Banner
முன்பு அடுத்து Page:

முல்லைப் பெரியாறு அணை: காலத்தால் அழியாத அளவுக்கு வலுவாக உள்ளது மத்திய நீர் வள ஆணைய தலைமைப் பொறியாளர்…

முல்லைப் பெரியாறு அணை: காலத்தால் அழியாத அளவுக்கு வலுவாக உள்ளது மத்திய நீர் வள ஆணைய தலைமைப் பொறியாளர் தகவல்

புதுடில்லி, ஜூலை 24_ "நூறு ஆண்டுகளைக் கடந்த முல்லைப் பெரி யாறு அணை காலத்தால் அழியாத அளவுக்கு வலுவாக உள்ளது' என்று மத்திய நீர்வள ஆணையத்தின் தலை மைப் பொறியாளர் எல். அறம் வளர்த்தநாதன் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துவதையும், அணையின் பாதுகாப்பை கண்காணிக் கவும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுத் தலைவராக அறம்வளர்த்தநாதன் உள்ளார். டில்லி தமிழ்ச்....... மேலும்

24 ஜூலை 2014 16:30:04

கூறியது அருந்ததிராய்

கூறியது அருந்ததிராய்

  தாழ்த்தப்பட்ட மக்களுக்காக காந்தியார் குரல் கொடுக்கவில்லை; அவர் பெயரில் உள்ள கல்வி நிறுவனங்களின் பெயர்களை மாற்ற வேண்டும். காந்தியார் பெயருக்குப் பதிலாக சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் பாடுபட்ட அய்யன் காளி போன்றோர் பெயர்களைச் சூட்ட வேண்டும். -  திருவனந்தபுரத்தில் சமூக ஆர்வலர் அருந்ததிராய் மேலும்

24 ஜூலை 2014 16:04:04

மத்திய அரசு ஊழியர்கள் சொத்து விவரம் அளிக்க வேண்டும் மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசு ஊழியர்கள் சொத்து விவரம் அளிக்க வேண்டும்  மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி, ஜூலை 22: மத்திய அரசுப் பணியில் உள்ள 50 லட்சம் ஊழியர்களும், லோக்பால் சட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தங்களுடைய சொத்து விவர அறிக் கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான படிவங்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப். எஸ். உள்பட அனைத்து நிலை ஊழியர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் பெயரில், மனைவி அல்லது கணவன், மைனர் குழந்தைகள் பெயரில் உள்ள சொத்து....... மேலும்

22 ஜூலை 2014 16:10:04

கங்கை முதல் காவிரி வரையிலான நதிகளை இணைப்பது அவசியம் சந்திரபாபு நாயுடு

கங்கை முதல் காவிரி வரையிலான நதிகளை இணைப்பது அவசியம் சந்திரபாபு நாயுடு

அய்தராபாத், ஜூலை 16_ நாட்டின் விவசாய துறை வளர்ச்சிக்கும், வெள்ளத் தால் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவும் தேசிய நதிகள் இணைப்பு திட்டம் அவசியமானது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். முன்னாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரும், பிரபல பொறியாளருமான மறைந்த கே.எல்.ராவின் 112 ஆவது பிறந்தநாள் விழா நேற்று அய்தராபாத் தில் நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது: தேசிய நதிகள்....... மேலும்

16 ஜூலை 2014 16:42:04

ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் முந்தைய பா.ஜனதா அரசு எடுத்த முடிவுகள் பற்றி சி.பி.அய். ஆய்வு செய்ய முடி…

ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் முந்தைய பா.ஜனதா அரசு எடுத்த முடிவுகள் பற்றி சி.பி.அய். ஆய்வு செய்ய முடிவு

புதுடில்லி, ஜூலை 14_ ஹெலிகாப்டர் வாங்கிய தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக, முந்தைய பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியின்போது எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றியும் சி.பி.அய். ஆய்வு செய்ய இருப்பதாக தெரி கிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் தலைவர்கள் பயணம் செய்வதற்காக, உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு இத்தாலி நாட்டின் பின்மெக்கா னிக்கா கம்பெனியின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன் 2010ஆம் ஆண்டு ராணுவ....... மேலும்

14 ஜூலை 2014 15:51:03

அய்தராபாத்தில் கூட்டுக் காவல்படை தெலங்கானா நிராகரிப்பு

அய்தராபாத்தில் கூட்டுக் காவல்படை தெலங்கானா நிராகரிப்பு

புதுடில்லி, ஜூலை 14_ அய்தராபாத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க ஆந்திரா மற்றும் தெலங் கானா காவல்துறையினர் அடங்கிய கூட்டுப் படையை உருவாக்கும் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையை தெலங் கானா அரசு நிராகரித் துள்ளது. ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட தால், இரு மாநிலங்களும் தற்போது தனித்தனியாக இயங்கி வருகின்றன. இரு மாநிலங்களின் தலைமை யிடமாக அய்தராபாத் இருப்பதால், இங்கு சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பு ஆளுநர் பொறுப்பில் விடப்பட்டது. அய்தராபாத் மற்றும் சைபராபாத் நகரில்....... மேலும்

14 ஜூலை 2014 15:43:03

பா.ஜ.க. தலைமையிலான மோடி ஆட்சியின் லட்சணம் இதுதான்! எய்ம்ஸ் மருத்துவமனையில் காலாவதியான பொருள்கள்!

பா.ஜ.க. தலைமையிலான மோடி ஆட்சியின் லட்சணம் இதுதான்! எய்ம்ஸ் மருத்துவமனையில் காலாவதியான பொருள்கள்!

புதுடில்லி, ஜூலை 13_ -இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனை எனக் கூறப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிலைய மருத்துவமனை எனப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலா வதியான மருந்துகள் நோயா ளிகளுக்கு அளிக்கப்படுவ தாக தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக மெயில் டுடே நாளேடு ஜூலை 12 சனிக்கிழமை யன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்ப தாவது: இந்தியாவின் தலை சிறந்த மருத்துவமனை எய்ம்ஸ் எனப்படும் ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆப்....... மேலும்

13 ஜூலை 2014 14:53:02

250 கிராமங்களை ஆந்திராவில் இணைப்பதை எதிர்த்து முழு அடைப்பு

250 கிராமங்களை ஆந்திராவில் இணைப்பதை எதிர்த்து முழு அடைப்பு

அய்தராபாத், ஜூலை 13_ போலாவரம் அணை திட்டத்துக்காக 250 கிரா மங்களை ஆந்திராவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா வில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஆந்திர மாநிலம் பிரிக் கப்படுவதற்கு முன் அங் குள்ள போலாவரத்தில், கோதாவரி ஆற்றின் குறுக்கே நீர்ப்பாசன அணை மற்றும் மின் உற் பத்தி திட்டத்தை ஏற் படுத்த முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முடிவு செய்தது. இந்தத் திட்டத்துக்காக தற்போதைய தெலங்கானா மாநிலத்தின்....... மேலும்

13 ஜூலை 2014 14:22:02

முதுகலை மருத்துவ மாணவர்களை கிராமப்புற பணிக்கு அனுப்ப மத்திய அரசு பரிசீலனை

முதுகலை மருத்துவ மாணவர்களை கிராமப்புற பணிக்கு அனுப்ப மத்திய அரசு பரிசீலனை

புதுடில்லி, ஜூலை 13_ ''முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்களை, கிராமப் புற மருத்துவ பணிக்கு அனுப்புவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார். மக்களவையில் நேற்று அவர் கூறியதாவது: முது கலை மருத்துவ படிப்பு முடித்தவர்களை, கிராமப் புற பணிக்கு அனுப்புவது என, முந்தைய மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், அந்த திட்டம் அமலுக்கு....... மேலும்

13 ஜூலை 2014 13:43:01

போலாவரம் பாசன திட்டத்துக்கு உட்பட்ட தெலங்கானா கிராமங்கள் ஆந்திராவுடன் இணைப்பு

போலாவரம் பாசன திட்டத்துக்கு உட்பட்ட தெலங்கானா கிராமங்கள் ஆந்திராவுடன் இணைப்பு

புதுடில்லி, ஜூலை 12: போலாவரம் பாசன திட்டத்துக்கு தெலங்கானா கிராமங்கள் சிலவற்றை ஆந்திராவுடன் இணைப்பதற்கான சர்ச்சைக்குரிய மசோதா, மக்களவை கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. ஆந்திராவில் பாசன திட்டத்துக்காக போலாவரம் பல்நோக்கு நீர்பாசன திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்ட போது, இந்த திட்டத்தின் நீர்பிடிப்பு பகுதிகளாக உள்ள பல கிராமங்கள், தெலங் கானாவுக்கு....... மேலும்

12 ஜூலை 2014 16:33:04

நாகரிகம் தெரியுமா நரிகளுக்கு?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தி(இ)னமலர் ஏடு இன்று இப்படியொரு கார்டூனை வெளியிட்டுள்ளது.

எதைச் சொல்லியாவது திராவிடர் கழகத் தலைவர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்பதுதான் இனமலரின் அடங்காத வெறி.

தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவரைக் கொச்சைப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு என்கிற முறையில் நடந்துகொண்டு வருகிறது.

திராவிடர் கழகத்தை தினமலர் வகையறாக்கள் எதிர்க்கின்றன - சீண்டுகின்றன என்றால் அது நற்சான்றே தவிர வருத்தப்பட என்ன இருக்கிறது? பார்ப்பனர்கள் சரியாக இருக்கிறார்கள். நம் இனமக்களிடத்தில்தான் குழப்பமோ குழப்பம்! திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல. தேர்தலில் நிற்கக் கூடியதும் அல்ல.

வரவேற்கவேண்டியதை வரவேற்றும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும் செயல்படுவது என்பது திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்பது புத்தியுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியுமே!

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது என்பது நாகரிகத்தின் அரிச்சுவடி! அதேபோல் நல்லது செய்தால் வரவேற்க வேண்டியது என்பது அறிவு நாணயத்தின் பாலபாடம். இவையெல்லாம் தினமலர் பார்ப்பனக் கும்பலுக்கு எங்கேயிருந்து தெரியப் போகிறது?

எங்கே சாவு வரும் - தர்ப்பணம் பண்ணிப் பணம் பறிக்கலாம் என்று கருதும் கழுகுகள் ஆயிற்றே!

தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று எழுதுகிற சோற்றுப் பண்டார - வயிற்றுப் பிழைப்புக் கூட்டம் இப்படித்தான் கார்ட்டூன் போடும்.

ஆளும் பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்களை 13 வருடம் திராவிடர் கழகம் எதிர்த்துத்தான் செயல்பட்டது என்கிற பொது அறிவு கூட இல்லாததுகள் எல்லாம் பேனா பிடிக்கின்றனவே!

இப்பொழுதே தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் யார் யார் என்று ஆள் காட்டி வேலையில் இறங்கிவிட்டது இந்த இனமலர் - இந்தக் கூட்டத்திடம் அரசு எச்சரிக்கையாக இல்லையானால்  அரசு வாகனத்தை அதல பாதாளத்தில் இறக்கிவிட்டுவிடும் - எச்சரிக்கை!.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்