முன்பு அடுத்து Page:

மோடியின் டிஜிட்டல் இந்தியாவும் தோல்வி அடைந்தது

ரொக்கப் பணத்திற்கான தேவை 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது ரிசர்வ் வங்கி தகவல் புதுடில்லி, மே 24- கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி இரவு திடீரென பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்புப் பணம், கள்ள நோட்டு ஒழிப்பு, தீவிரவாத நடவடிக்கையை தடுத்தல்; ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்தல் ஆகியவற்றுக்காகவே உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை செல்லாது....... மேலும்

24 மே 2018 15:44:03

தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நாடுகளின் பட்டியல்:

இந்தியாவுக்கு 145ஆவது இடம் புதுடில்லி, மே 24 சர்வதேச அளவில் தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு 145ஆவது இடம் கிடைத்தது. இந்தியாவை விட சீனா, இலங்கை, வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இதுகுறித்து 195 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டதாவது: மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும் நாடுகள் பட்டியலில், அய்ஸ்லாந்து, நார்வே, நெதர் லாந்து, லக்ஸர்ம்பர்க், பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னிலையில்....... மேலும்

24 மே 2018 15:44:03

பாஜக ஆட்சி நீடிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து!

பாஜக ஆட்சி நீடிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து!

பிரகாஷ் அம்பேத்கர் பேட்டி மும்பை, மே 23-- பாஜக ஆட்சி மத்தியில் நீடிப்பது, ஜனநாய கத்திற்கு நல்லதல்ல என்று டாக்டர் அம்பேத்கரின் பேர னும், பரிபா பகுஜன் மகாசங் அமைப்பின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் கூறி யுள்ளார். மகாராஷ்ட்டிர மாநிலம் பந்தர்பூரில் செய்தியாளர்களுக்கு பிரகாஷ் அம்பேத்கர் செய்தியா ளர்களுக்குப் பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்தை பாரதிய ஜனதா, காங்கிரசு, தேசியவாத காங்கிரசு என பல கட்சிகளும் தடுத்து....... மேலும்

23 மே 2018 17:16:05

புதுவை முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு

புதுவை முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு

புதுச்சேரி, மே 23- அய்ஏஎஸ், அய்பிஎஸ் தேர்வில் புதிய நடைமுறையை ஏற்க முடியாது என்று புதுவை முதல்வர் வே. நாராயணசாமி எதிர்ப்புத் தெரிவித்தார். புதுச்சேரியில் செய்தியாளர் களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: குடி மைப் பணி தேர்வில் வெற்றி பெறுபவர்களின் மதிப்பெண் கள், தர நிலை, நேர்காணல் அடிப்படையில் அவர்களுக்கு அய்ஏஸ், அய்பிஎஸ், அய்எப் எஸ் பணியிடங்களை ஒதுக்கும் வழக்கம் தற்போது நடைமுறை யில் உள்ளது. இதற்குப் பதி லாக....... மேலும்

23 மே 2018 17:01:05

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வில் புதிய நடைமுறையோ

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வில் புதிய நடைமுறையோ

ஆர்எஸ்எஸ் தேர்வு செய்பவர்களை அதிகாரிகளாக்க பிரதமர் முயற்சி: ராகுல் காந்தி சாடல் புதுடில்லி, மே 23- ஆர்எஸ்எஸ் அமைப்பு தேர்வு செய்யும் நபர் களை அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளாக்க பிரதமர் நரேந் திர மோடி முயற்சித்து வருவ தாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நிலை மற்றும் துறைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை களில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது........ மேலும்

23 மே 2018 17:01:05

நாடாளுமன்ற மக்களவையில் பாஜக பலம் 272 ஆகக் குறைந்தது!

புதுடில்லி, மே 23- -நாடாளுமன்ற மக்களவையில், பாஜக உறுப்பி னர்களின் எண்ணிக்கை, 282-இல் இருந்து 272 ஆக குறைந் துள்ளது. இதன் மூலம் இன் னும் ஓரிடம் குறைந்தால் கூட அந்த கட்சி, தனிப்பெரும்பான் மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர் தலில் பாஜக மட்டும் 282 இடங்களில் வெற்றி பெற்றிருந் தது. ஆனால், இடைத் தேர்தல் களில் கிடைத்ததோல்வி மற் றும்....... மேலும்

23 மே 2018 17:01:05

பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு விவசாய அமைப்பினர் கருப்புக் கொடி

பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு விவசாய அமைப்பினர் கருப்புக் கொடி

கவுகாத்தி, மே23 அசாம் மாநிலத்துக்கு சென்ற பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநில ஆளும் பாஜக அம்மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை சட்டமாக்கு வதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அதற்கு அம்மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அம்மாநிலத்துக்கு சென்ற போது கிரிஷக் முக்தி சங்க்ரம் சமிதி (கேஎம்எஸ்எஸ்) எனும் விவசாயிகள் அமைப்பின் சார்பில் கருப்புக்....... மேலும்

23 மே 2018 16:40:04

ஓட்டுநர் வேலைக்கு போட்டியிடும் எம்.பி.ஏ., எம்.டெக்., பட்டதாரிகள்!

பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் அவலம் அகமதாபாத், மே 23 -இந்தியாவின் முன்மாதிரி மாநிலம் என்றால், அது குஜராத் மாநிலம்தான் என்று ஊடகங்கள் மூலம் பாஜக-வினர் ஒரு பிம்பத்தை கட்ட மைத்தனர். வறுமைஇல்லை; வேலையில்லாத் திண் டாட்டம் என்றால் என்ன வென்றே குஜராத்தில் இருப் பவர்களுக்குத் தெரியாது; அங்கு பாலாறும் தேனாறும் ஓடுவதாக கதைகளைக் கட்டி விட்டார்கள். குஜராத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேர டியாக சென்று வந்தவர்களோ, அங்கு அப்படி ஒரு பிர....... மேலும்

23 மே 2018 16:40:04

கருநாடக தேர்தலுக்கு ரூ.6,500 கோடி செலவிட்டுள்ளது பாஜக

அனந்த் சர்மா பேட்டி புதுடில்லி, மே 23 "கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்காக ரூ.6,500 கோடியை பாஜக செலவிட்டுள்ளது' என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனந்த் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: உலகிலேயே மிகப்பெரும் பணக்கார அரசியல் கட்சியாக பாஜக உள்ளது. கருநாடகத் தேர்தலில் சுமார் ரூ.6,500 கோடியை பாஜக செலவிட்டுள்ளது. இந்த பணம் எங்கு இருந்து வந்தது என்பது குறித்து பாஜக விளக்கம் அளிக்க வேண்டும்........ மேலும்

23 மே 2018 16:39:04

பாஜக ஆளும் குஜராத்தில் தாழ்த்தப்பட்ட தொழிலாளி அடித்துக்கொலை!

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் அகமதாபாத், மே 22 குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள தொழிற் சாலையில், தாழ்த் தப்பட்ட தொழிலாளி ஒருவரை, தூணில் கட்டி வைத்து மிகக் கொடூரமான முறையில் அடித்தே கொன்ற சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ் கோட்டைச் சேர்ந்த தொழிலாளி முகேஷ் சாவ்ஜி வானியா (40). இவர் அங்குள்ள ஷாபார்- வேராவல் பகுதியில் உள்ள தொழிற் சாலையில் பணி யாற்றி வந்தார்.ஞாயிற்றுக்கிழமை தொழிற்....... மேலும்

22 மே 2018 17:31:05

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை ஆட்சி அமைப்பதில் இழுபறி!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடக சட்டப்பேரவைத் தேர்தல்

பெங்களூரு, மே 16 கருநாடக சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் 78 இடங்களிலும் தேவெ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ், கர்நாடக பிரக்ஞாவந்தா ஜனதா கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா ஓர் இடத்தில் வென்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி, மஜதவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு உள்ளது. மஜத மாநிலத் தலைவர் குமார சாமி முதல்வராக, காங்கிரஸ் நிபந்தனை யற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, தேர்தலில் தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை காங்கிரஸ் முன்னெடுத்தது. இதனை, மஜதவும் ஏற்றுக் கொண்டதை அடுத்து தேர்தலுக்குப் பிந்தைய புதிய கூட்டணி உருவானது.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஜெயநகர், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகள் நீங்கலாக 222 தொகுதிகளுக்கு கடந்த 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவாயின. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜக 115 இடங்களில் முன்னணியில் இருந்தது.  பகல் 12 மணி அளவில் பாஜக முன்னிலை வகிக்கும் இடங்கள் 110 ஆக குறைந்தது.  அதன்பிறகு, 2 மணி அளவில் நிலைமை மாறியது. அதுவரை 60 முதல் 65 தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்த காங்கிரஸ், 78 இடங்களில் முன்னிலை பெற்றது. பாஜக முன்னிலை வகிக்கும் தொகுதிகள் 104 ஆகக் குறைந்தன. தொடக்கத்தில் 50 இடங்களில் முன்னிலை வகித்த மஜதவின் எண்ணிக்கை படிப்படி யாகக் குறைந்து 37 ஆனது. மஜத ஆட்சி அமைக்க ஆதரவு

இதனிடையே, பெங்களூருவில் முகா மிட்டிருந்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் சித்தராமையாவுடன் ஆலோ சனை நடத்தினர். பாஜகவை ஆட்சி அமைக்காமல் தடுக்கும் வகையில் கட்சி மேலிடத்தின் ஒப்புதலின்பேரில், மஜத ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்தது. இதை பகிரங்கமாக காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், முதல்வர் பதவியை மஜதவுக்கு விட்டுக் கொடுக்கவும் காங்கிரஸ் முன் வந்தது.

மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெகவுடாவுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தொலைபேசி மூலம் மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பேசினார். இதையடுத்து, எச்.டி.குமாரசாமி தலைமையில் மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

பதவி விலகல்: கருநாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா விலகினார்.

ஆட்சியமைக்க உரிமை கோரும் எடியூரப்பா, குமாரசாமி

கருநாடக பாஜக தலைவர்களும், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள பிரதிநிதிகளும் தனித்தனியே மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதில் யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, ஆளுநர் மாளிகையின் முடிவுக்காக கருநாடகம் மட்டுமின்றி நாடே காத்திருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner