முன்பு அடுத்து Page:

கோவா, மணிப்பூரில் ஆளுநரிடம் காங்கிரசு மனு: ஆட்சி அமைக்க உரிமை கோரியது

கோவா, மணிப்பூரில் ஆளுநரிடம் காங்கிரசு மனு: ஆட்சி அமைக்க உரிமை கோரியது

பனாஜி, மே 20 கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டப் பேரவைகளில் தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அந்தந்த மாநில ஆளுநரிடம் காங்கிரசு கட்சி கடிதம் அளித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கருநாடக சட்டப்பேரவைத் தேர்த லில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு அந்த மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையே, முன்மாதிரியாகக் கொண்டு மணிப்பூரிலும், கோவா விலும் காங்கிரசு கட்சி....... மேலும்

20 மே 2018 16:49:04

எடியூரப்பா பதவி விலகல் பாரதீய ஜனதாவுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி

எடியூரப்பா பதவி விலகல்  பாரதீய ஜனதாவுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி

பெங்களூரு, மே20 கருநாடக சட்டமன்றத்தில் நேற்று (19.5.2018) மாலை 4 மணிக்கு  நம்பிக்கை வாக் கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், சரியாக 4 மணிக்கு தனது பதவியை விட்டு விலகி சபையில் இருந்து வெளியேறினார் எடியூரப்பா. இது பாரதீய ஜனதா கட்சிக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 11 மணி வரை 100 சதவிகிதம் வெற்றி பெறுவேன் என்று மீண்டும் மீண்டும்  கூறிவந்த  எடியூரப்பா பதவி....... மேலும்

20 மே 2018 16:14:04

கருநாடகா காவிமயமாகாது

கருநாடகா காவிமயமாகாது

- பிரகாஷ் ராஜ் பெங்களூரு, மே 20 கருநாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்ததை கிண்டல் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மேட்ச் தொடங் கும் முன்பே முடிந்துவிட்டது என்று தெரிவித் துள்ளார். கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகத் தீவிரமாக சுற்றுப் பயணம் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் செய்தார். பாஜக ஆட்சியைப் பறிகொடுத்தது குறித்தும், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்தும் அவர் ட்விட்டரில்  கருத்து....... மேலும்

20 மே 2018 16:14:04

எடியூரப்பாவின் பதவி விலகல் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : சித்தராமையா பேட்டி

எடியூரப்பாவின் பதவி விலகல் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : சித்தராமையா பேட்டி

பெங்களூரு, மே 20 முதல்வர்  பதவியை எடியூரப்பா பதவி விலகல் செய்த பிறகு சித்த ராமையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:- கருநாடக அரசியலில் இது வரலாற்று நிகழ்வு. சட்டசபை யில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் எடியூரப்பா முதல்-வர் பதவியை விலகல் செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. அரசியல் சாசனத்திற்கு கிடைத்த வெற்றி. பெரும்பான்மை இல்லை என்று தெரிந்த போதும் ஆளுநர் வஜூபாய் வாலா, பாரதீய ஜனதா....... மேலும்

20 மே 2018 16:14:04

இந்திய பிரதமர்களும் அவர்களின் கல்வித் தகுதியும்

1.  ஜவகர்லால் நேரு முதுகலை பொருளாதாரம் மற்றும் சட்டம் - கேம்பிரிட்ஸ் லண்டன் 2. லால்பகதூர் சாஸ்திரி இளங்கலை சமஸ்கிருதம் பொருளா தாரம் - பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 3. இந்திரா காந்தி வரலாறு மற்றும் அரசியலில் முதுகலை - ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 4. மொரார்ஜி தேசாய் இளங்கலை பொருளாதாரம் புள்ளி யியல் - மும்பை பல்கலைக்கழகம் 5. சவுத்ரி சரண்சிங் முதுகலை சட்டம் - ஆக்ரா பல்கலைக் கழகம் 6. ராஜீவ்காந்தி இளங்கலை பொருளாதாரம், விமான தொழில் நுட்பம் மற்றும் பைலட் பட்டயப்படிப்பு 7........ மேலும்

19 மே 2018 17:37:05

நீட் -ஏன் அபத்தம்?

நீட்  -ஏன் அபத்தம்?

இந்த ஆண்டு நீட் தமிழ் வழி வினாத்தாளில் ஒரு கேள்வி cheetah என்பதற்கு இணையான தமிழ் சொல்லாக சீத்தா என்று கொடுக்கப் பட்டுள்ளது. Heart of cheetah - சீத்தாவின் இதயம் Brain of cheetah - சீத்தாவின் மூளை இப்படி 50 க்கும் மேற்பட்ட இடங்களில் தவறுகள் இருப்பது குறிப்பிடத் தக்கது. மிகக் கேவலமான முறையில் கேள்வித்தாளை தயார்செய்து, அதில் தேர்வானவர்கள் தான் தகுதியானவர்கள் என பொய்களுக்கு மேல் பொய்களை சொல்லி ஏமாற்றி....... மேலும்

19 மே 2018 17:37:05

இவர்தான் கருநாடக முதல் அமைச்சர் எடியூரப்பா!

இவர்தான் கருநாடக முதல் அமைச்சர் எடியூரப்பா!

எடியூரப்பா யார்? மகன் -  மருமகன்களுக்கு கோடிக்கணக் கான அரசு நிலங்களை ஒதுக்கியது, மத்திய அரசு கையிலெடுத்து நடத்த வேண்டிய மாபெரும் கனிமவள சுரங்கங்களை தனியார் சட்டவிரோதமாக எடுக்க ஆதரவு கொடுத்தது, அதன் மூலம் ரொக்கம் மற்றும் நிலம், நகைகள், பங்குப் பத்திரம், என ரூ.25ஆயிரம் கோடிகளுக்கு மேல் பெற்றது, இவை அனைத்தும் லோக் ஆயுக்தா விசாரணையில் சான்றுகளோடு ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலில் உள்ளது. இதனால் ஆட்சியை இழந்து....... மேலும்

19 மே 2018 17:16:05

பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிவசேனை விமர்சனம்

கருநாடகத்தில் ஆட்சி  அமைப்பு : அரசமைப்புச் சட்ட விதிகளின்படி நடைபெறவில்லை அரசியல் விதிகளின்படி நடைபெற்றுள்ளது மும்பை, மே 19 கருநா டகத்தில் ஆட்சி அமைக்க எடி யூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தது, அரசமைப்புச் சட்ட விதிகளின்படி நடைபெற வில்லை. அரசியல் விதிகளின் படி நடைபெற்றுள்ளது. மத்தியிலும் மகாராஷ்டிரத் திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை, அண்மைக் காலமாக பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக சாடி....... மேலும்

19 மே 2018 15:50:03

கேரளாவில் புதிய தொழிலாளர் கொள்கை இனி குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600

கேரளாவில் புதிய தொழிலாளர் கொள்கை  இனி குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600

திருவனந்தபுரம், மே 18 சமீபத்தில் கேரள அரசு தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகை யில், தொழிலாளர் நலத் திட்டங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. அதற்கு கேரள அமைச்சரவை நேற்று (17.5.2018) ஒப்புதல் அளித்துள்ளது. அந்த புதிய திட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, தனிநபரின் ஒரு நாள் குறைந்தபட்ச வருவாயை ரூ.600 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கூலித்தொழிலாளிகள் உள்பட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் என....... மேலும்

18 மே 2018 16:30:04

மத்திய பாஜக அரசின் 15ஆவது நிதி ஆணையத்தின் புதிய பரிந்துரை அரசமைப்புக்கு எதிராகவும், மாநில சுயாட்சி…

 மத்திய பாஜக அரசின் 15ஆவது நிதி ஆணையத்தின் புதிய பரிந்துரை  அரசமைப்புக்கு எதிராகவும், மாநில சுயாட்சியை பாதிக்கச் செய்வதுமாக உள்ளதாக குற்றச்சாட்டு

பாஜக அல்லாத மாநிலங்களின் சார்பில் குடியரசுத் தலைவரிடம் கடிதம் புதுடில்லி, மே 18 புதுச்சேரி, டில்லி, மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநி லங்களில் பாஜக அல்லாத எதிர்க்கட்சி களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, டில்லி துணை முதல்வர் மற்றும் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களின்  நிதியமைச்சர்கள் இணைந்து  குடியரசுத் தலைவருக்கு மனு கொடுத் துள்ளனர். 15ஆவது நிதிக்குழு அளித்த புதிய பரிந்துரைகளின்படி....... மேலும்

18 மே 2018 16:30:04

புதிய பி.எட். கல்லூரிகள் தொடங்க அனுமதியில்லை: மத்திய அரசு முடிவு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 17 புதிய பி.எட். கல்லூரிகள் தொடங்குவதற்கு நிகழாண்டில் அனுமதி அளிப்பதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் பயிற்சி நிறு வனங்களின் தரம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ள தையடுத்து, இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதுகுறித்து டில்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ டேகர் செய்தியாளர்களிடம் செவ் வாய்க்கிழமை (மே 16)  கூறிய தாவது:

நாட்டில் தற்போது வரை யிலும் பி.எட். கல்லூரிகள் புற்றீசல் போல் ஆரம்பிக்கப்படு கின்றன. அந்தக் கல்லூரிகளிடம் நீங்கள் இன்று பணம் கொடுத் தால், நாளைக்கே பட்டச் சான்றிதழ் கிடைக்கும்.

ஆசிரியர் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இந்நடவடிக்கை களுக்கு முடிவு கட்ட வேண்டி யுள்ளது. ஆகையால், நிகழாண் டில் புதிய பி.எட். கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், நிகழாண்டில் புதிய பி.எட். கல் லூரிகள் எதுவும் தொடங்கப்பட மாட்டாது.

இதேபோல், ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் பி.எட். கல்லூரிகளின் தரத்தை பரிசோதிக்கும் வகையில், அதன் தரம் குறித்து ஆய்வு செய் யப்படவுள்ளது. இதற்காக, ஏற்கெனவே இயங்கிக் கொண்டி ருக்கும் பி.எட். கல்லூரிகளிடம் இருந்து அதன் தரம் தொடர்பான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது.

பி.எட். மற்றும் டி.எட். படிப்புகளுக்கு செயல்வழிப் பயிற்சிகளை (பிராக்டிகல்) மேலும் அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேற் கண்ட பட்டப் படிப்புகளை பயிலுவோருக்கு அரசுப் பள்ளி களில் ஆசிரியர்கள் முன்னிலை யில் செயல்வழிப் பயிற்சிகள் அளிக்கப்படும். அப்போது அவ ரது செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப் படும். மாணவர்களின் கருத்து களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner