முன்பு அடுத்து Page:

இலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்பு

இலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள்  அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்பு

கொழும்பு, ஜன.6 இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நடைபெற்றது. கடந்த 2009- ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டனர். ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 2002 முதல் 2011 வரையில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடு....... மேலும்

06 ஜனவரி 2017 16:34:04

தமிழீழப் போராளி வின்ஸ்டன் பஞ்சாட்சரம் படத்திறப்பு

தமிழீழப் போராளி வின்ஸ்டன் பஞ்சாட்சரம் படத்திறப்பு

    சென்னை, டிச. 13- பன்னாட்டு தமிழ் நடுவத்தின் தலைவரும், அமெரிக்காவில் வசித்து வந்த வருமான தமிழீழப் போராளி டாக்டர் வின்ஸ்டன் பஞ்சாட் சரம் (வயது76) கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று மறைந்தார். அவர் மறைவையொட்டி, சென்னை வேப்பேரி பெரியார் திடல் அன்னை மணியம்மை யார் அரங்கில் 7.12.2016 மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இரங்கல் கூட்டம் திராவிடர்  கழகத் துணைத் தலைவர் கவி ஞர் கலி.பூங்குன்றன் தலைமை யில் நடைபெற்றது. இலங்கையின்....... மேலும்

14 டிசம்பர் 2016 11:46:11

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது அய்.நா. சபை தவறு இழைத்துவிட்டது பான் கி மூன் ஒப்புதல்

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது அய்.நா. சபை தவறு இழைத்துவிட்டது பான் கி மூன் ஒப்புதல்

கொழும்பு, செப்.4 இலங்கை இறுதிக்கட்ட போரின் போது அய்.நா. தவறு இழைத்து விட்டது. அய்.நா.வின் பிரதிநிதிகள் முறை யாக செயல்பட்டிருந்தால் அதிக உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்று அதன் பொதுச்செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.மூன்று நாள் பயணமாக கடந்த 31- ஆம் தேதி இரவு இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு பான் கி-மூன் சென்றார். அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீ சேனாவை அவர் சந்தித்துப் பேசினார்.அப்போது சிறீசேனா, நீண்டகால போரில்....... மேலும்

04 செப்டம்பர் 2016 14:12:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சென்னை, டிச. 13- பன்னாட்டு தமிழ் நடுவத்தின் தலைவரும், அமெரிக்காவில் வசித்து வந்த வருமான தமிழீழப் போராளி டாக்டர் வின்ஸ்டன் பஞ்சாட் சரம் (வயது76) கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று மறைந்தார்.

அவர் மறைவையொட்டி, சென்னை வேப்பேரி பெரியார் திடல் அன்னை மணியம்மை யார் அரங்கில் 7.12.2016 மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இரங்கல் கூட்டம் திராவிடர்  கழகத் துணைத் தலைவர் கவி ஞர் கலி.பூங்குன்றன் தலைமை யில் நடைபெற்றது.

இலங்கையின் காந்தி என போற்றப்படுபவரான ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்க ளின் மகன் சந்திரகாசன் கலந்து கொண்டு, வின்ஸ்டன் பஞ்சாட் சரம் படத்தைத் திறந்துவைத்து இரங்கல் உரையாற்றினார்.

டாக்டர் வின்ஸ்டன் பஞ்சாட்சரம் மறைவையொட்டி நடைபெற்ற இரங்கல் கூட்டத் தில் வா.மு.சே.திருவள்ளுவர் அனைவரையும் வரவேற்றார். வா.மு.சே. ஆண்டவர் இணைப்புரை வழங்கினார்.

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், டாக்டர் மணி மேகலை கண்ணன், முனைவர் உலகநாயகி, புலவர் செந்தமிழினியன், தினத்தந்தி சண்முகநா தன், மேனாள் மேயர் சா.கணே சன், கவிஞர் கண்மதியன், மீனாட்சி ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள்.

பன்னாட்டு தமிழ் நடுவம் அமைப்பு சென்னையில் திமுக தலைவர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்ட அமைப்பாகும். பன்னாட்டு அமைப்பாக இருந் தாலும் சென்னை தலைமை இட மாக இருக்கும். உலகெங்கும் தமிழர் கள் உள்ளனர். பன்னாட்டு  தமிழ் நடுவத்தில் தமிழர்கள் எவரும் உறுப்பினர் ஆகலாம் என்று அப்போது டாக்டர் வின்ஸ் டன் பஞ்சாட்சரம் குறிப்பிட்டி ருந்தார்.

டாக்டர் வின்ஸ்டன் பஞ்சாட்சரம் அவர்களின் தந்தை யார் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பெயரில் வின்ஸ்டன் என்பதை பஞ்சாட் சரத்துடன் இணைத்து வின்ஸ் டன் பஞ்சாட்சரம் என்று பெயர் சூட்டியதாக இரங்கலு ரையில் பேசியவர்கள் குறிப் பிட்டார்கள்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் உரை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆற் றிய இரங்கல் கூட்ட தலைமை யுரையில் குறிப்பிடும்போது,

டாடக்டர் வின்ஸ்டன் பஞ்சாட்சரம் ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற இரண¢டு மாநாடு களில் தமிழர் தலைவர் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு ஈழ தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார் கள் என்று இங்கே பேசிய பெருங்கவிக்கோ வா.மு.சேது ராமன் குறிப்பிட்டார்.

பல்வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வந்த நேரத் தில், ஈழப்பிரச்சினையில் முன் னுரிமை கொடுத்து  திராவிடர் கழகம் செயல்பட்டது.

1983 டிசம்பரில் மதுரையில் ஈழவிடுதலை மாநாட்டை நாங் கள் நடத்தினோம். குமரிநாடன் என்கிற இளைஞர் ஈழ தேசி யக்கொடியை அம்மாநாட்டில் ஏற்றிவைத்தார்.

சமூகப்பார்வை, இன எழுச் சியின் பக்கம் டாக்டர் வின்ஸ் டன் பஞ்சாட்சரம் தம்முடைய கவனத்தை செலுத்தியவர்.

அவர் 4.2.1982 அன்று அமெ ரிக்காவில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு- உலகத் தமிழர் மாநாட் டில்-  பேசும்போது கூறியதாவது:-

“இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பரவி இருக்கிறார் கள். நாமில்லா நாடில்லை; ஆனால் நமக்கென்று ஒரு நாடில்லை. இலங்கையை ஆண்டவர்கள் தமிழர்கள். நமக்குச் சொந்தமான மண், சிங்களர்களிடம் பறி போய்விட்டது. சிங்கள அரசு டன் பல ஒப்பந்தங்கள் செய் தும் பலன் இல்லை. தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது. இனப்படுகொலையை சிங்க ளர்கள் திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். இலங்கைத் தமி ழர்களைக் காப்பாற்ற வேண்டு மானால், தமிழ் ஈழம் அமைப் பதுதான் ஒரே வழி. வட்டுக் கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில், தந்தை செல்வநா யகம் அவர்கள் தலைமையில், இதுபற்றி உறுதியான தீர்மா னத்தை நிறைவேற்றியிருக்கி றார்கள். அந்தத் தீர்மானத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். தமிழ் ஈழம் அமைக்க, உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.’’ என்று பேசியுள்ளார்.

அன்று டாக்டர் வின்ஸ்டன் பஞ்சாட்சரம் பேசியது இன் றைக்கும் பொருந்தக்கூடியது.

தந்தை பெரியாரை ஈழத் தந்தை செல்வநாயகம் சந்தித்து ஈழம் குறித்து குறிப்பிட்டு ஆத ரிக்கக் கோரினார்.  அப்போது தந்தை பெரியார் நாமே இங்கு அடிமைகளாகத்தான் இருக்கி றோம். ஒரு அடிமை இன் னொரு அடிமைக்கு எவ்வாறு உதவமுடியும்?  இரண்டு நாடு களிலும் அடிமைத் தனத்திலி ருந்து தமிழர்கள் மீண்டு ஒன்று சேரமுடியுமா என்று பார்ப் போம் என்றார்.

இலங்கையில் தமிழர் பிரச்சினை என்பது 1937ஆம் ஆண்டுகளில் இருந்துள்ளது. அப்போதைய நீதிக்கட்சியின் சார்பில் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தந்தை பெரியார், என்.ஆர்.சாமியப்ப முதலியார், ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோரைக் கொண்ட குழுவை அனுப்பி அறிக்கை அளிக்குமாறு அப் போதே கோரியது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்கிற பழ மொழிபோல் ஆகிவிட்டது.

நடந்தவைகளிலிருந்து பெற்றுள்ள அனுபவங்களைக் கொண்டு இனி செய்ய வேண் டியவற்றில் கடமையாற்ற வேண்டும். டாக்டர் வின்ஸ்டன் பஞ்சாட்சரம் ஊட்டிய உணர் வுகளை வளர்த்தெடுப்போம்

இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசுகையில் குறிப்பிட்டார்.

சந்திரகாசன் உரை

தமிழ் மக்களின் சிந்த னையை ஒரு பயனுள்ள திசை யில் மாற்றிடக் காரணமாக தமிழ் உணர்வு, பெரியாரின் உணர்வு இருந்துள்ளது.

பெரியாரின் வழியில் அவர் சிந்தனையைப் பரப்பி வருகின்ற மண்ணில், அவர் நினைவுகளைக் கொண்டுள்ள மண்டபத்தில் சிந்தனை தூண் டப்படுகின்ற வகையில் இந்த இரங்கல் கூட்டம்  நடைபெறு கிறது.

ஈழத்தந்தை செல்வநாயகம் அவர்களால் வட்டுக்கோட்டை தீர்மானமாக தமிழ் ஈழப்பிரக டனம் செய்து, அத்தீர்மானத்தை 1976, 1977 பொதுத்தேர்தலில் முன்வைத்து மக்களிடையே வெற்றி பெற்றோம். அதை முன்னெடுப்பது அவ்வளவு எளிதல்ல. தந்தை பெரியார் ஈழத்தந்தை செல்வநாயகத்திடம் சொன்ன கருத்து முக்கியமானது.

இலங்கைக்குள் உள்ள பிரச் சினையை வெளியே கொண்டு வரவேண்டும் என்று தந்தை பெரியாரை சந்தித்து ஈழத்தந்தை செல்வநாயகம் கூறினார்.

இலங்கையில் நான் சட்டத் துறை செயலாளராக இருந்தேன். போராளிகள் உள்ளிட்டவர்க ளின் சட்டப்பிரச்சினை, வழக் குகளில் ஈடுபட்டு வந்தேன்.

டாக்டர் வின்ஸ்டன் பஞ்சாட்சரம் நியூயார்க்கில் தமிழீழ விடுதலை மாநாடு ஏற்பாடு களைச் செய்து, திராவிடர் கழ கத்தின் தலைவர் கி.வீரமணி தனித்தமிழ் ஈழக் கொடியை ஏற்றி பறக்கவிட்டார். இரண் டாவது கட்டமாக பெரிய அள வில் மாநாடுகள் நடத்தப்பட் டன. 1986இல் மற்ற மொழி பேசுபவர்கள்கூட கலந்து கொண்டார்கள்.

சென்னையில் புல்லாங்கு ழல் வாசிக்கும் பஞ்சாட்சரம்தான் எனக்கு முதலில் அறிமுகமானார்.

பொறியாளர் த.கு.திவாகரன் நன்றி கூறினார்..
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner