முன்பு அடுத்து Page:

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு படிப்படியாக ஒழிக்கப்படும் உ.பி. தேர்தல் கூட்டத்தில் மாயாவதி…

 பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு படிப்படியாக ஒழிக்கப்படும் உ.பி. தேர்தல் கூட்டத்தில் மாயாவதி தகவல்

லக்னோ, பிப்.27 பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் உத்தரப் பிரதேசத்துக்கு தீங்கிழைக்க விரும்புகின்றனர் என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் டியோரியா நகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது: ‘பிரதமர் நரேந்திர மோடியும், அவரது சீடர் அமித் ஷாவும் உத்தரப் பிரதேசத்துக்கு தீங்கு விளைவிக்க விரும்புகின்றனர். அவர் களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண் டும். மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கி லிடப்பட்ட....... மேலும்

27 பிப்ரவரி 2017 16:44:04

ஆர்.எஸ்.எசுக்கு கேரள முதலமைச்சர் நேரடியாகவே சவால்!

ஆர்.எஸ்.எசுக்கு கேரள முதலமைச்சர் நேரடியாகவே சவால்!

  மங்களூரு (கருநாடகா), பிப்.27 கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆர்.எஸ்.எஸின் மிரட்டலுக்குச் சவால் விடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு: நீங்கள் நடத்திய இந்தப் பேரணிக்கு வருமாறு சில மாதங்களுக்கு முன்பே தோழர் சிறீராமரெட்டி (சிபிஎம் கரு நாடக மாநிலச் செயலாளர்) என்னை அழைத்திருந்தார். வெகுநாள்களுக்குப் பிறகு நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தபோது, ஆர்எஸ்எஸின் சகிப்புத் தன்மையின்மை பகிரங்கமாகவெளிப்பட்டது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் என்னை மங்கலாபுரம் மண்ணில்....... மேலும்

27 பிப்ரவரி 2017 16:09:04

காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் வி.நாராயணசாமி

 காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் வி.நாராயணசாமி

புதுச்சேரி, பிப்.26 காரைக் காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புதுவை அரசு அனுமதி வழங்காது என்று முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.புதுச்சேரியில் நேற்று (25.2.2017) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதுக் கோட்டை, காரைக்காலில் தனி யார் நிறுவனங்கள் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்திலும், காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து பல போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்ற னர். மத்திய அரசு கடிதம் அனுப்....... மேலும்

26 பிப்ரவரி 2017 15:18:03

பி.ஜே.பி. ஆட்சியில் எல்லா மட்டத்திலும் பொருளாதார வீழ்ச்சி!

பி.ஜே.பி. ஆட்சியில் எல்லா மட்டத்திலும் பொருளாதார வீழ்ச்சி!

  விவசாய நாடான இந்தியா- பால் பொருள்களை இறக்குமதி செய்யும் அவலம்! கந்தகார், பிப்.26 தொழில்நுட் பங்கள், பன்னாட்டு வணிக வாய்ப்புகள் பெருகிவரும் நிலையில் ஆளும் பாஜகவால் ஏற்பட்டஆபத்தாக பால், பால்பொருள்களை இறக்கு மதிசெய்யவேண்டியஅவல நிலையில் இந்தியா தள்ளப் படுகிறது என்று புள்ளி விவ ரத்தகவல்கள் கூறுகின்றன. வெண்மைப்புரட்சி இந்தியா வில் குறைந்துவருகிறது. அதிக அளவில் பால் தரும் கலப்பினப் பசுக்களை உருவாக்குவதற்காக அமெரிக்காவிலிருந்து பெர்சி யன் வகை காளைகளின் விந் தணுக்கள்....... மேலும்

26 பிப்ரவரி 2017 13:59:01

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மக்களின் சுதந்திரம் பறிபோய் விட்டது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்ச…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மக்களின் சுதந்திரம் பறிபோய் விட்டது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

மங்களூரு,பிப்26ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மக்களின் சுதந் திரம்பறிபோய்விட்டதுஎன்று மங்களூருவில் நடந்த மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். மங்களூரு நேரு விளை யாட்டு மைதானத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்று (25.2.2017) நடந்தது. இந்த மாநாட்டை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.  பின்னர் அவர் பேசியதாவது: கர்நாடகத்தில் கல்புர்கி, கோவிந்தபன்சாரே உள்ளிட்ட ஏராளமான கவிஞர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் கொல்லப் பட்டுள்ளனர். எழுத்தாளர் பகவான் கிரீஸ் கர்னாடுக்கு....... மேலும்

26 பிப்ரவரி 2017 13:59:01

ராம்ஜாஸ் கல்லூரியில் ஆசிரியர்கள், மாணவர்கள்மீது ஏபிவிபி அமைப்பினர் வன்முறைத் தாக்குதல்

ராம்ஜாஸ் கல்லூரியில் ஆசிரியர்கள், மாணவர்கள்மீது ஏபிவிபி அமைப்பினர் வன்முறைத் தாக்குதல்

  டில்லி, பிப்.26- டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் ராம்ஜாஸ் கல்லூரியில் சமூகமும் இலக்கியமும் என்கிற தலைப்பில் கருத்தரங்கை 22.2.2017 அன்று நடத்துவதற்கான ஏற்பாடுகளை ராம்ஜாஸ் கல்லூரியின் ஆங்கில மொழித்துறை செய்தது. ஆர்.எஸ்.எஸ். பாஜக மாணவர் அமைப்பாகிய ஏபிவிபி அமைப் பச் சேர்ந்தவர்கள் திரண்டு கருத்தரங்கை நடத்தவிடாமல் இடையூறு செய்யும் வகையில் பெரும் கூச்சல் போட்டு,  கருத்தரங்க அறையைநோக்கி கற்களை வீசியுள்ளனர். மேலும், ஆசிரியர்கள், மாண வர்கள், பங்கேற்பாளர்கள், சிறப்பு விருந்தினர்கள்....... மேலும்

26 பிப்ரவரி 2017 13:53:01

பயங்கரவாதிகளுடன் கொஞ்சிக் குலாவுகிறது பாரதிய ஜனதா கட்சி சீத்தாராம் யெச்சூரி கடும் குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளுடன் கொஞ்சிக் குலாவுகிறது பாரதிய ஜனதா கட்சி சீத்தாராம் யெச்சூரி கடும் குற்றச்சாட்டு

  புதுடில்லி, பிப். 24- இடதுசாரிகள் ஆளும் கேரளத்திலும், திரிபுரா விலும் சீர்குலைவு நடவடிக்கை களில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி குற்றம்சாட்டி யுள்ளார். திரிபுராவில் இனவெறி நட வடிக்கைகளில் பகிரங்கமாக இறங்கியுள்ள பாஜக, பயங்கர வாதக்குழுக்களுடனும், திரி ணாமுல் காங்கிரசுடனும் கைகோர்த்துக் கொண்டு இடது முன்னணி அரசை வீழ்த்துவ தற்காக மிகப்பெரும் சதித்திட் டத்தில் ஈடுபட்டுள்ளது என்....... மேலும்

24 பிப்ரவரி 2017 16:03:04

வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? மோடிக்கு உ.பி.முதலமைச்சர் அகிலேஷ் …

வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? மோடிக்கு உ.பி.முதலமைச்சர் அகிலேஷ் சவால்

  பலராம்பூர், பிப்.24 உத்தரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சித் திட் டங்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்தமாநிலமுதல்வர்அகி லேஷ் யாதவ் சவால் விடுத்துள் ளார். உத்தரப்பிரதேச மாநிலம், பலராம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அகிலேஷ் யாதவ், மேலும் கூறியதாவது: மிகவும் உயரிய பதவியில் இருக்கும் பிரதமர் மோடி, என் னுடன் சண்டையிடுகிறார். என்னோடு அவர் விவாதிக்க விரும்பினால், மற்ற....... மேலும்

24 பிப்ரவரி 2017 15:38:03

பொலிவுறு நகரங்கள் பட்டியலில் புதுச்சேரி இடம்பெற வேண்டும்: முதல்வர் உத்தரவு

 பொலிவுறு நகரங்கள் பட்டியலில் புதுச்சேரி இடம்பெற வேண்டும்: முதல்வர் உத்தரவு

புதுச்சேரி, பிப். 24- பொலிவுறு நகரங்கள் செயல்படுத்தப்ப டும் 3-ஆம் கட்ட பட்டியலில் கட்டாயம் புதுச்சேரி இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிக ளுக்கு முதல்வர் நாராயண சாமி உத்தரவிட்டார். புதுவை உள்ளாட்சி துறை, பிரெஞ்சு தூதரகம், பிரெஞ்சு வளர்ச்சி முகமை ஆகியவை இணைந்து புதுவையில் பொலி வுறு நகரங்கள் திட்டத்தை செயல்படுத்துவது தொடர் பான கருத்தரங்கை புதுவை யில் நேற்று (24.2.2017) நடத் தின. இந்த கருத்தரங்கில்....... மேலும்

24 பிப்ரவரி 2017 15:36:03

கணினித் துறையில் 65 சதவீத பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் நாஸ்காம் நடத்திய கருத்தரங்கில் தகவல்

கணினித் துறையில் 65 சதவீத பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் நாஸ்காம் நடத்திய கருத்தரங்கில் தகவல்

புதுடில்லி, பிப்.21 இந் திய கம்ப்யூட்டர் சாப்ட்வேர்  துறை அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளை நம் பியே இருக்கிறது. இந்திய என்ஜினீயர்கள் பெரும்பா லோர் அமெரிக்க நிறுவனங் களுக்காக நேரடியாகவோ அல்லது அவுட்சோர்சிங் முறை யிலோ பணியாற்றி வருகிறார்கள். ஆனால் அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பணிகள் வெளிநாட்டினருக்கு செல்வதை விரும்பாமல் அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் இந்திய சாப்ட் வேர் என்ஜினீயர்கள்....... மேலும்

21 பிப்ரவரி 2017 16:18:04

ரயில்வே பிளாட்பாரங்களில் ஏ.டி.எம் மய்யங்கள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரயில்வே பிளாட்பாரங்களில்
ஏ.டி.எம் மய்யங்கள்

டில்லி, ஜன.9 ரயில்வே பிளாட் பாரங்களில் ஏ.டி.எம். இயந்திரங் களை நிறுவி கூடுதல் வருவாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய் துள்ளது. முக்கிய ரயில்வே நிலை யங்களில் உள்ள பிரதான பிளாட் பாரங்களில் ஏ.டி.எம்.கள் நிறுவப் படும். முதற்கட்டமாக 2000 ஏ.டி. எம்.கள் நிறுவ அனுமதி அளிக்கப் படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ரயில்வே பயணிகள், சரக்கு கட்டணம் தவிர இதர வழிகளிலும் வருவாயை திரட்ட  முடிவு செய்துள்ளது. இதன் ஒரு அம்சமாக  ரயில்வே பிளாட்பாரங்களில் ஏ.டி.எம்.களை நிறுவ முடிவு செய்யப் பட்டுள்ளது.  இதேபோன்று ரயில் வண்டிகளில் கூடுதல் விளம்பரங்களை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வேயில் கட்டணம் தவிர்த்து இதர வருமானம் 5 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது. இதை அதிகரிக் கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் பெற புதிய செயலி

சென்னை, ஜன.9 ரயில் டிக்கெட்களை விரைவாக பெறுதல் உட்பட 5 வகையான வசதிகளை பெற புதிய செய லியை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (அய்ஆர்சிடிசி) விரைவில் தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக அய்ஆர்சிடிசி உயர் அதிகாரிகள் கூறிய தாவது: ரயில் பயணிகளுக்கு செல்போன் மூலம் பல்வேறு வசதிகள் எளிமையாக கிடைக்கும் வகையில் ரயில்வே துறை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அய்ஆர்சிடிசி இணைய தளத்தில் உள்ள பல்வேறு வசதிகளை செல்போன் செயலி மூலமும் பெறும் வகையில் ‘அய்ஆர்சிடிசி ரயில் கனெக்ட்’ என்ற பெயரில் புதிய செயலி அறிமுகமாகிறது.

இதன் மூலம் ரயில் டிக்கெட்டை வேகமாக முன்பதிவு செய்ய முடியும், டிக்கெட்டை ரத்து செய்யவும் முடியும், உணவு ஆர்டர் செய்வது, கால்டாக்சி, ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகள் முன்பதிவு, ஓட்டல் அறை முன்பதிவு, போர்ட்டர் சேவை கோருவது, உள்ளிட்ட ஒருங்கிணைந்த வசதிகளைக் கொண்ட புதிய செல்போன் செயலியை உரு வாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் இந்த புதிய செயலி மக்களின் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


சென்னையில் 2ஆவது கட்டமாக
3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை

சென்னை, ஜன.9 சென்னையில் அடுத்த கட்டமாக 3 புதிய வழித்தடங்களில் 114 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்காக மாதவரத்தில் 2 லட்சம் சதுர மீட்டரில் பிரம்மாண்டமான பணிமனை அமைகிறது.

சென்னையில் தற்போது இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானநிலையம் சின்னமலை, பரங்கிமலை கோயம்பேடு வரையில் மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க மெட்ரோ ரயில்வே நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், 2ஆ-வது கட்டமாக 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்குவது தொடர்பாக பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆ-வது கட்ட திட்டம் மாதவரம் - சிறுசேரி (மயிலாப்பூர் லஸ் வழியாக), மாதவரம் - சோழிங்கநல்லூர் (கோயம்பேடு, பெரும்பாக்கம் வழியாக), நெற்குன்றம் - வி.இல்லம் என மொத்தம் 114 கி.மீ. தூரத்துக்கு 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்க வழிப்பாதைகள், உயர் மட்ட ரயில் பாதைகள் அமைப்ப தற்கான இடங்களை தேர்வு செய்து, வரைபடங்களையும் தயாரித் துள்ளோம். சுரங்கப் பாதைகளை விட, உயர்மட்ட பாதையில்தான் அதிக தூரம் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். மொத்தம் ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு தேவைப்படும். வரும் மார்ச் மாதத்துக்குள் மாநில, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற திட்டமிட்டுள்ளோம்.

மெட்ரோ ரயில்களை பராமரிக்க தற்போது கோயம்பேட்டில் இருக்கும் பணிமனையைப் போல் மாதவரத்திலும் 2 லட்சம் சதுர மீட்டரில் பிரம்மாண்ட பணிமனையை அமைக்க முடிவு செய்துள்ளோம். இங்கு 42 மெட்ரோ ரயில்களை நிறுத்தி பராமரிக்கும் வசதி உருவாக்கப்படும். பணிமனையை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறைகள், 10-க்கும் மேற்பட்ட நடைமேடைகள் அமையும். தென்சென்னை பகுதியில் மேலும், ஒரு பணிமனை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner