முன்பு அடுத்து Page:

நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு

நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு  சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு

லக்னோ, ஏப்.24 நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாகவும், யாருக்கு வாக்களித்தாலும் பாஜ சின்னத்தில் ஓட்டு பதிவாகிறதாகவும் சமாஜ்வாடி தலைவரும் உபி முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை 3ஆம் கட்டத் தேர்தல் நேற்று (ஏப்.23) நடைபெற்றது. தேர்தலை 7 கட்டங்களிலும் சந்திக்கும் மாநிலங் களில் ஒன்றான உபி.யில் 10 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. எடவாவில் உள்ள சைபாய் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சமாஜ்வாடி தலைவர்....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:04:03

ஜாதி மறுப்பு திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு தாயின் ஜாதியை பயன்படுத்தலாம் மும்பை உயர் நீதிமன்றம் த…

ஜாதி மறுப்பு திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு தாயின் ஜாதியை பயன்படுத்தலாம்  மும்பை உயர் நீதிமன்றம்  தீர்ப்பு

மும்பை, ஏப்.23 ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு, தாயாரின் ஜாதியை பயன்படுத்தலாம் என்ற பரபரப்பான தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பிரிவு வழங்கி இருக்கிறது. மகாராட்டிராவை சேர்ந்த அஞ்சால் பட்வாய்க் (19) என்ற எம்பிபிஎஸ் மாணவி, தனது தந்தையின் ஜாதிக்கு பதிலாக தாயாரின் ஜாதி பெயரை பயன்படுத்த அனுமதிக் கோரி மாவட்ட ஜாதி சரிபார்ப்பு கமிட்டியிடம் விண்ணப்பித்து இருந் தார். ஆனால், தந்தையின் ஜாதியை....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:49:04

தேர்தல் ஆணையத்தின் மென்மையான போக்கால் தொடரும் மதவாத பேச்சுக்கள் இசுலாமியர்கள் எனக்கு வாக்களிக்கா…

லக்னோ ஏப் 23 பாஜக வேட் பாளராக போட்டியிடும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின்  மகன் வருண் காந்தி தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசும் போது இசுலாமி யர்களுக்கு ஒன்றை கூறிக் கொள் கிறேன். நீங்கள் வாக்களிக்காவிட்டா லும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.  ஆனால் உங்கள் இனிப்பு என் டீயுடன் கலந்துவிட்டால், என் டீ இன்னும் இனிப்பாகிவிடும். வேறு கட்சி வெற்றி பெற்றால்தான் நான் கவலைப்படவேண்டும். எனது மக்....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:48:04

விளம்பர வாண வேடிக்கையில் பணத்தைக் கொட்டுவதில் பிஜேபி முதலிடம்

டில்லி ஏப் 23 தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆறு வாரங்கள் வரை 48 பக்கங் களுக்கு சுமார் 18,000 அரசியல் விளம்பரங்கள் வெளியாகி யுள்ளன என நாளேடு ஒன்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்டங்கள் முடிந் துள்ள நிலையில் மூன்றாவது கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.  இந்த ஆறு வாரங்களில் முகநூலில் மொத்தம் 14.7 கோடி ரூபாய் செலவில் 72,694 விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன........ மேலும்

23 ஏப்ரல் 2019 16:44:04

பாஜகவுக்கு மக்களைவிட தொழிலதிபர்கள் தான் முக்கியம்: பிரியங்கா

பாஜகவுக்கு மக்களைவிட  தொழிலதிபர்கள் தான் முக்கியம்: பிரியங்கா

ரேபரலி, ஏப்.23  பாஜகவுக்கு மக்களைவிட அதிகாரமும், தொழிலதிபர்களும் தான் முக்கியம் என உத்தரப் பிர தேசம் கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஆதரித்து ரேபரலி தொகுதியில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது பேசிய அவர், "இந்த பகுதியில் உள்ள மக்கள் அரசியலை புரிந்து வைத்துள்ளார்கள். சேவையும், அர்ப்பணிப்பும் தான் அதன் முக்கியக் குறிக்கோள் என்று அவர்களுக்கு தெரிகிறது. சோனியா....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:29:04

பொறியியல் படிப்புகளுக்கு கட்டணம் வரும் கல்வியாண்டில் கட்டணம் உயர்த்தப்படும் துணைவேந்தர் தகவல்

 பொறியியல் படிப்புகளுக்கு கட்டணம்  வரும் கல்வியாண்டில் கட்டணம்  உயர்த்தப்படும்  துணைவேந்தர் தகவல்

சென்னை, ஏப்.23 பொறியியல் படிப்புகளுக்கான  வரும் கல்வியாண்டில் உயர்த்தப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார். சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார்.  இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அண்ணா பல்கலைக்கழகத்துக்குள்பட்ட உறுப்புக் கல்லூரி களில் பொறியியல் படிப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் (2019-2020) கட்டணம் உயர்த்தப்படும். இந்த முடிவுக்கு பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மாறி வரும் பொருளாதார சூழலுக்கு ஏற்றவாறு....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:08:04

குளிர்பான நுகர்வு இரு மடங்கு உயரும்

புதுடில்லி, ஏப்.23  ‘இந்தி யாவில், ஓராண்டில் தனி நபர் அருந்தும் குளிர்பானங்கள் அளவு, 2021இல் இரு மடங்கு உயரும்‘ என, வி.பி.எல்., நிறுவனத்தின் ஆய் வறிக்கை தெரிவிக் கிறது. ‘வருண் பிவரேஜஸ்’ என்ற இந்நிறுவனம், ‘பெப்சிகோ இந் தியா’ நிறுவனத்தின், குளிர்பானங் களை பாட்டிலில் அடைத்து, விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா வில், 2016 நிலவரப்படி, ஒருவர், ஆண்டுக்கு சராசரியாக, 44 பாட்டில், பழரசம் உள்ளிட்ட குளிர்பானங்களை....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:35:03

பா.ஜ.க. பெண் சாமியாருக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது

போபால்,ஏப்.22, மத்தியப் பிரதேச மாநிலம், போபால் தொகுதியில் போட்டியிடும், பா.ஜ.க. வேட்பாளரான சர்ச் சைக்குரிய பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூருக்கு அயோத்தி குறித்து பேசியதற்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணை யம் தாக்கீது' அனுப்பியுள்ளது. போபால் தொகுதியின், பா.ஜ.க. வேட்பாளராக, சர்ச் சைக்குரிய பெண் சாமியார் பிரக் யாசிங் தாக்கூர் நிறுத்தப்பட்டு உள்ளார்.  மகாராட்டிராவின் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில், இவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள் ளது. தற்போது,....... மேலும்

22 ஏப்ரல் 2019 16:23:04

பாஜகவுக்கு வாக்களிக்க அபிநந்தன் சொன்னதாகக் காட்டும் பதிவு உண்மையில்லை பாஜக, சங்பரிவாரங்களுக்கு பிபிச…

பாஜகவுக்கு வாக்களிக்க அபிநந்தன் சொன்னதாகக் காட்டும் பதிவு உண்மையில்லை பாஜக, சங்பரிவாரங்களுக்கு பிபிசி பதிலடி

புதுடில்லி, ஏப். 22- விமானப் படைப்பிரிவைச் சேர்ந்த அபி நந்தனை இந்தத் தேர்தலில் அதிக அளவில் பாஜக தனக்கு வாய்ப்பாக பரப்புரைகளில் பயன் படுத்திக் கொண்டது. அதனால், எதிர்க் கட்சிகளின் கடும் கண் டனத்துக்கும் உள்ளானது. ஆனாலும், பாஜக திருந்த வில்லை என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம், இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கக் கோருவதாக பாஜக தரப்பில் போலிப்பதிவு உருவாக்கப்பட்டு வெளி யிடப்பட்டது. இதுகுறித்து பிபிசியின் உண்மை கண்டறியும் குழு உண்மைத்தகவலை வெளிக்கொணர்ந்து பாஜகவின்....... மேலும்

22 ஏப்ரல் 2019 16:05:04

115 மக்களவைத் தொகுதிக்கு நாளை (ஏப்.23) 3-ஆம் கட்டத் தேர்தல்

115 மக்களவைத் தொகுதிக்கு நாளை (ஏப்.23) 3-ஆம் கட்டத் தேர்தல்

புதுடில்லி ஏப்.22 மக்கள வைக்கு நாளை செவ்வாய்க் கிழமை (ஏப்.23) 3-ஆம் கட்ட மாக தேர்தல் நடைபெறவுள்ள 115 தொகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை மாலையுடன் பிரச் சாரம் ஓய்ந்தது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மகாராட் டிரம், கர்நாடகம், கேரளம், கோவா, ஒடிசா, சத்தீசுகர், அசாம் உள்ளிட்ட 14 மாநிலங் களில் உள்ள 115 மக்களவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க் கிழமை தேர்தல் நடைபெறு கிறது. இதேபோல், குஜராத் சட்டப் பேரவையில் உள்ள....... மேலும்

22 ஏப்ரல் 2019 15:22:03

இந்தியாவில் மட்டும் ஜாதி ஏன்?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேனாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

புதுடில்லி,  பிப்.10 இந்தியாவில் மட்டும் ஏன் ஜாதி என்ற வினாவை எழுப்பினார் மேனாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இளைஞர் காங்கிரசு சார்பில் இரு நாள் மாநாடு டில்லி ஜவாகர் பவனில் 9.2.2019 தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்து ப. சிதம்பரம் பேசியதாவது: நாடாளுமன்றம் நாட்டின் உச்சபட்ச முடிவுகளை எடுக்கும் அமைப்பாகும். நாடாளுமன்றத் தில் உள்ள மக்களவை, மாநிலங் களவை ஆகிய இரண்டுக்கும் மக்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கிறோம். அவர்கள் அனை வரும் நம்மை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். ஆனால், சில நேரங்களில் நாடாளுமன்றத்தில் நடப்பதைப் பார்க்கும் போது, ஏமாற்றம்தான் ஏற்படுகிறது.

பல நாள்களில் எந்தவித அலுவலும் நடைபெறுவதில்லை. பல மசோதாக்கள் எவ்வித விவாதமு மின்றி நிறைவேற்றப்படுகின்றன. இதற்கு உதாரணமாக அண் மையில் நிறைவேற்றப்பட்ட அரசலமைப்பு சட்ட திருத்தத்தைக் கூறலாம்.

இதுபோன்ற முறை அரசியலமைப்புச் சட்ட உரு வாக்கத்துக்கு எதிரானது. நமது முன்னோர்கள் அரசிய லமைப்புச் சட்டத்தை உருவாக்க மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டனர். ஆனால், அண் மையில் அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மசோதா 3 நாள்களிலேயே நிறைவேற்றப்பட் டுள்ளது. இந்தியா பன்முகப் பண்பாடுடைய சமூகத்தைக் கொண்டதாக உள்ளது. இது போன்று மாறுவதற்கு ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து, அய் ரோப்பிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.

உலகமய யுகத்தில், போட்டி நிறைந்த யுகத்தில் கோட்டையாக மாறி, கதவுகளை அடைத்தோம் என்றால், முன் னேற்றம் காண முடியாது. இந்தியாவுக்குள் கிறிஸ்தவம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னும், இஸ்லாம் 700 ஆண்டு களுக்கு முன்னும் வந்தன. சீக்கியம், சமணம், பௌத்தம் போன்றவை இந்த மண்ணில் தோன்றிய மதங்களாகும். இதன் காரணமாகத்தான் இந்தியா பன்முகப் பண்பாடு சார்ந்த நாடாக உள்ளது. பன்மொழிகள், பன்மதங்கள், பன்பழக்கங்கள், பன் உணவு முறைகள், பன்உடை முறைகள் ஆகியவை நம்மை பன்முகப் பண்பாடு நிறைந்த நாடாக பெருமைக் கொள்ளச் செய் கின்றன.

அதே சமயம் ஜாதியம் பெரும் தடைக் கல்லாக இருந்து வருகிறது. இது குறித்து நாம் அனை வரும் கேள்வி எழுப்ப வேண் டும். இந்தியாவில் மட்டும் ஏன் ஜாதிய வேறுபாடுகள் உள்ளன? ஜாதிய முறை, அநீதிகளை இழைத்து வருகிறது. இது இன் னும் தொடரத்தான் செய்கிறது. மேலும், தற்போது நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இல்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் திட்டம் குறித்து காங்கிரசு கட்சி கடந்த சில நாள் களாகப் பேசி வருகிறது. எனவே, இளைஞர்கள் இங்குள்ள சமூகக் கட்டமைப்பை தெரிந்து கொண்டு, அரசியல், சமூக மாற் றத்துக்கு பாடுபட முன்வர வேண்டும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner