காட்ட வேண்டும் என்று சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்தியிலும், மகாராட்டிரத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் சிவசேனை, அண்மைக் காலமாக பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி தற்கொலைப் படை பயங்கரவாதி....... மேலும்

19 பிப்ரவரி 2019 16:14:04

மதக் கலவரத்திற்கு துவக்கமா?

மதக் கலவரத்திற்கு துவக்கமா?

புல்வாமா பேரில் இஸ்லாமியர்கள்மீது தாக்குதல் பல்வேறு மாநிலங்களில் காஷ்மீர் மாணவர்கள்மீது பஜ்ரங்தள், விஎச்பி கும்பல் தாக்குதல்! புதுடில்லி, பிப். 19 -புல்வாமா பயங் கரவாதத் தாக்கு தலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் படித்து வரும், காஷ்மீர் மாநில மாணவர்கள், சங் - பரிவாரங்களால் தாக்குதலுக்கு உள் ளாகி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் 50 காஷ்மீர் மாணவர்கள், ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினரை தொடர்பு கொண்டு,....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:57:03

அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம்: பொது சேவை மய்யங்களில் விண்ணப்பிக்கலாம்

புதுடில்லி, பிப். 19- மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறும் வகையிலான பிரத மரின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அமைப்புசாரா தொழிலா ளர்கள், நாடெங்கிலும் உள்ள 3.13 லட் சம் பொது சேவை மய்யங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பொது சேவை மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அமைப்புசாரா தொழிலாளர்களின் ஓய்வூதியத்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:56:03

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்., - ஜே.எம்.எம்., கூட்டணி

புதுடில்லி, பிப்.19 ஜார்க் கண்ட் மாநிலத்தில், காங்., உடன் கூட்டணி அமைத்து, நாடாளுமன்ற தேர்தலை சந்திக் கப் போவதாக, ஜே.எம்.எம்., எனப்படும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர், ஹேமந்த் சோரன் கூறியுள்ளார். ஜார்க்கண்டில், பா.ஜ., வை சேர்ந்த ரகுபர் தாஸ் முதல்வராக உள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக, காங்., உடன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அமைத் துள்ளது. இதுகுறித்து, ஜார்க்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:34:03

மருத்துவம், சட்டப்படிப்புகளை கேலி கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது

உச்சநீதிமன்றம் எச்சரிக்கை டில்லி, பிப்.19 மருத்துவம் மற்றும் சட்டப்படிப்புகளை கேலி கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக் குவதை அனுமதிக்க முடியாது. உத்தர பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரியில் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்த சென்றனர். அப்போது கல்லூரிக்குள் அவர்களை அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து அக்கல்லூரிமீது....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:34:03

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு - சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தியதால் வேலை வாய்ப்புகள் கடுமையாக…

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு - சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தியதால் வேலை வாய்ப்புகள் கடுமையாக பாதிப்பு

மத்திய அரசுமீது  மன்மோகன்சிங் தாக்கு புதுடில்லி, பிப்.19 புதுடில்லியில் நேற்றுமுன்தினம் நடந்த மேலாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முன் னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவரு மான மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நாட்டின் பொருளாதார நிலை, நாடு எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். அப்போது அவர் கூறியதாவது:- விவசாயிகளின் கடுமையான....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:34:03

இந்தியாவை கடும் வெயில் தாக்கும்- ஆய்வு அறிக்கையில் தகவல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, அக். 11- சூரிய ஒளி பூமியை நேரடியாக தாக்காமல் இருக்க பூமி கோளத்தை சுற்றி குடை போல ஓசோன் படலம் இருக்கிறது.

நாம் எரிக்கப்பயன்படுத்தும் பொருட் களால் கார்பன் வெளியேறி அவை ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற் படுத்துகின்றன. இதனால் சூரிய வெப் பத்தின் தாக்குதல் பூமியில் அதிகமாகி றது. இது பருவநிலை மாற்றத்தை ஏற் படுத்தி, பல்வேறு பாதிப்புகளை உரு வாக்குகிறது.

பருவநிலை மாற்றத்தை தடுப்பதற் காக அய்.நா.சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக அய்.நா.சபையின் மேற்பார்வையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட பருவ நிலை மாற்றக்குழு செயல்பட்டு வருகிறது.

இந்த குழு பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை களை எடுத்து வருகின்றன.

பருவ நிலை மாற்றத்தை எப்படி கட்டுப்படுத்துவது? இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை இந்த குழு தயாரித்துள்ளது.

வருகிற டிசம்பர் மாதம் போலந்து நாட்டில் உள்ள கடோவைஸ் நகரில் பருவ நிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்பட உள்ளது.

இந்த ஆய்வு அறிக்கை இப்போது வெளியாகி உள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வருங்காலத்தில் இந்தியாவை கடுமையான வெப்பம் தாக்கும் என்று அதில் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே பருவநிலை மாற்றம் காரணமாக 2015ஆம் ஆண்டு இந்தி யாவை கடுமையான வெப்பம் தாக்கி யது. அப்போது 2,500 பேர் உயிர் இழந் தனர். அதே போன்ற வெப்ப தாக்குதல் இனிமேல் இருக்கும் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

கடந்த 150 ஆண்டில் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப் பாக தொழிற்சாலைகள் வந்த பிறகு அதற்கு பயன்படுத்தப்படும் எரிபொருட் களால் கார்பன் வெளியேறி இந்த மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

150 ஆண்டுகளில் டில்லியின் வெப்ப நிலை 1 டிகிரி அதிகரித்து இருக்கிறது. மும்பையில் 0.7 டிகிரியும், கொல்கத் தாவில் 1.2 டிகிரியும், சென்னையில் 0.6 டிகிரியும் அதிகரித்து உள்ளன.

தொடர்ந்து நிலைமை மோசமாக இருப்பதால் 2030ஆ-ம் ஆண்டு வாக்கில் வெப்பநிலை மேலும் 1.5 டிகிரி அதிகரிக்கும் என்றும் பின்னர் 2052-க்குள் அதற்கு மேல் 1.5 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. எனவே வெப்ப நிலையை குறைப்பதுடன் 1.5 டிகிரிக்கு மேல் அதிகரித்து விடாமல் தடுப்பதற் கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய துணைக்கண்டத்தை பொருத்த வரையில் கொல்கத்தா, கராச்சியில் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறுகின்றது. வெப்பநிலை 2 டிகிரி வரை அதிகரித் தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற விவரங்களும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளன.

அதன்படி இந்தியாவிலும், பாகிஸ் தானிலும் கடுமையான வெப்பநிலை நிலவும். மலேரியா, டெங்கு போன்ற கிருமிகளால் ஏற்படக்கூடிய நோய்கள் பரவும். 2050ஆ-ம் ஆண்டு வாக்கில் 35 கோடி மக்கள் கடுமையாக பாதிப்புகளை சந்திக்க நேரிடும். விவசாய உற்பத்தி கடுமையாக பாதிப்படையும், இதனால் விலைவாசி உயர்வு, வறுமை, மக்கள் இடம் பெயர்வு போன்றவையும் நிக ழும். கடலில் வெப்ப நிலை அதிகரித்து உயிர் இனங்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும். காடுகள் தீப்பற்றி எரியும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது சம்பந்தமாக பருவ நிலை மாற் றம் நிபுணர் ஆர்தர் வெயின்ஸ் கூறும் போது, பருவ நிலை மாற்றத்தால் பல கோடி மக்கள் உயிரிழப்பை சந்திக்க வேண்டி இருக்கும் என்றார்.

வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் கார்பன் வெளியீடு 45 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறினார்கள். வெப்ப நிலை அதிகரிக்கும் போது தாவரங்கள் வளர முடியாத நிலை உருவாகியும், அரிசி, கோதுமை, மக்காச்சோளம் தானியங்கள் விளைய முடியாமல் கடும்பாதிப்பை ஏற்படும். இதனால் உணவு பற்றாக் குறையால் பஞ்சம் ஏற்படும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner