முன்பு அடுத்து Page:

வெகுண்டெழுந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கடவுளர் படங்களை தீக்கிரையாக்கினர்

 வெகுண்டெழுந்த தாழ்த்தப்பட்ட மக்கள்  கடவுளர் படங்களை தீக்கிரையாக்கினர்

ஜாதி இழிவுகளிலிருந்து காக்க முன்வரவில்லையே! வெகுண்டெழுந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கடவுளர் படங்களை தீக்கிரையாக்கினர் புத்த மார்க்கத்தில் இணையவும் முடிவு பெங்களூரு, பிப். 25 கருநாடக மாநிலத்தில் கலபுர்கி மாவட்டம் ஜெவர்கியை அடுத்த கோண்டகுளி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்கள் சென்றனர். கோயில் திருவிழாவில் தாழ்த்தப்பட்டவர்கள் கலந்துகொள்வதா என்று ஜாதி ஆணவம் கொண்ட உயர்ஜாதி வகுப்பினர் 9.2.2018 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினரை கடுமையாகத் தாக்கினார்கள். இந்த மோசமான தாக்குதலில் தாழ்த்தப்பட்ட....... மேலும்

25 பிப்ரவரி 2018 15:09:03

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம்

விஜயபுரா, பிப்.25  மத்தி யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சட்டப்பேரவை நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக் கும் சட்டம் கொண்டு வரப் படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். விஜயபுரா மாவட்டத்தின் திகோட்டா கிராமத்தில் நேற்று (24.2.2018) நடைபெற்ற காங் கிரஸ் கட்சியின் மகளிர் மாநாட்டில் பங்கேற்று அவர் கூறியதாவது: கர்நாடகத்தில் பிறந்த பச வண்ணர், அக்கமகாதேவி, கித் தூர் ராணி சென்னம்மா உள் ளிட்டோர்....... மேலும்

25 பிப்ரவரி 2018 15:02:03

மக்கள் பணத்தை வீணடிப்பது பாஜகவின் பாணி மாயாவதி குற்றச்சாட்டு

மக்கள் பணத்தை வீணடிப்பது பாஜகவின் பாணி  மாயாவதி குற்றச்சாட்டு

  லக்னோ, பிப்.24 முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் கோடிக் கணக்கான பொதுப் பணத்தை வீணடிப்பது பாஜகவின் பாணியாகி விட்டது என்று உ.பி. அரசின் செயல்பாடுகள் குறித்து மாயாவதி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத் துள்ளார். உ.பி.யில் நடைபெற்று வந்த இரண்டுநாள் முதலீட்டாளர்கள் மாநாடு முடிவுற்ற நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதி அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்கவே,மக்களைதிசை திருப்புவதற்காக மாநாடு நடத் தப்படுகிறது என்று கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர்....... மேலும்

24 பிப்ரவரி 2018 16:32:04

ஜெய்ப்பூர் காந்தி நகர் ரயில் நிலையம் இந்தியாவின் முதல் பெண்கள் ரயில் நிலையமானது

  ஜெய்ப்பூர் காந்தி நகர் ரயில் நிலையம் இந்தியாவின் முதல் பெண்கள் ரயில் நிலையமானது

ஜெய்ப்பூர், பிப். 24- ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் உள்ள காந்தி நகர் ரயில் நிலையம் முழுவதும் பெண் களால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது காந்தி நகர் ரயில் நிலையம். தற்போது, இந்த ரெயில் நிலையத்தில் கண்காணிப்பா ளர், பயணச்சீட்டு பரிசோதகர், ரயில் நிலைய பெண் காவலர், ரயில் நிலைய தலைவர் (ஸ்டே ஷன் மாஸ்டர்), பயணச்சீட்டு முன்பதிவு கிளார்க்,....... மேலும்

24 பிப்ரவரி 2018 14:53:02

சபாஷ் மம்தா ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளுக்குத் தடை!

சபாஷ் மம்தா ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளுக்குத் தடை!

சிலிகுரி பிப் 23 மேற்கு வங்கத்தில் விதிமுறை களைப் பின்பற்றாத மதவெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளுக்கு தடை விதித்து மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். மேற்கு வங்கத்தில் 1975இல் இருந்து ஆர்.எஸ்.எஸ் பள்ளிக் கூடங்கள் நடத்தி வருகிறது. 2012இல் மேற்கு வங்கத்தில் உருவான சில விதி முறைகளை, இந்த பள்ளிகள் பின்பற்றாத காரணத் தால் தற்போது மூடப்பட்டு இருக்கிறது. இதற்கு ஆர்.எஸ்.எஸ், பாஜக எதிர்ப்பு தெரிவித்து....... மேலும்

23 பிப்ரவரி 2018 15:35:03

நீரவ் மோடி ஊழல் விவகாரம்: அருண் ஜெட்லிக்கு யஷ்வந்த் சின்ஹாவின் 10 கேள்விகள்

நீரவ் மோடி ஊழல் விவகாரம்:  அருண் ஜெட்லிக்கு யஷ்வந்த் சின்ஹாவின் 10 கேள்விகள்

புதுடில்லி, பிப்.23 பஞ்சாப் நேஷனல் வங்கி, நீரவ் மோடி மோசடி விவகாரம் நம் நாட்டு வங்கிகள் அமைப்பின் நிலையை பறைசாற்றுவதாக உள்ளது என்று கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் மோடி அரசின் ஒளிரும் பிம்பத்தையும் சாய்த்துள்ளது என்று சாடியுள்ளார். இது குறித்து யஷ்வந்த் சின்ஹா ஆங்கில ஊடகம் ஒன்றில் எழுதியுள்ள பத்தியில் கூறும்போது, ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல், கேத்தன் பரேக் ஊழல் தொடர் பாக குற்றச்சாட்டு....... மேலும்

23 பிப்ரவரி 2018 15:12:03

பெண்களுக்கு முதுகலை படிப்பு வரை இலவச கல்வி கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

 பெண்களுக்கு முதுகலை படிப்பு வரை இலவச கல்வி கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு, பிப்.20 கருநாடகா வில் பெண்களுக்கு தொடக்கக் கல்வி முதல் முது கலை படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என அம் மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கருநாடக முதல்வர் சித்த ராமையா 17ஆம் தேதி சட்டப் பேரவையில் 2018-  -  2019-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது உரையில், கருநாடகாவில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 2017- 2018-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அரசுப் பள்ளி,....... மேலும்

20 பிப்ரவரி 2018 15:54:03

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கருநாடக அரசு தடையாக இருந்தால் அதை புதுவை காங்கிரஸ் அரசு எதிர்க்கும…

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  கருநாடக அரசு தடையாக இருந்தால் அதை  புதுவை காங்கிரஸ் அரசு எதிர்க்கும் : முதல்வர் வே.நாராயணசாமி

புதுச்சேரி, பிப்.19 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கருநாடக காங்கிரஸ் அரசு தடையாக இருந்தால், அதை புதுவை காங்கிரஸ் அரசு கடுமையாக எதிர்க்கும் என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்க ளுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: பஞ்சாப் நேஷனல் வங்கி யில் நடைபெற்ற மோசடி சம்பந்தமாக நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நீரவ் மோடியும், அவரது குடும்பத்தினரும், அவருக்கு வேண்டியவர்களும் ரூ.11,400 கோடி வங்கிப் பணத்தை மோசடி....... மேலும்

19 பிப்ரவரி 2018 16:01:04

ரூ.11,400 கோடி மோசடி மன்னன் நீரவ் மோடிபற்றி 2015ஆம் ஆண்டு முதலே பிரதமர் மோடி அறிவார்

ரூ.11,400 கோடி மோசடி மன்னன் நீரவ் மோடிபற்றி  2015ஆம் ஆண்டு முதலே பிரதமர் மோடி அறிவார்

ரூ.11,400 கோடி மோசடி மன்னன் நீரவ் மோடிபற்றி 2015ஆம் ஆண்டு முதலே பிரதமர் மோடி அறிவார் புகார்களைக் குப்பைத் தொட்டியில் வீசினார் பிரதமர் மோடி திடுக்கிட வைக்கும் அதிர்ச்சித் தகவல்கள்!   புதுடில்லி, பிப்.18 பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி ரூபாய் மோசடி செய்த நீரவ் மோடிபற்றி பிரதமர் மோடிக்கு 2015 ஆம் ஆண்டே தெரியும். ஆனாலும் அவர் மீதான புகார்களை பிரதமர் மோடி கண்டு கொள்ள வில்லை என்ற திடுக்கிடும்....... மேலும்

18 பிப்ரவரி 2018 14:22:02

கலவரத்துக்குத் தொடை தட்டுகிறது பிஜேபி தாஜ்மகாலை தேஜ் மந்திராக (கோவிலாக மாற்றுவார்களாம்)

 கலவரத்துக்குத் தொடை தட்டுகிறது பிஜேபி தாஜ்மகாலை தேஜ் மந்திராக (கோவிலாக மாற்றுவார்களாம்)

காதல் சின்னமாக விளங்கும் தாஜ்மகாலை விரைவில் தேஜ்மந்திர் என்ற கோவிலாக மாற்றுவோம் என்று மதவெறிப் பேச்சை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பேசியுள்ளார். இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது, உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் தாஜ் மகா உத்சவம் என்ற பெயரில் 10 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது,  இதற்கான விழாவை இந்த ஆண்டு நவராத்திரி அன்று துவங்க முடிவு செய்துள்ளது சாமியார் ஆதித்யநாத் அரசு எடுத்த இந்த முடிவிற்கு சமூக ஆர்வலர்களும், அரசியல்....... மேலும்

17 பிப்ரவரி 2018 16:13:04

டில்லியில் தீவிரமடையும் காற்று மாசு பிரச்சினை மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ. 13- காற்று மாசு பிரச்சினை, டில்லியில் தீவிர மடைந்து வரும் நிலையில், சுவாசக் கோளாறு தொடர்பாக, மருத்துவமனைகளில் அதிக ளவு நோயாளிகள் குவிகின்ற னர்.

டில்லியில், முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி அரசு அமைந்து உள்ளது. இங்கு, காற்று மாசு மிக மோசமடைந்து உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பள் ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு உள்ளது. இந்நிலையில், மூச்சுத் திணறல் போன்ற பல் வேறு நோய்களால் பாதிக்கப் பட்டு, மருத்துவ மனைகளில் அதிகளவு நோயாளிகள் குவி கின்றனர். டில்லியில் உள்ள அரசு மருத்துவமனையான, வல்லபாய் படேல் மருத்துவ மனையில், ஒரு வாரத்தில் மட் டும், 300க்கும் மேற்பட்டோர், மூச்சுத் திணறல் போன்ற நோய் களுக்கு சிகிச்சை பெற்றுஉள் ளனர். இது, வழக்கத்தை விட, 3 மடங்கு அதிகம் என, மருத் துவர்கள் தெரிவித்தனர்.

டில்லியைச் சேர்ந்த, பிரபல டாக்டர், அரவிந்த் குமார் கூறி யதாவது: காற்று மாசடைவ தால், அதில் உள்ள நச்சுப் பொருட்களை நாம் சுவாசிக் கும் போது, அவை, உடலுக் குள் புகுந்துவிடும். இதனால், நுரையீரல் போன்றவை பாதிக் கும். காற்று மாசால், உடனடி யாக எந்த பாதிப்பும் ஏற்படாது. அதனால்தான், யாரும் அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. அதே நேரத்தில், அது மெதுவாக நம் உயிரைக் கொல் லும். நச்சுக் காற்றை தொடர்ந்து, 10 நாட்கள் சுவாசித்தால், ஒரு வரது ஆயுட்காலம், சில வாரங் கள் அல்லது மாதக் கணக்கில் குறைந்துவிடும். சுகாதாரம் குறித்து அக்கறை உள்ளவராக இருந்தால், நல்ல ஆரோக்கிய மான வாழ்க்கையை வாழ வேண்டும் என நினைத்தால், நீங்கள் வசிப்பதற் கான இடம் டில்லி அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

டில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு, அண்டை மாநில மான, பஞ்சாபில் அறுவடைக்கு பின், பயிர்களை எரிப்பது முக் கியமான காரணமாக உள்ளது. அறுவடைக்கு பின், வைக் கோல்களை எரிப்பதை தடுக் கும் வகையில், சூப்பர், எஸ். எம்.எஸ்., எனப்படும், சூப்பர் வைக்கோல் நிர்வாக முறை என்ற கருவியை பயன்படுத் துவதை, பஞ்சாப் அரசு ஊக் குவிக்கிறது. இதற்காக, 50 ஆயிரம் ரூபாய் மானியமும் வழங்குவதாக அறிவித்தது. ஆனால், இதற்கு விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை. தற்போதைய சூழ்நிலையில், பஞ்சாபில், 1.6 சதவீத பயிர் விளைச்சல் பரப்பளவில் மட் டுமே, இந்தக் கருவி பயன் படுத்தப்படுகிறது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner