பிணையில் விடுதலையாக மாட்டேன்; குற்றமற்றவனாக வெளியே வருவேன் ஆ.இராசா பேட்டி
Banner
முன்பு அடுத்து Page:

நுழைவுத் தேர்வு நடப்பாண்டு ரத்து: அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

நுழைவுத் தேர்வு நடப்பாண்டு ரத்து: அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

நுழைவுத் தேர்வு நடப்பாண்டு ரத்து:அவசர சட்டத்துக்குகுடியரசுத் தலைவர் ஒப்புதல் புதுடில்லி, மே 24_ நடப் பாண்டு மருத்துவக் கல் லூரி நுழைவுத் தேர்வு ரத்து அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிர ணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப் புக்கு இனி தேசிய நுழைவுத் தேர்வு அவசியம் என்ற அவசரச் சட்டத்தில் குடி யரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று கையொப் பமிட்டார். இந்த சட்டத் தில்....... மேலும்

24 மே 2016 17:58:05

புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனையாம்

புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனையாம்

புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனையாம் ஃபரூக்காபாத், மே 24_ நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கைக்குப் பதி லாக புதிய கல்விக் கொள் கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரூக் காபாதில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா  செய்தி யாளர்களிடம் திங்கள் கிழமை கூறியதாவது: தற்போது செயல்படுத்....... மேலும்

24 மே 2016 17:53:05

ஜன்தன் கணக்கில் முறைகேடு: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

ஜன்தன் கணக்கில் முறைகேடு: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

மும்பை, மே 24 ஜன்தன் கணக்குகள் மூலம் முறைகேடு செய்யப் படுவதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைவருக்கும் வங்கிக் கணக்கை இலக்காக கொண்டு  பிரதமர் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் (பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா) வங்கிக் கணக் குகள் துவங்கப்பட்டன. ஏழை தொழிலாளர்கள் பலரும் இந்த திட்டத்தில் கணக்கு  வைத்துள்ளனர். இந்த கணக்குகள் மூலம் நிதி முறைகேடுகள் நடைபெறுவதாக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் எஸ்.எஸ்.முத்ரா கூறியுள்ளார். சேமிப்பு....... மேலும்

24 மே 2016 16:04:04

24 கிளைகளை மூட எச்எஸ்பிசி முடிவு: 350 ஊழியர்கள் பணிநீக்கம்

 24 கிளைகளை மூட எச்எஸ்பிசி முடிவு: 350 ஊழியர்கள் பணிநீக்கம்

மும்பை, மே 22_- ஹாங்காங் அண்ட் ஷாங்காய் பாங் கிங் கார்ப் (எச்எஸ்பிசி) நிறுவனம் இந்தியாவில் 14 நகரங்களில் 50 கிளைக ளைக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது. கடந்த சில வருடமாக இவ்வங்கி யின் ரீடைல் மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட் வர்த்தகம் பெருமளவில் இணைய தளம் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கத் துவங்கி யுள்ளது. இதனால் இந்திய சந் தையில் இருக்கும் 50 கிளைகளில் 24 கிளைகளை முழுமையாக....... மேலும்

23 மே 2016 16:09:04

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமானம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமானம்

புதுடில்லி, மே 22_ யூனியன் பிரதேசமான புதுச்சேரி யின் புதிய துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமனம் செய்யப்பட்டுள் ளார். மத்திய அரசின் பரிந் துரையின் பேரில் கிரண் பேடியை புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். இந்தியா வின் முதல் பெண் அய்.பி. எஸ். அதிகாரியான கிரண் பேடி, ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டங்களில் தீவிர மாக பங்கேற்றார். பின்னர் டில்லி சட்ட....... மேலும்

23 மே 2016 16:03:04

பிணையில் விடுதலையாக மாட்டேன்; குற்றமற்றவனாக வெளியே வருவேன் ஆ.இராசா பேட்டி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப். 23- 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு சர்ச்சையில் தொலைத் தொடர்பு துறை அமைச் சராக இருந்த ஆ.இராசா மற்றும் அந்தத் துறை அதிகாரிகள் என பத்துக் கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் டெல்லி திகார் சிறையில் அடைக் கப்பட்டனர்.

ஆ.இராசா கடந்த 2010 ஆம் ஆண்டு நவம் பரில் கைது செய்யப் பட்டார். அதிலிருந்து அவர் தொடர்ந்து சிறை யில் இருந்து வருகிறார். இவருடன் கைது செய் யப்பட்டவர்களில் தொலைத்தொடர்பு துறை முன்னாள் செய லாளர் சித்தார்த் பெகுரா தவிர மற்றவர்கள் அனை வரும் பிணையில் விடு தலை செய்யப்பட்டுள் ளனர்.

பெகுராவின் பிணை மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. எனவே உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள் ளார். அவரது பிணை மனு நிலுவையில் உள் ளது. ஆனால் ஆ.இராசா தரப்பில் இதுவரை பிணை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட வில்லை.

இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நடை பெற்று வரும் பாட்டி யாலா ஹவுஸ் நீதிமன் றத்துக்கு ஆ.இராசா அழைத்து வரப்பட்டி ருந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

நான் பிணையில் விடு தலையாக விரும்ப வில்லை. குற்றமற்றவ னாக வெளியே வரவே விரும்புகிறேன். 2ஜி வழக் கில் தற்போது சாட்சி களிடம் குறுக்கு விசா ரணை நடைபெற்று வருகிறது. எனது முழு கவனத்தையும் அதன் மீதுதான் செலுத்தி வரு கிறேன். வழக்கு சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்ப தால் இதற்கு மேல் விரி வாக விவரிக்க விரும்ப வில்லை. -இவ்வாறு அவர் கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments  

 
#6 tamilvanan 2012-04-27 03:13
அர்த்தசாஸ்திரம் எனபது பொருளாதாரம், ராஜநீதி போதிக்கும் நூல். கி. மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப் பட்டது. பார்பன ஊழலுக்கு தண்டனை கிடையாது என்று அதில் எழுதப்படவில்லை. இப்போது நீங்கள் சொல்லும் எல்ல ஊழல்களிலும் வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ராஜாவின் மேல் உள்ள குற்றசாடுகளிலும ் விசாரணை தான் நடந்து கொண்டு இருக்கிறது. நீதி மன்ற தீர்ப்பு வர பல ஆண்டுகள் பிடிக்கும். ராஜா வாய்தா வாங்க மாட்டார் என்று அதற்குள் தீர்மானம் எப்படி செய்தீர்கள்?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#5 pugazhendhi 2012-04-25 11:01
நாட்டில் வன்முறையில் யார் ஈடுபடுகிறார்கள் என்று துப்பு கொடுத்த ஆனந்த அவர்களுக்கு நன்றி இப்படிப்பட்ட வெறி பிடித்தவர்கள் சட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் வளர்ந்துவருகிறா ர்கள்
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#4 tamilvanan 2012-04-24 16:59
முதலில் நீதி மன்றத்தின் தீர்ப்பு வரட்டும். அப்புறம் பார்க்கலாம்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#3 Anand.M 2012-04-24 13:04
வெளிய வந்தா சாதிக் பாஷா ,ராம் ஜெயம் நிலைமைன்னு தெரிஞ்சுருக்கும ் போல.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#2 mugil 2012-04-24 11:30
இதில் என்ன சபாஷ் வேண்டிக்கிடக்கி றது? 'உள்ளே' யே இருந்தால் அவருக்கு பாதுகாப்பு என்று அவர் நினைக்கிறார். சாதிக் ஏன் இறந்தார் என்ற மர்மம் விலகாத நிலையில் இவருக்கும் என்ன ஆகுமோ என்ற அச்சம் எல்லாருக்குமே இருக்கும். கழகத்திலும் இவருக்கு வேலை கிடையாது. இந்த லட்சணத்தில் இது போன்ற வீராப்பு பேச்சில் யாரும் மயங்க போவதில்லை. தீகாரில் இருந்தே ஹிந்தி கற்று கொள்ளுகிறார் போலும் !
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#1 Ajaathasathru 2012-04-23 19:51
சபாஷ் ராஜா ! கோடை ப்லீசன்ட் சதி ஊழல், டான்சி ஊழல், சிதாவூர், கொடநாடு முறைகேடு , சுடுகாடு ஊழல் என்று புட்சிகள் பல பல செய்தவர்கள் எல்லாம் வாய்தா வாங்கியே காலத்தை கழித்து வருகிறார்கள்! பார்ப்பன ஊழலுக்கு அர்த்த ஸாத்ரத்தில் தண்டனை கிடையாதாம்! அரசியல் சூழ்ச்சிக்கு , எத்தனை காலம் கழித்து நீதி கிடைக்கும்? இந்தியாவில் டாடாவுக்கும் , அம்பாநிகளுக்கும ்தான் விரைவு நீதி போலிருக்கிறது!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner