முன்பு அடுத்து Page:

பயங்கரவாதிகளுடன் கொஞ்சிக் குலாவுகிறது பாரதிய ஜனதா கட்சி சீத்தாராம் யெச்சூரி கடும் குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளுடன் கொஞ்சிக்  குலாவுகிறது பாரதிய ஜனதா கட்சி  சீத்தாராம் யெச்சூரி கடும் குற்றச்சாட்டு

  புதுடில்லி, பிப். 24- இடதுசாரிகள் ஆளும் கேரளத்திலும், திரிபுரா விலும் சீர்குலைவு நடவடிக்கை களில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி குற்றம்சாட்டி யுள்ளார். திரிபுராவில் இனவெறி நட வடிக்கைகளில் பகிரங்கமாக இறங்கியுள்ள பாஜக, பயங்கர வாதக்குழுக்களுடனும், திரி ணாமுல் காங்கிரசுடனும் கைகோர்த்துக் கொண்டு இடது முன்னணி அரசை வீழ்த்துவ தற்காக மிகப்பெரும் சதித்திட் டத்தில் ஈடுபட்டுள்ளது என்....... மேலும்

24 பிப்ரவரி 2017 16:03:04

வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? மோடிக்கு உ.பி.முதலமைச்சர் அகிலேஷ் …

வளர்ச்சித் திட்டங்கள் குறித்து  நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?  மோடிக்கு உ.பி.முதலமைச்சர் அகிலேஷ் சவால்

  பலராம்பூர், பிப்.24 உத்தரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சித் திட் டங்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்தமாநிலமுதல்வர்அகி லேஷ் யாதவ் சவால் விடுத்துள் ளார். உத்தரப்பிரதேச மாநிலம், பலராம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அகிலேஷ் யாதவ், மேலும் கூறியதாவது: மிகவும் உயரிய பதவியில் இருக்கும் பிரதமர் மோடி, என் னுடன் சண்டையிடுகிறார். என்னோடு அவர் விவாதிக்க விரும்பினால், மற்ற....... மேலும்

24 பிப்ரவரி 2017 15:38:03

பொலிவுறு நகரங்கள் பட்டியலில் புதுச்சேரி இடம்பெற வேண்டும்: முதல்வர் உத்தரவு

 பொலிவுறு நகரங்கள் பட்டியலில் புதுச்சேரி இடம்பெற வேண்டும்: முதல்வர் உத்தரவு

புதுச்சேரி, பிப். 24- பொலிவுறு நகரங்கள் செயல்படுத்தப்ப டும் 3-ஆம் கட்ட பட்டியலில் கட்டாயம் புதுச்சேரி இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிக ளுக்கு முதல்வர் நாராயண சாமி உத்தரவிட்டார். புதுவை உள்ளாட்சி துறை, பிரெஞ்சு தூதரகம், பிரெஞ்சு வளர்ச்சி முகமை ஆகியவை இணைந்து புதுவையில் பொலி வுறு நகரங்கள் திட்டத்தை செயல்படுத்துவது தொடர் பான கருத்தரங்கை புதுவை யில் நேற்று (24.2.2017) நடத் தின. இந்த கருத்தரங்கில்....... மேலும்

24 பிப்ரவரி 2017 15:36:03

கணினித் துறையில் 65 சதவீத பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் நாஸ்காம் நடத்திய கருத்தரங்கில் தகவல்

கணினித் துறையில் 65 சதவீத பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்  நாஸ்காம் நடத்திய கருத்தரங்கில் தகவல்

புதுடில்லி, பிப்.21 இந் திய கம்ப்யூட்டர் சாப்ட்வேர்  துறை அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளை நம் பியே இருக்கிறது. இந்திய என்ஜினீயர்கள் பெரும்பா லோர் அமெரிக்க நிறுவனங் களுக்காக நேரடியாகவோ அல்லது அவுட்சோர்சிங் முறை யிலோ பணியாற்றி வருகிறார்கள். ஆனால் அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பணிகள் வெளிநாட்டினருக்கு செல்வதை விரும்பாமல் அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் இந்திய சாப்ட் வேர் என்ஜினீயர்கள்....... மேலும்

21 பிப்ரவரி 2017 16:18:04

காவிரி நடுவர் மன்ற தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி அபய் மனோகர் சப்ரே நியமனம்

காவிரி நடுவர் மன்ற தலைவராக உச்சநீதிமன்ற  நீதிபதி அபய் மனோகர் சப்ரே நியமனம்

புதுடில்லி, பிப்.21  நடுவர் மன்றத்தின் தலைவ ராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி பல்பீர் சிங் சவுகான், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சட்ட ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவி காலியாக இருந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் அபய் மனோகர் சப்ரே தற்போது காவிரி நடுவர் மன்ற தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பரிந்துரையின் படி அவர்....... மேலும்

21 பிப்ரவரி 2017 16:16:04

பாஜக வின் ஊழல் -2

பாஜக வின் ஊழல் -2

அரசு மருத்துவமனையை  அதானிக்கு தாரை வார்த்த மோடி பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய குஜராத் கட்ச் பகுதியில் ஜனவரி 26, 2001 அன்று, ஒரு பயங்கர நிலநடுக்கம் தாக்கி, ஒரு பேரழிவிற்கு வித்திட்டது. இந்தியா கண்ட மேசமான மனித சேகங்களும் ஒன்றாக ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். பல்வேறு கட்டடங்கள் சுக்குநூறாக இடிந்தன. அவ்வாறு இடிந்த கட்டடங்களில் ஒன்று புஜ் மாவட்டத் தலைநகர் கட்ச்சில் இருந்த அரசுத் தலைமை மருத்துவமனையான ஜி.கே. இந்த அரசு....... மேலும்

20 பிப்ரவரி 2017 16:52:04

ரூபாய் நோட்டுக்கு தடை விதித்த பாஜவை தேர்தலில் மக்கள் பழி தீர்ப்பார்கள் ராகுல், அகிலேஷ் பிரச்சாரம்

 ரூபாய் நோட்டுக்கு தடை விதித்த பாஜவை தேர்தலில் மக்கள் பழி தீர்ப்பார்கள் ராகுல், அகிலேஷ் பிரச்சாரம்

ஜான்சி, பிப்.20 ரூபாய் நோட்டுக்கு தடை விதித்த பாஜவை, தேர்தலில் மக்கள் பழி தீர்ப்பார்கள். உத்தரப் பிரதேசத்தில் 3, 4ஆவது கட்ட தேர்தலுக்கு பிறகு பாஜ தலைவர்கள் அவர்களின் ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என ராகுல் காந்தியும், அகி லேஷ் யாதவும் கூறினர். உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. 3ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்த நிலையில், ஜான்சி பகுதியில் ஒரே இடத்தில் காங்கிரஸ்....... மேலும்

20 பிப்ரவரி 2017 16:47:04

காற்று மாசுபாட்டால் நிமிடத்துக்கு 2 இந்தியர்கள் மரணம்: ஆய்வறிக்கையில் தகவல்

  காற்று மாசுபாட்டால் நிமிடத்துக்கு 2 இந்தியர்கள் மரணம்: ஆய்வறிக்கையில் தகவல்

புதுடில்லி, பிப்.20 காற்று மாசுபாடு காரணமாக நிமி டத்திற்கு இரு இந்தியர்கள் மரணமடைவதாக பிரிட்டனின் “தி லான்ஸட்’ மருத்துவ இத ழில் வெளியான ஆய்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து அந்த ஆய் வறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது: காற்று மாசுபாடு காரண மாக இந்தியாவில் ஆண்டு தோறும் 10 லட்சத்துக்கும் மேற் பட்டோர் உயிரிழக்கின்றனர். உலகில் காற்று மாசுபாட்டால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் இந்தி யாவின் நகரங்களும் இடம் பெற்றுள்ளன. கடந்த....... மேலும்

20 பிப்ரவரி 2017 16:35:04

பி.எஃப். தொகையைப் பெற இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி

பி.எஃப். தொகையைப் பெற இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி

சென்னை, பிப்.20 வருங்கால வைப்பு நிதி அமைப்பில் செலுத் திய பணம், ஓய்வூதிய முதிர்வுத் தொகை, காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை இணையதளம் மூலமாக விண்ணப்பித்துப் பெறும் வசதி, வரும் மே மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போது காப்பீட்டுத் தொகை, முதிர்வுத்தொகை ஆகிய வற்றை கோரி, சுமார் ஒரு கோடி விண்ணப்பங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப் புக்கு (இ.பி.எஃப்.) கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களை இ.பி.எஃப். அமைப்பின் ஊழி யர்கள் சரிபார்த்து, சந்தாதாரர்....... மேலும்

20 பிப்ரவரி 2017 16:35:04

கற்பதற்கு வயது ஏது? 60 வயதில் பள்ளிக்கு செல்லும் பாட்டிகள்

கற்பதற்கு வயது ஏது?  60 வயதில் பள்ளிக்கு செல்லும் பாட்டிகள்

மும்பை, பிப். 20- மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத் தில் பள்ளிக் குழந்தை களைப் போல, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முதுகில் புத்தகப் பையை மாட்டிக் கொண்டு தின மும் பள்ளிக்குச் செல்கின்றனர். மும்பையை அடுத்த தானே பகுதியில் உள்ள பங்கனே கிரா மத்தில் ஒரு சிறப்பு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 60 முதல் 90 வயதுக்குட் பட்ட சுமார் 30 பெண்கள் பயின்று வருகின்றனர்........ மேலும்

20 பிப்ரவரி 2017 15:44:03

ரூபாய் நோட்டுக்கு தடை முன் எந்தெந்த அதிகாரிகளுடன் ஆலோசனை?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரூபாய் நோட்டுக்கு தடை  முன் எந்தெந்த அதிகாரிகளுடன் ஆலோசனை?
தகவல் இல்லை என பிரதமர் அலுவலகம் பதில்

புதுடில்லி, ஜன.11 ரூபாய் நோட்டு தடை விதிப்பதற்கு முன்பாக எந்தெந்த அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார் என்ற கேள்விக்கு தங்களிடம் தகவலே இல்லை என பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது. மேலும், பல்வேறு ஆர்டிஅய் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் மறுத்துள்ளது.

உயர் மதிப்பு ரூபாய் நோட்டு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஅய்) கீழ் சமூக ஆர்வலர்கள் பலர் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு ரிசர்வ் வங்கியும், பிரதமர் அலுவலகமும் எந்த பதிலும் தராமல் மறுத்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் அலுவலகத்துக்கு வந்த ஆர்டிஅய் மனு ஒன்றில், ‘‘ரூபாய் நோட்டு தடை விதிப்பது குறித்து எந்தெந்த அதிகாரிகளிடம் கருத்து கேட்டு பிரதமர் ஆலோசித்தார்?’ என கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பிரதமர் அலுவலகம், ‘‘அப்படி எந்த ஒரு தகவலும் இங்கில்லை’’ என பதில் கூறி உள்ளது.

அதே மனுதாரர், ‘‘ரூபாய் நோட்டு தடை குறித்து தலைமை பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சரின் கருத்துகள் கேட்கப்பட்டதா? இதுதொடர்பாக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதா? அமைச்சரோ அல்லது உயர் அதிகாரிகளோ இந்த நடவடிக்கை மேற்கொள்ளும் முன்பாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்களா? புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என ஏதாவது மதிப்பீடு செய்யப்பட்டதா?’ என்பது உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார்.

இந்த கேள்விகள் அனைத்தும் ஆர்டிஅய் சட்டத்தின் ‘தகவல்’ வரையறைக்குள் வராது எனக்கூறி பிரதமர் அலுவலகம் பதிலளிக்க மறுத்துவிட்டது. முன்னதாக இந்த கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி பதிலளிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரூபாய் நோட்டு தடைக்கு பிறகு மக்கள் சிரமத்தை போக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அறிவிப்பு அமலாவதற்கு முன்பாக அச்சடிக்கப்பட்ட புதிய நோட்டுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? என கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்காத பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் பிரிவுக்கு மாற்றி அனுப்பி வைத்துள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner