முன்பு அடுத்து Page:

இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப…

கொழும்பு, மார்ச் 23  இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, இலங்கையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் இரு ஆண்டுகள் காலக்கெடு அளித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. இலங்கையில் கடந்த....... மேலும்

23 மார்ச் 2019 16:40:04

பாஜகவின் 5 ஆண்டு ஆட்சி தோல்வி: அசோக் கெலாட்

புதுடில்லி, மார்ச் 23  பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணியின் 5 ஆண்டுகால ஆட்சி தோல்வி அடைந் துள்ளது என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: இன்றைக்கு வெளிவரும் புள்ளி விவரங்கள் அனைத்தும் அரசுக்கு எதிராக இருப்பது அதிருப்தியை தருகிறது. கருப்புப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மீட்டுக் கொண்டு வரப்படவில்லை. இது இந்த அரசின்....... மேலும்

23 மார்ச் 2019 15:40:03

விவசாயப் புரட்சி நடந்தால் மட்டுமே 10 சதவிகித வளர்ச்சி சாத்தியம்!

நிதி ஆயோக் சிஇஓ கருத்து! புதுடில்லி, மார்ச் 23 வேளாண் துறையில் மிகப்பெரிய மாற் றம் நிகழாமல், நாடு10 சத விகித வளர்ச்சியை அடைய முடியாது என நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டக்குழு வாகச்செயல்படும் நிதிஆயோக் அமைப்பின்தலைமை செயல திகாரி அமிதாப் கந்த், வேளாண் கருத்தரங்கம்ஒன்றில்பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதில் தான் இவ்வாறு அவர் கூறியுள் ளார். நாட்டின் 50....... மேலும்

23 மார்ச் 2019 15:09:03

மக்களவைத் தேர்தல்: மோடிக்கும் - மக்களுக்கும் இடையே நடக்கும் போட்டி

ராஜ்தாக்கரே மும்பை, மார்ச் 23 மக்களவைத் தேர்தல், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கும் போட்டி என்று மகாராட்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) தலைவர் ராஜ்தாக்கரே கூறினார். ராஜ் தாக்கரே கட்சி கூட்டம் ஒன்றில் பேசியதாவது: மத்திய அரசு பணத்துக்காக ரிசர்வ் வங்கியிடம் பிச்சை எடுத்து வரும் நிலையில், பாகிஸ்தானுடன் போரிடும் நிலையில் இந்தியா இருக்கிறதா?  நாட்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசிடம் இருந்து பதில் இல்லை. எனவேதான்....... மேலும்

23 மார்ச் 2019 15:09:03

இது மட்டும் ஊழல் இல்லையா?

இது மட்டும் ஊழல் இல்லையா?

பிஜேபியின் விளம்பரத்துக்கு மக்கள் பணமா? திட்ட நிதியில் பெரும் பகுதியை மோடி தனது விளம்பரத்திற்கே பயன்படுத்தி இருப்பது வெட்கக்கேடான விஷயமாகும். மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். பல திட்டங்கள் செயல்பாட்டிற்கு வராமல் வெற்று அறிவிப்போடு நின்று தோல்வியை சந்தித்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்தத்திட்டமும் தற்போது இணைந்திருக் கிறது. ஆனால் எல்லா திட்டமும் வெற்றி பெற்றது போலவே தனது விளம்பரத்தின் மூலம் நிறுவ முயன்று வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி....... மேலும்

23 மார்ச் 2019 13:24:01

உ.பி.யில் 2 ஆண்டுகளில் கலவரங்களே நிகழவில்லை என பா.ஜ.க. கூறுவது கேலியாக உள்ளது: மாயாவதி

சென்னை, மார்ச் 22  உத்தரப் பிரதேசத்தில், கடந்த 2 ஆண்டுகளில் கலவரங்களே நிகழவில்லை என்று பாஜக கூறி வருவது கேலியாக உள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆனதை யொட்டி, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் செய்தியா ளர்களைச் சந்தித்தார். அப்போது, பாஜக ஆட்சியின்கீழ், கடந்த 2 ஆண்டுகளில் ஒரு கலவரம்கூட நிகழ வில்லை. மாநிலத்தில்....... மேலும்

22 மார்ச் 2019 15:48:03

மோடி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 4.7 கோடி பேர் வேலையிழப்பு!

மோடி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 4.7 கோடி பேர் வேலையிழப்பு!

புதுடில்லி, மார்ச் 22 -இந்தியாவில், கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மோடி ஆட்சியில் 4 கோடியே 70 லட்சம் ஆண் - பெண் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக, கடந்த 2017-- 2018 இல், ஆண்கள் மட்டும் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ.), 1993- - 1994 ஆம் ஆண்டு கணக் கெடுப்பு நடத்தியபோது 21.9....... மேலும்

22 மார்ச் 2019 14:08:02

சம்யெவுதா குண்டுவெடிப்பு: வழக்கில் யாருமே குற்றவாளி இல்லையெனில் 68 பேரின் உயிரிழப்புக்கு காரணம் யா…

சம்யெவுதா குண்டுவெடிப்பு: வழக்கில் யாருமே குற்றவாளி  இல்லையெனில்  68 பேரின் உயிரிழப்புக்கு காரணம் யார்?  கபில் சிபல் கேள்வி

புதுடில்லி, மார்ச் 22  சம்யெவுதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் யாருமே குற்றவாளி இல்லையென்றால், 68 பேர் உயிரிழந்ததற்கு காரணம் யார்? என்று முன்னாள் மத்திய அமைச் சரும், வழக்குரைஞருமான கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். சம்யெவுதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற் றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 4 பேரை  சிறப்பு நீதிமன்றம் புதன் கிழமை விடுவித்தது. அதைக் குறிப்பிட்டு கபில் சிபல் இவ்வாறு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர்....... மேலும்

22 மார்ச் 2019 13:52:01

2018இல் 1 கோடி வேலைவாய்ப்பை பிரதமர் மோடி அழித்துவிட்டார் : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

2018இல் 1 கோடி வேலைவாய்ப்பை பிரதமர் மோடி அழித்துவிட்டார் : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

இம்பால், மார்ச் 21, நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டில் ஒரு கோடி வேலை வாய்ப்பை பிரதமர் மோடி அழித்து விட்டார்” என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் மக்க ளவை தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் மாலை மணிப்பூர் வந்தடைந்தார். தலைநகர் இம்பாலில், மாநில திரைப்பட மேம்பாட்டு சங்கத் தில் மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். தொடர்ந்து நேற்று காலை நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி....... மேலும்

21 மார்ச் 2019 15:48:03

நள்ளிரவில் கோவாவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிவசேனை கண்டனம்

புதுடில்லி, மார்ச் 21- பதவி மோகம் காரணமாக, கோவாவில் புதிய பாஜக அமைச்சரவை அவசரமாக நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டதாக சிவசேனை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தக் கட்சியின் அதி காரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் புதன்கிழமை வெளியான தலையங்கக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதா வது: கோவா முதல்வர் மனோகர் பாரிக்க ரின் மறைவுக்குப் பிறகு, ஆட்சி அதி காரத்தைக் கைப்பற்றுவதற்கான பேரம் தீவிரமாக நடைபெற்றது. இறுதியில், பிரமோத் சாவந்த் மற் றும் 2 துணை முதல்வர்களின்....... மேலும்

21 மார்ச் 2019 15:36:03

கேரளாவில் பா.ஜ.க.வில் படுகுழப்பம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், மார்ச் 15, கேரளாவில் பாஜக இதுவரை ஒரு மக்களவை தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும்  இம்முறை 6 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அமித்ஷா கண்டிப்புடன் கூறியுள்ளாராம்.

கேரளாவில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங் கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளிலும், இடதுசாரி கூட்டணி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

காங்கிரஸ் கூட்டணியிலுள்ள முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ் (எம்), புரட்சி சோசலிஸ்ட் (ஆர்.எஸ்.பி) ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று திருச்சூர்,  கண்ணூர், கோழிக்கோடு ஆகிய இடங்களில் பிரச்சாரத்தில் ஈடு பட்டது காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு முன்பே இடது சாரி கூட்டணி தங்களது  20 தொகுதி வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது. இதில் சி.பி.எம். மற்றும் சி.பி.அய். கட்சிகளை சேர்ந்த தலா 6 தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் போட்டியிடுகின்றனர்.

பாஜகவில் குழுக்கள் பூசல்

திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் காசர்கோடு தொகுதிகளை  குறிவைத் துள்ள பாஜகவில், இதுவரை வேட்பாளர்கள் யாரும் அறி விக்கப்படாதது கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடாததற்கு பா.ஜ.க.வில் நிலவும்  கோஷ்டிப் பூசல் தான் காரணம் என கூறப்படுகிறது. மாநில தலைவர் சிறீதரன் பிள்ளை, பொதுச்செயலாளர் சுரேந்திரன், முரளீதரன் எம்.பி. ஆகியோர் தலைமையில் நிலவி வரும் கோஷ்டிப் பூசல் தற்போது உச்சக்கட்டத்தில்  இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தங்களது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று மேலிடத்திற்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க. கூட்டணியிலுள்ள பி.டி.ஜே.எஸ். கட்சி தங்களுக்கு 5  தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் மக்களவைக்கான 20 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் அனைத்தும் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும்போது பா.ஜ.க. கூட்டணி  பெருங் குழப்பத் துடன் காணப்படுகிறது.

பிரிட்டனில் ஆராய்ச்சியாளர்களுக்கான

பணி விசா வரம்பு நீக்கம்: இந்தியர்களுக்கு பலன்

சென்னை, மார்ச் 15 பிரிட்டனில் முனைவர் பட்டத் துக்கான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபவோருக்கு வழங்கப் படும் பணி விசாக்களுக்கான வரம்பு நீக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் இந்தியர்கள் பெருமளவில் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் புதன்கிழமை தாக்கல் செய்த வருடாந்திர நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பிரிட்டன் பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்பப் புரட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்தகையப் புரட்சியில் பிரிட்டனை சிறந்து விளங்குவதை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்.

அதன் ஒரு பகுதியாக, பிரிட்டனில் ஆராய்ச்சிப் பணி யாற்ற விரும்புவோருக்கு வழங்கப்பட்டு வரும் விசாக் களுக்கான வரம்பு தளர்த்தப்படுகிறது. வரும் செப்டர் மாதம் முதல் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார் அவர்.

இந்த அறிவிப்பால் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பலனடைவர்கள் என்று கூறப்படுகிறது. பிரிட்டன் அரசின் புள்ளிவிவரப்படி, மிக உயர்ந்த கல்வித் தகுதியுடன் அங்கு பணியாற்றும் வெளிநாட்டினரில் 54 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த ஆண்டு மட்டும், இந்தப் பிரிவைச் சேர்ந்த இந் தியப் பணியாளர்களின் எண்ணிக்கை 6 சதவீதம் அதி கரித்துள்ளது. எனவே, இத்தகைய பணி விசாக்களுக்கான வரம்பு தளர்த்தப்படுவது இந்தியர்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner