முன்பு அடுத்து Page:

மோடிக்கு மேலும் அடி!

மோடியின் தேர்தல் நேர நாடகம் தோல்வியில் முடிந்தது எண்ணெய் நிறுவனங்கள் விலையைக் குறைக்க மறுத்துவிட்டன புதுடில்லி, அக்.19 நாட்டில் பெட் ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலை யில் மோடி, எண்ணெய் நிறு வனங்களுடனும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுட னும் நேற்றுமுன்தினம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மோடி, உற்பத்தி சார்ந்து தான் எண்ணெய் சந்தை இருக்கிறது. எவ்வளவு எண் ணெய் உற்பத்தி செய்ய வேண் டும் மற்றும்....... மேலும்

19 அக்டோபர் 2018 16:20:04

ஏற்றுமதி கடுமையாக குறைந்துவிட்டது தொடரும் பொருளாதார நெருக்கடி

புதுடில்லிஅக்.19இந்தியப்பொரு ளாதாரம்நாளுக்குநாள்வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஒரு நாட்டின்பொருளாதாரவளர்ச் சிக்குமுக்கியகாரணம் ஏற்றுமதியும் இறக்குமதியுமா கும். எந்த ஒரு நாட்டில் ஏற் றுமதி சதவிகிதம் அதிகரித்து இறக்குமதி சதவிகிதம் குறை கிறதோ, அந்நாடு முன்னேற்றம் அடைவதாக நிபுணர்கள் தெரி வித்துள்ளனர். மைனஸ் 2.15% ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தக் கணக்கு நிலவரம் (அதாவது ஏப்ரல் 2018  செப்டம்பர் 2018 வரை) நேற்று வெளியாகி உள்ளது........ மேலும்

19 அக்டோபர் 2018 16:20:04

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சி : கேரள முதலமைச்சர் கண்டனம்

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சி : கேரள முதலமைச்சர் கண்டனம்

திருவனந்தபுரம், அக்.19 ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் சபரிமலையை கலவர பூமி யாக்க முயற்சி செய்வதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வய தும் பெண்களும் செல்லலாம் என்றுஉச்சநீதிமன்றம்கடந்த மாதம் 28 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலக்கல், பம்பை யில் நேற்று போராட்டம் வெடித்தது. சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கோயிலுக்கு....... மேலும்

19 அக்டோபர் 2018 15:41:03

பாஜக அரசின் பாசிசம்: மத்திய அரசு மிரட்டுகிறது

தகவல் உரிமை ஆணையத்தலைவர் அதிர்ச்சி வாக்குமூலம் புதுடில்லி, அக்.19 தகவல் ஆணைய அலுவலக சுதந்திரத்தில் மத்திய அரசுதலையிடுவதாகவும்,முடி வுகளை வெளியிடாமல் மறை முகமாகமிரட்டுவதாகவும் மத்தியதகவல்உரிமைஆணை யர் சிறீதர் ஆச்சார்யுலு தெரிவித் துள்ளார். தகவல் ஆணையம் என்பது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு செய்பவர்களுக்கு அந்தத் தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து பெற்று தருவதற்காகஏற்பட்டஒரு அமைப்பாகும்.இந்த அமைப் பின் ஆணையராக பணி புரிபவர் சிறீதர் ஆச்சார்யுலு. இவர் புனே நகரில் நடந்த ஒரு....... மேலும்

19 அக்டோபர் 2018 15:41:03

குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை: புகார் தெரிவிப்பதற்கான கால வரம்பு ரத்து மத்திய சட்ட அமைச்சகம் ஒப…

குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை:  புகார் தெரிவிப்பதற்கான கால வரம்பு ரத்து  மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்

புதுடில்லி, அக்.18 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க கால வரம்பு நிர்ணயிக்கும் நடைமுறையை நீக்குவதற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அளித்த பரிந்துரையை ஏற்று இந்த ஒப்புதலை சட்ட அமைச்சகம் அளித்துள்ளது. இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது....... மேலும்

18 அக்டோபர் 2018 16:18:04

ஒடிசா: டிட்லி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 57ஆக உயர்வு

ஒடிசா, அக்.18  ஒடிசா மாநிலத்தில் டிட்லி புயல் தாக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இந்த இயற்கை சீற்றத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை அந்த மாநில அரசு ரூ.10 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து புவனேசுவரத்தில் ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் ஏ.பி. பதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: டிட்லி புயல் தாக்கியதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுவரை 57 பேர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  இந்த....... மேலும்

18 அக்டோபர் 2018 15:39:03

படேல் சிலையில் ஆர்.எஸ்.எஸ். தடையாணையை பொறிப்பீர்களா?

காங்கிரசு கேள்வி அகமதாபாத், அக்.18 குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில், இந்தி யாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படே லின், பிரமாண்ட சிலை நிறுவப்பட உள்ளது. இந்த நிலையில் காங்கிரசு கட்சி 1948 ஆம் ஆண்டு படேல் வெளி யிட்ட ஒரு ஆணையை பொறிக்கச் சொல்லி கோரிக்கை வைத்துள்ளது. குஜராத்தின் நர்மதா மாவட் டத்தில், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்ல பாய் படேலின், பிரமாண்ட சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலையை....... மேலும்

18 அக்டோபர் 2018 14:48:02

எல்.இ.டி., பல்பு விற்பனையில் அஞ்சல் துறை

எல்.இ.டி., பல்பு விற்பனையில் அஞ்சல் துறை

புதுடில்லி, அக். 17- தேசிய அஞ்சல் துறை, மின் சிக்கனத்திற் கான, எல்.இ.டி., பல்புகள், டியூப் லைட்டுகள், மின்விசிறி கள் உள்ளிட்டவற்றின் விற்பனையில் களமிறங்கியுள்ளது.இணைய பயன்பாடு பரவலா கத்துவங்கிய பின், அஞ்சலக துறையின் வருவாய் குறைந்து உள்ளது. மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., போன்றவற்றின் வசதி யால், பாரம்பரிய கடிதப் போக் குவரத்து முறை மங்கிவிட்டது. கட்டண சேவைமொபைல் போன் மூலம், சுலபமாக பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி வந்து விட்டதால், தபால் காரர்....... மேலும்

17 அக்டோபர் 2018 17:45:05

அமைச்சர் அக்பர் மீதான புகாரில் மோடி மவுனம் ஏன்? ராகுல் கேள்வி

அமைச்சர் அக்பர் மீதான புகாரில்  மோடி மவுனம் ஏன்? ராகுல் கேள்வி

சோப்பூர், அக்.17 மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பருக்கு எதிரான பாலியல் புகார்கள் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து கூறாமல் மவுனம் காப்பது ஏன்? என்று காங்கிரசு தலைவர் ராகுல் கேள்வி எழுப்பினார். நேற்று காலை  ராகுல் காந்தி மொரனா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் சோப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது : மத்தியப் பிரதேசத்தில் ஊட்டச்சத்து குறைப் பாட் டால் குழந்தைகள் உயிரிழந்து வரு கின்றனர்........ மேலும்

17 அக்டோபர் 2018 16:45:04

சாமியார்கள் ராஜ்ஜியத்தில்.... உய்யலாலா? கொலை - பாலியல் வன்முறை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள்…

சாமியார்கள் ராஜ்ஜியத்தில்.... உய்யலாலா?  கொலை - பாலியல் வன்முறை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை

புதுடில்லி, அக்.17 அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் சிங்ஜடின்.அய்.டி.அய்.டிப்ளமோபட்ட தாரியான இவர் அரியானாவில் நீர்ப்பாசனத் துறை இளநிலைப் பொறியாளராகப் பணி யாற்றினார். திருமணமாகி மனைவி, 2 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் திடீர் என்று ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு சாமி யாரானார். அரியானாவில் கரோதா கிராமத் தில் ஆசிரமம் தொடங்கினார். பின்னர் அரி யானா முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கி ஆன்மிக சேவை ஆற்றுவதாக கூறிக் கொண்டார். இவர் ஆன்மிகம்....... மேலும்

17 அக்டோபர் 2018 16:05:04

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் முதல்அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஜூன் 11 முதல்அமைச்சர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நீட் தேர்வு முடிவுகள் வெளி வந்த நிலையில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்று தெரிந்ததால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலைக்கு செய்துள்ளனர். கண்டமங்கலம் அருகே ஒரு மாணவி தற்கொலை முயன் றுள்ளார். இது வருத்தம் அளிக் கிறது. அவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. உண்மையிலேயே நீட் தேர்வு வந்த பின்னர் பல உயிர்களை இழந்துள்ளோம். இதனால் இளைய சமுதாயங்களை இழக் கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தபின் மீண்டும் நீட் தேர்வு என்பதை ஏற்க முடியாது. ஏற்கெனவே பாடத்திட்டத்தின் மூலம் தேர்வு எழுதி, அதற்கான மதிப் பெண்ணை பெற்றுள்ளனர். எனவே நீட் தேர்வு தேவை இல்லாத ஒன்று. புதுவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது 5 ஆண்டு களுக்காவது விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சென்னை வந்த போது நீட் தேர்வு மரணம் ஒரு மரணமா? என்று கேலியாக பேசியுள்ளார். தமிழகம், புதுச்சேரி மாணவர்களின் மன நிலையை புரிந்து கொள்ளாமல் அவர் விமர்சனம் செய்திருப்பது வருந்தத்தக்கது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கன வோடு கடினமாக உழைத்து பிளஸ்2வில் அதிக மதிப்பெண் எடுத்தும் கூட, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் மருத்துவர் ஆகும் கனவு தகர்க்கப்படுவது ஏற்க முடியாத ஒன்று. எனவே நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க. இல்லாத முதல்அமைச்சர்களை ஒருங் கிணைத்து உச்சநீதிமன்றத்தை அணுகி நீட் தேர்வை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு முழுமை யான ஆதரவை நாங்கள் தெரிவிக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப் படையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்த போது சாதாரண, ஏழை, எளிய, கிராமப்புற மாணவர் களுக்கு இடம் கிடைத்தது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner