முன்பு அடுத்து Page:

வேதக் கல்வி வாரியமாம் பார்ப்பன பா.ஜ.க.வின் காட்டுத் தர்பார்

புதுடில்லி, ஜன.21 -நாட் டிலேயே முதன்முறையாக, வேதம் மற்றும் அது தொடர் பான கல்விக்கென வாரியம் அமைப்பதற் கான ஒப்புதலை மத்திய மனித வளத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. மஹரிஷி சந்திபனி தேசிய வேதஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சந்திப்பு ஒன்றில், மத்திய மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த தகவலை அண்மையில் வெளியிட்டுள் ளார். இன்னும் ஒரு வாரத்துக் குள், வேதக்....... மேலும்

21 ஜனவரி 2019 17:04:05

உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் முதல்வரான பின்னர் 1100 என்கவுண்ட்டர்கள் : உச்சநீதிமன்றம் கண்…

புதுடில்லி, ஜன. 21 -உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறையினரின் என் கவுண்ட்டர்களில் மக்கள் கொல்லப் படுவது ஓர் ஆழமான விஷயமாகும் என்று உச்சநீதிமன்றம் கடிந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் முதல் வரான பின்னர் 1100 என்கவுண் டர்கள் நடை பெற்றுள்ளன; இவற்றில் 49 பேர் கொல்லப் பட்டுள்ளனர்; 370 பேர் காயம் அடைந்துள் ளனர் என்று உச்சநீதி மன்றத்தில் மக்கள் சிவில் உரிமைக்கழகம் கடந்த திங்களன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.இதனை ஆய்வு....... மேலும்

21 ஜனவரி 2019 16:52:04

சபரிமலையில் பிரச்சினை ஏற்படுத்தியது மதவாத ஆதிக்க சக்திகளே!

சபரிமலையில் பிரச்சினை ஏற்படுத்தியது மதவாத ஆதிக்க சக்திகளே!

கேரள முதல்வர் கண்டனம் திருவனந்தபுரம், ஜன.21 -ஜாதி ஆதிக்கத்தை வெறித்தனமாக நிலைநாட்ட விரும்பும் மதவாத சக்திகளே சபரிமலையில் பிரச்சி னைகள் ஏற்படுத்தினர்; அவர்கள் நடத்தும் போராட்டம் என்ற பெயரிலான வன்முறைகள் சமூகத்தில் ஈர்ப்பு ஏற்படுத்தவில்லை என்பது அவர்களுக்கே தெரியும்; கடவுள் நம்பிக்கை யாளர்களுக்கு இங்கு நடப்பவை குறித்த தெளிவு உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன்....... மேலும்

21 ஜனவரி 2019 16:52:04

சபரிமலை தந்திரிக்கு விளக்கம் கேட்டு எஸ்சி-எஸ்டி ஆணையம் தாக்கீது

திருவனந்தபுரம், ஜன. 21- -சபரிமலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் உட்பட இளம்பெண்கள் பலர் தரிசனம் செய்ததால் நடையடைத்து தீட்டு கழித்து தீண்டாமை என்கிற பாவச் செயல் புரிந்த தந்திரி கண்டரரு ராஜீவரருக்கு கேரள மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சபரிமலையில் பெண்கள் சென் றதைத் தொடர்ந்து கோயில் நடை அடைத்து தீட்டு கழித்த செயல் தீண்டாமையே........ மேலும்

21 ஜனவரி 2019 16:25:04

ரபேல்: நிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜன. 21- ரபேல் ஒப் பந்தத்தின் இந்திய பங்குதாரர் நிறுவனமாக அனில் அம்பானி யின் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது தொடர்பாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. நாட்டு நலனுடன், தனது கார்பரேட் நண்பர்களையும் பாதுகாக்கும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் தற்போதைய நிலையில் மிகவும் பாதுகாப்பற்ற அமைச் சராக இருப்பதாக அந்த கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக கட்சியின்....... மேலும்

21 ஜனவரி 2019 16:22:04

இளம் விஞ்ஞானிகள் திட்டம் 108 மாணவர்களுக்கு பயிற்சி: இஸ்ரோ தலைவர் கே.சிவன்

இளம் விஞ்ஞானிகள் திட்டம்  108 மாணவர்களுக்கு பயிற்சி: இஸ்ரோ தலைவர் கே.சிவன்

புதுடில்லி, ஜன 21- இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்க ளில் இருந்தும் தலா 3 மாணவர்கள் வீதம் 108 மாணவர்களுக்கு இந்திய விண் வெளி ஆய்வு மய்யத்தில் (இஸ்ரோ) ஆய்வுப் பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார். இது தொடர்பாக தில்லியில் செய்தி யாளர்களிடம் வெள்ளிக் கிழமை அவர் கூறியதாவது: இந்திய விண்வெளி ஆய்வு மய்யத் தின் சார்பில் இளம் விஞ்ஞானிகள் திட்டம்....... மேலும்

21 ஜனவரி 2019 16:12:04

கார்ப்பரேட்டுகளுக்காக நடத்தப்படும் மோடியின் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவோம்! கொல்கத்தா பொதுக்கூட்டத்தி…

கார்ப்பரேட்டுகளுக்காக  நடத்தப்படும் மோடியின் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவோம்! கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்!

கொல்கத்தா, ஜன 20- கார்ப்பரேட்டுகளுக்காக, கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் கார்ப்பரேட் ஆட்சியாம் பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துவோம். நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கொல்கத்தாவில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் தளபதி மு.க.கஸ்டாலின் அவர்கள் முழக்கமிட்டார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அவர்கள், பாசிச பா.ஜ.க அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கூட்டிய அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்டக் கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்....... மேலும்

20 ஜனவரி 2019 19:14:07

கார்ப்பரேட்டுகளிடம் ரூ. 437 கோடி நன்கொடை பெற்ற பாஜக!

புதுடில்லி, ஜன.20- பாஜக கடந்த ஓராண்டில் மட்டும், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து ரூ. 437 கோடியை நன்கொடை யாகப் பெற்றுள்ளது. பாஜக, தாம் பெற்ற நன்கொடை குறித்த விவரங்களை, தேர்தல் ஆணை யத்திடம் தெரிவித்துள்ளது. அதிலேயே இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 2017-2018 ஆம் ஆண்டு தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை ரூ. 469 கோடியே 89 லட்சம் ஆகும். அதில் பாஜக-வுக்கு மட்டும் 437 கோடியே 4 லட்சம்ரூபாய் கிடைத்துள்ளது. காங்கிரசுக்கு....... மேலும்

20 ஜனவரி 2019 19:07:07

உயர்கல்வி நிறுவனங்கள் பள்ளிகளுக்கு வழிகாட்டியாக செயல்படும்

உயர்கல்வி நிறுவனங்கள் பள்ளிகளுக்கு வழிகாட்டியாக செயல்படும்

மத்திய அமைச்சர் தகவல் புதுடில்லி, ஜன.20 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங் கள் (அய்அய்டி), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் (அய்அய்எஸ்இஆர்) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள், தங்கள் வளாகத்துக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் வழிகாட்டியாக செயல்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடைபெறும் வைப்ரண்ட் குஜராத் மாநாட்டின் ஒருபகுதியாக விண்வெளி ஆய்வு குறித்த கண்காட்சி நடைபெறுகிறது. அதை....... மேலும்

20 ஜனவரி 2019 19:07:07

மோடியின் நண்பர்களான தொழிலதிபர்களுக்கு உதவவே

மோடியின் நண்பர்களான தொழிலதிபர்களுக்கு உதவவே

ரஃபேல் ஒப்பந்தம்: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு புதுடில்லி, ஜன.20 பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர்களான சில தொழிலதி பர்களுக்கு உதவ வேண்டும் என்பதற் காகவே பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். தங்களுக்கு 126 போர் விமானங்கள் வேண்டும் என்று விமானப்படையிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலை யில், 36 ரஃபேல் போர் விமானங்களை மட்டுமே....... மேலும்

20 ஜனவரி 2019 18:59:06

மத்திய பாஜக அரசு நீதித் துறையை அவமதிக்கிறது: மாயாவதி குற்றச்சாட்டு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 14- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நீதித் துறையை அவமதித்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு கொலீஜியம் அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. மேலும், இத்தகைய பரிந்துரையை அனுப்புவது தொடர்பான முடிவுகளை மறுபரி சீலனை செய்யுமாறும் மத்திய அரசு கொலீஜியம் குழுவிடம் தெரிவித்தது. இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி யது.

குறிப்பாக, உத்தரகண்டில் மத்திய அரசின் ஆலோசனையின்பேரில் அமல் படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்தவர் நீதிபதி ஜோசப் என்பதால், அவரது பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போடப் படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், டில்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன் றில் பங்கேற்ற ரவிசங்கர் பிரசாத், மத்திய அரசின் மீதான விமர்சனங்க ளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசி னார். பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியம் குழுவிடம் வலியுறுத்துவது ஒன்றும் பெரும் பாவம் அல்ல என்று அவர் கூறினார். மேலும், நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகளை வாங்கி குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் பணியை மட்டும் செய்ய மத்திய அரசு ஒன்றும் அஞ்சல் அலுவலகம் கிடையாது என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்கு மாயாவதி கண் டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர் பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டி ருப்பதாவது:

நீதிபதிகள் நியமனம் தொடர்பான விவாதங்கள் எழும்போது எல்லாம் மத்திய சட்ட அமைச்சகம் ஒரே கருத் தையே திரும்ப திரும்ப கூறி வருகி றது. அதாவது, வெறுமனே அஞ்சலகம் போல தங்களால் செயல்பட முடியாது எனத் தெரிவிக்கின்றது.

மத்திய சட்ட அமைச்சகம் அஞ்சலகம் போல செயல்படாது எனும் போது, காவல் துறை போல கண் காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடு வது மட்டும் சரியா? பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நீதித் துறையை மதிக்கத் தெரியா விட் டாலும் பரவாயில்லை; அவமதிக்காம லாவது இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மாயாவதி தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner