முன்பு அடுத்து Page:

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை

சிறீநகர், பிப்.19  ஜம்மு காஷ் மீரில் பாதுகாப்பு படையினர் நடத் திய தேடுதல் வேட்டையில் புல் வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல் பட்ட தீவிரவாதி கம்ரான் உட்பட மூன்று பேர் சுட்டுக் கொல் லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரு ராணுவ அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ் மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்கு தலில் 40 சிஆர்பிஎப்....... மேலும்

19 பிப்ரவரி 2019 16:16:04

அரசியல் பேச்சுகளால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது பிரதமர் மோடி செயலில் காட்ட வே…

மும்பை, பிப்.19 அரசியல் பேச்சுகளால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடாது; புல்வாமா தாக்குதலுக்கு பழிதீர்ப்போம் என்ற உறுதியை, பிரதமர் மோடி செயலில் காட்ட வேண்டும் என்று சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்தியிலும், மகாராட்டிரத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் சிவசேனை, அண்மைக் காலமாக பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி தற்கொலைப் படை பயங்கரவாதி....... மேலும்

19 பிப்ரவரி 2019 16:14:04

மதக் கலவரத்திற்கு துவக்கமா?

மதக் கலவரத்திற்கு துவக்கமா?

புல்வாமா பேரில் இஸ்லாமியர்கள்மீது தாக்குதல் பல்வேறு மாநிலங்களில் காஷ்மீர் மாணவர்கள்மீது பஜ்ரங்தள், விஎச்பி கும்பல் தாக்குதல்! புதுடில்லி, பிப். 19 -புல்வாமா பயங் கரவாதத் தாக்கு தலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் படித்து வரும், காஷ்மீர் மாநில மாணவர்கள், சங் - பரிவாரங்களால் தாக்குதலுக்கு உள் ளாகி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் 50 காஷ்மீர் மாணவர்கள், ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினரை தொடர்பு கொண்டு,....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:57:03

அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம்: பொது சேவை மய்யங்களில் விண்ணப்பிக்கலாம்

புதுடில்லி, பிப். 19- மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறும் வகையிலான பிரத மரின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அமைப்புசாரா தொழிலா ளர்கள், நாடெங்கிலும் உள்ள 3.13 லட் சம் பொது சேவை மய்யங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பொது சேவை மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அமைப்புசாரா தொழிலாளர்களின் ஓய்வூதியத்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:56:03

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்., - ஜே.எம்.எம்., கூட்டணி

புதுடில்லி, பிப்.19 ஜார்க் கண்ட் மாநிலத்தில், காங்., உடன் கூட்டணி அமைத்து, நாடாளுமன்ற தேர்தலை சந்திக் கப் போவதாக, ஜே.எம்.எம்., எனப்படும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர், ஹேமந்த் சோரன் கூறியுள்ளார். ஜார்க்கண்டில், பா.ஜ., வை சேர்ந்த ரகுபர் தாஸ் முதல்வராக உள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக, காங்., உடன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அமைத் துள்ளது. இதுகுறித்து, ஜார்க்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:34:03

மருத்துவம், சட்டப்படிப்புகளை கேலி கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது

உச்சநீதிமன்றம் எச்சரிக்கை டில்லி, பிப்.19 மருத்துவம் மற்றும் சட்டப்படிப்புகளை கேலி கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக் குவதை அனுமதிக்க முடியாது. உத்தர பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரியில் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்த சென்றனர். அப்போது கல்லூரிக்குள் அவர்களை அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து அக்கல்லூரிமீது....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:34:03

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு - சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தியதால் வேலை வாய்ப்புகள் கடுமையாக…

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு - சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தியதால் வேலை வாய்ப்புகள் கடுமையாக பாதிப்பு

மத்திய அரசுமீது  மன்மோகன்சிங் தாக்கு புதுடில்லி, பிப்.19 புதுடில்லியில் நேற்றுமுன்தினம் நடந்த மேலாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முன் னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவரு மான மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நாட்டின் பொருளாதார நிலை, நாடு எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். அப்போது அவர் கூறியதாவது:- விவசாயிகளின் கடுமையான....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:34:03

மத வன்முறைகள், பாலியல் மற்றும் கலாச்சார அடையாளங்களுடன் புதிய அரசியல் பெருகிவருகிறது

மத வன்முறைகள், பாலியல் மற்றும் கலாச்சார அடையாளங்களுடன் புதிய அரசியல் பெருகிவருகிறது

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் வேதனை மும்பை, பிப்.19 மும்பை உயர்நீதிமன்றத்தில்  நடைபெற்ற நிகழ்வில் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்துகொண்டு பேசுகையில்,  உணவை வைத்திருந்தான் என்கிற காரணத்தால் ஒரு ஆண் அல்லது பெண் கொல்லப்பட்டார்கள் என்றால், அரசமைப்புச்சட்டமே சாகடிக்கப்பட்டுள்ளது என்று பொருள். மேலும், அரசமைப்புச்சட்டத்தின் தத்துவம் மற்றும் நோக்கங்களுக்கும், செயல்பாடுகளுக்குமிடையே பிளவு ஏற்பட்டுள்ளது  என்று  வேதனை....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:34:03

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஅய் தொடர்ந்து விசாரணை நடத்தலாம் உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, பிப்.19 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதலில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் பின்னர் சி.பி.சி.அய்.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உயர்நீதிமன்றம் மதுரை கிளை சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்து, சி.பி.அய். அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம்  13 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சி.பி.அய்........ மேலும்

19 பிப்ரவரி 2019 15:12:03

பாதுகாப்புக் குறைபாடுகள்தான் புல்வாமா தாக்குதலுக்கு காரணம்!

உளவுத்துறை முன்னாள் தலைவர் குற்றச்சாட்டு அய்தராபாத், பிப். 19 -புல்வாமா தாக்குதலுக்கு, முழுக்க முழுக்க பாதுகாப்புக் குறைபாடு களே காரணம் என்று இந்திய உளவுத் துறையின் முன்னாள் தலைவர் விக்ரம் சூட் குற்றம்சாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம், அய்தராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்ப தாவது: காஷ்மீர் மாநிலம் புல்வாமா-வில் நடந்த தாக்கு தலுக்கு முழுக் காரணமும், பாதுகாப்புக் குறைபாடுதான்........ மேலும்

19 பிப்ரவரி 2019 15:01:03

தகவல்பெறும் ஆணையப் பணியிடங்கள் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, ஜூலை  8 தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க வேண்டிய ஆணைய பதவிக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமலிருப்பது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு எட்டு மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பி யுள்ளது.

மத்திய தகவல் ஆணையத்தின் கீழ் இயங்கும் மாநில தகவல் ஆணை யங்களில் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப் பாமல் இருப்பதால், தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்படி தகவல்களை அளிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட் டுள்ளதற்கு உரிய விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரப் பிர தேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, கருநாடகா, ஒடிசா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் அனுப் பிட  உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி உத்தரவு பிறப் பித்தார்.

நீண்ட காலமாக காலிப் பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருப்பது ஏன் என்று நீதிபதி ஏ.கே.சிக்ரி அரசு சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்திடம் கேள்வி எழுப்பினார்.

அஞ்சலி பரத்துவாஜ், பணிஓய்வு பெற்ற இராணுத் தளபதி லோகேஷ் பாத்ரா மற்றும் அம்ரிதா ஜோஷி ஆகியோர் சார்பில் வழக்குரைஞர்கள் காமினி ஜெய்ஸ் வால், பிரனாவ் சச்தேவா ஆகியோர் இவ்வழக்கில் வாதாடியபோது, தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி நியமனங்கள் செய்யப்பட வேண்டி யவற்றை மத்திய, மாநில அரசுகள் குறித்த காலத்தில் செய்யாம லிருப்பதன்மூலம், மூடிமறைக்கின்ற முயற்சியை செய்து வருகின்றன என்று கூறினார்கள்.

ஆன்-லைன் மூலம் மட்டுமே பிறப்பு-இறப்புச் சான்றிதழ்: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஜூலை 8  ஆன்-லைன் மூலம் மட்டுமே பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கையால் எழுதப்பட்ட சான்றிதழையோ அல்லது அரசால் வரை யறுக்கப்பட்ட மென்பொருளைத் தவிர்த்து வேறு வகையான மென் பொரு ளிலோ சான்றிதழ்களை வழங்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் பிறப்பு-இறப்பு பதிவு தலைமைப் பதிவாளர் கே.குழந்தைசாமி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.  அதன் விவரம்:
தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு நடவடிக்கைகளை தமிழக அரசின் வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், சுகாதாரம் மற்றும் மாநக ராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. அவை பிறப்பு மற்றும் இறப்புக்காக வெவ்வேறு மென்பொருள்களைப் பயன்படுத்தி வந்தன. இப் போது அனைவருக்கும் பொது வாக சிஆர்எஸ் மென்பொருள் வழங்கப் பட்டுள்ளது. இந்த மென்பொருள், கடந்த ஆண்டு அக்.1-ஆம் தேதி முதல் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட மென் பொருள் மூலம் வழங்கப்படும் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழுக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் உள்ளது. இது அரசு மற்றும் அரசு சாரா அனைத்துத் தேவை களுக்கும் உண்மையான சான்றாகக் கருதப்பட வேண்டும். கையால் எழுதப் பட்ட பிறப்பு மற்றும் இறப்புச் சான்றி தழ்களை பதிவாளர்கள் வழங்கக் கூடாது. மேலும், அரசால் அங்கீகரிக்கப்படாத மென்பொருள்கள் வழியாகவும் சான்றி தழ்களை அளிக்கக் கூடாது.
அனைத்து பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை சி.ஆர்.எஸ். மென்பொரு ளின் வழியாகவே மட்டுமே அளிக்க வேண்டுமென அனைத்துப் பதிவாளர் களுக்கும் உத்தரவிட வேண்டும்.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி, பல மாநிலங்களிலும் ஆணையர் பதவி களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்ப டாமல் இருந்து வருவதால், ஆணையத்திலிருந்து தகவல்களைப் பெறுவதற்கு பல மாதங்கள் ஆகின்றன. இன்னும் சில தகவல்களைப் பெறுவதில் பல ஆண்டு கள் கூட ஆகின்றன. மேல்முறையீடு செய்வது, புகாரளிப்பது என அனைத்திலும் தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005இன்கீழ் செயல்பாடு களைத் தொடர முடியாமல் அதன் நோக்கம் தோல்வியில் முடிகிறது.

மத்திய தகவல் ஆணையத்தில் நான்கு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதனால், மேல் முறையீடுகள், புகார்கள் என 23,500க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நிலுவையில் உள்ளன.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஆணை யம் முற்றி லும் செயல்பாடின்றி உள்ளது. ஒரேயொரு ஆணையர் கூட இதுநாள்வரை நியமிக்கப்படவில்லை. மராட்டிய மாநிலத்தில் நான்கு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதை யடுத்து, பெரும் பின்னடைவாக 40 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மேல்முறை யீடுகள், புகார்கள் முடங்கிப்போய் உள்ளன.

கேரளாவில் ஒரேயொரு ஆணைய ரைக்கொண்டு ஆணையம் இயங்கி வருகிறது. 14ஆயிரத்துக்கும் மேற் பட்ட மேல்முறையீடுகள், புகார்கள் நிலுவையில் உள்ளன. அதேபோன்று கருநாடக மாநிலத்தில் ஆணையத் தில் ஆறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 33ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்முறை யீடுகள், புகார்கள் நிலுவையில் உள்ளன.

ஒடிசாவில் மூன்று ஆணையர்கள் மட்டுமே உள்ளனர். அதனால், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீடுகள், புகார்கள் நிலுவையில் உள்ளன.

தெலங்கானாவில் ஆணையத்தில் இரு ஆணை யர்கள் மட்டுமே உள்ளனர். அதனால்  15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீடுகள், புகார்கள் நிலுவையில் உள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில் இரு ஆணை யர்களை மட்டுமே கொண்டு இயங்கி வருகிறது. 10 ஆண்டு களுக்கு முன்பாக அளிக்கப்பட்ட புகார்கள், மேல் முறை யீடுகள் தற்பொழுதுதான் விசாரிக்கப் படுகின்றன.

தகவல்களை அளிப்பதற்கான ஆணை யர்கள் முறையாக செயல்பட்டால்தான், தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 இன்படி, நாட்டில்  அரசுப்பணி களில் வெளிப்படைத்தன்மை பாதுகாக்கப்படும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆணையத்தில் ஆணையர்கள் நியமிக் கப்படாமை குறித்து உரிய விளக்கங்களை அளித்திட குறிப்பிட்ட எட்டு மாநிலங் களுக்கும் கடிதம் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி ஏ.கே.சிக்ரி, மத்தியஅரசின் வழக் குரைஞரிடமும் ஏன் ஆணையப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner