முன்பு அடுத்து Page:

அரசு சேவைகளை பெற ஆந்திராவில் வீடுகளுக்கு கியூஆர் கோடு

அரசு சேவைகளை பெற ஆந்திராவில் வீடுகளுக்கு கியூஆர் கோடு

திருப்பதி, செப்.25 நாட் டிலேயே முதன்முறையாக அரசு சேவைகளை பெற வீடுகளுக்கு க்யூஆர் கோடு வழங்கும் திட் டத்தை திருப்பதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சித்தூர் மாவட்டம், திருப்பதி கபில தீர்த்தத்தில் 150 ஏக்கரில் பல்வேறு மூலிகைச் செடிகளுடன்  கூடிய நகர வனத்தை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர்  என்.டி.ஆர் சந்திப்பி லிருந்து நகர வனம்  திட்டம் குறித்த....... மேலும்

25 செப்டம்பர் 2018 17:13:05

ரபேல் விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அஞ்சுவது ஏன்?

ரபேல் விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அஞ்சுவது ஏன்?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி அமேதி, செப்.25 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான அமேதிக்கு நேற்று சென்றார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் அவர் பேசியதாவது:- பிரதமர் மோடி, தன்னை காவ லாளி என்று சொல்லிக் கொள் கிறார். ஆனால், ஒரு காவலாளியே ஏழை மக்களிடம் கொள்ளை யடித்தது வாய்ப்பு கேடானது.. ஏழைகளிடம் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி....... மேலும்

25 செப்டம்பர் 2018 14:43:02

விநாயகர் சதுர்த்தி விபரீதம் சிலையை கரைக்கும்போது 18 பேர் நீரில் மூழ்கி பலி

மும்பை, செப்.25 இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி முடிந்து பல்வேறு விதமான சிலைகள் கடல், ஏரி, ஆறுகள் என நீர்நிலைகளில் கரைப்பது பாரம்பரிய வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறதாம். இவ்வாறு சிலைகளை நீர்நிலைகளை கரைக்கும்போது பக்தர்களும் சிலைகளுடன் நீரில் இறங்குவதால் சில நேரங்களில் அவர்களும் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் சில கிராம பகுதிகளில் விநாயக சிலைகளை கரைக்கும் விழாவில் 18 பேர் பரிதாபமாக....... மேலும்

25 செப்டம்பர் 2018 14:43:02

கட்டுப்பாடு இல்லாத வாகன இறக்குமதி உள்நாட்டு தொழிலை அழிக்கும் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிருப்தி

கட்டுப்பாடு இல்லாத வாகன இறக்குமதி  உள்நாட்டு தொழிலை அழிக்கும்  உற்பத்தியாளர்கள் சங்கம் அதிருப்தி

  புதுடில்லி, செப். 24-- மேக் இன் இந்தியா என நாள்தோறும் முழங்கும் மோடி அரசு, அத் திட்டத்திற்கு எதிராக செயல்ப டுவதாகவும் எவ்வித கட்டுப் பாடும் இல்லாத வாகனங்கள் இறக்குமதியால் உள்நாட்டு தொழிலை அழிப்பதாகவும் ஆட்டோமொபைல் உற்பத்தி யாளர்கள் கொதிப்படைந்து உள்ளனர். வாகன இறக்கும திக்கு அரசு வழங்கியுள்ள சலுகையால் உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்கள் பாதிக்கப் படுவார்கள் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி யாளர்கள் சங்கம்அதிருப்தி தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு....... மேலும்

24 செப்டம்பர் 2018 16:38:04

தந்தைபெரியார் 140ஆவது பிறந்த நாள் இலவச கண் பரிசோதனை முகாம்

குடியாத்தம், செப்.24 குடியாத்தம் புவனேஸ்வரிப் பேட்டை  பள்ளியில் (23.9-.2018) தந்தை பெரியார் அவர்களின் 140 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமை குடியாத்தம் லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன் பள்ளி குடியாத்தம்  கோல்டன் கேலக்ஸ் ரோட்டரி சங்கம்  டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை வேலூர்  இணைந்து நடத்திய  இம்முகாமிற்கு தலைவர் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸ் ரோட்டரி சங்க தலைவர்  கோபிநாத் தலைமை ஏற்று சிறப்புரை வழங்கினார். பள்ளி....... மேலும்

24 செப்டம்பர் 2018 16:33:04

பாஜகவுக்கு எதிரான கூட்டணி 30ஆம் தேதி 8 கட்சி தலைவர்கள் சந்திப்பு

பாஜகவுக்கு எதிரான கூட்டணி 30ஆம் தேதி 8 கட்சி தலைவர்கள் சந்திப்பு

போபால், செப்.24 மத்திய பிரதேச மாநிலத்தில், இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், ஆளும், பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை அமைக்க, எட்டு கட்சிகளின் தலைவர்கள், 30இல், சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த கூட்டத்தில், லோக்தந்த்ரிக் ஜனதா தளம், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை புதுடில்லி, செப்.24 வெள்ளத்தில் இருந்து மீண்டு நிம்மதியடைந்த கேரளாவில், சில மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக் கைக்கான....... மேலும்

24 செப்டம்பர் 2018 16:08:04

ரயிலில் பெண்களை கேலி செய்தால் 3 ஆண்டு சிறை ரயில்வே பாதுகாப்புப் படை பரிந்துரை

புதுடில்லி,  செப்.24  ரயில்களில் பெண் பயணிகளைக் கேலி செய் வோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்.) பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக, ஆர்.பி. எஃப். அமைப்பின் மூத்த அதி காரி ஒருவர்  கூறியதாவது: ரயில்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், அவற் றைத் தடுப்பதற்காக, பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள் ளோம். அதன்படி, ரயில்களில் பெண்களைக் கேலி செய் வோருக்கு....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:44:03

மாட்டுச்சாணியில் சோப்பு: நாட்டை மீண்டும் கற்காலத்திற்கு கொண்டு செல்லும் ஆர்.எஸ்.எஸ்.

மாட்டுச்சாணியில் சோப்பு:  நாட்டை மீண்டும் கற்காலத்திற்கு கொண்டு செல்லும் ஆர்.எஸ்.எஸ்.

புதுடில்லி, செப் 24 ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆயூர் வேத ஆய்வு பிரிவும், பாஜக விற்கு மிகவும் நெருங்கிய மிகப் பெரிய ஆயுர்வேத தயா ரிப்பு நிறுவனமும் இணைந்து பசு மாட்டுச்சாணி மூலம் சோப்பு ஒன்றை தயாரித்துள் ளனவாம். ஏற்கெனவே பசுமூத்திரத் தில் உற்சாக பானம்(எனர்ஜி டானிக்) என்ற ஒன்றை தற் போது சந்தையில் விற்பனைக்கு அனுப்பியுள்ளனர். புளிப்பு வாடை மற்றும் கசப்பும் இனிப்பும் கலந்த இந்த டானிக் தொடர்பாக பல்வேறு புகார்கள்....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:44:03

கூட்டணி ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது: தேவேகவுடா

பெங்களூரு, செப்.24 முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹாசனில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சித்தராமையாவும், நானும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்களிடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததால் அவர் காங்கிரசில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. கூட்டணி ஆட்சியை காப்பது எனது பொறுப்பு என்று குமாரசாமியிடம் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். சித்தராமையாவே கூறிவிட்டதால், கூட்டணி ஆட் சியை யாராலும் கவிழ்க்க முடி யாது. ஹாசன் மாவட்ட வளர்ச்சி குறித்து....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:44:03

குஜராத் என்கவுண்டர்களை அம்பலப்படுத்தியதால் பாஜக ஆத்திரம் 'என்னைக் கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள்'

காவல்துறை அதிகாரி குமுறல் மும்பை, செப். 23 குஜராத்தில் மோடி ஆட்சியின் போது நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் சம்பவங்களை வெளியுலகுக்கு கொண்டு வந்த, காவல் துறை அதிகாரிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப் பட்டு வந்த நிலையில், அது தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து தன்னைக் கொலை செய்யவும் பாஜகவினர் தயங்கமாட்டார்கள் என்ற சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி சோலங்கி அச்சம் தெரிவித்துள்ளார்.இன்றைய பிரதமர் மோடி, கடந்த 13- ஆண்டுகளுக்கு குஜராத்முதல்வராக இருந்தார். அப்போது சொராபுதீன்....... மேலும்

24 செப்டம்பர் 2018 10:57:10

கருநாடக முதல்வரும் சொல்லுகிறார் பாஜகவில் இணையுமாறு மிரட்டவே சி.பி.அய். வருமானவரித்துறை சோதனை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, நவ.10 வரு மானவரித்துறையினர் சோதனை செய்த போது, இனிமேல் இது போன்று சோதனை நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் பாஜக விற்கு வந்துவிட வேண்டும் என்று கருநாடக காங்கிரசு அமைச்சரை மத்திய அரசின் அதிகாரிகள் மிரட்டியதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மோடி, தனக்கு எதிராக செயல்படுபவர்கள், தனக்கு ஆதரவு தரமறுக்கும் அரசியல் தலைவர்களை வருமான வரித் துறை சோதனை, சி.பி.அய். சோதனை போன்றவற்றை வைத்து மிரட்டி அடிபணிய வைத்துக்கொண்டிருக்கிறார். பலர் மத்திய அரசின் இந்த மிரட்டலுக்கு அடிபணிந்து மோடிக்கு பணிந்து சென்றுவிடு கின்றனர். இப்படியான ஒரு மிரட்டலில் தான் பீகார் முதல் வர் நிதீஷ்குமாரும் மக்கள் தீர்ப்பிற்கு எதிராக லாலுபிரசாத் உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு  பாஜகவுடன் கூட் டணி வைத்துள்ளார்.

தமிழகம் மற்றும் கருநாட கத்தில் இதே போன்ற சோதனை களை நடத்தினர். இவர்களின் மிரட்டலில் தமிழக அ.தி.மு.க தலைமையிலான பல்வேறு அமைச்சர்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசின் கைப்பாவை யாகவே மாறிவிட்டனர்.  கருநாட காவிலும் இதே போன்ற சோதனையை நடத்தி காங்கிரசு அமைச்சர்களை பாஜகவிற்கு இழுக்கும் வேலையைச் செய்ய முயன்றதை கருநாடக முதல் வர் சித்தராமையா சான்றுகளு டன் வெளியிட்டுள்ளார்.

குஜராத் மாநிலங்களவை தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.  அதில் காங் கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்தால் அங்கு காங்கிரசு கட்சி சார்பாக நிறுத்தப்பட் டுள்ள அகமதுபடேல் வெற்றி பெற்றுவிடுவார், அகமது படேலின் வெற்றியைத் தடுக் கும் விதமாக அமித்ஷா குஜராத் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக் கணக்கில் பணம் தந்து சில ரைத் தங்கள் பக்கம் இழுக்க முயன்றார். இந்த உண்மையைத் தெரிந்துகொண்ட குஜராத் காங்கிரசு கட்சி தனது சட்ட மன்ற உறுப்பினர்கள் அனை வரையும்  கருநாடகாவிற்கு அழைத்துச்சென்று தங்க வைத்தது.

அந்த சட்டமன்ற உறுப் பினர்களுக்குத் தேவையான உதவிகளை கர்நாடக மாநில மின்துறை அமைச்சர் செய்து கொடுத்தார். அவருக்குச் சொந்தமான பண்ணைவீட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் சிவக்குமார் வீடுகள், அலுவல கங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற் கொண்டனர். பின்னர் அவ ரிடம் விசாரணையையும் மேற் கொள்ளப்பட்டது.

அப்போது இது போன்ற சோதனைகளை எதிர் கொள் ளாமல் இருக்கவேண்டுமென் றால் நீங்கள் பாஜகவில் சேர்ந்து விடுங்கள் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் மிரட்டி யுள்ளனர். இதுகுறித்து பெங் ளூருவில்  பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து நடந்த கருப்பு தின பொதுக் கூட்டத்தில் பேசிய சித்த ராமையா கூறியதாவது:

"வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, சிபிஅய் ஆகியவை மக்களை மிரட்டுவ தற்காகப் பயன்படுத்தப்படு கின்றன. அரசியல் உள்நோக் கத்துடன் அமைச்சர் சிவக் குமார் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடை பெற்றது. அப்போது சோத னையை தவிர்க்க தொண்டர் களுடன் பாஜக.வில் சேர்ந்து விடுங்கள் என்று சிவக்குமாரி டம் வருமான வரித்துறை அதி காரிகள் கூறியுள்ளனர் இதற் கான ஆதாரங்கள் என்னிடம் தரப்பட்டது. மத்திய அரசு இவ்வளவு தரம் தாழ்ந்து நடக் கும்  என்று எதிர்பார்க்கவில்லை. எதிர்கட்சிகளின் பிரமுகர்களை மிரட்ட இதுபோன்ற செயல் களைச் செய்து வருகிறது" என்று கூறிய சித்தராமையா எவ்வித முன்னெச்சரிக்கை நட வடிக்கையும் எடுக்காமல் பண மதிப்பிழப்பு கொண்டுவந்தது மிகவும் மோசமான செயலாகும் என்றும் மோடியைக் கடுமை யாகச் சாடினார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner