Banner
முன்பு அடுத்து Page:

ஏழைகள், தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து மோடிக்கு கவலை இல்லை ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஏழைகள், தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து  மோடிக்கு கவலை இல்லை  ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாட்னா, அக்.8 பீகார் சட்ட சபைக்கு வரும் 12ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை 5 கட்டங் களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 243 இடங்களை கொண்ட பீகார் சட்ட சபை தேர்தலில், ஆட்சியை கைப்பற்ற துடித்துக்கொண்டிருக்கும் பாரதீய ஜனதா அணியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் அய்க்கிய ஜனதா தளம் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் மதச்சார் பற்ற கூட்டணி அமைத்துள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள்....... மேலும்

08 அக்டோபர் 2015 16:09:04

தகவல் அறியும் உரிமைச்சட்ட நடைமுறை புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

புதுடில்லி,  அக்.7_ தக வல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஅய்) கீழ், பல்வேறு அரசுத் துறைகள் பொது மக்களுக்கு தகவல்கள் அளிக்கும் நடைமுறையில், ஒரே சீரான தன்மையைக் கொண்டுவரும் வகையில், புதிய வழிகாட்டி நெறி முறைகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளி யிட்டது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலன், பயிற்சித் துறை வெளி யிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரர் களுக்கு பதிலளிக்கும் போது, பல்வேறு அமைச்....... மேலும்

07 அக்டோபர் 2015 16:30:04

ம.பி.யில் தொடர் கதையாகி வரும் விவசாயிகள் தற்கொலை பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு

ம.பி.யில் தொடர் கதையாகி வரும் விவசாயிகள் தற்கொலை பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு

லக்னோ, அக். 6 மத்தியப் பிரதேசம் மாநி லத்தில் வறட்சியின் கார ணமாக மேலும் 2 விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து நிலவி வரும் வறட்சி மற்றும் காலம் தவறி பெய்யும் மழையின் காரண மாக விவசாயம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள் ளது. இதனால் விவ சாயிகள் தாங்கள் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தற் கொலை செய்து கொள் ளும்....... மேலும்

06 அக்டோபர் 2015 16:39:04

மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் கடத்தல்

ராய்பூர்,ஏப்.22- சத்தீஷ்கார் மாநிலத்தில் திடீர் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டு தீவிரவா திகள், 2 பாதுகாவலர் களை சுட்டுக்கொன்று மாவட்ட ஆட்சியரை கடத்திச்சென்றனர். கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

வடமாநிலங்களில், மாவோயிஸ்டு தீவிரவாதி களின் அட்டூழியம் அதி கரித்து வருகிறது.

ஒடிசாவில், ஒரு மாதத்துக்கு முன்பு மாவோயிஸ்டு தீவிரவாதி களால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. இன்னும் மீட்கப்படவில்லை.

இந்த நிலையில், பக்கத்து மாநிலமான சத்தீஷ்காரில் மாவட்ட ஆட்சியரின் இரு பாது காவலர்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள், ஆட்சியரை கடத்திச் சென்றுவிட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யுள்ள இந்த கடத்தல் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சத்தீஷ்கார் மாநிலத் தில் தண்டேவாடா மாவட்டம் மாவோ யிஸ்டு தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி யாகும். சமீபத்தில் அந்த மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சுக்மா என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவாக்கப் பட்டது. இந்த மாவட் டத்தின் ஆட்சியராக 32 வயதான அலெக்ஸ் பால் மேனன் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். பாளையங் கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் மாநி லத்திலேயே முதல்-மாணவராக தேர்ச்சி பெற்ற அலெக்ஸ் பால் மேனன், பின்னர் திண்டுக் கல்லில் உள்ள ஆர்.வி .எஸ். பொறியியல் கல் லூரியில் படித்து பட் டம் பெற்றார்.

அதன்பிறகு இந்திய வருவாய் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி யாற்றிய அலெக்ஸ் பால் மேனன் பின்னர் 2006ஆம் ஆண்டில் அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார்.

நேற்று மாலை, மஜிபரா என்ற குக்கி ராமத்தில் நடைபெற்ற பொது மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சியில் ஆட்சியர் பால்மேனன் கலந்து கொண்டார். கிராம மக்களை தீவிர வாத பாதையில் இருந்து திருப்புவதற்காக, மாநில அரசு சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சிநடந்து கொண்டு இருந்த போதே பயங்கர ஆயுதங்க ளுடன் வந்த 20 மாவோயிஸ்டுகள் ஆட் சியர் பால் மேனனை கடத்த முயன்றனர். அவர் களை தடுக்க முயன்ற இரு பாதுகாவலர் களை யும் தீவிரவாதிகள் சர மாரியாக துப்பாக்கி யால் சுட்டுக் கொன் றனர்.பின்னர் ஆட்சியர் பால் மேனனை பணயக் கைதியாக அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் தீவிர வாதிகள் கடத்திச் சென்றனர். இந்த நிகழ்ச் சியில் ஆட்சியருடன் உதவி ஆட்சியர் எஸ். கே.வைத் யாவும் கலந்து கொண்டார். ஆனால், தீவிரவாதிகள் அவரை விட்டுவிட்டனர்.

தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் சாண்டில்யா தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆட்சியரை மீட்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட் டனர்.ஆட்சியரை கடத்து வதற்கு முன்பாக, தீவிரவாதிகளும் சாதா ரண உடையில் பொது மக்கள் போல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோட்டம் விட்ட தாகவும் தகவல் வெளி யாகி உள்ளது. எனவே நன்கு திட்ட மிட்டு இந்த கடத்தலை அவர்கள் அரங்கேற்றி இருக்கி றார்கள்

ஒடிசாவில் கடந்த மாதம் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. கோரபுட் மாவட்டத்தில் பணய கைதியாக வைக்கப்பட் டுள்ளார். அந்த இடத் தில் இருந்து ஏறத்தாழ 200 கிலோ மீட்டர் தூரத்தில்தான் ஆட்சியர் கடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.

ஆட்சியர் பால் மேனனுக்கு தீவிரவாதி களால் அச்சுறுத்தல் இருந்து வந்ததாக, உள வுப்பிரிவு காவல்துறை யினர் ஏற்கெனவே எச்ச ரிக்கை விடுத்து இருந் தனர். மாவட்ட ஆட்சி யர் கடத்தப்பட்டதும், மாநில முதல்-அமைச்சர் ராமன்சிங் உயர் அதி காரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி னார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் ராமன் சிங், ஆட்சியரை மீட்ப தற்காக அனைத்து நட வடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருவ தாக தெரிவித்தார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்