Banner
முன்பு அடுத்து Page:

மோடியின் வெற்று வாக்குறுதிகள்மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை: சோனியா காந்தி தாக்கு!

மோடியின் வெற்று வாக்குறுதிகள்மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை: சோனியா காந்தி தாக்கு!

பாட்னா, அக். 4- பீகார் மாநிலத்தில் வரு கிற அக்டோபர் 12-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5-ஆம் தேதி வரை 5 கட் டங்களாக சட்டப் பேரவை தேர்தல் நடை பெற உள்ளது. முதற்கட்ட தேர்த லுக்கு இன்னும் 8 நாட் களே உள்ளதால் பிரச் சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பீகாரில் முகாமிட்டுள்ளனர். தேர் தல் தேதி அறிவிக்கப் பட்ட பிறகு, பீகார்....... மேலும்

04 அக்டோபர் 2015 14:37:02

மதவாதத்தை போதிக்கும் பா.ஜ.க.வினரிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

மதவாதத்தை போதிக்கும் பா.ஜ.க.வினரிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

முதல்வர் சித்தராமையா பெங்களூரு, அக்.3 மதவாதத்தை போதித்து வரும் பா.ஜ.க.வினரிடம்  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். பெங்களூரு, குயின்ஸ் சாலையில் உள்ள காங் கிரஸ் தலைமை அலுவ லகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த  காந்தியார் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர்   பிறந்தநாள் விழாக்களில் பங்கேற்று இருவரின் உருவப்படங் களுக்கு மலர்தூவி மரி யாதை செலுத்தியபிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் அமைப் பின் தலைவர் மோகன் பகவத், இடஒதுக்கீட்டு....... மேலும்

03 அக்டோபர் 2015 15:27:03

காந்தியாரைக் கொன்றது யார்? டுவிட்டரில் லாலு கருத்து

காந்தியாரைக் கொன்றது யார்? டுவிட்டரில் லாலு கருத்து

பாட்னா, அக்.3-  காந்தியாரின் பிறந்த நாளையொட்டி ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வரு மான லல்லு பிரசாத் யாதவ், தனது டுவிட்டர் பக்கத்தில்  வினா -விடை  பாணியில் காந்தியாரைக் கொன்றது யார்? என்றொரு கேள்வியையும் எழுப்பி  பதிலும் அளித் துள்ளார். கோட்சேவை வழிபடுவது யார்? ஆர்.எஸ்.எஸ்., ஆர்.எஸ்.எஸ். சொல்வது போல் நடப்பது யார்? பா.ஜ.க.; பா.ஜ.க.வை இயக்குவது யார்? மோடி; அப்படியானால், காந்தியாரைக் கொன்ற கொலையாளி யார்?  என   ஒரு....... மேலும்

03 அக்டோபர் 2015 15:25:03

மே 5 ஆம் தேதி டெல்லியில் முதலமைச்சர்கள் மாநாடு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.30- நாட்டில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக, `தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம்' ஒன்றை அமைக்க சமீபத்தில் மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த மய்யம் அமைப்பது மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயல் என்று கூறி, இதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, குஜராத் முதலமைச்சர்  நரேந்திர மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் 10-க்கும் அதிகமான மாநிலங்களின் முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதமும் எழுதினார்.

மத்தியில் உள்ள ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியும் தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம் அமைக்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த மத்திய அரசு, இந்த பிரச்சினை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவித்தது.

டில்லியில், உள்நாட்டு பாதுகாப்பு பற்றி விவாதிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கடந்த 16 ஆம் தேதி முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றியும் ஆலோசனை நடத்த தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இது மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதால், இதுகுறித்து தனியாக முதலமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி விரிவாக விவாதிக்க வேண்டும் என்று மத்திய அரசை முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இதேபோல் மம்தா பானர்ஜியும் கோரிக்கை விடுத்தார்.

அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம் அமைப்பது பற்றி விவாதிக்க மே 5 ஆம் தேதி தனியாக முதலமைச்சர்கள் மாநாடு கூட்டப்படும் என்று அறிவித்தது.

அதன்படி, வருகிற மே 5 ஆம் தேதி (சனிக்கிழமை) டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது.

இதில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்..
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்