Banner
முன்பு அடுத்து Page:

கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: உச்சநீதிமன்றம் அறிவுரை

கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: உச்சநீதிமன்றம் அறிவுரை

புதுடில்லி, மே 15- கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டோ ருக்கு இழப்பீடு வழங்க நீதிமன் றங்கள் உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாக்குர், கியான் சுதா மிஸ்ரா ஆகி யோர் கொண்ட அமர்வு பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்பதா வது: கிரிமினல் வழக்குகளில் பாதிக் கப்பட்டவர்களுக்கு அவர்களது இழப்புகள் மற்றும் சேதத்துக்காக இழப்பீடு வழங்கப்படாதது கவலைக்குரிய விஷயம். இழப்பீடு அளிக்க உத்தரவிடு....... மேலும்

15 மே 2013 15:49:03

உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க முடியும்: பிரணாப் முகர்ஜி

உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க முடியும்: பிரணாப் முகர்ஜி

சில்சர் (அசாம்), மே 15-உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்திருக்கிறார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அசாம் பல்கலைக்கழகத்தின் 13 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டது: பண்டைய இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன. நாலந்தா, தட்சசீலம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில உலகின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் இங்கு....... மேலும்

15 மே 2013 15:32:03

முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவேன்

முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவேன்

முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவேன்! கருநாடக முதல்வர் சித்தராமையா பேட்டி பெங்களூரு, மே 15-கருநாடக முன் னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் நலனுக்காகப் பாடுபடு வேன். அதேவேளையில் அனைத்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் தேவை யான உதவிகளை செய்வேன் என்று நேற்று முன்தினம் (13.5.2013) கருநாடக முதல்வராகப் பதவியேற்ற சித்த ராமையா கூறினார். பெங்களூருவில் நேற்று (14.5.2013) அவர் அளித்த பேட்டி விவரம்....... மேலும்

15 மே 2013 14:54:02

கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த செவிலியர்களை பயன்படுத்தலாம் பிரணாப் முகர்ஜி ஆலோசனை

கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த செவிலியர்களை பயன்படுத்தலாம் பிரணாப் முகர்ஜி ஆலோசனை

புதுடில்லி, மே 14-  கிராமப்புறங் களில் சுகாதார சேவையை மேம் படுத்த செவிலியர்களை பயன்படுத் திக் கொள்ளலாம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆலோ சனை கூறியுள்ளார். சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 35 செவிலியர்களுக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை பிரணாப் முகர்ஜி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: பொது சுகாதார சேவைகளைப் பெறுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை....... மேலும்

14 மே 2013 18:41:06

மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், ஜோஷி கூடுதல் பொறுப்பை ஏற்றனர்

மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், ஜோஷி கூடுதல் பொறுப்பை ஏற்றனர்

புதுடில்லி, மே 14- மத்திய அமைச்சர்கள் கபில் சிபல் மற்றும் சி.பி. ஜோஷி ஆகியோர் சட் டம் மற்றும் ரயில்வே துறை கூடுதல் பொறுப்பை நேற்று ஏற்றனர். நிலக்கரி சுரங்க ஒதுக் கீடு முறைகேடு தொடர் பான சிபிஅய் அறிக் கையை சட்ட அமைச் சராக இருந்த அஸ்வனி குமார் திருத்தியது சர்ச் சையை ஏற்படுத்தியது. அதேபோல் ரயில்வே வாரிய உறுப்பினர் ஒரு வருக்கு உயர் பதவி வாங் கிக் கொடுக்க,....... மேலும்

14 மே 2013 18:28:06

இயற்கை சீற்றம், விபத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு பேரிடர் காப்பீடு, கடன் வசதி

இயற்கை சீற்றம், விபத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு பேரிடர் காப்பீடு, கடன் வசதி

புதுடில்லி, மே 14-இயற்கை சீற்றம் மற்றும் விபத்தால் பாதிக் கப்படும் மக்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்கும் வகையில் பேரிடர் காப்பீடு மற்றும் கடன் வசதி திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ஆலோ சனை வழங்கியுள்ளார். பேரிடர் நிர்வாகம் பற்றிய கருத்தரங்கு டில்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பேசிய தாவது: நாட்டில் புயல், வெள்ளம், வறட்சி, பூகம்பம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களும், மனித தவறால்....... மேலும்

14 மே 2013 17:15:05

வீடு கட்டுவதற்கான உதவித் தொகை அதிகரிப்பு மத்திய அமைச்சர் ரமேஷ் தகவல்

வீடு கட்டுவதற்கான உதவித் தொகை அதிகரிப்பு மத்திய அமைச்சர் ரமேஷ் தகவல்

புதுடில்லி, மே 14- ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கு அளிக்கப்படும் உதவித் தொகையை, மத்திய அரசு அதிகரித்து உள்ளது. கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பழங்குடியினர், தலித் மற்றும் சிறுபான்மை வகுப்புகளைச் சேர்ந்த ஏழைகளுக்கு, "இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்தின் மூலம், வீடு கட்டுவதற்கு, மத்திய அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே, 45 ஆயிரம் ரூபாய் வழங் கப்பட்டது. தற்போது இந்த தொகை, 70....... மேலும்

14 மே 2013 17:14:05

மருத்துவக் கல்லூரி சேர்க்கை நுழைவுத் தேர்வு கிடையாது!

மருத்துவக் கல்லூரி சேர்க்கை நுழைவுத் தேர்வு கிடையாது!

புதுடில்லி, மே.14- மருத்துவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் எந்த கல்லூரியிலும் சேரு வதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது. இந்த வகை யில் தி.மு.க. அரசின் போது நிறைவேற்றப் பட்ட சட்டம் செல்லும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றமே தீர்ப்புக் கூறியுள்ளது. +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையிலேயே சேர்க்கை கள் நடைபெற்று வரு கின்றன. நுழைவுத் தேர்வால் கிராமப் பகுதி....... மேலும்

14 மே 2013 16:30:04

கருநாடக மாநில முதல்வராக நாளை பதவியேற்கிறார் சித்தராமையா

கருநாடக மாநில முதல்வராக நாளை பதவியேற்கிறார் சித்தராமையா

பெங்களூரு, மே 12-  கருநாடகத்தின் 28-ஆவது முதல்வராக சித்த ராமையா திங்கள்கிழமை (மே 13) பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடு கள் பெங்களூரு கண்டீ ரவா விளையாட்டுத் திடலில் நடைபெற்று வருகின்றன. கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 121 இடங்களைக் கைப் பற்றி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸின் சட்டப் பேரவை கட்சித் தலைவராக சித்த ராமையா தேர்வு செய்யப்பட்டு, கருநாடக முதல்வராக அவர் திங்கள் கிழமை பதவியேற்க உள்ளார். பெங்களூரு கஸ்தூர்பா....... மேலும்

12 மே 2013 17:55:05

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் பல்கலைக்கழகங்கள் உதவ முடியும்: பிரணாப்…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் பல்கலைக்கழகங்கள் உதவ முடியும்: பிரணாப் முகர்ஜி

லக்னோ, மே 11- கல்வி மூலம் நல்லொழுக்கத்தைக் கற்பிப்பதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் பல்கலைக்கழகங்கள் உதவ முடியும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை பட்ட மளிப்பு விழா நடைபெற்றது. இதில், மறைந்த நீதிபதி ஜே.எஸ்.வர்மாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை, அவரது குடும்பத்தாரிடம் பிரணாப் முகர்ஜி வழங்கினார்........ மேலும்

11 மே 2013 15:14:03

ஒபுலாபுரம் சுரங்க ஊழ லில் கருநாடகாவின் ரெட்டி சகோதரர்க ளுக்கு உடந்தையாக இருந்த பெண் அய். ஏ.எஸ் அதிகாரி சிறீ லட்சுமிக்கு ஜாமீன்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஏப். 4-ஒபுலாபுரம் சுரங்க ஊழ லில் கருநாடகாவின் ரெட்டி சகோதரர்க ளுக்கு உடந்தையாக இருந்த பெண் அய். ஏ.எஸ் அதிகாரி சிறீ லட்சுமிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

ஆந்திர எல்லையில் உள்ள ஒபுலாபுரம் சுரங் கத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கர்நாடா காவின் ரெட்டி சகோ தரர்கள் கைது செய்யப் பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த மூத்த பெண் அய்.ஏ.எஸ் அதிகாரி சிறீலட்சுமியும் கைது செய்யப்பட்டார். இவருக்கு சிபிஅய் நீதி பதி வழங்கிய ஜாமீனை ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறீலட் சுமி மனு செய்தார். இது நீதிபதிகள் எச்.எல். டாட்டூ, சி.கே. பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசார ணைக்கு வந்தது. சிறீ லட்சுமிக்கு ஜாமீன் அளிக்க சிபிஅய் தரப் பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விவேக் டாங்கா எதிர்ப்பு தெரிவித்தார். சிறீலட்சுமி சார்பில் ஆஜரான வக்கீல் நாகேஸ்வர ராவ், விசாரணை குழுவுக்கு தேவையான ஒத்து ழைப்பை சிறீலட்சுமி அளிப்பார் என்றார்.

அதன்பின் தீர்ப்ப ளித்த நீதிபதிகள், சுரங்க ஊழல் தொடர்பாக சிபிஅய் குற்றப்பத்தி ரிக்கை தாக்கல் செய் துள்ள நிலையில், நங்கள் ஜாமீன் வழங்க முடி யாது. சிபிஅய் சிறப்பு நீதிபதியிடம் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற னர்.





மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் கணினி அடுத்த மாதம் வெளியீடு

 

கொல்கத்தா, ஏப். 4-மலிவு விலை கணினி யான ஆகாஷின் மேம் படுத்தப்பட்ட மாடல் அடுத்த மாதம் வெளியா கிறது. இது குறித்து மத் திய மனித வள மேம் பாட்டுத்துறை அமைச் சர் கபில் சிபல் கொல் கத்தாவில் நேற்று அளித்த பேட்டி:

மாணவர்களுக்காக மலிவு விலையில் தயாரிக் கப்பட்டுள்ள கையடக்க ஆகாஷ் கணினியின் மேம்படுத்தப்பட்ட மாடல் புதிதாக அறிமுகப்படுத் தப்பட உள்ளது. இதில், அதிக திறன் கொண்ட பேட்டரி பொருத்தப் பட்டுள்ளதால், முழுவ தும் சார்ஜ் செய்தால் 3 மணி நேரம் வரை பயன் படுத்த முடியும். முதலில் அறிமுகப் படுத்தப்பட்ட மாடலில் இருந்த குறை பாடுகள் இதில் இருக் காது. இந்த புதிய மாடல் அடுத்த மாதம் சோத னைக்காக வெளியிடப் படும்.

-இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

 


 

 

பெரியார் பாலிடெக்னிக் பெற்ற நாட்டு நலப் பணித்திட்ட விருதுகள்

திருச்சி, ஏப். 4- பெரி யார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட இரு பெரும் விருதுகளை பெற்றது.

நாட்டு நலப்பணித் திட்டம் சிறப்பாக செயல் படுத்தப்படும் பாலிடெக் னிக்குகள், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் கள், மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட ஆர்வலர் கள் ஆகியோரை தேர்ந் தெடுத்து சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்கக நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விரு துகள் வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பான செயல் பாடுகள் மற்றும் சிறந்த ஒத்துழைப்பு நல்குதல் ஆகியவற்றின் அடிப் படையில் வல்லம், பெரி யார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரி சிறந்த ஒத்துழைப்பு நல்கும் பாலிடெக்னிக் கல்லூரி என்ற நாட்டு நலப் பணித்திட்ட விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. மேலும் இக்கல்லூரியின் மூன்றாமாண்டு மின்னி யல் மின்னணுவியல் துறை மாணவர் பிரதீப் ராஜ் நாட்டு நலப்பணியில் சிறப்பான செயல்பாட் டிற்காக சிறந்த நாட்டு நலப்பணி ஆர்வலர் விரு துக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.

28.3.2012 அன்று சென்னை, தொழில்நுட் பக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற விருது வழங் கும் விழாவில் சிறந்த ஒத்துழைப்பு நல்கும் பாலிடெக்னிக் கல்லூரி விருது மற்றம் சிறந்த நாட்டு நலப் பணி ஆர் வலர் விருது ஆகிய விருதுகள் சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணை யர் ரமேஷ் சந்த் மீனா அவர்களால் வழங்கப் பட்டது.

விருது பெற்ற பெரி யார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரி மற் றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் ஆகி யோரை இக்கல்லூரி யின் தலைவர் டாக்டர் கி.வீரமணி பாராட்டி னார். இந்நிகழ்வில் இக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா மற்றும் நிருவாக இயக்கு நர் உடன் இருந்தனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்