Banner
முன்பு அடுத்து Page:

முல்லைப் பெரியாறு தொழிலகப் படை பாதுகாப்பு கோரி தமிழகம் மனு

முல்லைப் பெரியாறு தொழிலகப் படை பாதுகாப்பு கோரி தமிழகம் மனு

புதுடில்லி, நவ.22 முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் படை (சிஅய்எஸ் எஃப்) பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவின் விவரம்: "முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தும் உத்தரவை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த மே 7-ஆம் தேதி அளித்த தீர்ப்பில் உறுதி செய்....... மேலும்

22 நவம்பர் 2014 14:36:02

மானிய விலையில் எரிவாயு உருளை பெற வங்கிக்கணக்கு கட்டாயம்: ஜனவரி 1 முதல் அமல்!

மானிய விலையில் எரிவாயு உருளை பெற வங்கிக்கணக்கு கட்டாயம்: ஜனவரி 1 முதல் அமல்!

டில்லி, நவ.22 மானிய விலையில், சமையல் எரி வாயு உருளை பெற வங்கிக் கணக்கு கட்டாயம் என் பதை வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் அமல் படுத்தப்படவுள்ளது. எரி வாயு உருளை பதுக்கல், கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது, உள் ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு வீட்டு உபயோகத்துக்கான எல்.பி.ஜி உருளைகளுக்கான மானியத்தை பயனாளி களின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கடந்த....... மேலும்

22 நவம்பர் 2014 14:36:02

முன்னாள் மத்திய அமைச்சர்களின் பாதுகாப்பு விலகியது சாமியாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பாம்!

முன்னாள் மத்திய அமைச்சர்களின் பாதுகாப்பு விலகியது  சாமியாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பாம்!

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோதக் கொள்கைகளை முன்னேடுத்துச் செல் கிறது. தனக்கு முழுக்க முழுக்க ஆதரவு அளித்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நன்றிக் கடன் செலுத்திக் கொண்டு வருகிறது. இந்த வகையில் கோடீஸ்வர சாமியார் ராம்தேவ் பாபாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  சசின் பைலட், நவின் ஜிந்தால் போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு முழுவதுமாக விலக்கப்பட்டுள்ளது.    இது தொடர்பாக மத்திய உள்துறை....... மேலும்

22 நவம்பர் 2014 12:40:12

சாமியார் ராம்பால் கைது

சாமியார் ராம்பால் கைது

பர்வாலா, நவ.20 அரியானா மாநிலத்தில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலை காவல்துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.அரியானாவின் ஹிஸார் மாவட்டத்தில் உள்ள பர்வாலா நகரில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் ராம்பால் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வழக்குகளில் அவரைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை அந்த ஆசிரமத்துக்குச் சென்றனர். எனினும், ராம்பாலின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் சாமியாரைக் கைது செய்ய இயலவில்லை. இந்நிலையில், ஆசிரமத்துக்குள் இருந்த 15,000....... மேலும்

20 நவம்பர் 2014 16:42:04

எபோலா: பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் மத்திய அமைச்சர் தகவல்

எபோலா: பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் மத்திய அமைச்சர் தகவல்

புதுடில்லி/ஜம்மு, நவ.20  இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது முதல்முறையாக கண்ட றியப்பட்டுள்ள நிலையில், ""நிலைமை கட்டுக்குள் இருக்கிறது; நாட்டு மக்கள் அச்சப்படத் தேவை யில்லை'' என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். இதுதொடர்பாக டில்லியில் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி களுடன் அவர் புதன் கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், அனைத்து விமான நிலையங்களிலும் பயணி களுக்கு எபோலா வைரஸ் தொற்று இருப்பதை....... மேலும்

20 நவம்பர் 2014 16:37:04

அரசியலில் மதத்தை அனுமதித்தால் ஆபத்தாக முடியும்! நேரு பிறந்த நாள் மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு

அரசியலில் மதத்தை அனுமதித்தால் ஆபத்தாக முடியும்! நேரு பிறந்த நாள் மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு

புதுடில்லி, நவ.18_ "இந்தியா பன்முகத் தன்மை யுடன் இருப்பதால், மதச் சார்பின்மை கொள்கை நாட்டுக்கு அவசியம்' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலி யுறுத்தினார். ஜவாஹர்லால் நேரு வின் 125ஆவது பிறந்த நாளையொட்டி, டில்லி விஞ்ஞான் பவனில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு திங்கள்கிழமை தொடங் கியது. இந்த மாநாட்டில் சோனியா காந்தி பேசிய தாவது:_ இந்தியாவில் ஒன்றுக் கும் மேற்பட்ட கருத்தாக் கங்கள் உள்ளதால், மதச்சார்பின்மை இல் லாமல்....... மேலும்

18 நவம்பர் 2014 15:19:03

குற்றவாளி ராம்பால் சாமியாரை காப்பாற்றும் ஹரியானா பிஜேபி ஆட்சி கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்தவ…

குற்றவாளி ராம்பால் சாமியாரை காப்பாற்றும் ஹரியானா பிஜேபி ஆட்சி  கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்தவர்

ஹரியானா, நவ.17 ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸாரில் உள்ள ராம்பால் பாபா என்ற சாமியார் மீது கொலைக் குற்றம் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ள நிலை யில் சண்டிகர் நீதிமன்றம் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்த பிடிஆணை பிறப்பித்தது. சுமார் 30,000 காவல்துறை யினர் 150-க்கும் மேற்பட்ட காவல்துறை உயரதிகாரி கள் சாமியாரின் ஆசிரமத் திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் முகாமிட்டுள் ளனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சில....... மேலும்

17 நவம்பர் 2014 16:00:04

சத்தீஸ்கர் கருத்தடை மரணங்கள் மருந்துகளில் எலிமருந்து கலப்படம் கண்டுபிடிப்பு

சத்தீஸ்கர் கருத்தடை மரணங்கள் மருந்துகளில் எலிமருந்து கலப்படம் கண்டுபிடிப்பு

ராய்பூர், நவ.16_ சத் தீஸ்கர் மாநிலத்தில் கருத் தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 14 பெண்கள் உயிரிழந்த சம் பவத்தில் தரமற்ற மருந்து களை தயாரித்த நிறுவனத் தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள் ளனர். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பென்தாரி கிராமத் தில் கடந்த சனிக்கிழமை தேசிய குடும்பக்கட்டுப் பாடு திட்டத்தின் கீழ் நேமிசந்த் ஜெயின் புற்று நோய் ஆராய்ச்சி மய்யம் மற்றும் மாநில அரசின் சுகாதாரத்துறையும்....... மேலும்

16 நவம்பர் 2014 17:10:05

கேரளாவில் 92 சதவிகிதம் பேரிடம் ஆதார் அடையாள அட்டை

கேரளாவில் 92 சதவிகிதம் பேரிடம் ஆதார் அடையாள அட்டை

திருவனந்தபுரம், நவ. 16_ நாடு முழுவதும் ஆதார் அடையாள அட்டைக் கான கணக்கெடுக்கும் பணி கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கியது. பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததும், இந்த பணி நிறுத்தப்பட்டு இப்போது மீண்டும் தொடங்கி உள் ளது. ஆதார் அடையாள அட்டைமூலம் அரசின் மானியங்களை பொது மக்களுக்கு நேரடியாக வழங்கவும் அரசு ஏற்பாடு செய்தது. முதல் கட்டமாக சமை யல் எரிவாயுக்கு அரசு வழங்கும் மானியம் வாடிக் கையாளரின் வங்கி கணக்....... மேலும்

16 நவம்பர் 2014 16:00:04

பெண்கள் பாதுகாப்புக்காக புதிய வசதி கான்பூர் காவல்துறை அறிமுகம்

பெண்கள் பாதுகாப்புக்காக புதிய வசதி கான்பூர் காவல்துறை அறிமுகம்

கான்பூர், நவ.16_ பெண்களைப் பாதுகாப் பதற்கென்றே மொபைல் போன் அப்ளிகேஷன் ஒன்றை கான்பூர் காவல்துறை உருவாக்கி இருக்கிறது. டில்லி காவல்துறையில் பணிபுரியும் சில வல்லுநர்களால் உருவாக்கப்பட்டிருக் கிறது எஸ்ஓஎஸ் எனும் ஆப்-பை உங்கள் ஆண்ட் ராய்டு மொபைலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வழக்கம்போல பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து இது செயல்பட உள்ளது. பெண்கள் தனியாகப் பயணிக்கும்போது,....... மேலும்

16 நவம்பர் 2014 15:42:03

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.15,500 கோடி பிரணாப் முகர்ஜி அறிவிப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடெல்லி, ஏப்.14- நிதி நிலைமையை மேம்படுத்த பொதுத்துறை வங்கிகளுக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.15,500 கோடி வழங்கப்படும் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள் ளார்.

டெல்லியில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் 118-வது ஆண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

இந்திய வங்கிகள் எத்தகைய பிரச் சினைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றன என்பது எனக்குத் தெரியும். அதனால் தான், பொதுத்துறை வங்கிகளுக்கு உதவ முயன்று வருகிறோம். அந்த வங்கிகளின் மூலதனத் தை பெருக்க கடந்த 2 ஆண்டுகளில் ரூ.32 ஆயிரம் கோடி அளித்துள்ளேன்.

பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க நடப்பு நிதி ஆண்டிலும் ரூ.15 ஆயிரத்து 500 கோடி அளிக்கப் போகிறேன். ஏனென்றால், பொதுத்துறை வங்கி களுக்கு போதிய மூலதனம் இருந்தால் தான், அவை மற்ற வங்கிகளுடன் போட்டியிட முடியும்.

பொதுத்துறை வங்கிகளுக்கு கடந்த 2010-2011-ஆம் நிதி ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 157 கோடியும், 2011-2012-ஆம் நிதி ஆண்டில், ரூ.12 ஆயிரம் கோடி யும் அளித்தோம். - இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

அண்மைச் செயல்பாடுகள்