முன்பு அடுத்து Page:

“பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டுதோறும் 6.9 லட்சம் பேர் இறப்பு”

சென்னை, மார்ச் 25  பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக பன்னாட்டு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும்  உலகம் முழுவதும் 6.94 லட்சம் பேர் அந்நோயால் இறப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான 3ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னையில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) வரை நடைபெறுகிறது. இக் கருத்தரங்கத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த....... மேலும்

25 மார்ச் 2019 15:56:03

நீங்கள் மனச்சிதைவு நோயாளிகள் மோடி, பாஜக மீது அகிலேஷ் யாதவ் காட்டம்

நீங்கள் மனச்சிதைவு நோயாளிகள்  மோடி, பாஜக மீது அகிலேஷ் யாதவ் காட்டம்

பாட்னா, மார்ச் 25 பெரிய பெரிய ஜனநாயகத் தலைவர்கள் பெயர்களையெல்லாம் உதிர்க்கும் பாஜகவும் அதன் தலைமையும் அந்தத் தலைவர்கள் வெறுத்து ஒதுக்கிய கொள்கை யுடைவர்களை வழிபடுகின்றனர், ஏன் இந்த இரட்டை நிலை, மனச்சிதைவு நோய் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாகச் சாடியுள்ளார். ராம் மனோகர் லோகியாவின் 109ஆவது நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில், டாக்டர் லோகி யாவைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொள் ளும் மகா....... மேலும்

25 மார்ச் 2019 15:55:03

சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை, மார்ச் 25  தமிழ கத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9  தொகுதிகளும் புதுச்சேரி தொகுதி யும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத் தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 23.3.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேனி தொகுதியிலும், எஸ். திருநாவுக்கரசர் திருச்சி தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:- நான் சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ....... மேலும்

25 மார்ச் 2019 15:43:03

காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாக்கும் நேரம் வந்து விட்டது: கூறுகிறார் பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்கா

புதுடில்லி, மார்ச் 25 பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதி பாரதீய ஜனதா எம்.பி.யாக உள்ள நடிகர் சத்ருகன் சின்காவுக்கு இம் முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து,  அவர் பிரதமர் மோடியை தாக்கி டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது: காங்கிரசின் குடும்ப அரசியல் பற்றி மோடி குரல் எழுப்புகிறார். இது விரக்தியின் வெளிப்பாடு. முதலில், உங்கள் சொந்த கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் பாருங்கள். எல்லா கட்சியிலுமே குடும்ப அரசியல்....... மேலும்

25 மார்ச் 2019 15:07:03

குஜராத்தில் ரூ.8,100 கோடி வங்கி கடன் மோசடி

புதுடில்லி, மார்ச் 24  ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் வங்கியில் ரூ.8,100 கோடி மோசடி செய்த வழக்கில் விசாரணைக்கு தேவையான தகவல்களைப் பெற 21 நாடுகளுக்கு கடிதங்களை அனுப்ப  அம லாக்கத் துறைக்கு டில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குஜராத் மாநிலம், வதோதராவில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லிங் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம், ஆந்திர வங்கி தலைமையிலான....... மேலும்

24 மார்ச் 2019 17:21:05

கிரிமினல் வழக்கில் 35 பா.ஜ.க. வேட்பாளர்கள்

கிரிமினல் வழக்கில் 35 பா.ஜ.க. வேட்பாளர்கள்

புதுடில்லி, மார்ச் 24- நாடாளு மன்றத் தேர்தலுக்கு போட்டியிட பா.ஜ.க. வெளியிட்டுள்ள முதல் பட்டியலில் உள்ள, 184 பேரில், 35 பேர் மீது, கிரிமி னல் வழக்குகள் உள்ளன. நாடாளுமன்றத் துக்கு, ஏப்., 11 முதல், மே, 19 வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, 184 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டி யலை, பா.ஜ.க வெளியிட்டுள்ளது. தற்போது, நாடாளுமன்ற....... மேலும்

24 மார்ச் 2019 16:20:04

குஜராத் தலித்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை!

குஜராத் தலித்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை!

ஜிக்னேஷ் மேவானி கண்டனம் காந்தி நகர், மார்ச் 24 -குஜ ராத்தில் தலித் மக்கள் பாது காப்பாக இல்லை என அம் மாநில சட்டப்பேரவை உறுப் பினர் ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார். ஹோலி பண்டிகை அன்று தலித் சிறுவன்அடையாளம் தெரியாத கும்பலால் கடுமை யாகத் தாக்கப்பட்ட சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. கடுமையாக தாக்கப்பட்ட தலித் சிறுவன் பக்கவாதம் வந்தது போல் இருக்கிறார். அவரால் பேசவும் முடியவில்லை. காவல் துறை யில்....... மேலும்

24 மார்ச் 2019 14:41:02

எண்ணெய்க் கிணறுகளை தனியாருக்கு விற்க மோடி அரசு திட்டம்

புதுடில்லி, மார்ச் 24 மும்பை மற்றும் வசாய் கிழக் குப் பகுதிகளில் உள்ள பெரிய எண்ணெய்க் கிணறுகளை தனியார் மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பதற்கு மோடி அரசு திட்டம் வகுத்திருப்பது தெரிய வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிப்பதற் கான ஆய்வு என்ற பெயரில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2018 அக்டோபரில் குழு ஒன்றை அமைத்திருந்தார். அந்த குழுவினர்தான், எண் ணெய் நிறுவனங்களை தனி யாருக்கு விற்குமாறு ஆலோ....... மேலும்

24 மார்ச் 2019 14:41:02

இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப…

கொழும்பு, மார்ச் 23  இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, இலங்கையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் இரு ஆண்டுகள் காலக்கெடு அளித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. இலங்கையில் கடந்த....... மேலும்

23 மார்ச் 2019 16:40:04

பாஜகவின் 5 ஆண்டு ஆட்சி தோல்வி: அசோக் கெலாட்

புதுடில்லி, மார்ச் 23  பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணியின் 5 ஆண்டுகால ஆட்சி தோல்வி அடைந் துள்ளது என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: இன்றைக்கு வெளிவரும் புள்ளி விவரங்கள் அனைத்தும் அரசுக்கு எதிராக இருப்பது அதிருப்தியை தருகிறது. கருப்புப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மீட்டுக் கொண்டு வரப்படவில்லை. இது இந்த அரசின்....... மேலும்

23 மார்ச் 2019 15:40:03

கருநாடகத்தில் பி.ஜே.பி.யின் பரிதாபம்: 29 தொகுதிகளில் டெபாசிட் காலி!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, மே 17 -கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மிக அதிகபட்சமாக 72.13 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாஜக 104 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப் பெரும் கட்சியாக வந்தாலும், அந்த கட்சி பெற்ற மொத்த வாக்குகள், காங்கிரசு பெற்றதை விடவும் குறைவாகும். பதிவான வாக்குகளில் பாஜக பெற்றது 36.2 சதவிகித வாக்குகள் தான். காங்கிரசு கட்சிக்கோ 37.9 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்ல, பாஜக 29 தொகுதிகளில் தனது டெபாசிட்டைப் பறிகொடுத்துள்ளது. சில தொகுதிகளில் நோட்டாவிடமும் பாஜக தோற்றிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு, இரண்டாமிடம் பெற்ற பாஹேபள்ளி தொகுதியில் பாஜக வேட் பாளர் சாய்குமாருக்கு (4140 வாக்குகள்) டெபாசிட் போனது.

இதேபோல பத்ராவதி, சிக்கபல்லபூர், தேவனஹள்ளி, குர்மித்கல், ஹோலி நரசி புரம், ஹூனசூரு, கனகாபுரா, கோலார், கொரட்டாகெரி, சிந்தாமணி, கிருஷ்ண ராஜநகரா, கிருஷ்ண ராஜபேட்டை, மட்டூரு, மதுகிரி, மகாதி, மழவள்ளி, மேலுகோட், முல்பகல், நாகமங்கலா, பவகடா, பெரிய பட்டணா, புலிகேசி நகர், ராமநகரம், சரவணபெலகெலா, சிறீரங்கபட்டணா, சித்லஹட்டா, சிறீனிவாசபூர், டி.நரசிப்பூர் ஆகிய தொகுதிகளில் பாஜகவின் டெபா சிட்டை மக்கள் பறித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner