Banner
முன்பு அடுத்து Page:

பெங்களூரு சமூக சீர்திருத்தவாதி எம்.எம்.கலபுர்கி படுகொலை கர்நாடக திராவிடர் கழகம் கடும் கண்டனம்

பெங்களூரு சமூக சீர்திருத்தவாதி எம்.எம்.கலபுர்கி படுகொலை கர்நாடக திராவிடர் கழகம் கடும் கண்டனம்

கருநாடகா, செப். 1_ இதுகுறித்து கர்நாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன் விடுத்துள்ள கண்டன அறிக்கை. கருநாடகத்தின் தார் வார் மாவட்டம் கல்புர்கி யில் வாழ்ந்து வந்த பழம் பெரும் சமூக சீர்திருத்த வாதியும் இலக்கியவாதியு மான டாக்டர் எம்.எம். கலபுர்கி அவர்களை சமூக விரோதிகள் இருவர் துப் பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இச்செயலை கருநாடக மாநிலத் திராவி டர் கழகம் கடும் கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறது. இல்லாத....... மேலும்

01 செப்டம்பர் 2015 16:44:04

புதுடில்லி பேருந்துகளில் இலவச வைபை சேவைமுதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

புதுடில்லி பேருந்துகளில் இலவச வைபை சேவைமுதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

புதுடில்லி பேருந்துகளில் இலவச வைபை சேவைமுதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு புதுடில்லி, செப்.1-_ டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டாக்கடோரா உள் அரங் கில் நடைபெற்ற டில்லி யின் போக்குவரத்து கழக விழாவில், நேற்று (31.8.2015) கலந்து கொண்டார். டில் லியின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கோபால் ராய் மற்றும் டி.டி.சி. மேலாளர் சி.ஆர்.கார்க் ஆகியோருடன் ஆயிரக் கணக்கான ஊழியர்களும் இதில் கலந்துகொண் டனர். இவ்விழாவில், பேசிய கெஜ்ரிவால், 2250 கிலோ மீட்டர் தூரம்... டி.டி.சி. (டில்லி....... மேலும்

01 செப்டம்பர் 2015 16:24:04

கல்புர்கியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கல்புர்கியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கல்புர்கியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு தார்வாடி, செப்.1_ மூட நம்பிக்கைக்கு எதிராகவும், உருவ வழிபாட்டுக்கு எதி ராகவும் பேசியதால் சுட் டுக் கொல்லப்பட்ட மூத்த கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கியின் உடல் முழு அரசு மரியா தையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. தார் வாடில் நடைபெற்ற அவ ரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் மரி யாதை செலுத்தினர். கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டத்தில் உள்ள கல்யாண்....... மேலும்

01 செப்டம்பர் 2015 16:22:04

எழுத்தாளர் பொன்னீலன் கருத்தும் - மகிழ்ச்சியும்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அன்புக்கும் மிகுந்த மதிப்புக்கும் உரிய தோழர் அவர்களுக்கு,

வணக்கம். விடுதலை பிப்ரவரி 28 இதழ் (அஞ்சலில் எனக்கு நேற்று தான் வந்தது) திராவிட இயக்க நூற்றாண்டு தொடக்க விழாவில் தாங்களாற்றிய பேருரையை மனுதர்மத்துக்கும் மனித தர்மத்துக்குமிடையே மிகப் பெரும் போராட்டம் எனத் தலைப்பிட்டு அருமையாக வெளியிட்டுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சமநீதி இயக்கமென்பது அனைவருக்கும் அனைத்தும் என்னும் திசை வழியில் ஒரு நூற்றாண்டு காலம் ஓய்வில்லாமல், சோர்வில்லாமல் இயங்கி வரும் பேரியக்கம் என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். வரலாறு தெரியாமல் வரலாற்றுச் சாதனைகளை வசப்படுத்திக் கொள்ளாமல் வளர்ச்சி சாத்தியமில்லை என்பதையும் அழுத்தம் திருத்தமாகத் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். நாடகம் பார்க்கவும், ஏன் பேருந்தில் பயணம் செய்யவும், உணவு விடுதிகளில் நுழையவும் தலித்துகள் மறுக்கப்பட்ட காலம் அன்று இருந்தது. அந்தத் தடைகளை நீக்கி, அவர்களுக்கு விடுதலை வழங்கியது சமநீதிகட்சி. சமூகம் தெரிந்து, தெளிந்து கொள்ள வேண்டிய அடிப்படைக் கருத்து இது. உயர்நீதிமன்ற நீதிபதி சங்கரன் நாயரை வருணாசிரம நம்பூதிரி ஒருவர் எடாசங்கரா என அழைத்ததையும், கலைஞர் தலையீட்டால் இன்று தலித் நீதிபதிகளை வைதீக வெறிபிடித்த உயர் சாதியினர் எழுந்து நின்று ஓ மை லார்டு என்று பவ்வியமாக அழைக்கும் சூழ் நிலையையும் படிப்பவர் மனதில் பசு மரத்தாணிபோல் பதியும் வகையில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லயிருக்கிறீர்கள்.

தேவதாசி முறை பகவத்காரியம், இதை மாற்றக் கூடாது என்று சட்டமன்றத்தில் முழங்கிய சத்தியமூர்த்தி அய்யரை அப்படி பகவத் காரியம் முடங்கிவிடக் கூடாது என்றால், இனி அதை உங்கள் பெண்களைக் கொண்டு தொடருங்கள் என்று அன்னை முத்துலெட்சுமி ரெட்டி சொன்ன பதிலின் பின்னால், பகுத்தறிவுப் பகலவன் பெரியார் இருந்தார் என மிக நேர்த்தி யாகச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.

தங்கள் பேருரை அடித்தளத்தில் இன்னும் நசுங்கிக் கொண்டிருக்கும் மக்களைச் சென்றடைய வேண்டும். பெரியார் என்னும் பெரு மழையில் முளைத்துக் கிளைத்துச் செழித்துப் பூத்துக் காய்த்து நிற்கும் நம் மண்ணின் மக்களுக்குத் தங்கள் வாழ்வுக்கான ஆதார வேர்களை மனதில் பதியும்படி நினைவு படுத்த வேண்டும். மிக அரிய பேருரை இது. மிகுந்த மகிழ்ச்சி யடைகின்றேன்.

- பொன்னீலன்.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்