பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கடிதம்
Banner
முன்பு அடுத்து Page:

காங்கிரஸை பலப்படுத்த சித்தராமையா மீண்டும் நகர்வலம்

காங்கிரஸை பலப்படுத்த சித்தராமையா மீண்டும் நகர்வலம்

பெங்களூரு, மே 26_ கர் நாடக முதல்வர் சித்தரா மையா கடந்த சில மாதங் களுக்கு முன்பு பெங்களூரு முழுவதும் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந் தார். சித்தராமையாவின் நகர்வலத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து நடந்த பெங் களூரு மாநகராட்சி தேர்த லில் காங்கிரஸ் வென்று, மேயர் பதவியை கைப்பற்றி யது. கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கி....... மேலும்

26 மே 2016 17:19:05

இந்தியக் காய்கறி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்தது அய்க்கிய அரபு அமீரகம்

 இந்தியக் காய்கறி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்தது அய்க்கிய அரபு அமீரகம்

புதுடில்லி, மே 26_ இந்தி யாவில் இருந்து மிளகாய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளையும், மாம் பழம் உள்ளிட்ட பழங்க ளையும் இறக்குமதி செய் வதற்கான விதிமுறைகளை, அய்க்கிய அரபு அமீரகம் (யுஏஇ) கடுமையாக்கியுள் ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் காய்கறி கள் மற்றும் பழங்களில் பூச்சிக் கொல்லி மருந்து களின் அளவு அதிகம் இருப்பதாக கூறி, இந்த நடவடிக்கையை அய்க்கிய அரபு அமீரகம் எடுத்துள் ளது. இதுதொடர்பாக, இந்தியாவில் விவசாயப் பொருள்கள்....... மேலும்

26 மே 2016 17:19:05

அரசு அலுவலக வளாகங்களில் தூய்மைக்கு ஊறுவிளைவிப்போருக்கு அபராதம் மத்திய அரசு எச்சரிக்கை

 அரசு அலுவலக வளாகங்களில் தூய்மைக்கு ஊறுவிளைவிப்போருக்கு அபராதம் மத்திய அரசு எச்சரிக்கை

புதுடில்லி, மே 26_ மத்திய அரசு அலுவலக வளாகங் களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் செயல் களில் ஈடுபடுவோருக்கு இனி அபராதம் விதிக்கப் படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்ற றிக்கையில் தெரிவிக்கப் பட்டு ள்ளதாவது: மத்திய அரசு அலுவல கங்களின் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சேரும் குப்பைகள், கழிவு கள் உள்ளிட்டவற்றை உட....... மேலும்

26 மே 2016 16:54:04

செல்பேசி மூலம் ரயில் பயணச்சீட்டை ரத்து செய்யும் வசதி

செல்பேசி மூலம் ரயில் பயணச்சீட்டை ரத்து செய்யும் வசதி

செல்பேசி மூலம் ரயில் பயணச்சீட்டை ரத்து செய்யும் வசதி புதுடில்லி, மே 26_ ரயில்வேயில் பயணச்சீட்டை ரத்து செய்தல் மற்றும் பணம் திரும்ப பெறுவதில் இருந்த சிரமத்தை களையும் நோக்கில் செல்போன் மூலம் டிக்கெட் ரத்து செய்யும் வசதியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிவைத்தார். 139 என்ற எண்ணுக்கு அழைத்து பயணச்சீட்டை ரத்து செய்யும் இந்த புதிய வசதி, உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு வைத்திருக்கும்....... மேலும்

26 மே 2016 16:52:04

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: 2ஆவது பட்டியலில் தமிழகத்திற்கு ஒன்றும் இல்லை

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: 2ஆவது பட்டியலில் தமிழகத்திற்கு ஒன்றும் இல்லை

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: 2ஆவது பட்டியலில் தமிழகத்திற்கு ஒன்றும் இல்லை சென்னை, மே 25_ -ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங் களின் 2-ஆவது பட்டியலை மத்திய அரசு செவ்வா யன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள ஒரு நகரமும் இடம்பெற வில்லை.2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள நகரங்களில் 100 நக ரங்களை ஸ்மார்ட் சிட்டி களாக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்படி முதற்கட்டமாக கடந்த ஜனவரி....... மேலும்

25 மே 2016 17:55:05

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கடிதம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.14- தேர்தல் சீர்திருத்த நடவடிக்கையை விரைவுபடுத்தக்கோரி, தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

தேர்தல் முறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வரும் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி வற்புறுத்தி, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கடிதம் எழுதி இருக்கிறார். இந்த தகவலை நேற்று டில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வெளியிட்டார்.

அப்போது அவர், தேர்தல் சீர்திருத்தத்திற்கான மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தம் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அலுவல் பட்டியலில் அது இடம் பெறவில்லை என்று தெரிவித்தார்.

தேர்தல் சீர்திருத்தம் குறித்து தேசிய அளவிலான ஆலோசனை கூட்டம் நடத்தும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டு இருப்பதாக குரேஷி குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற இருந்த இந்த கூட்டம், ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் அன்னா ஹசாரே போராட்டம் காரணமாக, காலவரையின்றி இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிரிமினல் குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை, தேர்தலில் பண ஆதிக்கத்திற்கு தடை, அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைகளை தணிக்கை செய்வது, தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு உள்ளது போன்று மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்கும் அரசியல் சட்ட பாதுகாப்பு போன்றவை, தேர்தல் ஆணையர் பரிந்துரை செய்துள்ள முக்கிய சீர்திருத்தங்களாகும்.

அவற்றில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய சட்டம்-நீதித்துறை அமைச்சக விதிமுறைகளில் திருத்தம் செய்தாலே போதும் என்று, குரேஷி தெரிவித்தார்.

கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் இந்தக் கோரிக்கை தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்தபோதிலும், அதன்பின் வந்த எந்த அரசும் இதில் அக்கறை காட்டவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மன்மோகன்சிங் தேர்தல் ஆணையத்தின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறார். எனவே இந்த சீர்திருத்தங்களை விரைவாக அமல்படுத்துவதற்கு அவர் நடவடிக்கை எடுப்பார்'' என்றும் குரேஷி நம்பிக்கை தெரிவித்தார்..
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner