முன்பு அடுத்து Page:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க, சோனியா காந்தி பெருந்தன்மையுடன் கருணை காட…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க, சோனியா காந்தி பெருந்தன்மையுடன் கருணை காட்ட வேண்டும்  நீதிபதி கே.டி.தாமஸ் சோனியாவுக்கு கடிதம்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க குடியரசுத் தலைவருக்கு சோனியாகாந்தி கடிதம் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டு, நீதிபதி கே.டி.தாமஸ் சோனியா காந்திக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அதுகுறித்த விவரம் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டில் நேற்று (16.11.2017) வெளியானது. அதன் விவரம் வருமாறு: ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு தாராள மனதுடன் கருணை காட்ட வேண்டும் என்று சோனியா காந்தியிடம் அவ்வழக்கில் தண்டனை அளித்த பணியிலிருந்து ஓய்வு பெற்ற....... மேலும்

17 நவம்பர் 2017 16:35:04

சில்லரை விற்பனை ரூ.1 லட்சம் கோடி டாலராக உயரும்

சில்லரை விற்பனை ரூ.1 லட்சம் கோடி டாலராக உயரும்

புதுடில்லி, நவ.17  இந்தியா வில், அமைப்பு சார்ந்த துறை களில் மேற்கொள்ளப்படும் சில்லரை விற்பனை, 2020இல், 1 லட்சம் கோடி டாலரை எட்டும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.இது குறித்து, அசோசெம்  எம்.ஆர்.ஆர்.எஸ்., இந்தியா டாட் காம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாறி வரும் மக்களின் வாழ்க்கை பாணியும், உயர்ந்து வரும் நடுத்தர மக்களின் வருவாயும், சில ஆண்டுகளாக, நுகர்பொ ருட்கள் துறையின் வேகமான வளர்ச்சிக்கு துணை புரிந்து வருகிறது. இதன்....... மேலும்

17 நவம்பர் 2017 16:28:04

இந்தியாவில் தற்போது கோமாளித்தனமான ஆட்சி நடக்கிறது கூறுகிறார் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா

இந்தியாவில் தற்போது கோமாளித்தனமான ஆட்சி நடக்கிறது  கூறுகிறார் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா

புதுடில்லி, நவ. 16 -இந்திய நாட்டில் தற்போது கோமாளித்தனமான ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக பாஜக மூத்த தலைவரும், வாஜ்பாய் ஆட்சியில் மத் திய நிதியமைச்சராக பதவி வகித்தவரு மான யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார். கருப்புப் பணத்தை கைப்பற்றப் போவதாக கூறி, பணமதிப்பு நீக்கத்தை அமல்படுத்திய மோடி, - அருண்ஜெட்லி கூட்டணியால் நாட்டுக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி இழப்புதான் ஏற்பட் டுள்ளது என்றும், இதைப் பார்த்தால், 700 ஆண்டுகளுக்கு....... மேலும்

16 நவம்பர் 2017 14:38:02

அர்த்தமுள்ள இந்து மதம் இதுதானோ! கேரளச் சிறுவனை பலி கொடுக்க முயற்சி - ஏழு பேர் கைது

அர்த்தமுள்ள இந்து மதம் இதுதானோ!  கேரளச் சிறுவனை பலி கொடுக்க முயற்சி - ஏழு பேர் கைது

உடுப்பி நவ.15 கருநாடக மாநி லத்தில் ஜோதிடரின் பேச்சைக் கேட்டு, 11 வயது சிறுவனை கடத்தி கொல்ல முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைப்பிள்ளையைக் காளிக் குப் பலி கொடுத்தால், செல்வம் பெருகும் என ஜோதிடர் ஒருவர் கூறியதை நம்பி,  கேரளாவில் இருந்து 11 வயது சிறுவனை கடத்தி பலி கொடுக்க முயன்ற கும்பலை கருநாடக மாநில காவல்துறையினர் கைது செய்த னர். கேரளா-கருநாடகா எல் லையில் உள்ள நரலே என்ற....... மேலும்

15 நவம்பர் 2017 15:08:03

கவுரி லங்கேஷ் கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் சித்தராமையா

கவுரி லங்கேஷ் கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் சித்தராமையா

பெலகாவி, நவ.14 கர்நாடக சட்டப் பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங் கியது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் சித்தரா மையா, பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கண்டறிவது மற்றும் அவர் களை நீதியின் முன் நிறுத்துவது ஆகியவற்றில் தனது முயற்சி யில் அரசு நேர்மையுடன் செயல் படுகிறது என கூறினார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தனது வீட்டில் இருந்த லங்கேஷை அடையாளம் தெரி யாத....... மேலும்

14 நவம்பர் 2017 16:09:04

தொடரும் ஏமாற்று வேலை : வெளிநாட்டுச் சாலைகளை இந்தியச் சாலைகளாகக் காட்டி குஜராத் தேர்தலில் விளம்பரம்…

தொடரும் ஏமாற்று வேலை :  வெளிநாட்டுச் சாலைகளை இந்தியச் சாலைகளாகக் காட்டி  குஜராத் தேர்தலில் விளம்பரம் செய்யும் பாஜக

  டில்லி,  நவ 14 நிதின்கட்கரி தலைமையில் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் விளம்பரத்தில் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள சாலைகளை இந்தியச் சாலைகள்போல காண் பித்து விளம்பரப்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் ஆயி ரக்கணக்கான கிலோமீட்டர் நீளச் சாலைகள் உள்ளன. ஆனால், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்திற்கு தனது இணையதளத்திலும் விளம்பரத்திலும் பயன்படுத்த இதில் ஒரு நிழற்படம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள் ளது. கனடா தொரந்தோ-....... மேலும்

14 நவம்பர் 2017 16:03:04

கிருஷ்ணா நதியில் பக்தர்கள் 18 பேர் பரிதாபச் சாவு

கிருஷ்ணா நதியில் பக்தர்கள் 18 பேர் பரிதாபச் சாவு

திருமலை, நவ.13  ஆந்திரா வில் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து 18 சுற்றுலா பயணிகள் பக்தர்கள் இறந்தனர். 7 பேரை காணவில்லை. ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோலை சேர்ந்த 38 பேர், வாக்கர் கிளப் சார்பில் கிருஷ்ணா மாவட்டம், இப்ராகிம்பட்டணத்தில் உள்ள கிருஷ்ணா நதியில் ஆரத்தி எடுப்பதை காண நேற்று சென்றனர். அப்போது, ஆந்திர மாநில சுற்றுலாத்துறையை சேர்ந்த அனைத்து படகுகளும் நிரம்பியதால், தனியார் படகில் ஏறி சென்றனர். மாலை....... மேலும்

13 நவம்பர் 2017 16:18:04

அசோகச் சக்கரம் இல்லாத தேசியக் கொடி பிஜேபி ஆளும் ராஜஸ்தானில் கூத்து!

அசோகச் சக்கரம் இல்லாத தேசியக் கொடி  பிஜேபி ஆளும் ராஜஸ்தானில் கூத்து!

  ஜெய்ப்பூர், நவ-.13 ராஜஸ்தானின் பாஜக அரசு, அங்குள்ள இந்து அமைப் புகளுடன் இணைந்து தேசப்பற்றை வளர்ப்போம் என்று கூறி "வந்தே மாதரம்" என்னும் நிகழ்ச்சியை நடத் தியது. இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏற்றப்பட்ட தேசியக் கொடியில் அசோகச்சக்கரம் இல்லை,  பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கப் பட்ட தேசியக் கொடியிலும் அசோகச் சக்கரம் இல்லை, மேலும் பள்ளி மாண வர்களுக்குக் இந்தியா....... மேலும்

13 நவம்பர் 2017 16:17:04

டில்லியில் தீவிரமடையும் காற்று மாசு பிரச்சினை மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்

டில்லியில் தீவிரமடையும் காற்று மாசு பிரச்சினை மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்

புதுடில்லி, நவ. 13- காற்று மாசு பிரச்சினை, டில்லியில் தீவிர மடைந்து வரும் நிலையில், சுவாசக் கோளாறு தொடர்பாக, மருத்துவமனைகளில் அதிக ளவு நோயாளிகள் குவிகின்ற னர்.டில்லியில், முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி அரசு அமைந்து உள்ளது. இங்கு, காற்று மாசு மிக மோசமடைந்து உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பள் ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு....... மேலும்

13 நவம்பர் 2017 15:35:03

178 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு

178 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு

கவுஹாத்தி, நவ. 11 சலவை சோப்பு, ஷேவிங் கிரீம்  உட்பட 178 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து18 சதவீதமாக குறைக்கப்பட்டுள் ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத் தப்பட்டது. இதன் மூலம் ஏற்கெனவே நடை முறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படை யில் விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி 5, 12, 18,....... மேலும்

11 நவம்பர் 2017 16:40:04

பணமதிப்பு நீக்கம் எனும் குரூர நகைச்சுவை!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிற இதழிலிருந்து...

பணமதிப்பு நீக்கம் எனும் குரூர நகைச்சுவை!

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் 99% திரும்ப வந்துவிட்டதாகவும், கடந்த நிதி ஆண்டில் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்ப தற்கான தொகை இரு மடங்கு ஆகியுள்ள தாகவும் ரிசர்வ் வங்கி கூறியிருப்பது பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வி யடைந்து விட்டதை அதிகார பூர்வமாக நிரூபித்திருக்கிறது. ஊழல், கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதுதான் அதன் நோக்கம் என்று கூறிய மோடி, தேச விரோதிகள், சமூக விரோதிகள் பதுக்கி வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகள் இனி செல்லாக் காசாகிவிடும் என்றும் பெரு மிதத்துடன் குறிப்பிட்டார். ஆனால், பெரு மளவில் பாதிக்கப்பட்டது என்னவோ மக்கள்தான்!

2016 நவம்பர் - 8 அன்று இரவு நேரலை யில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அன்று நள்ளிரவு முதல் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.500, ரூ.1,000 நோட்டுகளில் கணிசமானவை, கறுப்புப் பணப் பதுக்கல்காரர்கள் வசமே இருக்கும்; அவற்றை வங்கிக் கணக்கில் செலுத்தும் போது மாட்டிக்கொள்ள வாய்ப்பிருப்பதால் அவர்கள் அவற்றைத் திரும்பச் செலுத்த மாட்டார்கள் என்றெல்லாம் சொல்லப் பட்டது. வங்கியில் செலுத்த முடியாமல் தேங்கிவிடும் ரூபாய் நோட்டுகளில் சுமார் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான தொகை சமூக நலத் திட்டங்களுக்குச் செலவிடப்படும் என்றும் கணிப்புகள் வெளியிடப்பட்டன.

மக்கள் வங்கிகள், ஏடிஎம்கள் முன்னால் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க நேர்ந்தது, வரிசைகளில் நிற்கும்போதே 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது, முறைசாராத் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது, சுமார் 15 லட்சம் பேர் வேலையிழந்தது போன்ற பாதிப்புகள்தான் மிச்சம்.

வரி அமைப்பின் கீழ் கணிசமானோர் கொண்டுவரப்பட்டது, டிஜிட்டல் பரிவர்த் தனையை அதிகரிக்கச் செய்ததன் மூலம், ரொக்கத் தொகையையே சார்ந்திருக்க வேண்டிய நிலையைக் குறைத்தது போன்ற சில நன்மைகள் விளைந்தன என்பது உண்மைதான்.

ஆனால், அதிகப் பாதிப்புகள் ஏற் படுத்தாத நடவடிக்கைகள் மூலமே இவற்றைச் சாதித்திருக்க முடியும். கறுப்புப் பண மோசடியில் ஈடுபட்டவர்களில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார் கள் என்று இதுவரை தெரியவில்லை. பணமதிப்பு நீக்கத்தால் எவ்வளவு கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டது என்பதற்கான தரவுகள் தங்களிடம் இல்லை என்று ரிசர்வ் வங்கியே தற்போது தெரிவித்திருக்கிறது.

வங்கியில் பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது என்றாலும், முறை கேடுகளில் ஈடுபட்டவர்களைக் கண்டறி யவும் தண்டிக்கவும் தேவையான வசதிகள் வருமான வரித் துறையிடம் இருக்கின்ற னவா என்பதே சந்தேகமாக உள்ளது. மொத்தத்தில், இந்த தேசத்தின் பொருளா தார வளர்ச்சியின் வேகத்தையே மட்டுப் படுத்தும் அளவுக்குப் பின்விளைவை ஏற் படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நன்மைகளை விட தீமைகளே அதிகம் விளைந்திருக்கின்றன!

இவை அனைத்தையும் கணக்கில் கொள்ளாமல், பண மதிப்பு நீக்கம் வெற்றி! என்ற பிரச்சாரத்தை பாஜக அரசு முடுக்கி விட்டிருப்பதைக் குரூர நகைச்சுவையாக வே எடுத்துக் கொள்ள வேண் டியிருக்கிறது.

நன்றி: 'தி இந்து' - 6.9.2017.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner