முன்பு அடுத்து Page:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, டிச.18 ரூ.1,264 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்ற மத்திய அமைச் சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இந்த மருத்துவமனையை 45 மாதங்களில் நிர்மாணிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங் களை மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் திங்கள் கிழமை இரவு....... மேலும்

18 டிசம்பர் 2018 16:40:04

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு

ஜெய்ப்பூர், டிச. 18- ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி யும், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணியும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தன. சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய 3 மாநி லங்களில், பாரதீய ஜனதாவி டம் இருந்து காங்கிரஸ் ஆட் சியை கைப்பற்றியது. சத்தீஷ்காரில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட் சியை....... மேலும்

18 டிசம்பர் 2018 16:40:04

தெலங்கானாவில் இடஒதுக்கீட்டுக்கு உச்சவரம்பு

அய்தராபாத், டிச. 17- தெலங்கா னாவில் உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடியினத்தவர் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்யும் அவசர சட்டத்தை அந்த மாநில அரசு பிறப்பித்து உள்ளது. தெலங்கானா உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பை 67 சதவீதமாக உயர்த்த அந்த மாநில சட்டப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் சட்டமியற் றப்பட்டது. இதர பிற்படுத்தப் பட்டோருக்கான....... மேலும்

17 டிசம்பர் 2018 15:55:03

கோவில் பிரசாதம்: பலி எண்ணிக்கை உயர்வு

பெங்களூரு, டிச. 17- கருநாடக வின் சாம்ராஜ்நகர் மாவட்டத் துக்கு உட்பட்ட சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா கோவில் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கலச பூஜை நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங் கப்பட்டன. அந்த பிரசாதத்தை சாப் பிட்ட சிறிது நேரத்தில் 12 பக் தர்கள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார் கள். வாந்தி, மயக்கம்....... மேலும்

17 டிசம்பர் 2018 15:55:03

இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் கட்டமைப்பை மறு ஆய்வு செய்ய ஆலோசனை புதிய ஆளுநர் தலைமையில் நடந்த கூ…

மும்பை, டிச.17 இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஅய்) நிர்வாகக் கட்டமைப்பை மறுஆய்வு செய்வது குறித்து பரிசீலிக்க ஆர்பிஅய் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்பிஅய்-யின் புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலை மையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டது. அவரது தலைமையில் நடை பெற்ற முதல் ஆர்பிஅய் ....... மேலும்

17 டிசம்பர் 2018 15:32:03

மிசோரம் மாநில முதல்வராக பொறுப்பேற்றார் ஜோரம்தங்கா

அய்சால், டிச.17 மிசோரம் மாநில புதிய முதல் வராக எம்என்எப் கட்சித் தலைவர் ஜோரம் தங்கா (84) நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மிசோரம் சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடை பெற்ற தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) அமோக வெற்றி பெற்றது. அங்கு மொத்தம் உள்ள 40 இடங்களில் எம்என்எப் கட்சிக்கு 26 இடங்கள் கிடைத்தன........ மேலும்

17 டிசம்பர் 2018 15:32:03

ரபேல் ஊழல் & உச்சநீதிமன்றம் - இன்றைய தீர்ப்புபற்றி புரியாமல் பதிவிடும் கிறுக்குப்பசங்களுக்கு!!

இது ஒன்றும் நீதிமன்றம் விசாரித்து மோடி குற்றமற்றவர் என்று சொல்லவில்லை.. மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகள்.. 1. எதற்காக அதிக விலை கொடுத்து விமானங்கள் வாங்கப் பட்டுள்ளது? 126க்கு பதில் எதற்கு 36 வாங்கப்பட்டுள்ளது? விலையை அரசு வெளியிடவேண்டும். உச்சநீதிமன்றம்: இதைப்பற்றி விசாரிக்கும் உரிமை எங்களுக்கு இல்லை.. ஆனால் ரபேல் தரமான விமானம்.. அதில் சந்தேகம் வேண்டாம்... (இன்று வரை இந்த கேள்விக்கு பதில் இல்லை) 2. எதற்கு HALக்கு கொடுக்கப்பட்ட ஆர்டர் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ்'க்கு கொடுக்கப்பட்டது? உச்சநீதிமன்றம்:....... மேலும்

17 டிசம்பர் 2018 15:09:03

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் நிர்பயாவுக்கு செய்யும் மரியாதை

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் நிர்பயாவுக்கு செய்யும் மரியாதை

முதல்வர் கேஜரிவால் புதுடில்லி, டிச.17 பெண் களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதுதான் நிர்பயாவுக்கு நாம் செய்யும் சிறப்பான மரி யாதை என்று டில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு, டிசம்பர் 16-ஆம் தேதி நள்ளிரவில் தில்லி முனிர்கா பகுதியில் ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயா அய்ந்து இளைஞர்கள் மற்றும் சிறுவனால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இச்சம்பவத்திற்குப்....... மேலும்

17 டிசம்பர் 2018 15:01:03

விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும்

விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும்

மயில்சாமி அண்ணாதுரை வேண்டுகோள் புதுச்சேரி, டிச.17 விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசின் வேளாண் அறிவியல் துறை சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் ஊக்குவிப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, புதுச்சேரி தவளக் குப்பத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் கல்லூரி சுற்றுச்சூழல் - வேளாண் மேம் பாட்டு மய்யத்துடன் இணைந்து இந்த முகாம் ஞாயிற்றுக்....... மேலும்

17 டிசம்பர் 2018 15:01:03

ரபேல் போர் விமான ஒப்பந்த வழக்கு

ரபேல் போர் விமான ஒப்பந்த வழக்கு

உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழி நடத்தியது வழக்கின் தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல் புதுடில்லி, டிச.17 ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறை கேடும் நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த 14-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், “ரபேல் போர் விமான விலை நிர்ணய விவரங்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்க வில்லை. ஆனால் தலைமை கணக்கு தணிக்கையரிடம் தெரிவிக்கப்பட்டது என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள....... மேலும்

17 டிசம்பர் 2018 14:57:02

வெற்று முழக்கமானது மோடி அரசின் உறுதிமொழி விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கப் போவதில்லை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆய்வில்  தகவல்

புதுடில்லி, அக்.11- வெற்று முழக்கமானது மோடி அரசின் உறுதிமொழி. இந்த ஆண்டில் இந்திய விவசாயிகளின் வரு மானம் அதிகரிக்கப் போவதில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விவசாயிகளின் வருமா னத்தை இரட்டிப்பாக்குவோம் என்று மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு உறுதியளித்திருந்தது. அதன் நட வடிக்கையாகவே குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்கியதாகவும் மோடி அரசு கூறியது. விவசாயிகளின் உற்பத்திச் செலவை விட 50 சதவிகிதம் கூடுதலான அளவில் அவர்களுக்கு விலை கிடைக்கச் செய்வதே பாஜக அரசின் இலக்கு என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஆனால் இதுவரை பாஜக அரசு செயல்படுத்தவில்லை. பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்காக சலுகைகளை வாரி வழங்கும் மோடி அரசு, விவசாயி களை கண்டுகொள்வதில்லை என்று விவசாயிகள்மற்றும்விவசாயஇயக் கங்கள்குற்றம்சாட்டுகின்றன.சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் முழு வதுமுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர் நடைபயணமாக வந்து மும்பையில் சங்கமித்ததும் உத்தர்கண்ட் மாநில விவசாயிகள் டில்லி நோக்கி பெரும் பேரணியாக வந்ததும் மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்கள் பயனடையக்கூடிய விதத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

விவசாயக்கடன் தள்ளுபடி, பெட் ரோல், டீசல் விலைக்குறைப்பு, விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தற்போதைய மோடி அரசு நிறைவேற்றாமல் வெறும் வாய்ச்சவடால் அடித்து வருவதாக கோபத்துடன் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டில் இந்திய விவசாயிகளின் வருமானம் உயரப் போவதில்லை என்று கிரிசில் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. குஜராத், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர் உற்பத்தி இந்த ஆண்டில் குறைவாகவே இருக்கும் என்று கிரிசில் எச்சரித்துள்ளது. இந்தப் பருவத்தில் மேற்கூறிய மாநிலங்களில் 20 சதவிகிதம் குறை வானஅளவிலேயேமழைப்பொழிவு இருந்துள்ளது.

இதுகுறித்துகிரிசில் நிறு வனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறுவை பருவ பயிர்களுக்கு உகந்த மாநிலங்களான குஜராத், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளிலும், ஆந் திரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ் டிரா, மத்தியப் பிரதேசம், கருநாடகா ஆகிய மாநிலங்களிலும் மழைப் பொழிவு குறைந்துள்ளது. அதேபோல, சில மாநிலங்களில் நீர்த்தேக்கப் பகுதிகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாலும், வரும் பருவத்திலும் பயிர் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டில் சோளம், கம்பு ஆகிய பயிர்களின் உற்பத்தி ராஜஸ்தான் மாநிலத்தில் குறைவாகவே இருக்கும். மேற்கு வங்கத்தில் சணல் உற்பத்தியும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் பருத்தி உற்பத்தியும் இந்த ஆண்டில் குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் 52 சதவிகித அளவிலான குடும்பங்கள் விவசாயத்தையே நம்பியுள்ளதாகவும், இந்த ஆண்டில்அவர்களின் வருவாய் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.விவசாயிகளின் வரு மானத்தைஇரட்டிப்பாக்குவோம்என்ற மோடிஅரசின் உறுதிமொழி வெற்று முழக்கமானது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என்று விவசாய இயக்கங்கள், அரசியல் கட்சியினர் கூறியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner