முன்பு அடுத்து Page:

பா.ஜ.க.வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒன்று திரட்டுவோம்! லாலு முழக்கம்!

  பா.ஜ.க.வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒன்று திரட்டுவோம்! லாலு முழக்கம்!

பாட்னா, மார்ச் 28 ராஷ்டீரிய ஜனதா தளம் தொண்டர் கள் கூட்டம் பாட் னாவில் நடை பெற்றது. இதில் கட்சித்தலைவர் லாலு  கலந்து கொண்டு பேசிய தாவது:- உத்தர பிரதேசத்தில் புதியதாக பதவி ஏற்றுள்ள முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத் முதல்-அமைச்சர் இல்லத்தை கங்கை நீரால் கழுவி புனிதப்படுத்தப் போவதாக கூறியிருக்கிறார். இவர் இப்படி கூறியிருப்பது, தவறான பாரம் பரியத்தை காட்டுகிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் அவரு....... மேலும்

28 மார்ச் 2017 15:52:03

சமூக நலத்திட்டங்களின் பயன்களைப் பெற ஆதாரை கட்டாயமாக்க கூடாது உச்சநீதிமன்றம் உத்தரவு

   சமூக நலத்திட்டங்களின் பயன்களைப் பெற ஆதாரை கட்டாயமாக்க கூடாது உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மார்ச் 28 சமூக நலத்திட்டங்களின் பயன்களைப் பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று (27.3.2017) உத்தரவிட்டது. பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப் படுவதை எதிர்த்தும், ஆதார் அட்டை வழங்குவதற்காக கை விரல் ரேகை, கண் கருவிழிப் பதிவு போன்றவற்றைப் பதிவு செய்வது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த மனுக்கள்....... மேலும்

28 மார்ச் 2017 15:40:03

விவசாயிகளின் தற்கொலையை தடுக்க செயல் திட்டத்துடன் அறிக்கை தேவை உச்சநீதிமன்றம் உத்தரவு

 விவசாயிகளின் தற்கொலையை தடுக்க செயல் திட்டத்துடன் அறிக்கை தேவை   உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மார்ச் 27 விவசாயிகள் தற்கொலையை தடுப்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரங்களுக்குள் இந்த விவகாரத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்கவும் உச்சநீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கெஹர், விவசாயிகளின் தற்கொலை விவகாரம் மிக கவலைக்குரிய பிரச்சினை மட்டுமல்லாது நாட்டின் மிக மிக முக்கியமான பிரச்சினை என்று குறிப்பிட்டார்........ மேலும்

27 மார்ச் 2017 17:53:05

நெடுவாசல் உட்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பிஜேபி அரசு 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

 நெடுவாசல் உட்பட 31 இடங்களில்  ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பிஜேபி அரசு 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

- நெடுவாசல் மக்கள் கடும் அதிர்ச்சி- புதுடில்லி, மார்ச் 27 ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நெடுவாசல் உட்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 22 நிறு வனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம் லெபாரட்டரீஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கும் தனியார் மற்றும்....... மேலும்

27 மார்ச் 2017 17:34:05

பல்கலைக்கழகங்களை சுதந்திரமான மய்யங்களாகப் பாதுகாக்க வேண்டும் ஹமீது அன்சாரி வலியுறுத்தல்

   பல்கலைக்கழகங்களை சுதந்திரமான மய்யங்களாகப் பாதுகாக்க வேண்டும்  ஹமீது அன்சாரி வலியுறுத்தல்

சண்டிகர், மார்ச் 27 “நமது பல்கலைக்கழகங்களின் சுதந்திரத் துக்கு குறுகிய மனப் போக்கு களால் சவால் விடுக்கப்படுகிறது. சுதந்திரமான மய்யங்களாக அவற் றைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்‘ என்று குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சண்டீகரில் நேற்று முன்தினம் (25.3.2017) நடைபெற்ற பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் 66-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் ஆற்றிய உரை யில் கூறியிருப்பதாவது: நம் நாட்டில் அண்மையில் நிகழ்ந்துள்ள சம்பவங்கள் “ஒரு பல்கலைக்கழகம்....... மேலும்

27 மார்ச் 2017 17:30:05

தமிழகம் சொல்லும் - சொல்லப்போகும் செய்தி

தமிழகம் சொல்லும் - சொல்லப்போகும் செய்தி

  “உத்தரப் பிரதேசம் சொல்லும் செய்தி கேட்கிறதா?” எனும் தலைப்பில் திரு.மாலன் எழுதிய  தினமணியின் நடுப்பக்கக் கட்டுரை (13.3.2017) திராவிட இயக்கத்தின் அடிப்படைத் தத்துவங்களையும் தகவுகளையும் ஆழ்ந்த பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வைக் கின்றது.  கட்டுரையாளரின் பார்வையும் தேடலும் பெரும்பான்மைச் சமூகத்தோடு உரிமைகள், சமத்துவம் என்ற உணர்வு நிலைக் கருத்துக்களுக்காக முரணிக் கொண்டும் போராடிக் கொண்டும் இருப்பதைவிட சில விட்டுக்கொடுத்தலோடு இயைந்து வாழ்வது நடை முறையில் பயனளிக்கும் என்ற எண்ணம் மெல்லப்....... மேலும்

27 மார்ச் 2017 16:19:04

பசுக்களை கொல்பவர்களின் முட்டிகளை உடைப்பார்களாம்! - பா.ஜ.க. எம்.எல்.ஏ. வெறிப் பேச்சு

  லக்னோ, மார்ச் 27 உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனிப் பெரும் பான்மையை பிடித்த பா.ஜ.க சார்பில் யோகி ஆதித்யநாத் முதல் அமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே மாநிலத்தில் உள்ள சட்டவிரோத  இறைச்சிக் கூடங்களை மூடுவதற்கு உத்தரவிட்ட அவர், இறைச்சி வெட்டுவதற்கும் தடை விதித்தார். மாநில அரசின் இந்த முடிவு பெரும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ விக்ரம் சாய்னி நேற்று (26.3.2017) பங்கேற்ற நிகழ்ச்சி....... மேலும்

27 மார்ச் 2017 16:18:04

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு

  புதுடில்லி, மார்ச் 27- ஓட் டுநர் உரிமம் பெறுவதற்கும் ஆதார் அடையாளத்தை கட்டா யமாக்கும்படி மாநில அரசு களுக்கு, மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இந்த புதிய முறை வரும் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய சாலை அமைச்சகம் இது தொடர்பான பணிகளை ஏற்கெனவே தொடங்கி விட் டதாகவும், தேவையான மாற் றங்களை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம்....... மேலும்

27 மார்ச் 2017 16:18:04

நாடாளுமன்றத்தை தொடர்ந்து சிறுமைப்படுத்துகிறது மோடி அரசு சீதாராம் யெச்சூரி கண்டனம்

  நவிமும்பை, மார்ச் 27 "நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து சிறுமைப்படுத்தி வருகிறது; இது, நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்'' என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்ர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டினார். மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று (26.3.2017) வந்த அவர், மும்பையில் செய்தியாளர்களி டம் கூறியதாவது: 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு,....... மேலும்

27 மார்ச் 2017 16:12:04

அக்டோபர், நவம்பர் மாதங்களில் சேது பாலம் பற்றிய ஆய்வாம்!

 அக்டோபர், நவம்பர் மாதங்களில் சேது பாலம் பற்றிய ஆய்வாம்!

புதுடில்லி, மார்ச் 26 தமிழக-இலங்கை கடல் பகுதிக்கு இடையே ராமர் பாலம் எனப் படும் சேது பாலம் இருக்கிறது. அந்த பாலம், ராமர் இலங் கைக்கு செல்வதற்காக வானர சேனைகளும், அவருடைய வீரர்களும் கட்டியது என்று ராமாயணத்தில் கூறப்பட்டுள் ளது. ஆனால், அது இயற்கையாக உருவானது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். இந்த வழியாக சேது சமுத்திர கால்வாய் திட்டம் செயல்படுத் தப்பட இருந்தபோது, சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், சேது பாலம் இயற்கையாக....... மேலும்

26 மார்ச் 2017 15:47:03

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் 81.50 லட்சம் பேர் வேலையிழப்பு: மம்தா பேட்டி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு மேற்கு வங்கத்தில்
81.50 லட்சம் பேர் வேலையிழப்பு: மம்தா பேட்டி

கொல்கத்தா, ஜன.9 பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் சுமார் 81.50 லட்சம் பேர் வேலையிழந்துள்ள தாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நிர்வாகக் குழு சந்திப்புக்குப் பிறகு செய் தியாளர்களிடம் பேசிய மம்தா, பணமதிப்பு நீக்கத்தினால் மாநி லத்திற்கு ரூ.5500 கோடி வரு வாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

“கடந்த 2 மாதங்களில், பண மதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின் மாநில அரசுக்கு ரூ.5,500 கோடி வருவாய் இழப்பு ஏற் பட்டுள்ளது. சுமார் 1.7 கோடி மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வங் காளத்தில் 81.50 லட்சம் பேர் வேலையிழந்து பரிதவித்து வருகின்றனர்” என்றார்.

மாநில அரசு மேற்கொண்ட ஆய்வுகளின்படி பெற்ற தரவு களின் அடிப்படையில் இதனை, தான் தெரிவிப்பதாக அவர் கூறினார். தேயிலை, சணல், பீடி மற்றும் ஆபரணத் தொழில் களில் அதிகமாக வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் மம்தா.

“வேளாண் துறையும் பயங்கர பாதிப்புக்குள்ளானது. பணத்தட்டுப்பாட்டினால் விவ சாயிகள், ராபி பயிர் செய்ய முடியவில்லை.

இதனால் விலை உயர்வு ஏற்படும். மக் களிடம் பணமேயில்லாத போது ரொக்கமற்ற பொருளா தாரத்தை அறிமுகம் செய்ய முயற்சி செய்கின்றது மத்திய அரசு.  எனவே குறைந்தபட்ச பொதுத்திட்டத்தின் கீழ் அனைத்துக் கட்சிகளும் தங்க ளுக்கிடையே உள்ள வித்தி யாசங்களை மறந்து அடுத்த பொதுத்தேர்தல்கள் வரை தேசிய அரசை உருவாக்க முன்வர வேண்டும் என்று வலியு றுத்துகிறேன்.

நாட்டின் நலனுக் காக இதனைக் கூறுகிறேன். நாட்டை இந்த நெருக்கடியி லிருந்து காப்பாற்றுமாறு நான் குடியரசுத் தலைவரிடத்திலும் முறையீடு செய்கிறேன்.

இந்தத் தேசிய அரசை மோடியைத் தவிர வேறு பாஜக தலைவர் வழிநடத்தினாலும் சரியே. இப்போது பார்த்தால் அரசே செயல்படவில்லை என்பது போல் இருக்கிறது. ஜனநாயக உரிமைகள்  தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. நிர் வாகம் என்ற பெயரில் நாட்டில் பயங்கரத்தின் ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner